Author Topic: முல்லா கதைகள்  (Read 3162 times)

Offline Anu

முல்லா கதைகள்
« on: February 03, 2012, 11:12:15 PM »
  பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்
    முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை.
   ஒருநாள் முல்லாவுக்கு  கோழிக்குஞ்சு சூப் தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஞசப் தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்.
சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன ? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே? அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் ஹே ஹே என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் ? என்று கேட்டாள்.
   இந்த வினோதத்தைப் பார் ? இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை
அனுப்பியிருக்கிறட்ள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.

2. தளபதியின் சமரசம்
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
   அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது. இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
  மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார். கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்
« Last Edit: February 04, 2012, 01:23:51 PM by Anu »


Offline Anu

Re: முல்லா கதைகள்
« Reply #1 on: February 03, 2012, 11:19:47 PM »
3.எண்ணங்களை பூட்ட வேண்டாம்!!!

   முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை”பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார்.பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்ம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!

4.நம்பிக்கை

    முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே


Offline Anu

Re: முல்லா கதைகள்
« Reply #2 on: February 03, 2012, 11:34:15 PM »
முல்லா கதைகள்-5
  முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்" என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, " அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?

இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

முல்லா கதைகள் -6
   ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.
அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா விசாரித்தார்.
நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
உங்கள் சந்தேகம் என்ன ? என்று முல்லா கேட்டார்.
உண்மை .. .. ..
உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன ? என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார்.
முல்லா பெரிதாகச் சிரித்தார், இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா ? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்


Offline Anu

Re: முல்லா கதைகள்
« Reply #3 on: February 03, 2012, 11:38:34 PM »
நம்பிக்கை மோசம்

   ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி.

முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை கடனாக வாங்கி அவரை ஏமாற்ற அந்த டம்பன் தீர்மானித்தான்.

நிச்சயம் முல்லாவை ஏமாற்றி பெரும் பொருளைக் கடனாகக வாங்கி வருவதாக பலரிடம் சபதம் போட்டு மார்தட்டிக் கொண்டான்.
அந்த டம்பன் சாமர்த்தியமாக செயல்பட திட்;டமிட்டான்.

முல்லா தன்னை நம்பிப் பெருந் தொகை கொடுக்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும், அதனால் தன் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட ஒரு நாடகம் நடித்த எண்ணினான்.

ஓரு நாள் அவன் முல்லாவிடம் சென்றhன்.

  முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா ?ஞ என்று கேட்டான்.

 நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயங்க மாட்டேன். நீ ஒரு காசுதானே கேட்கிறhய். இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யாமல் இருந்தால் பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்ஞ என்று கூறி டம்பனுக்கு ஒரு காசு கடனாகக் கொடுத்தான்.

டம்பன் நாலைந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசு எடுத்துக் கொண்டு அவரிடம் வந்தான்.

ஞமுல்லா அவர்களே தாங்கள் கடனாகக் கொடுத்தத அற்பப் பொருள்தான் என்றhலும் மிகுந்த நாணயத்தடன் பொறுப்புடன் திரும்பிக் கொடுத்து விடுவது என்று வந்திருக்கிறேன். பணவிஷயத்திலே நான் மிகவும் நேர்மையானவன் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்ஞ என்று கூறிவாறு டம்பன் ஒரு காசை முல,;லாவிடம் திரும்பிக் கொடுத்தான்.

முகத்திலே மலர்ச்சியில்லாமல், ஏதோ உபாதைப் படுபவர் போல ஒரு காசை வாங்கிக் கொண்டார் முல்லா.

டம்பன் அந்த இடத்தை விட்ட அகலாமல் தலையைச் சொறிந்து கொண்டு நின்றhன்.

 என்ன சமாச்சாரம் ?ஞ என்று முல்லா கேட்டார்.

 ஐயாயிரம் பொற்காசுகள் கடனாகத் தரவேண்டும். நாணயமாக ஒரு காசைப் திருப்பிக் கொடுத்தது போல ஐயாயிரம் பொற்காசுகளையும் திரும்பித் தந்த விடுவேன் ஞ என்றhன் டம்பன்.

 உனக்கு இனி நான் ஒரு காசு கூடக் கடனாகக் கொடுக்க முடியாதுஞ என்று முல்லா கோபமாகச் சொன்னார்.

 முதலில் நான் வாங்கிய ஒரு காசைத்தான் திரும்பத் தந்தவிட்டேனேஞ என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்பன்.

 நீ ஒரு காசு கடன் வாங்கிய விஷத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் என்றhர் முல்லா.

டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தான்.

 முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையை திரும்பிக் கொடுத்திருக்கும் போது நம்பிக்கை துரோகம் செய்ததாக எவ்வாறு கூறுகிறீர்கள் ?ஞ என்று திகைப்போடு கேட்டான்

 நம்பிக்கை மோசந்தான் செய்து விட்டாய் நான் கொடுத்த ஒரு காசை நீ திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி விடுவாய் என்று நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்து விட்டாய். அதவாது நான் என்ன நம்பினேனோ அதற்கு மாறhக நடந்த விட்டாய் ஆகவே இதுவும் நம்பிக்கை மோசந்தான். அதனால் ஒரு காசு கூட உனக்குக் கடன் தரமாட்டேன் ஞ என்று கூறியவாறே முல்லா வீட்டுக்குள் எழுந்து சென்று விட்டார்.
முட்டாள் காவலர்கள் 
  முல்லா வாழ்ந்துவந்த நாட்டிற்கு அடுத்த நாட்டிலே சட்டம் ஒன்று போட்டிருந்தார்கள்.அந்தநாட்டின் எல்லைக்குள் யாரும் கோழி முட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்யக்கூடாது. ஆனால் கோழிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை ஒன்றும் இல்லை.முல்லா அந்த நாட்டுக்கு பிறர் அறியாமல் கோழிமுட்டைகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார்.ஒரு நாள் முல்லா கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் பிரவேசித்தபோது இரண்ட காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.மூடபப்பட்டிருந்த அவர் கையிலிருந்த கூடையைப் பார்த்து ஞகூடைக்குள் என்ன இருக்கிறது ?ஞ என்று காவலர்கள் கேட்டனர்.கோழிக்குஞ்சுகள் இருக்கின்றனஞ என்றhர் முல்லா
 
கோழிக்குஞ்சுகளை எடுத்துச் செல்வது குற்றமல்ல என்றhலும் சுங்க அதிகாரிகள் இந்தப் பக்கம் வரும்போது கூடையை அவர்களிடம் காண்பிக்க வேண்டும் *ஞ என்று காவலர்கள் கூறினார்.அவ்வளவு நேரம் என்னால் தாமதிக்க முடியாதே * இன்று ஒரு நாள் என்னை நாட்டுக்குள் போக விடக் கூடாதா ? என்று கேட்டார் முல்லாஅது எப்படி முடியும். உம்மை எதிர்பாராத விதமாக சுங்க அதிகாரிகள் பிடித்துக்கொண்டு உமது கூடையைப் பரிசோதிக்கும்போது இதிலே முட்டை இருந்து விட்டால் உமக்குத் தண்டனை கிடைப்பது மட்டுமல்ல எங்கள் வேலையும் போய்விடும் ஞ என்றனர் காவலர்கள்.என்னுடைய கஷ்டம் உங்களுக்கு விளங்கவில்லை. நான் உடனே செல்லாவிட்டால் குடி முழுகிப் போய்விடும். தயவு செய்து இன்று என்னை விட்டு விடுங்கள் ஞ என்றhர் முல்லா.காவலர்கள் யோசித்தனர்.
   
பிறகு இருவரும் கலந்து பேசினர்.பாவம், இந்தப் பெரியவர் அவசரமாகப் போக வேண்டும் என்கிறhர். கூடைக்குள் என்ன இருக்கிறது என்று நாமே பரிசோதித்துப் பார்த்து விட்டு இவரை அனுப்பி விடலாமே என்று இருவரும் தீர்மானித்தனர்.  கூடையை நாங்களே பரிசோதனை செய்து பார்த்துவிடுகிறேhம்ஞ என்று கூறியவாறு காவலன் ஒருவன் கூடையின் மூடியை அகற்றினான்.கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பெரியவரே, பொய்சொல்லி அல்லவா எங்களை ஏமாற்றப்பார்த்தீர். சுங்க அதிகாரிகளிடம் நீங்கள் பிடிபட்டிருந்தால் எங்கள் வேலை போய்விட்டிருக்கும்ஞ என்றனர் காவலர்கள்.
   முல்லா கோபங்கொண்டவர்போலப் பாவனை செய்து  நீங்கள் இருவரும் அடிமுட்டாளாக இருக்கிறீர்களே * நான் பொய் சொன்னேன் என்று ஏன் அபாண்டமாகப் பேசுகிறீர்கள் ? என்று கேட்டார். கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக அல்லவா நீர் சொன்னீர் என்றhன் ஒரு காவலன்.ஆமாம், அப்படித்தான் சொன்னேன் *ஞ என்றhர் முல்லா கூடைக்குள் கோழி முட்டைகள் அல்லவா இருக்கின்றன. இது பொய் அல்லவா * எனக் காவலர்கள் வினவினர். மோசமான முட்டாள்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். கூடைக்குள் என்ன இருக்கின்றன ?ஞ என்று முல்லா கேட்டார்.கோழி முட்டைகள்ஞ என்று காவலர்கள் பதில் கூறினார்கள்.கோழி முட்டைகளுக்குள் என்ன இருக்கின்றன ? என்று வினவினார் முல்லா.   
      காவலர்கள் இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரு திருவென விழித்தனர்.என்ன முழுக்கிறீர்கள் ? வேறு மாதிரியாகக் கேட்கிறேன் கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன ?ஞ என்று முல்லா கேட்டார்.கோழி முட்டைகளுக்குள்ளிருந்துஞ என காவலர்கள் விடை கூறினர்.அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று ஆகிறதல்லாவா ?என்று கேட்டார் முல்லா.ஆமாம்  என்று காவலர்கள் விடை கூறினர்.அதாவது கூடைக்குள் முட்டைகள் இருக்கின்றன அல்லவாஞ என்று வினவினார் முல்லா.இதைத்தான் நான் சொன்னேன். ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே சட்டப்படி இது குற்றமல்லஞ என்று முல்லா வாதித்தார்.அந்த முட்டாள் காவலர்கள் முல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.
« Last Edit: February 04, 2012, 01:33:30 PM by Anu »


Offline Anu

« Last Edit: February 09, 2012, 04:41:57 PM by Anu »