Author Topic: ~ இந்த வார ராசி பலன் ~  (Read 1237 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இந்த வார ராசி பலன் ~
« on: April 21, 2013, 09:45:59 AM »
(19-4-2013 முதல் 25-4-2013 வரை)




மேஷம்

பொது: எடுக்கும் காரியங்களில் பலவற்றில் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: குடும்பப் பிரச்சனைகள் தீரும். வழக்குகள் சாதகமாக முடியும். தடைபட்ட சுப நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். சேமிப்பு செலவாகும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கலாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.



ரிஷபம்


பொது: உங்கள் காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகு தான் வெற்றிகரமாக முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். உங்கள் திறமை பளிச்சிடும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். அதை நீங்களே சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழக்கூடும். கடிதம் மூலம் முக்கிய தகவல் வந்து சேரும்.

வேலை பார்ப்போருக்கு: பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். ஆனால் எதிர்பார்த்த இடத்திற்கு கிடைக்காது. சக ஊழியர்கள் உதவியுடன் முக்கிய வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.


மிதுனம்

பொது: திட்டமிட்ட காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். மனக் கவலைகள் மாறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கடன்கள் வசூலாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: பிரிந்த உறவுகள் ஒன்று சேரக்கூடும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கணவரிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க காலதாமதமாகலாம். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.



கடகம்


பொது: உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தாருடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பெண்களுக்கு: இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். பெரியோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.


சிம்மம்


பொது: பெரியோரின் ஆசியுடன் உங்கள் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு காரியம் நல்லபடியாக நடக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: கணவர் பாசமாக இருப்பார். குடும்பத்தாரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்வீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உயர் அதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனை தீரும்.



கன்னி

பொது: வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் செலுத்தவும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். சக ஊழியர்களால் வேலை பளு குறையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும்.



துலாம்


பொது: உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். உடன் பிறப்புகளுடன் மனக்கசப்பு ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. பண வரவு சீராக இருக்கும்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்தபடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம்


பொது: நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நன்றாக நடக்கும். பண வரவு தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் சென்று பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.


தனுசு

பொது: சமுதாயத்தில் பெரிய மனிதர் ஒருவரை சந்திப்பீர்கள். உடன் பிறப்புகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பணப் புழக்கம் சுமாராகத் தான் இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனை தீரும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும்.




மகரம்


பொது: பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசாங்க வழியில் நன்மை கிடைக்கும். சிலர் புனித பயணம் மேற்கொள்ளக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவரின் உடல் நலனில் கவனம் செல்லும். கடன் தொல்லைகள் தீரும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடியே நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கவனமாக இருப்பீர்கள். சக ஊழியர் ஒருவர் உதவியுடன் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்


பொது: சமுதாயத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தடைபட்ட காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

பெண்களுக்கு: தாய் வழி உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை தீரும். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். வேலையில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க காலதாமதமாகலாம்.



மீனம்


பொது: யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உங்கள் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதில் நிதானம் தேவை. கல்வி செலவு அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். கணவரின் உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். வீட்டுக்குத் தேவையான அதிநவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு ஊதிய உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும்.