Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 295  (Read 227 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 295

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

 • Newbie
 • *
 • Posts: 22
 • Total likes: 101
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forumமனதில் தோன்றும் ஆசைகள்

உன் வார்த்தைகளை அல்ல உன் மௌன மொழி கற்க ஆசை

உன் சந்தோசத்தில் அல்ல உன் துக்கத்தில் உடனிருக்க ஆசை

உன்னை காண்பதை விட என் கண்ணில் உன் பிம்பம் விழ ஆசை

உன் தோளில் சாய அல்ல என் தோள் கொடுக்க ஆசை


மொத்தத்தில்


உன்னை தெரிந்தவள் என்றல்ல புரிந்தவளாய் இருக்க ஆசை


என்றென்றும்
அம்மாவாய் என்னை நீ
அரவணைக்க வேண்டும்

அப்பாவாய் செல்லமாய்
அதட்டக்கூட வேண்டும்

தோல் கொடுக்கும் தோழனாய்
தினமும் நீ வேண்டும்

கண் விழித்தால் காணும் முகம்
உனதாக வேண்டும்

காணும் கனவிலும்
நீ மட்டுமே வேண்டும்

சுவாசிப்பவை எல்லாம்
உன் மூச்சு காற்றாய் இருக்க வேண்டும்

உன் கண்ணசைவில் உன் கருத்துக்களை
நான் அறிய வேண்டும்

எப்போதும் நான் சாய தேடும்
தோல் உனதாக வேண்டும்

நொடி பொழுதும் பிரியாத
உன் நிழல் நானாக வேண்டும்

செல்லமான உன் கோபத்தை
கொஞ்சி கொஞ்சி போக்க வேண்டும்

காற்றில் என் கைகள்
உன் தேகம் மட்டும் தேட வேண்டும்

நம் கை கோர்த்து கால் நோக
காலமெல்லாம் நடக்க வேண்டும்

கண்டவுடன் உச்சி முகர்ந்து
முத்தமிட வேண்டும்

காலமெல்லாம் உன்னை மட்டும்
நான் கட்டி தழுவ வேண்டும்

உன்னை விட்டு பிரியும் நொடி - அது
என் மரணமாய் மட்டும் இருக்க வேண்டும்

கண்ணாளனே...
நான் கண்ட கனவெல்லாம்
அடுத்த ஜென்மதிலாவது நடக்க வேண்டும்
❤️❤️❤️❤️❤️« Last Edit: July 21, 2022, 11:09:40 PM by VenMaThI »

Offline Sun FloweR

ஆசைக் காதலனே....
உன்னைக் கண்ட ஆனந்தத்தில்
இறக்கையின்றி பறக்கின்றேன்,
நீரின்றி மூழ்குகின்றேன்,
மருதாணியின்றி சிவக்கின்றேன்...

கலாபக் காதலனே...
உன் கன்னம் கிள்ளும் வேளையில்
நாணம் கொஞ்சம் சேருதே...
மோகம் கொஞ்சம் கூடுதே....
தாடி வளர்ந்த உன் கன்னக்
காட்டுக்குள் அடைக்கலமாக
தேடித் திரிகின்றன என்
விரல் பறவைகள் ...

காந்தக் காதலனே...
என் பாதம் பற்றி உன் தொடைகளில்
பக்குவமாய் வைக்கிறாய்..
பதறிப் போகிறேன் நான் ஆனாலும்
பரவசம் கொள்கிறேன்....
அந்த ஒரு நொடியில் உலகாளும்
ராணியாய் எனைக் கருதுகின்றேன் ...

நேச காதலனே...
மங்கலம் தரும் மாங்கல்ய வரம் வேண்டி
நிற்பவளுக்கு அச்சாரமாய் தருகிறாய்,
உற்சாகமாய் பூட்டுகிறாய்
வெள்ளிக் கொலுசினை...
பாதம் தழுவி படர்ந்து கிடப்பது
வெள்ளி முத்துக்களா? அல்லது உன்
அன்பின் சொத்துக்களா?

பிரிய காதலனே....
எல்லாம் செய்துவிட்டு
கல்லுளி மங்கனைப் போல்
பார்க்கிறாய் நீ...
எல்லாம் அனுமதித்து விட்டு
பித்தாகிக் கிடக்கின்றேன் நான்....❤️

Offline AgNi

 • Full Member
 • *
 • Posts: 137
 • Total likes: 647
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !

மௌனத்தின்  கதவுகள் திறக்கும் நேரம்.....
இதயத்தின் ஓசைகள் துயில் கொள்ளும்...

உன் விழிகள் எனை நோக்கி சிரிக்கும் நேரம்
என் வலிகளின் எல்லை விளிம்புகள் கவிழும்...

உறைந்த நினைவுகள் தூர் வார
மறைந்த கனவுகள் மின்னலாய்
புன்னகை ஒளி மிளிரும்...

இங்கு நீ ஏன் போனாய் என்று
யாரும் பேசிகொள்ளவே இல்லை...
பழையகுப்பையென பரணில்
வீசி விட்டார்களோ...?

உனக்கு யாரோவாய் நான்
இருந்து இருக்கலாம்...
கொஞ்சம் விலகலை அதிகபடுத்தி
மெனகெட்டிருக்கலாம்....

வெளிச்ச வானின் ஜோடி பறவைகளை காணமுடியாது
அனிச்சையாய் ஜன்னல் திரைகள்
மூடி   சோதிக்கும்....

மனதின் ஏக்கம் தீரா மிச்சங்களை
உயிர் மீட்கும் பேராவல் எச்சங்களாய்  நிராசைகள் புதையும்...‌

தனியறையில்  தவித்து புழுங்கி கிடக்கையில்
நிழல்சுவர்களின் நடனங்கள்
கடந்தகால படம் காட்டும்.....

நீளும் இரவில் தலையணையின்
புலம்பல் சத்தங்கள்...
ஓர் ஜென்ம வாழ்வின் நிசப்தங்களை புரட்டி போடும்....

யுகங்களை விழுங்கிவிட்டு
நீ சூட்டிய கொலுசுகள் மட்டும்
உன் வருகைக்கான‌ காலத்தை
பின் தொடர்கிறது..Offline thamilan

அன்பே
வட்டமிடும்    உன் வண்ண விழியும்
துடிக்கும் உன் இமைகளும் 
குங்குமமும்   கொஞ்சும் இதழ்களும்
குலுங்கும் உன் நடையும்
புத்தம் புது வெள்ளிக் கொலுசும்
பிரமன் எனக்காக படைத்திட்டவள் நீ 

உன் கண்ணுக்கு மை-மோனை
கால் விரலுக்கு மெட்டி -எதுகை
ஆனால் நீயோ ஒரு - புதுக்கவிதை
இனிமை என்ற வார்த்தைக்கு
இன்னொரு அர்த்தம் - நீ

உன் இமை தூரிகை
என் மனதில் வர்ணம் பூசுகிறது
என் மனதில்
உன் உருவத்தை வரைகிறது
உன்னை பார்த்துக்கொண்டிருக்கையில்
உதயமும் தெரிவதில்லை
அஸ்தமனமும் புரிவதில்லை
முழு நிலவுபோலே
என்றும் என்மனதில் உன்முகம்

நிலவு தண்ணீரில் தன்
முகம் பார்ப்பது போலே
உன்னில் என்னை பார்க்கிறேன்
நீ இல்லாத தருணங்களில்
நானும் தொலைந்து போகிறேன்

உலகில் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன
எந்த பூவிலும் இல்லாத வசீகரம்
உன் சிரிப்பு எனும் பூவில் இருக்கிறது
நீ சிரித்தால் நான் சிதறிப் போகிறேன்
உன் சிரிப்புக்காக
எதையும் செய்வேன் நான்

Offline Abinesh


காதல் உலகம் என்று ஒன்று இருக்க வேண்டும்,அதில் நீயும், நானும் மட்டும் வாழ வேண்டும் பல ஆண்டுகள்...

அன்பே,உன் கால் கொலுசின் சல் சல் என்ற ஓசையை A.R. ரஹ்மான் இசை ஆல்பமாக தினம் தினம் கேட்டு மகிழபோவது எப்போது?

மெரினா கட்கரையிலே நாம்  சுண்டல் சாப்பிட்டு,கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய அஸ்தமனம் பார்ப்பது எப்போது?...

நீ சமயல் செய்யும் போது,உன்னை சமயல் செய்ய விடாமல் தடுத்து,Swiggy- இல் food order செய்வது எப்போது😀🤩...

அரபிக் கடலோரம் உலவும்
அழகின் வங்கி நீ..!
அந்த அரபிக் கடலுக்கும் கவிதை எழுத
கற்றுக் கொடுத்தவள் நீ..!
உன்னை அலையாக கரை வந்து உன் பாதம் தொடுவது எப்போது...😍


நிலா உழவன் விளைச்சல் செய்து
பரப்பி போட்ட நட்சத்திர நெல்மணிகளை
கிளியை போல் பறந்து சென்று கண்மணியே கொத்தி  தின்ன என்னோடு நீ வேண்டும்...

நரை வயதில் முதுகு வளையும் போது
கைத்தடியாக...
விழி திரையில் பார்வை குறையும் போது
கண்ணாக இருந்து என்னை காக்க
என்னோடு நீ வேண்டும்.
« Last Edit: July 23, 2022, 01:25:59 AM by Abinesh »

Offline SweeTie

கன்னத்தை  செல்லமாய்  கிள்ளும் என் காரிகையே  நீ
என் உள்ளத்தை கிள்ளிய  நாள்முதல்  உன்வசமாய் ஆனேனடி   
பச்சை கிளிபோல் பல நூறு  பெண்கள்  என் பக்கத்தில் வந்தும்
 இச்சை கொண்டேன்   உன்னிடமே  என்னையும் மறந்து
 
,மத்தாப்பூ  பூத்தாப்போல  முத்தான   உன்   சிரிப்பு   
அத்தானைக் கொல்லுதடி  வித்தகியே!
சட்டைப்  பொத்தானைப்  போடுவேனா  இல்லை
பித்தாகி    உன் முந்தானையில்   சிக்காகி  போவேனா

 உன் கண்ணோடு  கண் நோக்க  நான்  காத்திருந்தால்
நீ  வெட்கத்தில்  மண் நோக்கி  பார்ப்பதுபோல் 
செய்யும் பாசாங்கு   .....அப்பப்பா..... 
வசியக்காரிக்கெல்லாம்  பாடம் சொல்லிக்கொடுப்பவள் நீ ]

காதலை சொல்ல கனக்கிறதா உன் இதயம்  இல்லை
சொல்லவிடாது தடுக்கிறதா  உன் நாணம்  ....  சகியே
உன் இதழோரம்  மின்னலென  நெளிந்தோடும்    வெட்க  கீற்று
என் இதயத்துள்  நுழைந்து   ஏதேதோ   செய்கிறதே   

கற்பனை என்றாலும்   கவிதைகள்   என்றாலும்   
என் எதிரே    நிற்பவளும்   நீதானே
ஓவியம் என்றாலும்   சிற்பங்கள் என்றாலும்
என்னுள்  ஒளிபவளும்   நீதானே 

சித்திரை  நிலவுபோல்    சிரித்து , மகிழ்வூட்டுபவள்  நீயே
சுனாமி போல்  கோபத்தில்   சிவப்பவளும் நீயே
கடல் ஆழம்  கண்டாலும்  உன்  ஆழம் தெரியாமல் 
காற்றாடி போல் சுத்துகிறேன்   உன்  பின்னாடி 
 
உன் சிரிப்பொலியு ம்   பாதக்   கொலுசொலியும்    சேர்ந்து
என்   இதயத்தின்  துடிப்பொலியை   மாற்றியதுமேனோ ?   
அன்று லப்டப்  லப்டப்  என துடித்த  என் இதயமும்   
இன்று அழகி  அழகி   என்று துடிப்பதுமேனோ?
 
« Last Edit: July 27, 2022, 07:11:14 PM by SweeTie »

Offline Charlie

 • Newbie
 • *
 • Posts: 6
 • Total likes: 19
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
நீயின்றி நானில்லை
நாமின்றி காதலே இல்லை!

பாவை உன் கடைக்கண் பார்வையில்
தொலைகிறேன் நானடி !
என் சிந்தனையில் பூத்த கவிதையும் நீயடி !

முத்தம் ஒன்று தந்துவிடு
நம் காதல் யுத்தம் நிறுத்த  !

என் பக்கம் வந்து நின்றுவிடு
மெழுகாய் நானும் உருக!

சிறு புன்னகையில் எனைக்கொல்லையடிதாய்
கண்களால் கைது செய்தாய்  !
வஞ்சிக்காதே என் வஞ்சிக்கொடியே
ஆயுள் தண்டனை தந்துவிடு
உன் உள்ளச்சிறையில் உள்ளபடியே  !

வலியோ இங்கு வலிக்கவில்லை
மருந்தாக உன் நினைவுகள் இருப்பதால்  !

காயமோ  இங்கு காணவில்லை
என் காதல் உண்மை என்பதால்  !

தோழியாய்  இரு!
காதலியாய்  இரு!
துனைவியாய் இரு!
என் குழந்தையாய் இரு!
மொத்ததில்
பெண்ணின் பேராண்மையாய்
எனக்குள் நீ இரு அன்பே  !!!!

GG

 • Guest
என் மடி மீது உன் அடி வைத்து
உன் கால்களில் என்னை குடி வைத்து
உன் கொலுசினுள் என்னை சிறை வைத்து
உன் கைகளால் என் கன்னம் பறித்து

உன் கண்களால் என் மனம் துவைத்து
உன் வெட்கத்தால் என் உடல் சிலிர்த்து
புன்னகையால் நான் உயிர் மறித்து
உன் கை விரல்களால் நான் உயிர்த்தெழுந்து

நாணம் உன் இதழ் சேர்ந்து
தென்றலுடன் உன் குரல் சேர்ந்து
என் பெயரை நீ சொல்லும்போது
என்னை நான் மறந்தேனே.

உன்னருகே நான் இருந்தால்
இவை அனைத்தும் நான் உணர
என்னருகே சொர்கமே இருப்பினும்
உன்னிடம் என் உயிர் சேருமே.