Author Topic: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்  (Read 1914 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

 நட்சத்திரங்கள்    -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்
 01. அஸ்வினி     -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
 02. பரணி        -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
 03. கார்த்திகை    -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
 04. ரோகிணி      -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
 05. மிருகசீரிடம்   -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
 06. திருவாதிரை   -- ஸ்ரீ சிவபெருமான்
 07. புனர்பூசம்      -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
 08. பூசம்          -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
 09. ஆயில்யம்     -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
 10. மகம்         -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
 11. பூரம்         -- ஸ்ரீ ஆண்டாள் தேவி
 12. உத்திரம்      -- ஸ்ரீ மகாலக்மி தேவி
 13. அத்தம்       -- ஸ்ரீ காயத்திரி தேவி
 14. சித்திரை      -- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
 15. சுவாதி        -- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
 16. விசாகம்      -- ஸ்ரீ முருகப் பெருமான்.
 17. அனுசம்      -- ஸ்ரீ லக்மி நாரயணர்.
 18. கேட்டை      -- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
 19. மூலம்        -- ஸ்ரீ ஆஞ்சனேயர்
 20. பூராடம்       -- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
 21. உத்திராடம்    -- ஸ்ரீ வினாயகப் பெருமான்.
 22. திருவோணம்  -- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
 23. அவிட்டம்     -- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
 24. சதயம்        -- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
 25. பூரட்டாதி      -- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
 26. உத்திரட்டாதி   -- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
 27. ரேவதி        -- ஸ்ரீ அரங்கநாதன்.

                  மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
                  இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்கள்           - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்   - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம்  - சந்திரன்   - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம்   - ராகு      - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி    - குரு      - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி     - சனி      - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி     - புதன்      - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி          - கேது      - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம்            - சுக்கிரன்   - மகாலக்மி
மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது
                    “பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
                   நீத்தார் இறைவனடி சேராதவர்”
            என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

வாழ்க வளமுடன்
 
                    

Offline kanmani

wow gud wrk rsy nala  details kodutheriukeenga thank u very much

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்