Author Topic: மன்மத வருட ராசிப் பலன்கள்!  (Read 2506 times)

Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook

மன்மத வருட ராசிப் பலன்கள் ( 14.04.2015 - 13.04.2016 )


க.ப.வித்யாதரன்2015 - 2016 ஆ‌ம் ஆ‌ண்டிற்கான மன்மத வருட ராசிப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க. ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - மேஷம்


அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
 
வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
 
உங்களின் தனாபதி சுக்ரனும் தனஸ்தானத்திலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் ஏமாந்த தொகையெல்லாம் கைக்கு வரும். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மனைவிவழியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமையலறை, படுக்கையறையை நவீனமாக்குவீர்கள்.
 
இந்த மன்மத வருடம் உங்களுக்கு 10-ம் ராசியில் பிறப்பதால் செயற்கரிய காரியங்களை செய்து முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அப்பாயின்மென்ட் ஆர்டர் வராமல் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எல்லாம் இருந்தும் எதையோ ஒன்றை இழந்ததைப் போன்ற ஒருவித அச்சம் உங்களுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். பணம், காசு, வசதி இருந்தால் தான் எல்லோரும் மதிப்பார்கள், இல்லையென்றால் யாரும் உங்களை சீண்டுவதுக் கூட இல்லையென்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள்.
 
தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
நிதானமாக யோசித்து எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக் கூறுவார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.   
 
புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், செலவுகளும் அவர்களுடன் கருத்து மோதல்களும் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம்.
 
ஐப்பசி மாதப் பிற்பகுதி கார்த்திகை மற்றும் மார்கழி மத்தியப் பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கிரகண தோஷமடைவதாலும் மாசி மாதம் மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் சனியுடன் சம்பந்தப்படுவதாலும் மேற்கண்ட காலக்கட்டங்களில் சிறுசிறு விபத்துகள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் பிரிவுகள், ஏமாற்றங்களும் வந்து நீங்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்திலும் கவனமாக செயல்படுங்கள்.

 04.07.2015 வரை குரு 4-ம் வீட்டில் நிற்பதால் தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு அசதி, சோர்வு, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சையெல்லாம் உரிய காலக்கட்டத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டிற்குள் நுழைவதால் தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடனான மனக்கசப்பு நீங்கும்
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 6-ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு.
 
கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. நெடுநாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கனவுத் தொல்லை அதிகரிக்கும். சில நாட்கள் தூக்கம் குறையும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகள் பாதை மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். சிலர் உத்யோகம், உயர்கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமாக கோர்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
9-ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் நுழைவதால் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். ஆன்மிகப் பெரியோரிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வீண் அலைச்சல்கள் குறையும்.       
 
வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். காலையில் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ரகசியங்கள் கசியக் கூடும். வேலையாட்களுக்கு நீங்கள், சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும், சலுகைகள் தந்தாலும் அவர்கள் உங்களைக் குறைக் கூறத்தான் செய்வார்கள். பங்குதாரர்கள் அவர்களின் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

 ஆனி, ஆவணி, புரட்டாசி மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்களும், திடீர் லாபமும் வரும். புது இடத்திற்கு கடையை மாற்றலாம். பற்று வரவு கணிசமாக உயரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.
 
உத்யோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். புது உத்யோக வாய்ப்புகள் ஆனி, ஆவணி மாதங்களில் வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். அறிமுகமில்லாதவர்களிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஜீலை மாதம் முதல் சிலருக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தாயாருடனான மோதல்கள் விலகும்.
 
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே கூடுதல் மதிப்பெண் பெற முடியும். அலட்சியமாக இருந்தால் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் அதிகப் பணம் கொடுத்து, சிலரின் சிபாரிசில் சேர வேண்டி வரும். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது.   
 
இந்த மன்மத வருடம் அலைச்சலையும், வேலைச்சுமையையும், பணப்பற்றாக்குறையையும் தந்தாலும் சகிப்புத் தன்மையால் வெற்றியையும், சாதனைகளையும் தருவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - ரிஷபம்பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
 
சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தந்தையாருக்கு இருந்து வந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் கிடப்பில் இருந்த வேலைகளெல்லாம் விரைந்து முடிவடையும். அழகு, ஆரோக்யம் கூடும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், கம்பியூட்டர், லேப் டாப் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். வி.ஐ.பியின் அறிமுகம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.
 
களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையும் பெரிதாக்க வேண்டாம். பிரிவுகள் வரக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
 
முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவிக்கு ஃபைப்ராய்டு, ஹார்மோன் பிரச்னைகள் வரக்கூடும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும்.
 
வியாபாரத்தில் புதிதாக அறிமுகமாகுபவரை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீது வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. கவனமாக செயல்படுங்கள். வெகுளித்தனமாக பேசுவதாக நினைத்து முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்களை விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள்.
 
04.07.2015 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குரு 3-ம் வீட்டில் நிற்பதால் எந்த வேலையையும் முதல் கட்டத்தில் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சில நேரங்களில் எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும்.
 
05.07.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நுழைவதால் முதல் முயற்சியிலேயே எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பெருகும். என்றாலும் முறையான அரசாங்க அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாருடன் விவாதங்கள் வந்துப் போகும். அவருக்கு மூட்டு வலி, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

 வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். அடுத்தடுத்த பயணங்களாலும் அலைச்சலாலும் சோர்வு, களைப்பு அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தால் அடிவயிறு வலிக்கும்.   
 
ஜனவரி 7-ந் தேதி வரை ராகு உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நலமாக இருக்குமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உங்களின் எண்ணங்களை அவர்களிடம் திணிக்க வேண்டாம். மகளின் திருமணம் சற்று தாமதமாகி முடியும். மகனின் பொறுப்பற்ற போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.
 
பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்ரூபமெடுக்கும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பழைக கடன் பிரச்னையை நினைத்து தூக்கம் கெடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
 
கேது ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
ஆனால் 8.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் பொறுப்புகள் அதிகமாகும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும் வந்துப் போகும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சாலை விதிமுறைகளை மீற வேண்டாம். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டி வரும். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். உத்யோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம், வேலைச்சுமை, சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்களெல்லாம் நிகழக்கூடும்.
 
ஆவணி, மாசி, பங்குனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர், உறவினர் வருகையாலும் வீடு களைக்கட்டும். வேலைக் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

 ஆடி மாதம் 15-ந் தேதி முதல் ஆவணி மாதம் வரையிலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமடைவதால் தொண்டை, கண், பல் வலி வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களால் நிம்மதி குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். திடீரென்று வந்து சேரும் வேலையாட்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
 
வட இந்திய வேலையாட்களை பணியில் வைக்கும் போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பணம் பட்டுவாடாக்களை நீங்களே நேரடியாக சென்று செய்யுங்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், ஸ்க்ராப், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். பங்குதாரர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். ஆவணி, பங்குனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துக் கொள்ள முடியாமல் போகும். யார் எப்படி இருந்தாலும் நம்முடைய கடமையை சரிவர செய்துவிடுவோம் என்ற மனப்பான்மையில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.
 
நேர்மூத்த அதிகாரியை விட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். சக ஊழியர்களால் எதிர்ப்புகள் வந்துப் போகும். உங்களை விட தகுதியில், அனுபவத்தில் குறைந்தவர்களுக்கு கீழ் நீங்கள் வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மாசி, பங்குனி மாதங்களில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பெற்றோருக்கு எதிராக எதுவும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக் கொள்வது நல்லது. கண்டகச் சனி நடப்பதால் சிலர் உங்களை நம்ப வைத்து மோசம் செய்வார்கள். உயர்கல்வியை போராடி முடிக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! அலட்சியமாக கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்றிருக்க வேண்டாம். கெட்ட பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்த்துவிடுங்கள். கணிதம், வேதியியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
 
இந்த தமிழ் புத்தாண்டு பணத்தட்டுப்பாடு மற்றும் பகைமையையும் தருவதாக இருந்தாலும் விடாமுயற்சியாலும், சமயோஜித புத்தியாலும் வெற்றியை தருவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - மிதுனம்


பந்த, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களே! சூரியன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.
 
மற்றவர்களால் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். சிலர் இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு கார் வாங்க வாய்ப்பிருக்கிறது. பெரிய மனிதர்களின் நட்பால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு சிலர் மாறுவீர்கள்.
 
பேச்சில் கனிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்-. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
இந்தாண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வீண் சண்டைகள், விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். சிலருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும்.
 
வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் நன்மை உண்டாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.   
 
4.07.2015 வரை குருபகவான் தனஸ்தானமான 2-ல் நிற்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
 
5.07.2015 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால் எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும். மனைவியுடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்துப் போகும். வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வரும்.

 உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் வீண் அலைச்சல்களும், திடீர் பயணங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்படும். திட்டமிடாத செலவுகளும் அதிகமாகும். குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். கொழுப்புச் சத்து அதிகமாகும். 
 
ஜனவரி 07.01.2016 வரை ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், 10-ம் இடத்தில் கேதுவும் நிற்பதால் அடுத்தடுத்த வேலைச்சுமையால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு படபடப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும்.
 
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.
 
ஆனால் 08.01.2016 முதல் ராகு 3-ம் வீட்டில் நுழைவதால் தடைப்பட்ட வேலைகளையெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள்.
 
கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.   
 
சித்திரை, புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் முலமாகவும் அதிக பணம் வரும். மேற்கண்ட மாதங்களில் வேலைக் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு. வீடு வாங்குவீர்கள். வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். வெகுநாட்களாக மனதை வாட்டி வதைத்த வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்னை ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள். ஆனி, ஆடி, ஆவணி மத்தியப் பகுதி வரை சனி வக்ரமாகி ராசிக்கு 5-ல் அமர்வதால் பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உயர்கல்வி விஷயத்திலும் அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது.

 வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்யுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வணிகர் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அதிகம் படித்த, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு தை, பங்குனி மாதங்களில் கடையை மாற்றுவீர்கள்.
 
மருந்து, பெட்ரோ-கெமிக்கல், ஸ்பெக்குலேஷன், கட்டிட உதிரி பாகங்கள், போர்டிங், லாட்ஜிங், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களுக்கு தகுந்தாற்போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள்.
 
என்றாலும் ஜனவரி 7-ந் தேதி வரை கேது 10-ல் நிற்பதால் அலுவலகத்தில் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புரட்டாசி, பங்குனி மாதங்களில் வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு சரியாகும். எதிர்பார்த்த உதவிகள் பழைய நண்பர்களிடமிருந்து கிடைக்கும். புதிய நண்பர்களாலும் உற்சாகமடைவீர்கள். உங்கள் தகுதிக் கேற்ப அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். திருமணம் ஏற்பாடாகும்.
 
மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும்.
 
இந்தாண்டு சனிபகவான் சாதகமாக இருப்பதால் சாதிக்க வைத்தாலும், குருவின் போக்கால் சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் தொலைநோக்குச் சிந்தனையால் முன்னேற வைப்பதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - கடகம்


நேர்மையை நேசிப்பவர்களே! உங்களுடைய ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும்.
 
உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். மனஇறுக்கங்கள் குறையும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும்.
 
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமைக் கூடும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்று புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
 
மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடிவடையும். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வருடம் பிறக்கும் போது சுக்ரனும் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தாயாருடனான பிணக்குகள் நீங்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
 
இந்தாண்டு முழுக்க உங்களின் சப்தம-அஷ்டமாதிபதியான சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். குடும்ப விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
 
அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகன் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். மனைவிக்கு யூரினரி இன்பெக்ஷன், தைராய்டு பிரச்னை, நெஞ்சு வலி வந்துப் போகும். மனைவி உங்கள் குறை நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்துக் கொள்ள வேண்டாம்.
 
வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். விபத்துகள் ஏற்படக்கூடும். பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சில நாட்களில் தூக்கம் குறையும். இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

 04.07.2015 வரை குரு ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் காய்ச்சல், மஞ்சள் காமாலை, சளித் தொந்தரவு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். வெளி உணவுகள், கார, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சுவிடும் நேரத்தில் மற்றொரு சிக்கல் தலைத்தூக்கும்.
 
வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். "காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம்.
 
5.07.2015 முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். இரக்கப்பட்டு இனி ஏமாறக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். நோய் குணமாகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மழலை பாக்யம் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். அரைக்குறையாக நின்ற வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
 
ஜனவரி 07.01.2015 வரை ராகு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக சில முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
 
9-ம் இடத்தில் கேது நிற்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூட்டு வலி, நெஞ்சு வலி வந்துப் போகும். பாகப்பிரிவினை விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது ஒரு பயம் வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

 ஆனால் 08.01.2016 முதல் ராகு 2-ம் வீட்டில் நுழைவதால் பணப்பற்றாக்குறை நீடிக்கும். கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணில் தூசு விழுந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மருந்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.
 
முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. கேது 8-ல் மறைவதால் தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். என்றாலும் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள்.
 
உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுப்படுத்துவீர்கள். கணினி உதிரி பாகங்கள், உணவு, வாகனம், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் முதலில் உங்கள் ஆலோசனைகளை மறுத்தாலும், கடைசியில் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்வார்கள். முரண்டுப்பிடித்த வேலையாட்களை நீக்கிவிட்டு நல்ல படித்த அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.
 
உத்யோகத்தில் உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உயரதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். புரட்டாசி மாதம் முதல் வேலைச்சுமை குறையும். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஒரு ஈடுபாடு வரும்.
 
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உயரதிகாரிகளின் கனிவுப் பார்வை உங்கள் மீது திரும்பும். உங்களுடைய கடின உழைப்பையும் புரிந்துக் கொள்வார்கள். எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் வலிய வந்து நட்புறவாடுவார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழி, அவதூறு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும்.   
   
கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்து வந்த தோல் அரிப்பு, தடிப்பு விலகும். அழகுக் கூடும். உத்யோகம் அமையும். காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். கல்யாணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.   
 
மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் ஸ்தானமான 5-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் விடைகளை எழுதிப்பாருங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். கணிதம், வரலாறுப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை. வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
இந்தப் புத்தாண்டு சோர்ந்திருந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், உங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவேற்றுவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook

மன்மத வருட ராசிப் பலன்கள் - சிம்மம்எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும்.

வருமானத்தை உயர்த்த சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்கள் யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் இந்தாண்டு பிறப்பதால் சிலருக்கு வெளிநாடு, அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வைகாசி, ஆனி, தை, பங்குனி மாதங்களில் எதிலும் உங்கள் கை ஓங்கும். பணவரவும் அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் முடியும். வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமடைவதால் முதுகு வலி, உறவினர் பகை, வீண் செலவுகள் வந்து நீங்கும். 
 
உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். அலைச்சலும் இருக்கும். உங்கள் மீது சின்ன சின்ன வீண்பழிகளும் வரக்கூடும். வெளிவட்டாரத்திலும் உங்களைப் பற்றிய விமர்சனங்களெல்லாம் அதிகரிக்கும்.
 
05.07.2015 முதல் உங்களுடைய ராசிக்குள் குரு நுழைவதால் ஆரோக்யத்தில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். பெரிய நோய் இருப்பதைப் போல தோன்றும். அவ்வப்போது மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் இருக்கும். சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர்கள், யார் அல்லாதவர்கள் என்பதை கண்டறிவதில் உங்களுக்கு தடுமாற்றங்கள் இருக்கும்.
 
கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருப்பது நல்லது. உங்களின் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யப் பாருங்கள்.
 
உங்களுடைய ராசிக்கு பிரபல யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மனஇறுக்கங்களிலிருந்து மீள்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினைகள் நல்ல விதத்தில் முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். எனவே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
 
புதன் சாதகமாக இருப்பதால் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தைரியம் கூடும். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களான சீமந்தம், திருமணம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

 உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டிலேயே ராகு நிற்பதால் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். அலர்ஜியால் கண் வலி வந்துப் போகும். சிலருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வர வாய்ப்பிருக்கிறது. தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவும் அவ்வப்போது வரக்கூடும். 08.01.2015 முதல் ராகு உங்கள் ராசிக்குள் நுழைய இருப்பதால் யூரினரி இன்பெக்ஷன், மனஉளைச்சல், தாழ்வுமனப்பான்மை வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
 
மற்றவர்களுடன் உங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்களுடைய திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பற்றி வெளியாட்களிடம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். தொடர்ந்து ராகுவின் போக்கு சரியில்லாததால் குலதெய்வத்தை வணங்குங்கள். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு நீங்கள் சென்று வருவது நல்லது. நோயாளிகளுக்கு மருந்து செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வது நல்லது.
 
கேது உங்களுடைய ராசிக்கு 8-ல் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சேமிப்புகள் கரையும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மனைவிக்கு ஆரோக்யம் குறையும்.
 
அதிலும் குறிப்பாக 08.01.2016 முதல் 7-ம் வீட்டிலேயே கேது வந்தமர்வதால் மனைவியுடன் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். கணவன்-மனைவி விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவிக்கு அறுவை சிகிச்சை, விஷக் காய்ச்சல் வந்துப் போகும்.   
 
இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரக்கூடும். வாகனத்தை வேகமாக இயக்காதீர்கள். ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ் போட் இவற்றையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள்.

 அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. சில நேரங்களில் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையும் வரும். வழக்கு விவகாரங்களில் அடிக்கடி வழக்கறிஞரை மாற்ற வேண்டாம். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 
இந்த வருடத்தில் வியாபாரம் உங்களுக்கு ஓரளவு தான் லாபம் தரும். பெரிய முதலீடுகளெல்லாம் வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். அண்டை மாநிலத்தில், வெளிநாட்டிலிருப்பவர்களின் ஆதரவால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
 
ஆனால் உங்களுடைய முதலீடுகள் குறைவாக இருப்பது நல்லது. பிளாஸ்டிக், கெமிக்கல், மருந்து, கட்டுமானப் பொருட்களால் லாபம் வரும். முடிந்த வரை கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. வைகாசி, ஆனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். 
 
உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரும். ஆனால் உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள். உத்யோக ஸ்தானத்தை சனி பார்த்துக் கொண்டிருப்பதால் விமர்சனங்களுக்குள்ளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் இருக்கும். உங்களை விட அனுபவத்தில் குறைவான, கல்வித் தகுதியில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் வளைந்துக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். தை, பங்குனி மாதங்களில் புது வேலைக் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
மாணவ-மாணவிகளே! ராகு, சனியின் போக்கு சரியில்லாததால் விளையாட்டுத் தனத்தை குறைத்துக் கொண்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். பழைய நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம். உயர்கல்வியில் சேரும் போது உங்களுக்கு ஏற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுப்பது நல்லது. கல்யாண விஷயத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். வருடத்தின் முற்பகுதியில் வேலைக் கிடைக்கும். 
 
இந்தப் புத்தாண்டு சற்றே ஆரோக்ய குறைவையும், ஒருவித படபடப்பையும் தந்தாலும் கடந்த கால அனுபவ அறிவால் முன்னேற வைக்கும்.


« Last Edit: April 12, 2015, 09:08:58 AM by Maran »

Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - கன்னி


பழைய அனுபவங்களை பதிவு செய்பவர்களே! உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும்.
 
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்ப வருமானம் உயரும். பழைய கடனை பைசல் செய்வதற்கும் வழி, வகை பிறக்கும். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சிலர் அரசியலில் தீவிரமாக இரங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.
 
உங்களுடைய ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரும். வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். எனவே வெளியூர் பயணங்களின் போது சுத்தமான கழிவறையைப் பயன்படுத்துங்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.
 
சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பூச்சிக் கடி மற்றும் வைரஸ் மூலமாக காய்ச்சல் வரக்கூடும். உடலில் தடிப்பு வந்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. ராகு ராசிக்குள்ளேயே 07.01.2016 வரை நீடிப்பதால் முன்கோபம் அதிகமாகும். நண்பர்களுடன் பகை வந்துப் போகும். தூக்கம் குறையும். மற்றவர்களுக்காக ஜாமீன் கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
 
உங்களுடைய ராசிக்கு 7-ல் கேது அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். அவ்வப்போது அலைச்சலும் இருக்கும். சின்ன சின்ன காரணங்களுக்கெல்லாம் இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சாதாரண விஷயங்களை பெரிதாக்க வேண்டாம். மனைவிவழியில் செலவினங்கள் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களாலும் அவ்வப்போது அன்புத்தொல்லை அதிகமாகும். மனைவிக்கு பித்தப் பை சம்பந்தமான பிரச்னைகள் வந்துப் போகும்.
 
08.01.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாவதால் அதுமுதல் யோகமான பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அன்யோன்யம் அதிகரிக்கும்.
 
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தின் மையப்பகுதி வரை உங்கள் ராசிக்கு பகைக் கோளான செவ்வாயின் போக்கு சரியில்லாததால் இக்காலக்கட்டத்தில் இரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் பற்றாக்குறையும், மின்சாரம், நெருப்பால் சிறுசிறு விபத்துகளும், சகோதர வகையில் செலவுகளும், ஏமாற்றங்களும் வந்து நீங்கும்.

 உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் போது இந்த மன்மத வருடம் பிறப்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அடங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பயனடைவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் புதிதாக முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள்.
 
சந்திரன் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். எங்குச் சென்றாலும் தடைகள் இருந்துக் கொண்டேயிருக்கும். சகோதர வகையில் மனவருத்தம் வரும். பூமி, சொத்து, பாகப்பிரிவினை பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
வீட்டு மனை, விவசாய பூமி வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகமாகும். நீர் சுளுக்கு, தசைப் பிடிப்பு, மூச்சுத் திணறல் வரக்கூடும். தலையில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இருசக்கர வாகனத்தை இயக்குவோர் மறவாமல் தலைக்கவசம் அணிந்துக் கொள்வது நல்லது. உங்களுடைய ராசிநாதன் புதன் பலவீனமாக இருப்பதால் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் என்பதை கண்டறிவதில் குழப்பம் வந்துப் போகும்.
 
உங்களின் தன-பாக்யாதிபதியான சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

 மகனுக்கு வியாபாரம் அமைத்துத் தருவீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வீடு மாறக் கூடிய அமைப்பும் உருவாகும். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். குலதெய்வக் கோவிலையும் எடுத்துக் கட்டுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
வியாபாரத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக லாபம் ஈட்டுவீர்கள். கடன் தொகையை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள். கட்டுமானப் பொருட்கள், கண்ஸ்டக்ஷன், வாகன வகைகள், இரும்பு, உணவு வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் பணிவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் புது கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் வியாபாரத்தை விரிவுப்படுத்த வழி, வகைப் பிறக்கும். 
 
உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். ஆனி, ஆடி மாதங்களில் சம்பளம் உயரும். உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு தந்த அதிகாரி மாற்றப்படுவார். உங்களுடைய கல்வித் தகுதியை மேலும் மேம்படுத்திக் கொள்வீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பள நிலுவைத் தொகை, பாக்கித் தொகையெல்லாம் கைக்கு வரும். மார்கழி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்லவர்கள் நண்பர்களாவார்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அரசாங்க உதவியும் கிடைக்கும்.
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வேலையும் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமைந்து திருமணமும் நல்ல விதத்தில் முடிவடையும். பெற்றோர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களின் உணர்வுகளையும் புரிந்துக் கொள்வார்கள்.
 
இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளையும், அடிப்படை வசதிகளை ஓரளவு அதிகரிக்கச் செய்வதாகவும் அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - துலாம்


உயர்வான எண்ணம் உடையவர்களே! உங்களுடைய ராசிநாதனான சுக்ரன் ராசிக்கு 8-ல் மறைந்திருந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய அனுபவ அறிவுக் கூடும்.
 
சமயோஜித புத்தியும் அதிகரிக்கும். நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை உருவாகும். வீடு மாறுவீர்கள். நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் இடம் வாங்கி புது வீடு கட்டிச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். இரண்டுச் சக்கரம் நான்கு சக்கரமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
 
உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் 4.07.2015 வரை இனந்தெரியாத மனக்கவலைகளும், வீண் பழி வந்துவிடுமோ என்ற ஒரு அச்சமும், மற்றவர்கள் தன்னை சரியாக மதிக்கவில்லை என்ற ஆதங்கமும் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும்.
 
05.07.2015 முதல் குருபகவான் லாப வீட்டில் வந்தமர்வதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வாக்குக் கூடும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்ப்புகள் குறையும். தடைப்பட்டு இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். வழக்குகள் சாதகமாகும்.
 
உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். முன்கோபமும் குறையும். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கும் வேலைக் கிடைக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும்.
 
ஏழரைச் சனி நடைபெறுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் உங்களை துரத்திக் கொண்டேயிருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் இருக்கும். பாதச் சனி நடைபெறுவதால் கை, காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. வாகனம் அடிக்கடி பழுதாகும். சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படக்கூடும். சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருக்கும் கனரக வாகனம் மீது உங்கள் வாகனம் மோதிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொந்த வாகனத்தில் அதிகாலை மற்றும் நள்ளிரவு பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
 
மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இரவல் தரவும், வாங்கவும் வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். அவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
 
அவ்வப்போது பார்வைக் கோளாறு, காது வலி, தொண்டை வலி வந்துப் போகும். பலவீனமாக இருப்பதாக சில நேரங்களில் உணருவீர்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது வீட்டு வேலைக்காக இருந்தாலும், தொழில் நிறுவனங்களில் வேலைக்கு வைப்பதாக இருந்தாலும் அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

 உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு, மரியாதைக் கூடும். தாயாருக்கு உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் வாக்குவாதங்கள் வரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது, சமையலறை நவீனப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.
 
உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் 07.01.2016 வரை கேது தொடர்வதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
ஆனால் 08.01.2016 முதல் 5-ம் வீட்டிற்குள் கேது நுழைவதால் பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
07.01.2016 வரை ராசிக்கு 12-வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். தூக்கம் குறையும். ஆனால் 08.01.2016 முதல் ராகு 11-வது வீட்டிற்கு வருவதால் திடீர் பணவரவு உண்டு. உயர்ரக வாகனங்களும் வாங்குவீர்கள். புது முதலீடுகள் செய்து தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். 
 
உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனைவியின் உடல் நிலை பாதிக்கும். அவ்வப்போது ஈகோ பிரச்னைகளும், வாக்குவாதங்களும் வரும். வீண் சந்தேகத்தால் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய புனிதமான உறவில் விரிசல்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவிக்கு கர்ப்பப்பையில் கட்டி, கழுத்து வலி, முதுகு வலி வரக்கூடும். மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள்.
 
ஆடி மாதம் மத்தியப்பகுதி முதல் ஆவணி மாதத்திலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரமாகி நிற்பதால் சிறுசிறு விபத்துகள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் தேக்க நிலை, மந்த நிலைதான் நீடிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதிலும் இடையூறுகள் இருக்கும். வேலையாட்களாலும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஆனால் ஜீலை மாதம் முதல் லாபம் அதிகரிக்கும்.

 சந்தை நிலவரத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபார சூட்சுமங்களையும் தெரிந்துக் கொள்வீர்கள். புது முதலீடு செய்ய உதவிகள் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களிலும் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுப்படுத்துவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களால் இருக்கக்கூடிய பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
 
உத்யோகத்தில் ஏமாற்றங்களும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருந்துக் கொண்டிருக்கும். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற ஒரு அச்சமும் உங்களுக்கு இருக்கும். ஆனால் ஆடி மாதம் முதல் உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.
 
உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பும் வரும். தை, மாசி, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வையும் எதிர்ப்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் சிலருக்கு கிடைக்கும். அயல்நாடு மற்றும் வெளிநாடு தொடர்புடைய நிறவனத்திலும் சிலருக்கு வேலைக் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் அக்கறை காட்டுங்கள். பள்ளிக்கு அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டாம். விடைகளை எழுதிப்பாருங்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி உங்களுடைய மதிப்பெண் கூடும். நல்ல மாணவர்களின் நட்பும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேரக் கூடிய அமைப்பும் உண்டாகும்.
 
கன்னிப் பெண்களே! போலியான நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். உண்மையானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோருடன் இருந்து வந்த வாக்குவாதங்கள் நீங்கும். சகோதரங்களுடன் இருந்த மனக்கசப்பு விலகும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். காதலும் கனிந்து வரும்.
 
இந்த புத்தாண்டு ஏழரைச் சனியால் உங்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் குருவின் திருவருளால் சாதித்து காட்டுவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - விருச்சிகம்


தன்னை நாடி வந்தவர்களை ஆதரிப்பவர்களே! உங்களுடைய ராசிக்குள்ளேயே சனிபகவான் நின்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
 
எண்ணெய் பதார்த்தங்களையும், வாயு பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சிகளை தினந்தோறும் செய்யப்பாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. ஏழரைச் சனியின் தாக்கம் உங்களுக்கு அதிகரித்திருப்பதால் பாரம்பரிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
ஜென்மச் சனி நடைபெறுவதால் கோபம் அதிகமாகும். சகிப்புத் தன்மையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. வளைந்துக் கொடுத்துப் போவதன் மூலமாக இந்த வருடத்தில் நீங்கள் அதிகம் வெற்றிப் பெற முடியும். வீராப்பாக விரைத்து நின்றாலோ, வீண் வாதம் பேசி நின்றாலோ, பாதிப்புகளும், இழப்புகளும் உங்களுக்குத் தான் அதிகம் இருக்கும். தாயார் மீது பாசமாக நீங்கள் இருந்தாலும், சில நேரங்களில் கடுமையான வார்த்தைகளை பேசி நோகடித்துவிடுவீர்கள். உள்ளுக்குள் பாசம் வைத்துக் கொண்டு, உதட்டிலே கோபத்தை காட்டுவதனால் உங்களுக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
 
உங்களுடைய ராசிக்கு 3-வது ராசியில் இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு கணிசமாக உயரும். உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர், அண்டை மாநிலம் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் முடிப்பீர்கள். பழைய கோவிலைப் புதுப்பிக்க உங்களால் இயன்ற உதவிகள் செய்து கொடுப்பீர்கள். கௌரவப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும்.
 
07.01.2016 வரை கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் இவையெல்லாம் நல்ல விதத்தில் நடக்க வேண்டுமே என்ற பயமும் வந்துப் போகும்.
 
08.01.2016 முதல் 4-ம் வீட்டில் கேது வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். தாய்வழி உறவினர்களில் ஒருசிலர் உங்களைப் பகைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருங்கள். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கம் உங்களை தொற்றிக் கொள்ளக்கூடும். உங்களின் இயல்புக்கு மாறான நடவடிக்கை உள்ளவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள்.

 உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
 
ஆனால் செவ்வாய் 6-ல் மறைந்திருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். மூத்த சகோதரர் உதவுவார் ஆனால் நேர் இளைய சகோதரருடன் மனத்தாங்கல் வரும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அதனால் உறவினர், நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். பழைய புறநகர் பகுதியில் இருக்கும் நிலத்தை தந்து விட்டு நகரப் பகுதியில் வீடு வாங்குவீர்கள். வீடு வாங்குதற்கான சூழ்நிலை அமையும்.
 
உங்களுடைய ராசிநாதனாகிய செவ்வாய் ஆனி மாதம் மற்றும் ஆடி மாதத்திலும், ஐப்பசி மாதம் பிற்பகுதி முதல் கார்த்திகை, மார்கழி மாதம் மத்திய பகுதி வரை மற்றும் மாசி மாதம் மத்திய பகுதி முதல் பங்குனி மாதத்திலும் பலவீனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் சிறுசிறு விபத்துகள், பணஇழப்புகள், சகோதரங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.
 
புதன் உங்களுடைய ராசிக்கு 6-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய நண்பர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். உங்கள் நிலைமையைப் புரிந்துக் கொள்ளாமல் உங்களிடம் அவர்கள் பேசுவார்கள். அனுசரித்துக் கொண்டு போவது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம்.
 
உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். அவருக்கு ஆரோக்யம், அழகுக் கூடும். ஆனால் சனி மனைவி ஸ்தானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்துப் போகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள்.
 
குருபகவான் 4.07.2015 வரை சாதகமாக இருப்பதால் மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கும் நல்ல துணை அமையும். ஆனால் உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுவதால் பிள்ளைகளின் வாழ்க்கையைத் துணையை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் விசாரித்துப் பார்த்து திருமணம் முடிப்பது நல்லது.
 
5.07.2015 முதல் உங்கள் ராசிக்கு குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும். உங்களைப் பற்றிய விஷயங்களை, ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அதை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பணம் வாங்கித் தருவதில், கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

 வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்னைகள் கொஞ்சம் குறையும். ஜென்மச் சனி நடைபெறுவதால் வேலையாட்களால் இழப்புகள், ஏமாற்றங்கள் வரும். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள்.
 
இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். போராடி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும். ஆவணி மாதத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். தை மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 
உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சித்திரை வைகாசி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். ஆனால் 4.07.2015 முதல் குரு 10-ம் வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை, விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
 
உங்களுக்கு இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலர் பணியிலிருந்து கட்டாய ஓய்வுப் பெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். முக்கியமான ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். மூத்த அதிகாரிகள் ஒருசில விஷயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்தினாலும் சட்டத்திற்கு புறப்பாக நீங்கள் எதையும் செய்துக் கொண்டிருக்காதீர்கள். என்றாலும் ஆவணி, தை மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
 
மாணவ-மாணவிகளே! கணிதம், அறிவியல் பாடத்தில் அக்கறைக் காட்டுங்கள். ஆய்வகப் பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் மனசில் தங்கிவிடும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் நன்றாக புரிவதுப் போல இருக்கும் ஆனால் தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள். அதனால் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது.
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் பெற்றோரின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். திருமணம் கூடி வரும். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.
 
இந்த புத்தாண்டு கடந்த ஆண்டை விட செல்வாக்கையும், செல்வத்தையும் தந்தாலும் ஆரோக்ய குறைவையும், அலைச்சலையும் தருவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook


மன்மத வருட ராசிப் பலன்கள் - தனுசு


மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! ங்களுடைய ராசிக்கு 2-வது வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் இனி புரிந்துக் கொள்வீர்கள். ஏமாந்தது, இழந்ததெல்லாம் போதும் என்ற முடிவுக்கு வருவீர்கள். எங்குச் சென்றாலும் உங்களுக்கு செல்வாக்குக் கூடும். உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகள் குறையும்.
 
ஆனால் ஏழரைச் சனி உங்களுக்கு தொடங்கியிருப்பதால் பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக நடந்துக் கொள்வது நல்லது. பழைய கடனை நினைத்து தூக்கம் குறையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்கள் முன்னிலையில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நீங்கள் பழைய வாகனத்தை விற்றிருந்தால் அதில் உங்கள் பெயர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய வாகனத்தை விற்கும் போது முழுமையாக வாங்குவோரின் பெயருக்கு மாற்றிவிடுங்கள். டிரைவிங் லைசன்சை புதுப்பிக்க தவறாதீர்கள். இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்கள் இடத்தை சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்கள் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது.     
 
07.01.2016 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் கேது தொடர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சின்ன சின்ன காரியங்களைக் கூட ஒரே முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னைகளும் தலைத்தூக்கும். ஆனால் அவற்றிற்கு நல்லத் தீர்வும் கிடைக்கும்.

 08.01.2016 முதல் கேது 3-ம் வீட்டில் நுழைவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். சொத்துப் பிரச்னைகள் சுமூகமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தைரியம் பிறக்கும். ஆனால் இளைய சகோதர வகையில் சின்ன சின்ன செலவுகளும், அலைச்சலும் இருக்கும்.
 
07.01.2016 வரை ராசிக்கு 10-ம் வீட்டில் ராகு நிற்பதால் உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு, இடமாற்றங்கள், உங்களைப் பற்றிய வதந்திகள், வீண் பழிகள் வந்துச் செல்லும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் 08.01.2016 முதல் ராகு 9-ம் இடத்தில் நுழைவதால் வேலைச்சுமை குறையும். வீண் பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
 
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். என்றாலும் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். தந்தையார் ஏதேனும் அறிவுரைக் கூறினால் அமைதியாக ஏற்றுக் கொள்வீர்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றெல்லாம் பதில் பேசி அவர் மனதை புண்படுத்தி விட்டு பிறகு கலங்கிக் கொண்டிருக்க வேண்டாம். பாகப்பிரிவினை, பிதுர் ராஜ்ய சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. கோர்ட், கேஸ் என்றெல்லாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். கௌரவச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். 
 
உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் பகவான் ஆட்சிப் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அவருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
 
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகளும் நல்ல விதத்தில் முடியும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குலதெய்வக் கோவிலை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். ஆனால் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கும்.
 
4.07.2015 வரை உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவினங்களும் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும். மனஇறுக்கங்கள் வந்துப் போகும். ஓடிஓடி உழைத்தாலும் ஒன்று ஒட்டவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் இருக்கும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நெருங்கியப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு உங்களை விட்டு விலகுவார்கள்.

 ஆனால் 5.07.2015 முதல் குருபகவான் உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் நல்லது நடக்கும். நிம்மதி உண்டாகும். அலைச்சல் குறையும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தந்தையாருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
 
அழகு, ஆரோக்யம் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பால் சமூக அந்தஸ்து ஒருபடி உயரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள்.
 
வியாபாரத்தில் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு லாபம் அதிகமாகும். உங்கள் ராசிநாதனாகிய குரு பகவான் 5.7.2015 முதல் 9ல் அமர்வதால் வியாபாரத்தை விரிவுப்படுத்த கடனுதவி கிடைக்கும். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
 
நல்லவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். வேலையாட்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். வியாபாரத்தை விரிவுப்படுத்த வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். என்றாலும் 07.01.2016 வரை ராகு 10-ம் வீட்டிலேயே நிற்பதால் இழப்புகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள் வந்துப் போகும்.
 
உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். வைகாசி ஆவணி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும். தேர்வில் வெற்றி பெற்று பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவீர்கள். புரட்டாசி மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். Êசக ஊழியர்களும் மதிப்பார்கள் 07.01.2016 வரை ராகு 10-ம் இடத்திலேயே தொடர்வதால் வேலைச்சுமை இருக்கும். ஆனால் ஜீலை மாதம் முதல் குரு 9-ம் வீட்டில் நுழைவதால் சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலும் வேலைக் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளிலும் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். மதிப்பெண்ணும் உயரும். சக மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பீர்கள்.       
 
கன்னிப் பெண்களே! உங்களுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த சோர்வு, களைப்பு, அலர்ஜி, இன்பெக்ஷன் நீங்கும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் தடைப்பட்டிருந்த உயர்கல்வியை தொடரும் வாய்ப்பும் கிடைக்கும்.
 
இந்த புத்தாண்டு தடுமாற்றம், தயக்கத்திலிருந்து விடுவிப்பதுடன் தள்ளிப்போன விஷயங்கள் முடிவடைந்து பலவற்றிலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
Re: மன்மத வருட ராசிப் பலன்கள்!
« Reply #10 on: April 12, 2015, 09:35:19 AM »


மன்மத வருட ராசிப் பலன்கள் - மகரம்


நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் அடிப்படை வசதிப் பெருகும்.

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் ஆசைகளெல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். குடும்ப வருமானம் உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். முக்கியஸ்தர்கள் இருக்கும் பகுதியில் வீட்டை மாற்றுவீர்கள். அதிநவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.
 
மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வீடு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும்.
 
உங்களுடைய ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, தொண்டை புகைச்சல், கண் எரிச்சல் வந்துப் போகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும் பயந்துவிடாதீர்கள்.
 
07.01.2016 வரை கேது 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்களை தரக்குறைவாக பேசியவர்களின் மனசு மாறும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தைரியம் கூடும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேற்றுமொழிப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். யோகா, தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கோவிலைப் புதுப்பிக்க நன்கொடைகளெல்லாம் தருவீர்கள். ரோட்டரி கிளப், ட்ரஸ் போன்றவற்றில் முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 4-ம் வீட்டில் செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கோள்கள் அமர்ந்திருப்பதால் தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். அம்மாவின் மனசு புண்படும்படி நடந்துக் கொள்ளாதீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

 07.01.2016 வரை உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் சேமிப்புகள் கரையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருக்கும். 08.01.2016 முதல் 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் வந்தமர்வதால் கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வரும். மனைவியின் உடல் நிலை பாதிக்கும். பண விஷயத்திலும் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். சொந்த வாகனத்தில் நள்ளிரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. அவருக்கு வேலைக் கிடைக்கும். சிலர் மனைவி பெயரில் வியாபாரம் தொடங்குவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, இளமைக் கூடும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும்.
 
ஆனால் 05.07.2015 முதல் குரு 8-ல் சென்று மறைவதால் பயணங்கள், செலவினங்கள் அதிகரிக்கும். விலை உயந்த ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உறவினர், நண்பர்கள் வருகையாலும் மகிழ்ச்சித் தங்கும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிரந்தர வருமானத்திற்கான வழி வகை கிடைக்கும். மனஇறுக்கங்கள் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். செல்வாக்குக் கூடும். சிலருக்கு ஷேர் மூலமாக அதிக பணம் வரும். தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.
 
வியாபாரத்தில் நீங்கள் போடும் கணக்குத் தப்பாது. நினைத்தப்படி லாபம் ஈட்டுவீர்கள். ஆனி, ஐப்பசி மாத பிற்பகுதி மற்றும் கார்த்திகை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் வரும் பழைய பாக்கிகளும் வசூலாகும். பெரிய நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். உங்களுடன் பங்குதாரர்களாக பலரும் முயற்சி செய்வார்கள். புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வேலையாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புதிய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உணவு, மருந்து, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்தி அழகுப்படுத்துவீர்கள். வேறு இடத்திற்கும் மாற்றுவீர்கள். விளம்பர யுக்தியை அதிகம் கையாளுவீர்கள்.

 உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களை உதாசீனப்படுத்திய அதிகாரியின் மனசு மாறும். அல்லது உங்களுக்கு ஆதரவுக் கொடுப்பவர் உயரதிகாரியாக வந்து சேருவார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அலுவலகத்தில் புதிய முடிவுகள், முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்களுடைய பங்கு அதிகமாக இருக்கும். தோல்வி மனப்பான்மை நீங்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். ஆனி, கார்த்திகை மாதங்களில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வருமானம் உயரும்.
 
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்ல மாணவர்களின் நட்பு கிடைக்கும். அன்னிய மொழியும் கற்றுக் கொள்வீர்கள். வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி பெறவும் நல்ல வாய்ப்பு வரும். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று பரிசு, பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் உண்டாகும்.
 
கன்னிப் பெண்களே! உற்சாகமடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணை அமையும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி திருமணம் முடியும். பெற்றோர்கள் உங்களுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரும்.
 
இந்த மன்மத வருடம் உங்களின் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதாகும். உங்கள் செயல்களில் வேகத்தை கூட்டுவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
Re: மன்மத வருட ராசிப் பலன்கள்!
« Reply #11 on: April 12, 2015, 09:41:29 AM »


மன்மத வருட ராசிப் பலன்கள் - கும்பம்


கஞ்சத் தனம் இல்லாமல் வாரி வழங்குபவர்களே! உங்களுடைய ராசிநாதனாகிய சனிபகவான் கேந்திர பலம் பெற்று 10-ம் வீட்டில் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.

சந்தர்ப்ப, சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறமையெல்லாம் அதிகரிக்கும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவுக் கொண்டாடுவீர்கள். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். சவால்களை ஏற்று சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். ராசிநாதன் வலுவடைந்து காணப்படுவதால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அழகு, ஆரோக்யம் கூடும். நோயின் தன்மை குறையும்.
 
உங்களுடைய ராசிக்கு 6-வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், திடீர் பயணங்களும் இருக்கும். பணப்பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயந்துக் கொண்டிருப்பீர்கள். அதையே சமாளிக்க முடியவில்லை இப்போது புதுக் கடன் வேறு அதிகரிக்கிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை காப்பாற்றி வைத்திருக்கக்கூடிய குடும்ப கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் உங்களுக்கு உள்மனதில் தோன்றும். அவ்வப்போது தூக்கமும் குறையும். உங்கள் மீது சிலர் வீண் பழிகள் சுமத்துவார்கள். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழும். குடும்பத்திலும் அவ்வப்போது வளைந்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆனால் 5.07.2015 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் அதுமுதல் படபடப்பு நீங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். மனைவிக்கிருந்த கழுத்து வலி, மூட்டு வலி நீங்கும். தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். எப்போது பார்த்தாலும் வீட்டில் குழப்பங்களும், சண்டை, சச்சரவுகளும் நிலவியதே அந்த நிலை மாறும். சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரனும் அமையும். மகன் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்.

 அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். சிலர் பழைய வீட்டை தந்து விட்டு புதிதாக வாங்குவீர்கள். புறநகர் பகுதியில் பூமி வாங்கும் அமைப்பும் உருவாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து அவ்வப்போது கலங்கினீர்களே! அவையெல்லாம் நீங்கும். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோய்கள் விலகும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் நின்றுக் கொண்டிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். தவறான வாக்குறுதிகள் தர வேண்டாம். கண் எரிச்சல், கண் வலி வந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது நல்லது. உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை குறையுங்கள். பூச்சுக்கடி, கொசுக்கடியால் அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். அதேப் போல டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போட்டை எல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். அதேப் போல அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.
 
8.01.2016 முதல் கேது உங்களுடைய ராசிக்குள் நுழைவதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். சோர்வு, களைப்பு அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். எதிர்மறை எண்ணங்களும் அதிகமாகும். ஆனால் குருவின் பார்வை ராசியில் இருக்கும் கேதுவின் மீது விழுவதால் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் குறைந்து நல்லது நடக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

ராகு 7-ல் நுழைவதால் மனைவிக்கு கர்பப்பை கோளாறு, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் மனைவிக்கு வந்துப் போகும். ஆனால் ராகு 7-ம் வீட்டில் நுழைந்தாலும் குருவுடன் சென்று சேர்வதால் கெடுபலன்கள் குறையும். கணவன்-மனைவிக்குள் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
 
சூரியன், செவ்வாய், புதன் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பூமிப் பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். இளைய சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல்கள் இருந்தாலும் மூத்த சகோதர வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் சுக ஸ்தானமான வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பெற்றோரின் உடல் நிலை சீராகும். அவர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறை, படுக்கையறை அழகுப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த பிரபலங்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களிலும் கலந்துக் கொள்ள உங்களுக்கு அழைப்பு வரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

 வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இதுவரை ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! உப்பு விற்க போனால் மழைப் பொழிந்தது என்ற பழமொழிக்கேற்ப நீங்கள் எதை தொட்டாலும் அது நட்டத்தில் சென்று முடிந்ததே! வேலையாட்களும் உங்களை ஏமாற்றினார்கள். பங்குதாரர்களாலும் நீங்கள் பழி வாங்கப்பட்டீர்கள் அந்த நிலையெல்லாம் இந்த வருடத்தில் மாறும். குறிப்பாக 5.7.2015 முதல் வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த பண உதவியும், கடன் உதவியும் கிடைக்கும். நல்ல மனசுள்ளவர்கள் பங்குதாரர்களாக வருவார்கள்.

அதேப் போல உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் நல்ல வேலையாட்களும் அமைவார்கள். விடுபட்டுப் போன பழைய தொடர்புகள் வியாபாரத்தில் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, துணி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் சரியாகும். வாராக் கடன்கள் வசூலாகும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் அமைப்பு உருவாகும்.
 
உத்யோகத்தில் கடந்தாண்டு நீங்கள் கசக்கிப் பிழியப்பட்டீர்கள். கடினமாக உழைத்தும் அதற்கான பாராட்டுகளும், பலன்களும் கிடைக்காமல் தவியாய் தவித்தீர்கள். சக ஊழியர்களாலும் நீங்கள் சின்ன சின்ன அவமானங்களை சந்திதீர்கள். மூத்த அதிகாரிகளாலும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டீர்கள். அந்த நிலை இந்த வருடத்தில் மாறும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களை ஆதரிக்கும் புது அதிகாரி மேலதிகாரியாக வந்து சேரும். சக ஊழியர்களும் உங்களுடைய உண்மைத் தன்மையை உணருவார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தடைப்பட்டுப் போன சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி எதிர்பார்க்கலாம். அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும்.
 
மாணவ-மாணவிகளே! மறதி எல்லாம் நீங்கும். நினைவாற்றல் பெருகும். நன்கு படிக்கக்கூடிய மாணவர்களின் நட்பு கிடைக்கும். வகுப்பறையில் ஆசிரியர்களிடம் சந்தேங்களை கேட்க தயங்கினீர்களே! அந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் எளிதாக சேர்வீர்கள். சிலர் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பிருக்கிறது.
 
கன்னிப் பெண்களே! கூடா நட்பால் நிம்மதியை இழந்தீர்களே! இனி நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். சுயநலவாதிகளிடமிருந்து விடுபடுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணம் சிறப்பாக முடிவடையும். உங்களுடைய கல்வி தகுதிக் கேற்ப நல்ல வேலையும் கிடைக்கும். சிலர் வீடு, மனை வாங்குவீர்கள். வெளிமாநிலத்தில், அயல்நாட்டில் வேலைக் கிடைத்தால் ஏற்றுக் கொள்வது நல்லது.
 
இந்தப் புத்தாண்டு புதுத் தெம்பையும், வசதி, வாய்ப்பையும் தருவதுடன் சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.Offline Maran

 • Classic Member
 • *
 • Posts: 4275
 • Total likes: 1285
 • Karma: +0/-0
 • Gender: Male
 • I am a daydreamer and a nightthinker
  • Facebook
Re: மன்மத வருட ராசிப் பலன்கள்!
« Reply #12 on: April 12, 2015, 09:45:24 AM »


மன்மத வருட ராசிப் பலன்கள் - மீனம்


பணம், காசு வந்தும் மாறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களுடைய சாதனைத் தொடரும்.

சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ப்ளான் அப்ரூவாகி வரும்.

உங்களுடைய ராசியிலேயே கேது 7.01.2016 வரை தொடர்வதால் அவ்வப்போது வேலைச்சுமை அதிகமாகிக் கொண்டேப் போகும். கணவன்&மனைவிக்குள் விவாதங்களும் வரும். பூச்சிக் கடி, கொசுக்கடியால் தோல் நோய், காய்ச்சல் வரக்கூடும். முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். துரித உணவகங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேப் போல அசைவ உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். ராசியிலேயே கேது நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும். குடும்பத்திலும் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். பழைய நண்பர்களை தவிர்க்க வேண்டாம்.

உங்களுடைய ராசிக்கு 7&ம் வீட்டிலேயே 7.01.2016 வரை ராகு நீடிப்பதால் மனைவிக்கு சின்ன சின்ன ஆரோக்ய குறைவு ஏற்படும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். எடைமிகுந்தப் பொருட்களை மனைவி சுமக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நடக்கும் போது கால் இடரி விழவும், தலைச்சுற்றில் வந்து கால் இடரி விழவும் வாய்ப்பிருக்கிறது. 8.01.2016 முதல் ராகுவும், கேதுவும் சாதகமாக மாறுவதால் அதுமுதல் எல்லாவகையிலும் வெற்றி உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்&மனைவிக்குள் இருந்த ஈகோப் பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத யோகங்கள் உண்டாகும்.

சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும்.  வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பழைய கடன் பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்குவதற்காக புது கடன் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேக்தை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

 உங்கள் ராசிநாதன் குருபகவான் 5&ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களால் அந்தஸ்து உயரும். மகளின் விருப்பப்படி திருமணத்தை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். அவர்க்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 05.07.2015 முதல் உங்கள் ராசிநாதன் 6&ல் சென்று மறைவதால் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

உங்களை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்களை நேரில் பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், பின்னர் உங்களை இகழ்ந்தும் பேசுபவர்கள் அதிகரிப்பார்கள். எல்லாலோரையும் நம்பி எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வீண் பழிகளெல்லாம் வரக்கூடும். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். வழக்கறிஞரை அவ்வப்போது சந்தித்து ஆலோசித்துக் கொண்டிருப்பது நல்லது. அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன் வந்துப் போகும்.

குரு மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். உங்களை விட்டு விலகி பிள்ளைகள் அயல்நாடு செல்வார்கள். 8.1.2016 முதல் உங்களுடைய ராசிநாதனாகிய குருபகவான் ராகுவுடன் சம்பந்தப்படுவதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கொழுப்புச் சத்து அதிகமாகும். கொழுப்புக் கட்டிகளும் வந்துப் போகும். சின்ன சின்ன உடற்பயிற்சிகள் தினசரி செய்வது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். பாஸ்போட்டை புதுப்பிக்க தவறாதீர்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்டு இவற்றையெல்லாம் கவனக் குறைவால் இழந்துவிடாதீர்கள்.
 
உங்களுடைய ராசிக்கு 9&ம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தந்தையாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். ஆனால் தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
உங்களுடைய ராசிக்கு 3&ம் வீட்டில் சுக்ரன் ஆட்சிப் பெற்றிருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தைரியம் பிறக்கும். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் நிற்கும் போது இந்த மன்மத ஆண்டு பிறப்பதால் கண் வலி, பார்வைக் கோளாறு, தொண்டை புகைச்சல் அடிக்கடி வரும். யதார்த்தமாகப் பேசுவதாக சொல்லிக் கொண்டு பிறர் மனம் புண்படும்படி கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.
 
கடந்த வருடத்தை விட இந்த வருடம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். கடையை நல்ல இடத்திற்கு மாற்றவீர்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.

பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வார்த்தையில் கடுமை காட்டாதீர்கள். பிளாஸ்டிக், கெமிக்கல், உணவு, மருந்து, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி&இறக்குமதி வகைகளாலும் லாபம் வரும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டு. புது சலுகைகளும் வியாபாரத்தில் கிடைக்கும்.

 உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். ஜீலை மாதத்திற்குள் சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். தேர்வில் தேர்ச்சிப் பெற்று அதன் மூலமாகவும் புது பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் 5.7.2015 முதல் உங்கள் ராசிநாதனும், உத்யோக ஸ்தானாதிபதியான குருபகவான் 6&ல் சென்று மறைவதால் அதுமுதல் உத்யோகத்தில் அலைச்சல், வேலைச்சுமை இருக்கும்.

குடும்பத்தினருடன் சேர்ந்திருக்கும் நேரம் குறையும். 8.01.2016 முதல் ராசிநாதன் குரு ராகுவுடன் சேர்வதால் உத்யோகத்தில் வீண் பழிகளை சுமக்க நேரிடும். சின்ன சின்ன அபராதத் தொகையும் செலுத்த வேண்டி வரும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கவனமாக இருங்கள். சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோப் பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
 
மாணவ&மாணவிகளே! படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரைகள் எழுதி பரிசுப் பெறுவீர்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் ராசிநாதன் வலுவிழப்பதால் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்த்துவிடுங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை தைரியமாக கேளுங்கள்.

கன்னிப் பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்துக் கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். வேலைக் கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும்.
 
இந்த மன்மத ஆண்டு வாழ்க்கையில் சில நெளிவு, சுளிவுகளைக் கற்றுத் தருவதாகவும், சிக்கனமும், சேமிப்புகளும் தேவை என்பதை உணர வைப்பதாகவும் அமையும்.