Author Topic: சட்டெனத் தொலைந்திடும் தொடர்புகள்  (Read 2770 times)

Offline Anu

வெளியே மழை சினுங்கி கொண்டிருக்கிறது. அலைபேசிகள்கும் மிகப் பிரபலமான, நவீனப் படுத்தப்பட்ட என் நண்பனின் கடை. மழையில் வாடிக்கையாளர் யாரும் வராமல் சோம்பிக் கிடந்தது. ஒரு நடுத்தர வயது மனிதர் வந்தார். மழையில் தொப்பலாக நனைந்திருந்தார். முகத்தில் இருள் அப்பிக் கிடந்தது. கையில் கொஞ்சம் விலையுயர்ந்த மாடல் போன் வைத்திருந்தார்.

கடையை நிர்வகிக்கும் வகிக்கும் நபர் வந்தவரிடம் “என்னங்கண்ணா திரும்பவும் பிரச்சனையா என்றார்” அப்படிக் கேட்டபோதே புரிந்தது சமீபத்தில் தான் ஏதோ பிரச்சனைக்காக வந்துள்ளார் என்பது.

“போன்ல இருந்த எல்லா நெம்பரும் அழிஞ்சுபோயிடுச்சுங்க, பைத்தியமே புடிச்சிரும் போலயிருக்குதே”

“ஏங்க என்ன பிரச்சனை, அன்னைக்குத் தானே உங்க போன்ல இருந்த எல்லாக் கான்ட்க்ட்சையும் சி.டில போட்டுக் கொடுத்தொம்”

“அந்தக் கருமத்த தெரியாத்தனமா, ஒடைச்சி தொலைச்சிட்னேனுங்களே”

“சரி இப்ப என்னாச்சு”

“நம்ம பையன் எடுத்து, பக்கத்தூட்டுக்காரரு போன்லயிருந்து பாட்டு ரெக்கார்ட் பண்டீருக்கான், அதுக்கப்புறம் வேலை செய்லீங்க, அங்க ஒரு நாயிகிட்ட குடுத்துப் பார்த்தேன், அவன் என்னுமோ நோண்டிப்போட்டு, எல்லா நெம்பரும் போயிருச்சுனு சொல்லிட்டான், அதுதான் இங்கியே கொண்ட்டு வந்தேன்... சாமிசாமிய இருப்பீங்க, எப்பிடியாச்சும் எல்லா நெம்பரையும் எடுத்துக்குடுத்ருங்க”

கையில் போனை வாங்கும்போதே இவர் சொன்னார், “அண்ணா, முடிஞ்சா கண்டிப்பா எடுத்துத்தர்றோம், அதுல எதுவும் இல்லீனா, எங்களாலும் ஒன்னும் பண்ண முடியாது”

“அய்யோ, சாமி அப்பிடிச் சொல்லீறாதீங்க, என்ன பண்ணுவீங்களோ, எடுத்துக் குடுத்துறுங்கண்ணா, அது இல்லீனா, எம் பொழப்பே அவ்வளவுதானுங்க”

“யாவாரம் பண்றதில முக்காவாசிப்பேர் மூஞ்சிகூட பாத்ததில்லீங்க, எல்லா அவுங்க செல்போன் நெம்பர வெச்சித்தானுங்க, வண்டி டிரைவருங்கெல்லாம் நின்னுக்கிட்டாங்க, இந்த நெம்பரு இல்லீனா, எப்பிடிபோய் வசூல் பண்ணுவேன்னு தெரியலியே”

அதற்குள் போனை கம்ப்யூட்டருடன் இணைத்துப் பார்த்த நபர் சொன்னார்
“சார், சிம் கார்டுல இருக்கிற நெம்பர் மட்டுந்தான் இருக்கும், போன் மெமரில ஒன்னுமே இல்லீங்க”

“கடவுளே...!!! அதுல எல்லா நெம்பரும் இருக்குதுங்களா”

“மொத்தம் 125 நெம்பர் இருக்குதுங்க”

“அய்யோ, 600 நெம்பருக்கும் பக்கமா அதுல இருந்துச்சுங்களே, அய்யா சாமி, எப்பிடியாவுது கஷ்டப்பட்டு எடுக்கிறக்கு பாருங்களேன், என்னங்க சோறாக்கிறத தவர எல்லா கம்பியூட்டர்ல பண்ணலாங்றாங்க, எப்பிடியாது எடுத்துக்குடுத்திருங்க, இல்லீனா அவ்வளவுதான் எம் பொழப்பே”

“ஏங்க, அதுதான் போனதடவ வந்தப்பவே சி.டில போட்டுக்குடுத்தோம், அதும் இல்லீங்றீங்க, போன்ல எடுக்க முடியாதுங்களே”

“அய்யா சாமி, காலுலகோட உழுந்தர்ரேன், எப்பிடியாவுது பண்ணிக் குடுத்துறுங்களேன்”

என் பக்கம் திரும்பி “நான் பாருங்களேன், அதுல எந்த நெம்பரையும் எழுதிவெக்கமா உட்டுட்டேன்... ... அது நம்ம புத்தி அப்டீங்க, நம்மள மீறி என்னாயிரப் போவுதுன்னு எகத்தாள இருந்திட்னுங்க, இப்பப் பார்த்த எப்படி பொழப்பு பண்றதுன்னே தெரிலீங்க, அத்தனையும் போன நம்பிப் பண்ற தொழிலாப் போச்சுங்க”தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

என்ன தொழில் செய்கிறார் என்ற போது, ஐந்து, சிறிய நான்கு சக்கர சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு விடுவதாக சொன்னார்.

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு போன் என்பது அதிசயமான பொருள், புதிதாக ஒரு போன் இணைப்பு பெறுவதற்கு, அத்தனை அலைச்சல் அலைய வேண்டும். அப்பொழுது வீட்டுக்கே ஒரு போன் தான் இருக்கும், தூக்கத்தில் கேட்டால் கூட நெருங்கிய உறவு, நட்பு, தொழில் வட்டத்திலிருப்போரின் எண்கள் மனப்பாடமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20, 30 எண்களாவது எளிதில் நினைவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் போனுக்கு அருகில் கட்டாயம் போன் எண்கள் எழுதிவைக்கும் ஒரு டைரி இருக்கும். நம் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர் எண்களும் அதில் குறிக்கப்பட்டிருக்கும். வேறு வழியில்லாமல் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தி அழுத்தி அழைக்க வேண்டியிருந்ததால் எண்களை பெரும்பாலும் மனதில் பதிந்திருக்கும்.

அதுவும் செல்போன் அறிமுகமான காலத்தில் பயன் படுத்திய சிலரின் எண்கள் மட்டும் நினைவில் இருக்கின்றன, அதன்பின் புற்றீசலாய் முளைத்த புதிய புதிய எண்கள், நெருக்கமானவர்களாய் இருந்தால் ஒன்று முதல் 10 எண்ணுக்குள் ஸ்பீடு டயலில் இருக்கிறது, மற்றவர்களின் எண்கள் செல் போனுக்குள் இருக்கும் புத்தகத்தில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து பெரும்பாலனவர்கள் அனைத்து தொடர்பு எண்களையும் ஒரு கையேட்டில் குறித்து வைப்பதோ, புதிதாக இணைக்கும் எண்களை தொடர்ந்து எழுதிவைப்பதோ கிடையாது. அவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.

போன் தொலைந்து போனாலோ, இயங்காமல் போனாலோ, பேட்டரி முழுதும் தீர்ந்து போனாலோ தவிக்கும் தவிப்பு மிகக் கொடுமையானது. நானும் இப்படித் தவித்துப் போயிருக்கிறேன் பல சமயங்களில்... ஆனாலும் ஒருபோதும் புத்தி வந்ததேயில்லை. ஆனால் அவரைப் பார்த்த பின் முதல் வேலையாக நேற்று, என் போனில் உள்ள தொடர்பு எண்களை நகலெடுத்தேன். சந்திக்கும் நபர்களிடமும் சொல்கிறேன்.

சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்து கூட கற்றுக்கொள்ளாத பாடத்தை