Author Topic: ரத்தம் வெவ்வேறு நிறம்  (Read 1155 times)

Offline thamilan

ரத்தம் வெவ்வேறு நிறம்
« on: October 13, 2011, 01:57:31 PM »
இது அப்துல் ரகுமான்,ஈழத்தில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது எழுதிய, எனது மனதை தொட்ட ஒரு கவிதை

அங்கே
பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன‌
இங்கே
நான் எத்தனை விக்கட்டுக்கள் விழுந்தன? என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்

அங்கே
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன‌
இங்கே
நாம் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கிறோம்

அவர்கள்
வேட்டையாடப்பட்டு கதறிக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் வெள்ளித்திரைக்கு முன்னால்
விசிலடித்துக்கொண்டிருக்கிறோம்

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் கற்பில் சிறந்தவள்
கண்ணகியா மாதவியா என‌
பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறோம்

அவர்கள்
சயனைட் அருந்திக்கொண்டிருக்கிறார்கள்
இங்கே
நாம் அத‌ர‌ பான‌ம் அருந்திக்கொண்டிருக்கிறோம்

இதில்
விய‌ர்பேதும் இல்லை
அவ‌ர்க‌ள் க‌வ‌ரிமான்க‌ள்
நான் க‌வ‌ரிக‌ள்

இதோ
தேவ‌ வேத‌ம் போட்ட‌ சாத்தான்க‌ள்
வேத‌ம் ஓதுகின்ற‌ன‌.

இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிக‌ள்
வித‌வைக‌ளின் புட‌வைக‌ளை
உருவிக்கொண்டிருக்கிறார்க‌ள்

அன்று
அசோக‌ன் அனுப்பிய‌
போதிம‌ர‌த்தில்
இன்று ஆயுத‌ங்க‌ள் பூக்கின்ற‌ன‌

இன்று
அசோக‌ச் ச‌க்க‌ர‌த்தின்
குருட்டு ஓட்ட‌த்தில்
க‌ன்றுக‌ளின் ர‌த்த‌ம்
பெருக்கெடுத்து ஓடுகின்ற‌ன‌

தாய்ப்ப‌சுவோ
க‌வ‌ர்ச்சி சுவ‌ரொட்டிக‌ளை தின்று
அசைபோட்டுக்கொண்டிருக்கிற‌து

Offline Yousuf

Re: ரத்தம் வெவ்வேறு நிறம்
« Reply #1 on: October 13, 2011, 03:26:16 PM »
நிதர்சனமான உண்மை தமிழன் மச்சி...!!!

சுயநலம் பிடித்த தான் மட்டும் நல்ல இருந்தால் போதும் பிறர் எக்கேடோ கேட்டு போனால் நமக்கு என்ன என்று வாழும் கேடு கேட்ட சென்மங்கள் இதை படித்தாவதும் திருந்துவார்களா????????

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரத்தம் வெவ்வேறு நிறம்
« Reply #2 on: October 13, 2011, 05:20:27 PM »
Quote
அன்று
அசோக‌ன் அனுப்பிய‌
போதிம‌ர‌த்தில்
இன்று ஆயுத‌ங்க‌ள் பூக்கின்ற‌ன‌

nitharsanamana sambavangal...... nalla kavithai thamilan :)
                    

Offline RemO

Re: ரத்தம் வெவ்வேறு நிறம்
« Reply #3 on: October 14, 2011, 12:16:24 AM »
இது கவிதை என்பதை விட இது அவரின் வருத்தம்
அவருக்கு மட்டுமல்ல பலருக்கு இருக்கும் வருத்தம்

பகிர்வுக்கு நன்றி