Author Topic: காதலித்துப் பார்  (Read 656 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காதலித்துப் பார்
« on: October 26, 2011, 08:56:53 AM »
காதலித்து பார்
கவிதை வரும்
காதலிப்பவர்களின் சொல்...
கவிதை எழுத மட்டுமே நினைத்தேன்
காதல் கொள்ளவில்லை-ஏனோ
கவிதை வராமல் போனது அன்று..
காதல் என்றால் வெறும்
கனவு உன்னை
காணாத வரை...
கண்டேன் உன்னை...
கண்டுகொண்டேன் என்
காதலை....
கனவு காதலானோ என்று
கண் விழித்து பார்த்தேன்
கண் முன்னே நீ..
கனவு அல்ல நிஜம்தான்...
கண்கள் காட்டிய முதல்
காதல் நீ...
கவிதை எழுத நினைக்கவில்லை...
காகிதம் கண்டவுடன் எழுதுவது எல்லாம்
கவிதையாகி போனது இன்று...
காதலர்களின் கூற்று உண்மை தானோ???
கள்ளம் இல்லா உன் அன்பு
காதல் கொள்ள செய்தது...
காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
காத்திருக்க வைத்தாய்...
காத்திருக்க வைப்பததால் உன்னை
காதலிக்க சொல்கிறது மனது...
காத்திருப்பது பிடிப்பது இல்லை முன்பு..
கால் கடுக்க
காத்திருந்தாலும் வெறுக்க வில்லை
காதல்...
காத்திருப்பது கூட சுகம் தானோ???
கண்ணோடு கண் சேர்த்த என்
காதலனே.. கண்ணாளனே
கனவிலும் என் நினைவிலும்
காதலனாய் என்றும்
என் கண்ணாளனாய்
காலம் முழுக்க தொடரவேண்டும்
காதல் நம் காதல்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: காதலித்துப் பார்
« Reply #1 on: October 27, 2011, 01:38:28 AM »
// கவிதை எழுத நினைக்கவில்லை...
காகிதம் கண்டவுடன் எழுதுவது எல்லாம்
கவிதையாகி போனது இன்று...//

ரசிக்கும்படியான வரிகள்
க மற்றும் கா மட்டும் கொண்டு வரியை தொடங்கியிருப்பது ரசிக்கவைகிறது

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதலித்துப் பார்
« Reply #2 on: October 27, 2011, 09:30:08 PM »
nalla kavithai shuru ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதலித்துப் பார்
« Reply #3 on: October 28, 2011, 06:30:47 AM »
thankss remo and rose


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்