FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 13, 2011, 06:32:24 PM

Title: Dharshini(poem)
Post by: Dharshini on July 13, 2011, 06:32:24 PM
En Idhazhin Azhagai Unardhean....

Un Peayarai Ucharikum podhu...
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 13, 2011, 06:48:08 PM
En

Vizhigalil Azhudida

Idhazhkalil Siridhida

Imaigalil Uragida

Imsaiyai Rasithida

Vetrilil Kalidhidadh

 Tholviyil Thuvandida

Muthathil Sedhukida

Uthidharathai Thudaithida

Uyirudan Kalandhida

Inbathai Perukida

Innalai Kalaidhida

Iraivanal  Parisalikapada

 Iniya Devathai Nee

Amma

Unaku Naan Patta Kadanathai

Edhanai Piravi Edudhum

Theerka Mudiyadha Nilaiyil

Ondru Matum

Urudhi Seigirean....

UNN

Uyirthuliyaghakarudhi

Enaku Nee  Aariyavaighalai

Marandhidum Naalondril

Indha Maghaluku

Ivulagam Vaidhidum

Peayar Pinnam!!!!!!!!!!!




Title: Re: Dharshini(poem)
Post by: Global Angel on July 13, 2011, 10:29:23 PM
nice di aama unakku kavithai ellam varumaaaaaaaaaa ::)
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 14, 2011, 05:23:55 AM
jimmioo en peara soli paru apo therium  enaku kavithai varuma varadhanu  ;) ;) ;)
Title: Re: Dharshini(poem)
Post by: Global Angel on July 14, 2011, 03:37:40 PM
un perei solli paarthendi kavithai varala kaaththuthan varuthu... solla mudiyaathum sm time kaluthaingalum varalam... ;) ;) ;)
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 14, 2011, 06:15:34 PM
un voice ah ketu dhan donkey vandhu irukum adhuku en peara sonadhala vandhuchinu ne mathi solita
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 15, 2011, 03:15:43 PM
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது


குறுகலான சாலையில்
ஒரு வாகனத்தின்
தவறான நிறுத்தத்தினால்
ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல்
இருப்பினும் கடந்து செல்லும்
வாகன ஓட்டிகள் திட்டிக்கொண்டும்
அந்த வாகனத்தை
முறைத்து கொண்டும் செல்கின்றனர்
ஆனாலும் எவரும்
அந்த வாகனத்தை சேதப்படுத்தவில்லை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது
முன்பெல்லாம்
பெட்ரோல் டீசல் விலையேற்றம்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தற்போது வாரம் இருமுறை
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது
இலங்கை கடற்படையால்
மீனவர் கொல்லப்படுவதும்
சிறைபிடிக்கப்படுவதும்
தினசரி செய்திகளில்
படித்துப் படித்து
சகிப்புத்தன்மை பழகிப்போய்விட்டது

Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 15, 2011, 03:18:52 PM
                                 வண்டுகள் விற்பனைக்கு


இங்கு...
பூக்கள் விற்பனைக்கு அல்ல
வண்டுகள் மட்டும்!
கல்வி கற்க அல்ல
விற்க மட்டும்!
பட்டம் படித்தவர்க்கு அல்ல
பணத்திற்கு மட்டும்!
சட்டம் தடுக்க அல்ல
தூங்க மட்டும்!
கடமை ஆற்ற அல்ல
பேச மட்டும்!
உரிமை வாழ்வதற்க்கு அல்ல
சாக மட்டும்!
சக்தி ஆக்க அல்ல
அழிக்க மட்டும்!
பதவி (பலர்க்கு) ஆள்வதற்கு அல்ல
அராஜகத்திற்கு மட்டும்!
கவலை எல்லோர்க்கும் அல்ல
ஏழைக்கு மட்டும்!
தேர்தல் - பிரஜையின் பங்கெடுப்பு அல்ல   
வாக்களிப்பு மட்டும்!
அரசாள்வோர் (சிலர்) சேவைக்கு அல்ல   
ஊழல் விளைக்க மட்டும்
!
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 16, 2011, 01:41:10 AM
                          நாங்களும் மனிதர்கள்

வாழ்ந்ததற்கான
அடையாளமின்றி அழிந்துபோனது
இலங்கை தமிழனின் இருப்பிடம்,
முள்வேலி கம்பிகளுக்குள்ளே
முடவர்களாய்,
குருதியின் நாற்றத்தோடு
கழிவுகளின் நாற்றம்
இரண்டுக்கும் இடையில் நாங்கள்.
எந்த கவிஞனாலும்
எழுதமுடியாத 'துயரம்'
எந்த ஆண்டவனாலும்
தீர்க்கமுடியாத 'பிரச்சினை'
இலங்கை தமிழனுக்கு நேர்ந்தது.
இறந்த உறவுகளுக்காகவும்
நட்புகளுக்காகவும் அழுவதா?
இல்லை
ஏன் நாம் மட்டும் தப்பினோம் என்றழுவதா.
தெரியவில்லை.
மனிதர்களோடு சேர்ந்து
இயற்கையும் அழிந்தது
போராட முடியாமல்.
எல்லா மதங்களாலும்
எல்லா மனிதர்களாலும்
கைவிடப்பட்டோம்.
மனிதனின் மாமிசத்தை
மனிதனே கண்டுகழித்த காட்சி,
நானும் சிதைந்திருந்தால்
இப்படித்தான் சிதைந்திருப்பேனோ
என தன்னைத் தானே
பிணமாக நினைத்துப்பார்த்த காட்சி.
மிருகமாய் பிறந்திருந்தால்
கழுத்தறுப்பட்டு கணநேரத்தில் இறந்திருப்போம்
ஏன் மனிதராய் பிறந்தோம்.
துண்டிக்கப்பட்ட உறுப்பு
துடிப்பதை பார்க்கும் நிலை,
தூளிகட்டி தாலாட்டிய
தாய் இறப்பதை பார்க்கும் நிலை,
தன் கண்முன்னே
தான் ஈன்றெடுத்த பிள்ளையின் சவம்
காண்பதற்கு
எந்த கொடுமை மிச்சமிருந்தது.
எங்களின்
மரணத்தை கண்டு
மரணமே பயந்த நேரத்திலும்
கொல்ல வந்த
மனித இனம் பயப்படவில்லை.
சாத்தானும்
இந்த கொடுமையை செய்திருக்காது.
நாங்களும் மனிதர்கள் என்று
யாரிடத்தில் போய் சொல்வது
.
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 16, 2011, 04:06:41 AM
                                          கட்டளைகள்

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......
திருமணமான பின்
உறவெல்லாம் உன் விருப்பப்படி
நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்
சொந்தமெல்லாம் நீ சொன்னவரிடம் மட்டும்
எல்லாமே உன் விருப்பப்படி என்றால்
அவளுடைய மூளையை
என்ன செய்வது......? ஓ....
பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
செய்வாயோ தாலி........?
Title: Re: Dharshini(poem)
Post by: Global Angel on July 16, 2011, 08:09:34 PM
nice kavithaidi ..... thani thaniya podu  nalla erukum... ;) ;)
Title: Re: Dharshini(poem)
Post by: Dharshini on July 16, 2011, 08:15:48 PM
jimmioo inimel thaniya podava ella idhaiye modifly pani  thani ah podava :-\
Title: Re: Dharshini(poem)
Post by: Global Angel on July 16, 2011, 09:44:03 PM
eni poduratha thabiya podu  :-*