Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
அளவான சிரிப்பில் மறைத்து வைத்த
ஓரு பதற்றத்தோடு
அத்தனை நளினம் கூடிடத்தான் பேசினாய்
முதன்முதலில் என்னோடு

முடித்துவிட முடியா
உரையாடல் ஒன்றை
இயல்பு முறித்து
போலியாய் கூட்டிய மிடுக்கோடு
முடித்துக் கொள்ளுகையில்
காலங்கள் நீண்டிடப்போகும்
ஆத்மார்த்த உரையாடல் அதுவென்பதை
உணர்ந்திருந்தேனில்லை

உன் அகராதியின்
அட்டவணை முழுமையிலும்
அன்பின் குறியீடுகளிட்டே
வைத்திருந்திருப்பாய் போலும்

கனிவின் வனாந்தரங்களில்
பொறுக்கியெடுத்த சொற்கள் கொண்டு
துயர் கரைத்து மகிழ்வு பெருக்கும்
அன்பின் குரல் உன்னுடையது

மனம் வருடி
ஆன்மாவை உயிர்ப்பிப்பவை
‘உன் அழைப்புகள்’
அரவணைப்பாலான இளைப்பாறல்கள்
‘உன் பதில் மொழிகள்’

பொருந்திடாதென்றே தான்
கோபத்தில் உன் குரலை
மொளனங்கள் காத்து நிற்கும்

ஆழகு பேரழகு என்பதையெல்லாம்
கண்ணும் கழுத்தும் செவியும் இதழும்
குழலும் கன்னமும் நாடியும் நாசியும் கூடிட
உன்னை ஒப்பிட்டு
விவரித்திடுவேன் கண்ணம்மா

ஒப்பிடுகளில் சிக்கிடா
உன் உள்ளத்தழகை எப்படி விவரிப்பது
என உன்னிடமே கவலையுறுகிறேன்

உனக்கு காதல்
அன்றி வேறொன்றுமில்லை போடா
என சிரித்துப் போகிறாய்.
2
கதைகள் / Re: எங்கே அவன் ?
« Last post by Dragon Eyes on Today at 12:22:36 PM »
Nice story. U have a gud imagination power.waiting for ur next Part
3
கதைகள் / எங்கே அவன் ?
« Last post by AgNi on Today at 12:06:26 PM »


தேடல் -1

அன்றைய பொழுது ஏனோ ரம்மியமாய் தோன்றிற்று அனுவுக்கு ...

கல்லூரி வாசலில் காலடி வைத்ததும் நேற்றைய மழையில்  நனைந்த
மண்ணின் மணமும் பன்னிர் பூக்களின் வாசமுமாய் வரவேற்றது ...
உயர்ந்த அந்த மரங்களின் குளுகுளு நிழல் ஜில்லிப்பாய் உடலை ஊடுருவி
தென்றல் தழுவி கொள்ள சுகமாய் அவள் நடை  போட்டாள்.
இளங்கலை படிப்பை முடித்த அவள் மேலாண்மை படிக்க
தொலைதூர கல்வியில் சேர்ந்து இருந்தாள்...
வருடாதிருக்கொரு முறை ஆலோசனை வகுப்புகள் 7  நாட்கள்  நடக்கும்..
அங்கு சொல்லிக்கொடுப்பதை வைத்து அவள் வீட்டில் படித்து தேர்வு எழுதினாள்.
 இது இரண்டாம் ஆண்டு ..
அவள் வகுப்பு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்து சென்று அடைந்தாள் .

அங்கு ஏற்கனவே அவள் தோழி கவிதா அமர்ந்து இருந்தாள் ..
"ஹே வாடி ! எப்படி இருக்கே ? என்று குசலம் விசாரிக்க சிரித்தாள் அனு.
ஏண்டி நேத்துதான் பார்த்து பேசினோம்..என்னமோ பார்த்து வருஷம் போல
கேக்குறே ? என்று நகைக்க .."ஆமாம்லே ..என்று சிரித்தவள் சட் என  கூவினாள்
"என்ன இன்னிக்கு ரொம்ப அழகா வந்து இருக்கே ? என்று ஆச்சர்யத்துடன் கேக்க ...
அவள் தலையில் குட்டினாள் அனு...என்னடி  கலாய்க்கிறியோ ?' என்றாள் .
"இல்லடி " என்று தலையை தடவியவாறு  அவளை மீண்டும்  பார்த்தாள் கவிதா .
       அழகு சாதனம் தேவை படாத அனுவின் முகம் சந்தன நிறத்தில்....
அழகிய கண்களில் மெலிய மையிட்டு...  வில்லாய் வளைந்த புருவத்தின்
மத்தியில் சிறு பொட்டு இட்டு......  அலைபாயும் கூந்தலை அடக்கி கிளிப் போட்டு....
 கழுத்தில் மெலிய சங்கிலி தொங்க... அந்த நீல நிற சுடிதாரில் வெகு அழகாக இருந்தாள் அனு ..
"உண்மைய சொன்ன அடிக்கிற லூசு   " என்று திருப்பினாள் கவிதா யாரோ வருவதை பார்த்து .
         அங்கு வகுப்புஅறைக்குள் நுழைந்தான் அவன் .
"ஹாய் விஷ்ணு " என்று பல குரல்கள் எழுந்தன அறைக்குள் .
"ஹாய் ஹாய் " என கை அசைத்தவாறு வந்தவன்.
அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தவன்.
அழகிய  தோற்றமும்  கம்பீரமுமாய்  நடை  போட்டவன்
"  ஹை " சொன்ன  எல்லாரையும்  பார்த்து  புன்னகைத்தான் ..
கவிதாவும்  "ஹை  விஷ்ணு ...ஹொவ்  ஆர் யு?  ? " என்று  கேட்க  ...
"fine fine"என்று  சொன்னவன்  அவள்  அருகில்   அமர்ந்து  இருந்த   அனு  வை  பார்க்க . ..
அனு  புன்னகை  செய்து  ஹை  என்பது போல  தலை  அசைத்தாள் ..
விஷ்ணு  வும் " ஹை  அனு " என்று   விட்டு  பின்னே   சென்று  தோழர்களுடன் அமர்ந்தான்  .

        கவிதா அனுவின் காதுக்குள் கிசுகிசுத்தாள் ..."என்ன Handsomea இருக்காண்டி விஷ்ணு " என்க ...
அனு .." ஷ்ஷ் ..சும்மா இருடி..உனக்கு வேற வேலையே இல்லையா? " என்று அடக்கினாள்.
 கவிதா .." நீ ..ஒன்னும் சொல்ல விடமாட்டே ..பசங்கள சைட் அடிக்கக்கூட விடமாட்டே ..?
உனக்கு பிடிக்கலைன்னா நீ    சும்மா இருடி..என்றவள் ...அவனை வர்ணிக்க ஆரம்பித்தாள் "
"அவன் face பால் வழியும் முகம் டி ...பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கே "என்றவளை ..
அனு அவளின் கைகளில் கிள்ளி அடக்கினாள். அதற்குள் ப்ரொபஸர் வர அமைதியானார்கள் .       
 
( தமிழ் படிக்க இயலா தோழர் , தோழிகளுக்காக தங்கிலீஷ் இல் type செய்து உள்ளேன்...படித்து என்ஜோய் ப்ரெண்ட்ஸ் .)

Enge Avan ?

Thedal -1


Andraya poluthu yeno Rammiyamaai thondritru Anu vuku ...

Kaloori vasalil kaaladi vaithathum  netraiya mazhaiyil nanaintha mannin manamum pannir pookalin vaasamumaai varavetrathu.
Uyarntha antha marankalin kulukulu nizhal jillippaai udalai ooduruvi thendralum thaluvi kolla sugamaai nadai pottal aval..
Elankalai padippai muditha Anu Mellaanmai padika tholai thoora kalviyil sernthu irunthaal .
   Varudathirku oru 7 natkal aalosanai vagupu nadai perum ..Angu solli kodupathai vaithu veetil padithu Thervu eluthi vanthal aval.Ethu Erandaam Aandu ..Aval vagupu araiyai Notice boardil parthu sendru adainthal.
   Angu Yerkanave aval thozhi kavitha amarnthu irunthal."hey Vaadi" endru kavitha kusalam visarika sirithal Anu .
"yendi nethutana parthu pesinom ?Ennamo parthu varusham pola kekure?" endru nakaika ..."Amamle.." endra kavitha sat ena koovinal.."ennadi iniku romba azhaka vanthu iruke ?"endru acharyathudan keka ,Anu aval thalaiyil kuttinal..."enadi Kalaaikiryo?" enka "Illadi " endravaru kavitha meendum Anuvai oru murai parthaal..
       Azhaku sathanagal thevai padatha santhana nirathil ...azhakiya kankalil meliya mei ettu...villaai valaintha puruvathin mathiyil siru potu ettu....alaipaayum koonthalai adaki clip potu ....antha Neela nira chuditharil vegu azhakaka irunthal Anu.
"unmaiya sonna adikiraa lusu " endravaru vagupukul yaro varuvathai arinthu thirumbinal kavitha.
       Angu Vishnu vanthu kondu irunthan .."haai Vishnu " endru pala kuralkal elunthana ."hai hai" endru kai asaithavaaru vanthavan anaivarin kannaiyum karuthaiyum kavarnthavan.
    Azhakiya thotramum kambeeramumai nadai potavan Hai sonna elariyum parthu punnakaithan.. Kavithavum "hai Vishnu...How ae you ? " endru ketka ..."fine fine"endru sonnavan aval arukil amarnthu iruntha Anu vai parkka....
Anu punnaithu seithu Hai enbathu pola Thalai asaithaal..Vishnu vum Hai Anu endru  vitu pinne sendru Thozharkaludan amarnthan .

           Kavitha Anu vin Kaathukul kisukisuthal ..."enna Handsomea irukandi avan " enka...Anu.."shsh" summa irudi ...unaku vera velaiye illaya ?"endru adakkinal .
          Kavitha  "onum solla vidamatte ..?Pasangala sight adikka kuda vida maatiya ?Unaku pidikalana nee summa irudi .."Endraval...Vishnu vai Varnika arambithal ....avan fave pal vadiyum mugamdi parthute irukalam pola iruke ...endravalai ..avalin kaikalil killi adakinnal Anu...Atharkul professor vara anaivarum Amaithiyaanaarkal


4
சற்றும் நான் எதிர் பார்க்காத..
அழகிய  தருணம் இதுவன்றோ...
நீ என்னை.. இங்கு... இந்நேரம்...
வாவென அழைப்பாய் என்று..

நம் முதல் முத்தான அறிமுகம்..
என் ஆழ் மனதில் என்றுமே.. 
மறையாது..மாறாது...  பதிந்தன...
கருங்கல்லில் கல்வெட்டென...

நீ என்னிடம் பேசிய முதல் சொல்...
இன்று.. இன்று.. வரை நான் மறவேன்...
அது உன் கோபத்தின் உச்சத்தில்.. 
உதிரிந்த சூடான தீ பொறியல்லவா..

ஏன்! என்மீது இப்படி ஒரு கோவம்..
ஏன்!! ஏன்!!! இப்படி ஓர் வெறுப்பு...   
பல நாள் தவித்தேன்... துடித்தேன்...
நெருப்பில் விழுந்த புழுவென...

அதன் பின்னும், ஒவ்வொரு சந்திப்பிலும்..
எனை காயப்படுத்தினாய்..
உன் உஷ்ணம் கொப்பளிக்கும்..
அழகிய வார்த்தைகளால்.. 

அத்தருணம் எல்லாம்..  என் நெஞ்சமோ...
கடும் காற்றாற்று வெள்ளத்தில்..
சிக்கிய தவிக்கும் கூழாங்கல் என ..   
பதறி.. சிதறி சில்லு சில்லாய் நொறுங்குமே...

ஆனாலும்.. உன்னையும் பிடிக்கும்..
உன் கோபமும்..  எனக்கு மிகவும் பிடிக்கும்..
உன் கோபத்தின் வேகமும் . ஆழமுமே.
உன்னை எனக்கு உணர்த்தியது.. நீ யாரெனெ...

இன்று,..
உண்மை எதுவென.. நீ உணர்த்தாய்..
உன் மனதை காயம் படுத்தியவள்..  நான் இல்லையென.. 
இதுவே போதும் எனக்கு. .உன் சுந்தர நேரங்களை..
கலைக்கும் காரிகை நான் இல்லையென..

நிலவின் ஒளியில்..
நிஜமறிந்த நீயோ... உன் தவறுகளை உணர்ந்து...
என் விழிகளை சந்தித்த ..  உன் முதல் பார்வை..
உன் விழிகளில் வழிந்த... முதல் கண்ணீர் துளிகள் 
உயிரே.. நீயே என் வாழ்வென உணர்ந்தேனடா...

விண்மீன்கள் என்னை நோக்கி கண்கள் சிமிட்டிட.
கரிய காரிருள் சூழ்... நட்ட நடு இரவில்..
வெண்ணிலாவின் ஒளியில்.. நீயும் நானும் தனியே...
உணர்த்தினாய்.. உணர்கிறேன்... உன்னுள்ளும் நான்....

5
வால் துண்டாகி விட்டாலும் பல்லிகள் சுறுசுறுப்பாய் ஓடுகிறதே எப்படி?


ஆபத்து காலத்தில் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவே , இந்த வால் துண்டாதல் (டெயில் பிரேக்கிங்) சிஸ்டத்தை பல்லிகள் வைத்து இருக்கின்றன. துண்டாகி போன வால், பட பட என துடிப்பதையே எதிரி பார்த்து கொண்டு இருக்க , அந்த இடைவேளையில் பல்லி தப்பித்து ஓடி விடும். இதற்கு வசதியாக பல்லியின் வால் எலும்புகள் மிக மென்மையாக இருக்கும், அது தவிர மேல் தோலில் இருக்கும் செதில்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. கதவு இடுகிலோ அல்லது வேறு பெரிய பூச்சியின் வாயிலோ சிக்கி வால் துண்டானதும் துண்டான இடத்தில் இருக்கும் சுறுங்கு தசை உடனே இருகி, இரத்தம் வெளியேற விடாமல் அந்த இடத்திற்கு சீல் வைத்து விடும்.
6
மங்கியதோர் இரவினில்
மதி மயங்கும் முழுமதி ஒளியினிலே
மங்கையவள் அழகினிலே
மனம் முழுக்க காதலுடன்
காத்திருந்தேன் அவள் வருகைக்காக

என் நல்ல நண்பியவள்
நண்பர்களாகத்  தான் பழகினோம்
எது சொன்னாலும் கோபப்படவே மாட்டாள்
நாங்கள் பேசுவதை பார்ப்பவர்கள்
காதலர்கள் என்றே எங்களை நினைப்பார்கள்

நட்புக்கும் காதலுக்கும் இடையில் இருப்பது
மெல்லிய கோடு தானே
சுவரையே தாண்டும் எங்கள் மனதுக்கு
கோட்டைத் தாண்டுவது கஷ்டமா
என்றும் நாங்கள் வரம்பு மீறியதில்லை
பேச்சிக்கு பேச்சி பதிலடி கொடுப்பதில்
வல்லவள் அவள்

அன்பாக பேசுவாள்
உரிமையுடன் கண்டிப்பாள்
நல்லது செய்தால் தட்டிக்கொடுப்பாள்
தவறு செய்தால் தட்டிக்கேட்பாள்
அவள் அன்பில் என் மனம்
அவள் பால் சென்றது
நட்பு இருந்த இடத்தில் காதல்
ஒட்டகம் போலே உள்ளே நுழைந்தது


என்காதலை எப்படி சொல்வது
என்ன நினைப்பாளோ
ஏற்றுக்கொள்வாளோ இல்லை
ஏறெடுத்தும் பார்க்க மறுப்பாளோ
குழம்பித்தவித்தேன் நான்

எத்தனை  நாள் தான்
மதில்மேல் பூனையாக தவிப்பது
சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தேன்
ஒரு அந்தி மாலையிலே
சந்திக்க வேண்டும் என்று செய்தி அனுப்பினேன்
வருவதாக பதில் அனுப்பினாள்

காத்திருக்கிறேன் அவளுக்காக
வந்தாள் அவள்
அந்த மெல்லிய இரவிலே
நிலவில் ஒளியிலே
அலைபாயும் கூந்தலுடன்
தேவதை போல காட்சியளித்தாள்
எனது கண்களுக்கு

ஏன் என்னை வர சொன்னாய்
என்பது போல ஏறிட்டு பார்த்தாள் என்னை
அவள் முன்னே மண்டியிட்டேன் நான்
அவளுக்காக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை
அவள் முன்னே நீட்டி
உன்னை காதலிக்கிறேன் என்னை ஏற்றுக்கொவாயா
என்று காதல் ததும்பக் கேட்டேன்

அவள் திகைப்புடன் என்னை நோக்கினாள்
பதில் சொல்லமுடியா அதிர்ச்சியில் நின்றாள்
தலை குனிந்தவண்ணம்
அவள் கைவிரலை நீட்டினாள்
அதில் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது

நேற்று தான் வீட்டில் பார்த்த வரன் வீட்டார் வந்து
மோதிரம் போட்டார்கள்
உனக்கு சொல்ல முடியவில்லை
இன்று சொல்லலாம் என்றிருந்தேன் என்று
பரிதாபமாகப் என்னைப்பார்த்து சொன்னாள்

சிலையானேன் நான்
என கற்பனை கோட்டைகள்
விழுந்து சிதறின 
7
இருள் குவிந்த
மாலைப்பொழுதில்
குமிழ் கசிந்த
மெல் ஒளியில்
ஓர்
உருகும் மெழுகென நான்
உருக்கும் நெருப்பென நீ ..

சில கற்பனைகள்
களைந்து
உன் கைகள் நீவி
ஸ்பரிசம் நுகர்ந்து விட
துடிக்கும் விரல் நகர்வுகள்

ஆத்மார்த்தமான
பார்வை ஆலாபனைகள்
கடந்து
நீண்டு கிடக்கிறது
கைகளின் ஸ்பரிசம்

காலம் கடந்து
காவல் கிடந்தனவோ
பிரிய மறந்து
ப்ரியமாக ...

மதுவிலும்
கிறக்கம் தருவதாயிருக்கிறது
உன் காதல் ஆலாபனைகள்..
எத்தனை நாளிகை
விரல்களுக்குள்
நகர்வதாய்
உத்தேசம் ?

குறை கிடக்கும்
மதுக் கிண்ணங்கள்
நம்
இதழ்களின் ஸ்பரிசத்துக்காய்
ஏங்குவதாக புலம்பல்..

எனினும்
நிறைந்து வழிகிறது
மனது...
நீ  நான் நிலவு,
நீளும் இருள் என .....
8

ஓர் மீளா நீள் கனவு...

கார் இருள் வான்...
மின்னும் தாரகைகள்
பொன்னாய்  வட்ட‌ நிலவு..
குளிர் காற்றின் ஊதல்..
தளிர் பூவின் வாசம்..
மேகத்துண்டில் மேசை..
தேகம் அமர‌இருக்கை...
தோரணங்கள் காற்றில் ஆட...
காரணமின்றி உன்னை தேட..
தேன்பொழுதில் உன் வரவுக்கு
நான் தவித்து காத்திருக்க...
எதிர்ப்பார்ப்பில் இதயம் எகிர
கசியுமொரு காதலை பகிர...
நம் திரைகள் கிழிய..
கண்களில் கனவு வழிய...

காத்திருக்கிறேன்...

இமைகளில் துளிகள் உலர...
இணையும் உள்ளம் மலர...
கைகள் ஒன்றாய் கோர்க்க...
சைகைஇன்றி உடல் வேர்க்க...
படபடக்கும் நெஞ்சத்தை
பதறி பிடித்தபடி..
மடமடவென நீ உரைக்கும்
காதல் நொடிகளை..
காலமெல்லாம் கேட்டு கொண்டிருக்க...

காத்துக்கொண்டிருக்கிறேன்...!9
அவளுடன் எனதுஇரவு

சில்லென்ற ஈரக்காற்று வீசிட
கடற்கரை மணலிலே நடைபயில
 
என்னவளோ  எதிர்முனையில்
ஒரு இரவில்  இரட்டை நிலவாய்
என்னவள் என்முன்னே !!

மனமோ  ஏங்கிட
மதியோ மயங்கிட

உன் கைகோர்த்து உன் தோள் சாய்ந்து
கதைகள் பல பேசிட  இரவினை ரசித்தோம்

என்னங்க  என்று
நீ அழைத்திட  :D
இவ்வுலகையும்  மறந்து
உன் மடிசாய்ந்தேனடி

உணவும் பரிமாற
உண்டு மகிழ்ந்தோம்
பழரசத்தில் இறுகுழலிட்டு இருவரும் பருகிட 
உன் கண்களைநோக்கிட வெட்கத்தில்
கன்னமும்  சிவந்திட

எந்தன் கைவிலங்கில் நீ கிடைக்க
உந்தன் பூவிதழும்  சுவைத்தேனடி  :-*

பழரசமும்  தோற்றதடி
உந்தன் இதழ்ரசத்தில்  ;D ;D ;D

கண்களும் கலங்கின
நினைவில் மட்டும் நீ இருக்க
நிஜத்தில்  ஏனோ இல்லாமல் போனாய்
:'( :'( :'(
எனது அருமை காதலியே
என்றும் உனக்காக காத்திருப்பேன்

கனவுகளோடு அல்ல
உந்தன் நினைவுகளோடு

                                        -இணையத்தமிழன்
10
   
💖காதல்! என்ற ஒரு வார்த்தையால் என் மனதை கொள்ளையடித்தவளே!

💖என் இதய வாசலில் நிரந்தரமாக குடி புகுந்தவளே!

💖தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே!

💖என் வாழ்க்கைத் தோட்டத்தில் வாடாத பூவாய் தினம் மலர்பவளே!

💖 உன் விழிகளின் அம்புகளால் என்னை விடாமல் தாக்குபவளே!

💖 மௌனம் என்ற மொழியால் என்னை சிறைபிடித்தவளே!

💖உன்னில் என்னை பார்க்கிறேன்!

💖 உன்னை சேர தினம் துடிக்கிறேன்!

💖உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னோடு வாழ ஏங்குகிறேன்!

💖எத்தனை முறை முயன்றாலும் உன்னிடம்
இருந்து திருப்ப முடியவில்லை  அடகு வைத்த என் இதயத்தை!

💖ஆண்டுகள் பல கடந்தாலும் !

💖கூந்தலின் நிறம் மாறினாலும்! 

💖மேனியில் சுருக்கங்கள் விழுந்தாலும்!

💖இளமை மறைந்து முதுமை தோன்றினாலும்!

💖 மரணம் வரை உன் மீது கொண்ட அன்பு மாறாதடி என் காதலியே!

💖என்றும் உன் நினைவுடன் உன் காதலன் !   ❤️❤️❤️   
Pages: [1] 2 3 ... 10