Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 353  (Read 393 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 353

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


[/color][/b]

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 661
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
கருவிழி திரண்டு
மேகமாகி

என் மனதில் காதல்
மழை பொழிந்து

கரு மை இமையில்
பூசும்பொதே

என்னை சேர்த்து
பூசினாயே

மையிட்ட கண்ணில்
மையல் உண்டு

மனமுழுதும் உந்தன்
நினைவும் கொண்டு

பிறைநெற்றி சுட்டும்
பொட்டினுள்ளே
 
புதைந்தேனே இன்று
நானும் மெல்ல

கடல் அலை போலே
பார்வை வீச

உன் கண்ணும் என்னிடம்
கதைகள் பேச

மயில்தோகை கொண்டு
 மனதை கூச

வந்தாய் மண்ணில்
நீயும் எனக்காய்



intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Liar

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
உன் கண்மை கண்டு கவி எழுத விரலெடுக்க,
கடைசியில் உன் கண் மையே  கவிதையென
எழுதி முடித்தன எனது விரல்கள்..

என்னவள்  கண்ணழகி
அவள் கண்கள் துரு துரு  பேசும் மொழிஅழகி..

இவ்வுலகின் அழகிய கவிதையாய்
என்னவளின் கண்மை கொண்ட கருமை நிற கண்கள்.

மருண்ட விழிகளா   அவை 
மன்மத  அம்பு  விழிகளா

பயந்த  விழிகளா   அவை 
படையை வெல்லும் விழிகளா 

வட்ட விழிகளா  அவை 
வண்ண  விளக்குகளா

சொட்ட சொட்ட  மின்னும்
நட்சத்திரங்கள்....
   
ஒற்றை விரல் ஓவியம்.
சிப்பிக்குள் கருப்பு முத்து.

மை தீட்டியே விழி அழகியே ...

உன் புருவங்களை
அம்பாக எய்து உன் விழிகளுக்குள்
என்னை கைதியாக்கி விட்டாயடி ...

என் விழிகளில்
உன்னை காணவேண்டும்
ஆயுள் முழுவதும்!!!

LIAR.........

« Last Edit: September 05, 2024, 10:20:18 AM by Liar »

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 221
  • Total likes: 973
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


பெண்ணுக்கு பெண்ணே பேராசை
என்ற காலமெல்லாம் மலயேறியாச்சு...
பெண்ணுக்கே உரிய பேராசையும் - இன்று அழகால் பொறாமையாய் மாறியாச்சு...

பெண்ணே உன்னை கண்ட போது - பொறாமையில்
கவிதை தான் தோணலடி ...
என் கண்ணை மூடி மனதால் ஆணானேன்
இதோ இக்கவிதை வந்து கொட்டுதடி ...

குளத்தில் துள்ளும் மீன்போல்
உன் விழியின் உருவமடி...
காட்டில் துள்ளும் மான்போல் அதில்
துள்ளும் உன் கருவிழிகளடி...

மான் விழியாள் உனைக்கண்டு - தன்னை
மறந்து மனங்கள் பல மயங்குதடி......
மையிட்ட உம் கண்ணில் மயங்கி
இதயம்  பல காணாமல் போனதடி..

காந்தம் போன்ற பார்வையோ - பல
உள்ளமதை கொள்ளை கொண்டதடி ..
கருப்பும் ஓர் அழகென உணர்த்தும் - அந்த
கருவிழியும் கவி பாடுதடி ...

கவி பாடும் இக்கண்கள் - பல
கவிதைக்கு கருவாய் ஆனதடி..
எம்மொழியிலும் புரியாத உணர்வுகள்
உன் கண்ணசைவில் புரியுதடி... -

இமைகள் திறக்கையிலே செந்தாமரை மலருதடி...
பார்வையின் கதிர்வீச்சில் சூரியன் முகம் சிவக்குதடி...
எண்ணத்தில் இருப்பதெல்லாம் கண்ணின் வழி தெரியுதடி....
நங்கை உன் கண்களில் நவரசமும் பொங்குதடி....

காதல் வழியும் இக்கண்களில் என்றும்
மகிழ்ச்சி மட்டும் வாழுமடி..
அழும் நொடிதான் வருமாயின்  -  அந்த
கடவுள் கருணை காக்குமடி...


Offline PreaM

உன்  மையிட்ட கண்ணைக் கண்டு
கண்ணாடியும் காதல் கொள்ளும்
பெண்ணே உன் கண்ணைக் கண்ட
நான் மட்டும் என்ன விதிவிலக்கா
 
உன் கண்ணைக் கண்ட நொடியினிலே
என் கவனம் சிதறி போனதடி
மனம் கவிதை வரிகள் பொழியுதடி
என் காகிதம் நிரம்பி வழியுதடி

உன் மையிட்ட விழிகள் கண்டு
மனம் மயங்கி உறைந்தே போனேன்
இமைக்காத  விழிகள் இரண்டும்
கனவிலும் என்னைக் களவாடுதே

மைபூசிய உன் கண்களுக்கு
என்ன மாயம்  கற்றுக் கொடுத்தாய்
மனம் மயங்கித் தவிக்குறேன்டி
உன் மயக்கும் விழி பார்வையாலே

இதயம் பேச  இதழ்கள் தேவையில்லை
விழியால் பேச மொழிகள் தேவையில்லை
நீ சொல்ல நினைப்பதை புரிந்து கொள்ள
உன் கண் அசைவே போதுமடி...
உன் கண் அசைவே போதுமடி...

Offline Kavii

கவிதை சொல்லும் கண்களே
என் கவிதைக்கு கருவாகின்றன !
தமிழ் சொல்லும் கவிதை !
தாய்மொழி சொல்லும் கவிதை!
எல்லாம் தோற்கின்றன !
உன் விழி சொல்லும் கவிதையில்!

மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
கட்டி இழுக்கும் விழிகளடி உனக்கு!
கவிழ்ந்து விட்டேன் அதை பார்த்து!
உன் இதழ் பேச தொடங்கும் முன்பே
உன் விழி பேசி முடிக்கிறதே !

மௌனமாய் பார்க்கும் உந்தன் கண்ணில்
மறைந்து கொண்டிருக்கும் மாயங்கள்!
மையிட்ட கண்கள் பேசும் மொழியில்,
நான் பேசாமல் அசர்கிறேன்!

மௌனத்தின் அர்த்தம் புரிந்தாலும்,
மையிட்ட கண்கள் மட்டும் புரியவில்லை!,
என்னை வாசிக்காத கண்களில்,
என் ஆன்மாவை கண்டேன்.

மை தீட்டிய கண்கள் கனவாக,
என் உலகை திருவிழாவாக்கும்,
உன் கண்ணில் நான் கண்டதற்கெல்லாம்,
ஒரு வரியாய் மட்டும் நானில்லை!
அது எழுத முடிய காவியம் !

உலகின் மிகச்சிறந்த கருப்பு வெள்ளை சித்திரம்
உன் விழிகள் தானடி பெண்ணே !
அதில் விழுந்த நான் மீளவே முடியவில்லை !
நீ விழிகளால் விளித்தாலும் ! உன் விழிகளில் விழித்தாலும்
விக்கித்து போகின்றன என் கண்கள் !

மை தீட்டிய உந்தன் கண்கள்,
ஏன் இத்தனை கேள்விகளை கேட்கின்றது?
அத்தனைக்கும் விடைகள் உன்னிடம் இல்லை என்பதற்கு,
உன் பார்வை தான் சாட்சி!

உன் மையிட்ட கண்களை பார்த்து,
மற்ற பெண்களின் மனம் பொறாமையில் கரையும்!
மை தீட்டிய உந்தன் கண்கள் மின்னும் நேரம்
என் மனம்  எங்கேயோ தொலைந்துவிடும்!

உன் கண்களின் அழகில் நான் வாழ்வது சுகமல்லவா!
உன் கண்களில் நான் மட்டும் வாழ்கிறேன்.
மை தீட்டிய உந்தன் கண்கள்!
என் கனவுகளுக்கு தோட்டமாகும்,
அந்த கண்களை மறந்து விட முடியுமா?
நிமிடத்தில் என்னை சாய்ந்துவிடும்!
உன் மை தீட்டிய கண்ணில் காதலும் காண்கிறேன் !
சாயலில் தாய்மையின் கருணையும் காண்கிறேன் !
உன் கடைக்கண் பார்வை ஒன்று போதும் எனக்கு!
அது தரும் இன்பமோ பூமியில் மோட்சம் எனக்கு !

உன் கண்களைக் கண்டு கவி எழுத விரலெடுக்க,
கடைசியில் உன் கண்களே கவிதையென
எழுதி முடித்தன எனது விரல்கள்...
« Last Edit: September 06, 2024, 01:51:07 AM by Kavii »

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 238
  • Total likes: 424
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
ஒரு கண்ணாடியின் காதல் கதை 💕

முதன் முறை என் ஊடே
 அழகிய பிம்பமாய்
தேவதை அவளை பார்த்தேனம்மா

பிறவி பலன் அடைந்த
 பக்தன் போல பிரமிதம்
  மெல்ல நானும் அடைந்தேனம்மா

கயல் விழி அவள்
கண்களை சிமிட்டி
ஆசையாய் என்ன பார்த்தாளம்மா

உதடுகளை குவித்து
குறும்பாய்  சட்டுனு
முத்தமும்  ஒன்று இட்டாளம்மா

மெல்லிய விரல்களில் 
இமைகளை விலக்கி
கண் கொட்டாமல் கவனித்தால்
 என்னை தான்னம்மா

கவனமாய் விழி ஓரம்
மங்கை அவள் மை சூட
மை விழி ஜாடையில்
 மயங்கி  நானும் போனேனம்மா

நெருங்கி அவள் வருகையிலே
பதமான அவள்  மூச்சு  காற்றும்
கனிவோடு என்னைத்தான்
உரசி   கொஞ்சம் போனதம்மா
 
கடை கண் பார்வையில்
கள்ளி அவள் கவிதை சொல்லி
கண்ணாடி என்றும் பாராமல்
எனை கவர்ந்து சென்றாளம்மா 

மை விழியாளே
எனக்குள் இருப்பவளே
இதயம் திறந்து காட்டுகிறேன்
என்னுள் என்றென்றும்
உன் உருவமே தானம்மா♥️

என் வழி நீ பார்க்க
உன் விழியில் என்னை காண்கிறேன்
கரு மையிட்டு போகும் பெண்ணே
அதில் மையமாகி போனேனே அன்பே!❤️

« Last Edit: September 04, 2024, 08:25:52 AM by Vethanisha »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 688
  • Total likes: 1900
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


பெண்மையே! நீயும் தான் எவ்வளவு அழகு..
இப்படித்தான் தினம் தினம் கேட்கின்றோம்..

வில்லென வளைந்த புருவம் ஓரழகு
வேலென சீறிப்பாயும் பார்வை ஓரழகு
நீரின் மீனென நீந்தும் கருவிழி ஓரழகு
இப்படித்தான் தினம் தினம் கேட்கின்றோம்..

இதன் பின்னே இருக்கும் அர்த்தங்கள் தான் என்ன?
அதன் பின் மறைந்திருக்கும் சூட்சமம் தான் என்ன?
உன்னை அழகு என்று சொல்லும் சொல்லுக்குள்ளே
ஒளிந்திரும் பொருள்தனை புரிந்துகொள் பெண்மையே..

கார்மேக கருமகூந்தலில் மிதக்கும் பிறைநிலவு..
உன் நெற்றி என்பர் சிலர் அல்ல... பலர் சொல்வர்...
கார்மேகம் அழகுதான்..  பிறைநிலவும் அழகுதான்..
அந்த கருப்பின் பொருள் உணர்தல் அவசியம்..

மழைநீரை தன்னுள் அடக்கி.. தேவையின் பொழுது..
நீர் இறைத்து.. நன்மை தரும்.. கரும் மேகம்.. போல..
உன்னுள் அடங்கிய நல்ல தூய எண்ணங்களை..
உன் சுற்றம் பயனுற... உன் சிந்தையை செயலாக்குவாயாக..

வளர்ந்து தேயும் வெண்ணிற... குளிர்நிலவு போல. 
உன்னுள் அடங்கி நிற்கும்.. உன் மதியெனும் ஒளியை..
தேவைக்குஏற்ப பிறைநிலாவாகவோ.. இல்லை முழுமதியாவோ
உன் சுற்றம் பயனுற... உன் மதி நுட்பத்தை செயலாக்குவாயாக..

சாதாரண மரக்கட்டை.... ஆயுதம் ஆகாது.. அதை பக்குவமாக
பதமாக.. வளைத்து நாணேற்றினாலே.. உயிர் காக்கும் ஆயுதமாகும்..
அதேபோல்,  நீ பேசும் வார்த்தைகளை.. ஏற்ற இறக்கமுடன் பேசி..
உன் சுற்றம் பயனுற... சொற்களை கவனமுடனே கையாளுவாயாக..

நீர் நிலைகளில்... சந்தோசமாக சுற்றி நீந்தும் மீன்கள்..
தடாகத்தின் இருக்கும்.. அசுத்தங்களை புசித்து..  தூய்மையாகும்..
அதேபோல், உனை சுற்றிவரும்.. எதிர் வினைகளை உள்வாங்கி..
உன் சுற்றம் பயனுற... உன் நேர்மறை ஆற்றலை கையாளுவாயாக..

பெண்மையே! வார்த்தையின் பொருள் புரிந்தால்.. பெண்ணே!
பெண்மையே!! நீயும் வையகம் வியக்கும் அழகியே..

« Last Edit: September 04, 2024, 12:07:42 PM by TiNu »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 204
  • Total likes: 442
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
இயற்க்கையும் நேசிக்கும் என் அவளின் அழகுதனை"

என் இனியவளே !  பூத்து குலுங்கும் மலர்களும் பொறாமை கொள்ளும்  மெய் சிரிக்க வைக்கும் உன் அழகை  பார்த்து,

கதிரவனும் கற்சிலையாய் உறைந்து நிற்கும், கன்னி அவள் கண்களை கண்டு.

விண்மீன்களும்  வியந்து நிற்கும் ,
உன் ப்ராஹாசமான  மிளிரும் முக அழகை கண்டு,

கடல்  நீரும் காத்து கிடைக்கும் உன்  அழகிய பாதம் தொட.

பூங்காற்றும்  புன்னகைக்கும்  உன் பொன்னுடல் மேனியை  தீண்டியதினால்.

மரம்  செடிகளும் மயங்கி நிற்கும்  மங்கை அவள் மனம் கண்டு.

இறுதியில்  உன் நிழலும்  உன் மேல்  நேசம் கொண்டதடி  உன்னை பின்  தொடர்ந்ததினாலே.

வார்த்தைகள் இல்லை, வண்ணமயில் அவளின் அழகுதனை வர்ணிக்க.

தன்னை போன்ற அழகு இவ்வுலகில் இல்லை என்று கர்வம் கொண்டிருக்கும் ரோஜா மலரிடம், என் அவளை சென்று காண்பிக்க வேண்டும்,

 இவளைப்போன்ற அழகு என்னில் இல்லை என்று,  கர்வம் கொண்ட ரோஜா வெட்கி தலைகுனிவதை பார்க்க.

இயற்க்கை மொத்தமும் என் அவளின் அழகு தனை அலங்கரிக்க காத்து நிற்க..

என் நேசகி அவளின் காத்திருப்பு எனக்கானது என என்னும் பொழுது, என்னுள்ளம் காதல் எனும் கடலிலே மூழ்கி விட்டது..

என்றும் என் தேவதை உடனான தொடர் பயணத்தில்   -MN-AHAMED AARON..

« Last Edit: September 06, 2024, 04:01:30 PM by Unique Heart »

Offline Angeline

  • Newbie
  • *
  • Posts: 8
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கண்விழி மூடினாலும் மூடாதே உன் மை விழி ....
இமைக்கா நொடிகளை தந்து என்னுள் ஆயிரம் பட்டாம்பூச்சி பூச்சிகளை சிறகடிக்க வைத்தாயே...
மை எனும் பூச்சு என் வழிகளில் ஆக்கினாயே என் பிம்பத்தின் மூச்சு....
காந்த பார்வையால் கட்டி இழுப்பாயாடி என் கண்மணி என என் கோமான் அழைபானே...
அந்த , காந்தமேனும் பார்வையை மை பூச்சினால் அழகுற செய்த தூண்டில் நீதாமோ....
பெண்டீருக்குள் , ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் ஓடும் ஆனால் உந்தன் மை பூச்சின் மகிமை என வென்று தெரியுமோ ... எந்தன் அகத்தினையே சற்று அழகுற செய்யும் புறத்தினை தோற்றுவிக்கும் சாதானமாய் நீ அமைவந்தால்...
அஞ்சன மை இடும் என் குல பேண்டீர்கள் மெய்யாய் பேசும் உம்மை கொண்டு தீட்டி வர்ண ஜாலம் காட்டி பார்ப்பவர்கள் மனதிலே பசுமரத்தாணி போல் பதிய வைக்கும் முகம் தனை படைத்தே கொடுப்பாயோ நீயே....!!!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடா தென்பர் பெரியோர் ... அக்கண்ணடியில் , இருந்து எமை மட்டும் அல்லாமல் எமை போன்ற ஏனைய பெண்டீர்களையும் காக்கும் ஓர் சாதனம் நீ என்று கூறினால் அது மிகையாகுமோ சொல்...!
மெய்யாக பெண்டீர் வாழ மையாக நீ இருந்து எங்கள் வாழ்வின் மையத்தில் வசந்தம் எனும் பூங்காற்றை என்றும் வீசு ...!!! என் இனிய கண் மையே...😍😍😍



With Love Angeline

Offline SweeTie

உச்சி  வகிடெடுத்து  வாரி முடிந்து
பிறை நுதலில்  வட்டத்திலக்கமிட்டு
எட்டினின்று  பார்ப்பதென்ன? 
சுட்டும் விழிச்சுடராய் 
சூரிய  சந்திரப்போல்  உன் 
கொட்டும்  விழிகள் ரெண்டும்
பேசும்  மொழி  எதுவோ ?

கார்கால   விளக்கொளிபோல்
தங்கச்சி  சிமிக்கி  ரெண்டும்  உன்
கழுத்தோரம்   கொஞ்சுகையில்
மாமன்  நான் சித்தம் கலங்கி
உன் நினைவால்  பித்தாகி
தவிக்கிறேனே   தெரியலையா ?

மலர்போன்ற  உன் முகத்தில்
கரு வண்டுகள்   மொய்த்தனவோ
செவ்வானம் போன்ற
சிவந்த உன் கன்னத்தில்   
நீ சிரிக்கையில் விழும் குழியில்
பல்லாங்குழி ஆட இந்த
மாமன் வருவதெப்போ ?

அத்தை  பெத்த ரத்தினமே
அழகான    பெண்மானே 
சித்திரையில்  பிறந்தாயோ 
பத்திரமாய்  வளர்ந்தாயோ 
பௌர்ணமி  போல்  நீ இருக்க
பார்த்துக்கொண்டே நானிருக்க
நாம் கைப்பிடிப்பதெப்போது?