Author Topic: 2014 டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்  (Read 2017 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2014 ஆ‌ம் ஆ‌ண்டு டிசம்பர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.


டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களை எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வீடு,  வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் சீராகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கடன் பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

விலை உயர்ந்த ஆடை,  அணிகலன்கள் சேரும். என்றாலும் சொத்து வாங்குவது,  விற்பதில் சிக்கல்கள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பார்வை கோளாறு,  பல் வலி வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! அலட்சியப் போக்கு மாறும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தைரியமான முடிவுகளை எடுக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:1, 9, 12, 21, 18
அதிஷ்ட எண்கள்:2, 9
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வியாழன்

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியாளர்கள்,  பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகான்கள்,  ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்கு நீங்கும். கண்,  பல் வலி சரியாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். புது வேலைக் கிடைக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள்,  நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். அவ்வப்போது தலை வலி,  முன்கோபம்,  வீண் டென்ஷன்,  இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்.

வியாபாரத்தில் போட்டிகள் தளரும். புது தொடர்பு கிடைக்கும். நெளிவு,  சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.
 
 
அதிஷ்ட தேதிகள்:2, 11, 20, 15, 25
அதிஷ்ட எண்கள்:3, 8
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, பச்சை
அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய், வெள்ளி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வீடு,  வாகன வசதிப் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஃப்ரிட்ஜ்,  வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். தள்ளிப் போன காரியங்கள் முடியும்.

பேச்சில் முதிர்ச்சி தெரியும். மாதத்தின் பிற்பகுதியில் வீண் செலவு,  பயம்,  சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள்,  பங்குதாரர்களால் விரையம் வரும்.

உத்யோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும்,  உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள்,  வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்:1, 5
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்:புதன், சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் ரசனைக் கேற்ப சொத்து வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்-. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ஆனால் பழைய நண்பர்களால் தொல்லைகள் அதிகமாகும்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அலைச்சல் குறையும். எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள்.

வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவார். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புரட்சிகரமான முடிவுகள் எடுக்கும் மாதமிது.
 
   
அதிஷ்ட தேதிகள்:4, 1, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்:4, 6
அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்:புதன், வெள்ளி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். புதிதாக வீடு,  மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர்கள்,  நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். தந்தை வழியில் இருந்த பனிப்போர் நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! கனவு நனவாகும். வீண் சந்தேகம்,  தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவுக் கிட்டும். சாதித்துக் காட்டும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்:1, 9
அதிஷ்ட நிறங்கள்:கிரே, பிஸ்தாபச்சை
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு, சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்பாராத பணவரவு உண்டு.

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாங்குவது,  விற்பது நினைத்தபடி முடியும். என்றாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்கு கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒரு வித படபடப்பு,  பேச்சால் பிரச்னை,  அலைச்சல் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! அவ்வப்போது குழம்பினீர்களே!

இனி புதிய பாதை தெரியும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:6, 8, 15, 17, 14
அதிஷ்ட எண்கள்:5, 8
அதிஷ்ட நிறங்கள்:ஊதா, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை பெருகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். புதுத் திட்டங்கள் நிறைவேறும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

தந்தையின் உடல் நலம் சீராகும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும். கல்வியாளர்கள்,  வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். நட்பு வட்டம் விரியும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனஇறுக்கம்,  மனைவியுடன் வாக்குவாதம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வாகனத்தை இயக்கும்போதும்,  சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது,  விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். கன்னிப் பெண்களே!

பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்:7, 16, 25, 11, 20
அதிஷ்ட எண்கள்:1, 6
அதிஷ்ட நிறங்கள்:பழுப்பு, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்:புதன், சனி


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். மனஇறுக்கம் குறையும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனக்கசப்புடன் இருந்த நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். வாகனத் தொந்தரவு நீங்கும். பழுது குறையும்.

ஆனால் அடுக்கடுக்காக செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடாப் பழக்கம் விலகும். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு மாறுவது,  வாங்குவது நல்ல விதத்தில் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு கட்ட,  வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். புது வேலை அமையும். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கன்னிப் பெண்களே!

பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் விட்டதை பிடிப்பீர்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தலைமைக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ்,  கௌரவம் உயரும். பிற்பகுதியில் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:8, 24, 23, 26, 17
அதிஷ்ட எண்கள்:2, 5
அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்


Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4275
  • Total likes: 1285
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள்,  பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சகோதரங்கள் சில நேரங்களில் கோபப்பட்டாலும் அனுசரித்து போவார்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். மனைவியின் உடல் நிலை சீராகும்.

மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிநாட்டுப் பயணம் அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனம் அமையும். அரசு காரியங்கள் பிற்பகுதியில் நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். மாதத்தின் மையப்பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் ஆனால் செலவுகளும்,  திடீர் பயணங்களும் துரத்தும். சமையலறை சாதனங்கள்,  ஃப்ரிட்ஜ் பழுதாகும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கன்னிப்பெண்களே!

கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வீண் பழி,  மனக்குழப்பம்,  தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகக்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். எதிர்ப்புகளை கடந்து ஏற்றம் பெறும் மாதமிது.
   
 
அதிஷ்ட தேதிகள்:9, 3, 12, 21, 18
அதிஷ்ட எண்கள்:4, 7
அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்:புதன், சனி