1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 354
« Last post by PreaM on Today at 02:18:00 AM »இரவில் பூத்த நிலவே வானில்
மொய்க்கும் மின்மினி விண்மீன் கூட்டம்
சிரிக்கும் அலைகளை காதால் கேட்டு
ரசித்திடும் இரவினில் தென்றல் காற்று
இவளது மனமோ இவன் தான் என்று
இசைந்து விட்டாள் காதல் கொண்டு
உப்பங்கழி மலர்மணம் சுவாசம் நுழைந்து
உள்ளக் கூட்டினுள் காதல் விதைத்து
வாழ்க்கைத் துணைவன் இவன்தான் என்று
கரம்பற்றிட எண்ணுது மனம்தான் இன்று
கடற்கரை மணலிலே கால்தடம் பதிந்து
கால்கள் நடைபோடுது நேரம் மறந்து
இயற்கையும் வியக்கும் நம்மைக் கண்டு
சிரிக்கின்ற நிலவோ மோகம் கொண்டு
மறைந்திடும் மேகத்தில் வெட்கம் வந்து
வைகறை பொழுதினில் கடற்கரையில் இன்று
கரம் கோர்த்திட்ட நொடிதான் எந்தன்
மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே என்றும்
என் மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே ......
மொய்க்கும் மின்மினி விண்மீன் கூட்டம்
சிரிக்கும் அலைகளை காதால் கேட்டு
ரசித்திடும் இரவினில் தென்றல் காற்று
இவளது மனமோ இவன் தான் என்று
இசைந்து விட்டாள் காதல் கொண்டு
உப்பங்கழி மலர்மணம் சுவாசம் நுழைந்து
உள்ளக் கூட்டினுள் காதல் விதைத்து
வாழ்க்கைத் துணைவன் இவன்தான் என்று
கரம்பற்றிட எண்ணுது மனம்தான் இன்று
கடற்கரை மணலிலே கால்தடம் பதிந்து
கால்கள் நடைபோடுது நேரம் மறந்து
இயற்கையும் வியக்கும் நம்மைக் கண்டு
சிரிக்கின்ற நிலவோ மோகம் கொண்டு
மறைந்திடும் மேகத்தில் வெட்கம் வந்து
வைகறை பொழுதினில் கடற்கரையில் இன்று
கரம் கோர்த்திட்ட நொடிதான் எந்தன்
மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே என்றும்
என் மனம் மகிழ்ந்திடும் நிகழ்வே ......