தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

த‌னி ம‌னித‌ன்

(1/1)

thamilan:
ஒரு கை தட்டினால்
ஓசை எழும்பாது
தனி மரம் தோப்பாகாது
த‌னி ம‌னித‌ன்
ஒரு ச‌முதாய‌ம் ஆக‌ மாட்டான்

ம‌னித‌ன் த‌னித்து
வாழ‌ முடியாது
அத‌னாலேயே அவ‌ன்
சமூக‌ம் என்ற‌ ஒரு
அமைப்பை உருவாக்கினான்


ந‌ம் வீட்டை
நாமே க‌ட்டிக்கொள்ள‌ முடியாது
ந‌ம் உண‌வை
நாமே உருவாக்க‌ முடியாது
ந‌ம் உடையை
நாமே நெய்ய‌ முடியாது
ஒரு ச‌மூக‌த்தால் ம‌ட்டுமே
எல்லா தேவைக‌ளையும்
பூர்த்தி செய்ய‌ முடியும்

ஒருவ‌ருக்கொருவ‌ர்
உத‌வுவ‌தே
ச‌மூக‌ம் ஆகும்

உடலின் அங்கங்களை பாருங்கள்
வாய் உண்ண கை உதவுகிறது
கண்கள் உறங்க காதுகள்
தாலாட்டு கேட்கிறது

உடல் உயிரோடு இயங்க‌
மூக்கு சுவாசிக்கிறது
கால் ந‌ட‌க்க‌
க‌ண் வ‌ழி காட்டுகிறது

இடையில் உடை ந‌ழுவினால்
கை தாங்கிப்பிடிக்கிற‌து
உட‌லில் எங்கு காய‌ப்ப‌ட்டாலும்
க‌ண் அழுகிற‌து

இந்த‌ ஒற்றுமையும் ஒத்துழைப்பும்
இல்லை என்றால்
உட‌ல் என்னாகும்

ச‌முதாய‌மும் அப்ப‌டித்தான்
ஒருவ‌ருக்கொருவ‌ர் ஒற்றுமையாக‌வும்
ஒத்துழைப்பாக‌வும் இருந்தால்
ஒவ்வொரு ம‌னித‌னும் த‌லை நிமிர்வான்

Global Angel:
superb kavithai thamilan ;)

Navigation

[0] Message Index

Go to full version