FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 07:06:44 PM

Title: 65 மில்லியன் உறுப்பினர்களுடன் ஃபேஸ்புக் இந்தியா நம்பர் 2!
Post by: Anu on October 28, 2012, 07:06:44 PM
அனைவரின் மனதிலும் சிறப்பாக அஸ்த்திவாரமிட்டு அமர்ந்திருக்கும் ஃபேஸ்புக் இதுவரை நமது நாட்டில் மட்டும் 6.5 கோடி உறுப்பினர்களை பெற்று உலகிலேயே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இதை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் பார்வையில், இந்தியா மிக பெரிய தங்கச் சுரங்கும் என்று தான் சொல்ல வேண்டும். பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்கிய ஃபேஸ்புக், இளைஞர்களை வெகு சீக்கிரத்தில் வசீகரித்து வரும் ஃபேஸ்புக் தினமும் புதிய சாதனை படைக்கும் விஷயங்களை நடத்தி வருகிறது.
சர்வதேச அளவில் முதல் பொறியியல் மையத்தினை லண்டனில் துவங்குவதாக நேற்று தான் ஃபேஸ்புக் பற்றிய ஒரு செய்தியினை கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனோம். அதற்குள் ஃபேஸ்புக் தனது அடுத்த கட்ட சாதனையின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
மற்ற நாடுகளுக்கு ஒப்பிட்டு பார்க்கும் போது நமது நாட்டில் அதிகமானோர் ஃபேஸ்புக்கினை பயன்படுத்துவதாக நிறைய தகவல்கள் மேம்போக்காக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு சரியான ஆதாரத்தினை வழங்கும் வகையில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் இந்தியா 6.5 கோடி உறுப்பினர்களை பெற்று, இந்திய மக்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தினை பிடித்திருக்கிறது. சமீபத்தில் தான் ஒரு நாளைக்கு 100 கோடி புதிய உறுப்பினர்களை பெற்று வருவதாக ஃபேஸ்புக் பற்றிய ஒரு தகவல் வெளியானது.
அதற்குள் அதிக உறுப்பினர்களை கொண்டு 2ம் இடத்தில் இருப்பகதாக மற்றொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இரண்டு ஆண்டிற்குள் ஃபேஸ்புக்கிற்கு கிடைத்த இந்த வளர்ச்சியும், வரவேற்பும் 8 மடங்கு அதிகமானது என்று கூடுதல் தகவலையும் கொடுத்திருக்கிறார் ஃபேஸ்புக் இந்தியாவின் இயக்குனரான கிர்த்திகா ரெட்டி.