Author Topic: இறுதி முடிவு வரை காத்திருக்கவும் யார் இந்தக் கண்ணா ?  (Read 995 times)

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
அன்பே என் செல்லமே என் வயிற்றில் பிறந்த செல்வமே !

அதிகாலை எழுந்ததும் அம்மா என்று என்னிடம் தவண்டு வரும் என் பிள்ளை.
உன்னைப்பார்க்கும் பொழுதுகளில் எல்லாம் என்னை அறியாத ஆனந்தம் என்
மனதில். தெருவோரம் அதிகாலை தொடக்கம் மாலை வரை ஒரே சனக்கூட்டம்.
வகை வகையான பழங்களை தலையில் ஏந்தி வியாபாரிகள் வீட்டை கடந்து
செல்ல அம்மா அந்தபந்தை வாங்க்கித்தருங்கள் என்று பழங்களைபந்தாக எண்ணி
என்னிடம் கெஞ்சி நிற்பாய். நான் உன்னைத்தடுத்தாலும் நீ விளையாட்டுப்பிள்ளை
வெளியே சென்று வியாபாரம் மேற்கொள்ளும் மாமாவிடம், அண்ணாவிடம்,
அக்காவிடம் இப்படி அனைவருடனும் செல்லப் பிள்ளையாக விளையாடுவாய்.

மாமா  கடையில் பழைய புத்தகங்களின் ஏட்டை திருப்பி நீ பார்ர்க்கயில் பார்
போற்றும் சிறந்த உயர்வை நீ அடைய வேண்டும் என்று எனது உள்ளம் வெதும்புகிறது.
உனக்கு சாப்பாடென்றால் போதும் கொள்ளைப்பிரியம். இரசித்து ருசித்து உண்பான்
எனது பிள்ளை "கண்ணன்". உன்னைப்போன்ற சிறார்களின் விளையாட்டை நீயும்
பார்த்து இரசிப்பாய் அவர்களுடன் சேர்ந்து ஆடுகையில் உனது மகிழ்ச்சியின் அளவே
எல்லை இல்லாது செல்லும்.

விளையாட்டுக்கடைகளில் விளையாட்டுப்பொருட்களை ரசித்துக்கொண்டு நிற்பாய்
நல்ல உடை இல்லாமல் இருப்பதனால் உள்ளே செல்ல தயங்கிப்போவான்
என் "கண்ணன்" நானும் ஏக்கத்துடன் உன்னைப்பார்த்து கண் கலங்கிவிடுவேன்.
அம்மா நினைவே உனக்கிருக்காது காலை இருந்து மாலை வரை உனக்கு வீதி தோறும்
உறவுகள். அப்பொழுது எங்கே எனது ஜாபகம் உனக்கு வரும்?
இருந்தாலும் எனது செல்லக்கண்ணனின் விளையாட்டுகளை பார்த்து இரசிப்பேன்.

உனது நண்பர்கள் பாடசாலை செல்லும் வேளையில் நீயும் அவர்களுடன் புறப்பட்டு
விடுவாய். எனது பிள்ளையை பத்திரமாக பார்த்துக்கொள் இறைவா என்று எனக்குள்
ஏக்கமும் ஒலித்துவிடும். நீ வீடு திரும்பும் வரை எனது இதயம் பதறும்.
நீ அம்மாவிடம் உற்சாகத்துடன் ஓடி வருகையில்

எனது பிள்ளையை அன்பாக முத்தமிட்டு அவனை ஆரத்தழுவுவேன். பக்கத்தில் அழகாக செல்லமாக எனது பிள்ளை என் தோளில் சரிந்தபடி உறங்கிவிடும் பொழுது எண்ணிப்பார்ப்பேன்
என் பிள்ளையைப்போல் யாருக்கும்பிள்ளைகள் கிடையாது எனும் தாய்குறித்தான சுயநலம். மீண்டும் அதிகாலை ஆனதும் எழுந்துவிடுவான் டே கண்ணா அம்மா சொல்வதைக்கேள்
சாப்பிட்டு விட்டு செல் என்றால் கேட்க மாட்டான் அவருக்கு வியாபார மாமாக்கள் தான் நினைவிற்கு வரும்.

அவர்கள் இவருக்காக வைத்திருக்கும்  உணவை உண்பது தான் என் குறும்புக்கண்ணனின்
ஆசை.நீ தாமதமாக சென்றால் வியாபாரிகள் எங்கே இவனை இன்னும் காணவில்லை
இந்த நேரம் வந்துவிடுவான் என்று காத்திருப்பார்கள் உனது மாமாக்கள். மகிழ்ச்சியின்
உச்சக்கட்ட நாளில் நீ மிதந்துவிடும் இந்த நொடியில் வேகமாக உன்னை நோக்கி வ்ருகிறது
குடி போதையில் கார் ஒன்றை செயல்படுத்தும் குடிகாரன் ஒருவன் அனைவரும் பதறி
ஓடுகையில் சிறுவன் நீயோ தடுமாறி நின்று...............................

அடித்து சிதறப்பட்டு விட்டாய் கூட்டத்தின் சப்தம் அசாதாரணமாக கேட்கும்
சத்தத்திலும் உனது குரல் அம்மா என்று பலத்து கேட்டதாலும்
ஓடி வருகிறேன் கூட்டத்தின் நடுவில் ஒரே இரத்த ஓட்டம் நான் செல்லமாக
எதிர்பார்ப்புகளுடன் வளர்த்த எனது கண்ணா......................!

ஐயோ ! என் சுயநினைவு இழந்து அழுதுவிடுகிறேன். இவ்வளவு ஆண்டுகளாக
செல்லமாக வளர்த்த என் பிஞ்சு குழந்தையை வைத்தியசாலை கொண்டு
செல்ல யாருக்கும் முடியவில்லையா? அனைவரும் மறு
வேலை பார்க்க சென்று விட்டீர்களே  கண்ணா அம்மாவைப்பாரடா என்
அமுதே!என் செல்லமே! என்று நான் ஏங்கி நிற்கையில் வீதியை துப்பரவாக்கும்
ஊழியர் என் கண்ணனை தூக்கி இந்தக் குட்டி இவ்வளவு பாரமா என்று கேட்டுவிட்டு
வண்டியில் ஏற்றி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு செல்கையில். என்னுடைய
இதயம் உருகி கண்ணீர் துளிகள் வெதும்பி இப்பொழுது உடல் இருந்தும் உயிர் இழந்து
நிற்கிறேன் கண்ணா கண்ணா கண்ணா :'(......................!
« Last Edit: November 01, 2016, 06:51:48 PM by AnoTH »

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
குட்டி ஹாய் ! கதை வடிவம் அருமை.. சூப்பரா எழுதிருக்கீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆரம்பித்தது சந்தோஷத்தில் முடிந்தது துக்கத்தில். அழுகை வந்தந்து.என்னால் ஜீரணிக்க முடியாது குட்டி. ஒன்றே ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். எனக்கு மிருகங்கள் மேல் அளவு கடந்த பாசம். படமோ கதையோ கவிதைகளோ இறந்து போகும் தெரிஞ்ச படிக்கவோ பார்க்கவோ மாட்டேன். குட்டி இன்னும் அழகான கதைகள் எழுதுங்க. முடிவு இன்பமா இருக்க ஆசை. வாழ்த்துக்கள் குட்டி.
« Last Edit: November 01, 2016, 07:03:51 PM by BlazinG BeautY »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
அன்பு அக்கா உங்கள் நேரத்தை ஒதுக்கி கதையை இரசித்தமைக்கு
மிக்க நன்றி. கதையின் உணர்வினை நீங்கள் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி
அளிக்கிறது. பிராணிகளை நீங்கள் நேசிக்கும் விதம் மிகவும் ஆழமான
பாசமாக விளங்குகிறது. இனி தொடரும் கதைகள் இன்பமான முடிவுகளாக
எழுத முயற்சிக்கின்றேன்.

நன்றி அக்கா

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
அன்பின் வணக்கம் தம்பி,

கதையும் அதன் கருவும் மனிதர்கள் நடுவே
அதிகம் பேசப்படு பொருள்,

உன் கண்ணாவின் சிறப்பியல்பை மனிதர்கள் தம்மகத்தே
நிலைபெற செய்ய மறப்பதனாலேதான் பிரிவினைகள்,

உனது கண்ணாவுக்கு கடவுள் கொடுத்த வரமாம்
நன்றி உணர்வு மனிதர் நடுவே நிலைத்தால், நிலைபெறும்
உறவுகள்.

தொடர்ந்து பயணம் செய், சோர்வு வரும்போது தட்டி
கொடுப்பாரை நாடு, பயணம் தடையற ஓடும்.

வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....