தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 060

(1/2) > >>

Global Angel:
நிழல் படம் எண் : 060
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Varun அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

MysteRy:
விண்ணில் இருப்பதை போல் தன்னிகரில்லா
தானை தனிச்சிறப்பதனை

உன்னிலிருந்து இம்மண்ணும்  தனித்துவமாய்
திகழ்ந்திட

இரக்கத்தின் பிறப்பிடமாய் இருக்கும் எல்லாம்
வல்ல இறைவனின்

இறையருள்மிக்க அரும்பெரும் இரக்கத்தின் 
இக்கத்தினால் தான்

பொன்னான பெண்களுள் பெரும் மதிப்புமிக்க பெண்ணான

உன் அருந்தாயின் மணிவயிற்றினில்  சிலகாலம்
பெரும் தவமிருந்து

விண்ணிலிருந்து மண்ணிற்கு அரும்வரமாய் இறக்குமதியான
இறக்கு-மதி நீ,இரக்க-மதி நீ .......

வல்ல இறைவனின் வளம்நிறை இரக்கத்தின்
இறக்கத்தால் தானோ ?

உனக்கு"இரக்கமே"அருள்மிகு சிறப்பு பெயராய் இறங்கியது ..

இதயமுழுதும் மட்டுமின்றி, இம்மியளவும் கூட
இனிமை காட்டியதில்லை நீ

இருந்தும் இனியவளே உன் இனி நினைவின் கிறக்கத்தினில்
கிறங்கியவனாக

கிறுக்கிதள்ளிய கிறுக்கல்கள் தான் இக்கவிதை !!

பவித்ரா:

இருக்கும் வரை தெரியாது
அந்த உயிரின் மதிப்பு
அதில் முதல் இடம் உனக்கு .....

எனக்காய் நீ சமைத்து என் பின்னே வந்து
சிறு விளையாட்டு காட்டி என்னை
 சாப்பிட வைக்க சிரமபடுவாய் .....

இன்று அண்ணன் சமையலில் காரம் கூடிட
கண்கள் கலங்குது உன் கை பக்குவத்தில்
ஒரு பிடி சோறுக்காய் ஏங்குகிறது என் மனது  ...

தலை விரித்து போட்டே வைக்காதேனு திட்டி
எனக்கு எண்ணெய்  வைத்து சடை போட்டு ரசிப்பாய் !
 அப்போது என் முகத்தில் மட்டும் சிரிப்பு இருக்காது...
 
இன்றும் நீண்ட கூந்தல்  எனக்கு இருக்கு
நீ வந்து  எனக்கு எண்ணெய் வைக்க
ஏங்குகிறது என் மனது ...

நீட்டி படுக்க ஆறு அடி கட்டில் இருந்தும்
உன்னுடன் சுருண்டு படுத்துறங்கும்
சுகத்துக்காக ஏங்குகிறது என் மனது ....

பெண் பிள்ளை என்றதும்
பேரின்பத்தில் திளைத்தவளே !
நான் சோறுன்ன ஜிம்மியை
துணைக்கு அழைத்தவளே !....

என்னை அழகழகாய்
அலங்காரம் செய்து அழகுபார்தவளே !
சிக்கனமாய் செலவு செய்தவளே!....

என் தேவையின் போது 
மட்டும் சிக்கனத்தை மறந்தவளே ,
எனக்கு போட்ட முதல் தடுப்பு  ஊசியின் போது
மருந்து எனக்காய் .வலி உனக்குமாய் இருந்தவளே !...


உன் நினைவு வந்து உன் புகை படத்தை
நான் பார்க்கையிலே
சில நேரம் சிரிக்கிறாய் .....

சில நேரம் முறைக்கிறாய் ,
சில நேரம் ஆறுதல் தருகிறாய் ,
சில நேரம் அரவனைக்கிறாய் ....

சில நேரம் கண்டிக்கிறாய் ,
சில நேரம் என்னோடு பேசுகிறாய்
இப்படி பல முகம் காட்ட உன்னால்
மட்டுமே முடியும் அம்மா ....

என் நன்றியை நான் எப்படி உரைக்க
உன் முதுமை என்னும் குழந்தை பருவம்
வரும் போது  உனக்கு எல்லா பணிவிடையும் ....

செய்யும் பாக்கியம் கூட  எனக்கு இல்லையே
ஆதலால்  நான் தாய்மை அடைந்தாள் நீயே
எனக்கு மகளாய் வந்து விடு ...

பேசாத கல்லை வணங்குவது நம்பிக்கை
பேசும் அன்னையை  வணங்குவது தன் நம்பிக்கை
மனைவியை மதித்திடு தவறில்லை
ஆனால் அன்னையை துதித்திடு !

Thavi:
பத்து மாதம் கருவில் சுமந்து
இடுப்பு வலி பொறுத்து
உன கண்களில் நீர் வழிந்தாலும்
உன் தாய்மைக்கு அடையலாம்
நான் என்று ....

எனக்காக உன் விருப்பட்ட
உணவுகளை உண்ணாமலும்
உறங்காமலும் முத்து போல
பாதுகாத்து உன் சொத்தாய்
பெற்றாயே அம்மா ......

காடுகளை கழனியாய் மாற்ற
களத்து மேட்டு மரத்தில்
தொட்டில் ஒன்று கட்டி
ஆராரோ பாடல் பாடி -நான்
அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து ....

வெயில் என பாராமல் பச்சை உடலுடன்
வலி வேதனைகளை தாங்கிக்கொண்டு
வேலைகளை நீ செய்யும் நேரத்தில்
உன் பிள்ளை அழுகுரல் கேட்கவும்
ஓடி வந்து கொஞ்சி கொண்டே ...........

தொட்டில் இருந்து அவசரமாய்
என்னை தூக்கி மடியில் படுக்கவைத்து
ரத்தத்தை முறித்து பலாய் மாற்றி
என் பசி தீர்த்திடுவாயே
அம்மா !

நாட்கள் நீளும் போதும்- நான்
நடக்க நடை வண்டி இல்லாமல்
 நடை பழகி கொடுத்து தத்தி தாவி
நடந்து வரும் அழகை பார்த்து
ரசித்த ரசிகையும் நீயே அம்மா !

அக்கா படிக்கும் போது -அவள்
செய்யும் செயலை பார்த்து
படிப்பது போல அவள் புத்தகத்தை
தலைகீழாய் நான் வைத்து முனங்கிட
என் ஆர்வம் அறிந்து ஆசானாய் மாறினாயே அம்மா !

Varun:
சுமையைச் சுகமாக்கி
சுமந்து சுகமடைந்தாய்

உதிரத்தை அமுதாக்கி
உயிரூட்டினாய்

பத்தியச் சோறுண்டு
பாதுகாத்தாய்

முதல் உறவாய்
முதல் குருவாய்
முதல் இறையாய்
நிறைந்தாய்

என் உணர்வே
உன் உயிராய்
என் உறவே
உன் உலகாய்
மா(ற்)றினாய்

கைமாறில்லாக் கடனாற்றி
கடனாளியாக்கிவிட்டாய்
பாசம் பொழிந்து மழையானாய்
எனைக் காக்க நெருப்பானாய்
சிறகடிக்க விண்ணானாய்

தன்னலமற்ற தாயே...
நீயின்றி நானில்லையே
ஆயிரம் உறவுகள்
கொண்டாலும்
உனக்கு இணை இல்லையே...

கோயிலில் தொழுதாலும்
அங்கே புன்னகைப்பது
உன் முகம் தான்

கடவுள் கண்முன் வந்தால்
கேட்பேன் ஒரே வரம்
"மீண்டும் உன் கருவறையில்
ஓர் இடம்"
எனக்காக கண்ணீர்
சிந்தும் நட்பு கூட
சில சமயம்
கண்டுக்காமல் இருக்கலாம்

நேசித்த உறவுகள் கூட
நினைக்காமல் இருக்கலாம்

நான் கண்ணீர் சிந்த நினைத்தாலே
துடைக்க வரமாட்டாள்
துடித்து வருவாள்
அதுதான் அம்மா!!!!!!!

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version