Author Topic: இந்திய வரலாறு  (Read 7547 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இந்திய வரலாறு
« on: January 06, 2012, 03:33:24 AM »
இந்திய வரலாறு


இந்தக் கட்டுரை, 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேய இந்தியாவின்
பிரிவினைக்கு முன் இருந்த இந்தியத் துணைகண்டம் பற்றிய வரலாறாகும். தற்கால குடியரசு இந்தியாவின் வரலாற்றுக்கு, குடியரசு இந்தியாவின் வரலாற்றைப் பார்க்கவும். பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் வரலாற்றுக்கு பாகிஸ்தானின் வரலாறு மற்றும் வங்காள தேசத்தின் வரலாற்றைப் பார்க்கவும். தென்னிந்தியாவைப் பற்றி அறிய தென்னிந்தியாவின் வரலாற்றைப் பார்க்கவும்.



நாம் அறிந்தவரை இந்தியாவின் வரலாறு (History of India) சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம் இந்தியத் துணைகண்டத்தின் வட மேற்குப் பகுதியில் கி.மு. 3300 ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 1300 வரை செழித்திருந்தது. இந்தியாவின் முழு வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிகம் கி.மு. 2600-1900 வரை நீடித்திருந்தது. வெண்கலக் காலம் கி.மு 2000 ஆம் ஆண்டின் துவக்கம் வரை மேலோங்கி இருந்தது, பின்னர் அதனை தொடர்ந்த இரும்புக் காலமும், வேதக் காலமும் இந்தியாவின் கங்கைக்கரை சமவெளிகளில் இருந்த மக்களின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியதன் மூலம் மகாஜனபதங்கள் போன்ற பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கின. இது போன்று இருந்த ஏதோ ஒரு ராச்சியத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிறந்த மகதா, மகாவீரர், கௌதம புத்தர் தங்களது ஷ்ரமண தத்துவங்களை மக்களிடையே பரப்பினர்.
 
பின்னர் வந்த சாம்ராஜ்ஜியங்களும் ராஜ்ஜியங்களும் இந்தப் பகுதியை ஆண்டதன் மூலம் இந்தப் பகுதியின் பண்பாடு மேலும் வளர்ச்சிப் பெற்றது, இது கி.மு. 543 அகேமேனிதின் பெர்சிய சாம்ராஜ்ஜியம்  முதல் கி.மு. 326 அலேக்சாண்டேர் தி கிரேட் வரையில் நீடித்தது. பாக்ற்றியாவைச் சார்ந்த டெமெட்ரியஸால் உருவாக்கப்பட்ட இந்தோ-கிரேக்க ராஜ்ஜியம், கந்தாரா மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களை தன்னுள் கொண்டிருந்தது. கி.மு 184 ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மேனண்டேர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில், பண்பாட்டிலும், வாணிபத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைந்தது.
 
கி.மு. மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இந்திய துணை கண்டம் ஒன்றுபட்டது. நாளடைவில் இதே கண்டம், சிறிய பகுதிகளாக உடைந்து, இடைப்பட்ட ராஜ்ஜியங்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யபடப் பட்டது.கி.மு. ௪ ஆம் நூற்றந்தில் துணைகண்டத்தின் மேற்கு பகுதிகள் ஒன்று படுத்தப்பட்டன. இது குப்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு ஒன்று பட்டே இருந்தது.இந்து மதத்தின் எழுச்சி தீவிரமாக வெளிப்பட்ட இந்த காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று அழைப்பர்.இதே கால கட்டங்களில், பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய பகுதி சாலுக்கியர்கள், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது.வளமைப்பெற்ற இந்திய நாகரிகம், ஆட்சி முறைகள்,பண்பாடு, ஆசியாவில் பல பகுதிகளில் பரவிய இந்து மதம் மற்றும் புத்த மதம் இருந்த இந்த காலத்தை தென்னிந்தியாவும் பொற்காலமாகவே கருதியது.
 
கி.பி. 77 ல் கேரளா ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிக பிணைப்புகள் கொண்டிருந்தது.கி.பி. 712 ல் ,அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்த துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தற்கு பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார். இந்துவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரை இந்திய துணை கண்டம்சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது.இவற்றுள் கச்னவீத், கோரித், டில்லி சுல்தான்கள்,முகலாய சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்றவை.துணை கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது.முகலாய அரசர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர்.முகலாயர்களுடன் விஜயநகர ராஜ்ஜியம், மராத்தா ராஜ்ஜியம்,ரஜபுத ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள்,பலோசியர்கள், சீக்கியர்கள் வாடா மேற்கு துனைகன்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.
 
18 ஆம் நூற்றாண்டு பதியிஇருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வது.இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி முதல் இந்திய சுதந்திர போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியயையும் (இன்பிரா ஸ்ட்ரக்சுர்) பொருளாதாரத்தின் குலைவையும் கண்டறிந்தது.
 
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டு தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்த துணை கண்டம் 1647 ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது







State/UT                          Area                                    Capital More

Chandigarh                       114 Sq.Kms.                                                UT
 
Punjab                                       50,362 Sq. Kms                                  Chandigarh
 
Delhi                                          1483 Sq.Kms                                      UT 
 
Maharashtra                               307,690 Sq.Kms                                  Mumbai 
 
Karnataka                                  191,791 Sq. Kms                                 Banglore
 
Himachal Pradesh                       55,673 Sq. Kms                                   Shimla 
 
Gujrat                                       196,024 Sq. Kms                                  Gandhinagar
 
Andhra Pradesh                          275,068 Sq. Kms                                 Hyderabad 
 
Arunachal Pradesh                      83,743 Sq. Kms                                   Itanagar
 
Assam                                        78,438 Sq. Kms                                  Dispur
 
Bihar                                          173,877 Sq. Kms                                Patna
 
Chhattisgarh                               135,194 Sq. Kms                                 Raipur
 
Goa                                           3,720 Sq. Kms                                     Panaji
 
Haryana                                     44,212 Sq. Kms                                   Chandigarh
 
Jammu & Kashmir                       222,236 Sq. Kms                                Srinagar, Jammu
 
Jharkhand                                  74,677 Sq. Kms                                  Ranchi
 
Kerala                                        38,863 Sq. Kms                                  Thiruvananthapuram
 
Madhya Pradesh                          443,446 Sq. Kms                                Bhopal 
 
Manipur                                      22,327 Sq. Kms I                                mphal 
 
Meghalaya                                   22,429 Sq. Kms                                  Shillong
 
Mizoram                                     21,081 Sq. Kms                                   Aizawl
 
Nagaland                                    16,579 Sq. Kms                                  Kohima
 
Orrisa                                         155,707 Sq. Kms                                Bhubaneshwar   
 
Rajasthan                                    342,349 Sq. Kms                                Jaipur 
 
Sikkim                                        7,096 Sq. Kms                                    Gangtok
 
Tamilnadu                                  130,058 Sq. Kms                                  Chennai
 
Tripura                                        10,486 Sq. Kms                                 Agartala
 
Uttar Pradesh                              294,441 Sq. Kms                                 Lucknow
 
West Bangal                                 88,752 Sq. Kms                                 Kolkata
 
Andaman & Nicobar                    8,249 Sq. Kms Port                               Blair
 
Dadra & Nagar Haveli                  491 Sq. Kms                                        Silvassa 
 
Daman & Diu                             112 Sq. Kms                                          Daman 
 
Lakshdweep                              32 Sq. Kms                                          Agatti 
 
Pondicherry                               492 Sq. Kms                                        Pondicherry 
 
Uttaranchal                                 51,125 Sq. Kms                                 Dehradoon 

 
 



இனி விரிவானா வரலாற்று பதிவுகளை நோக்குவோம்...
« Last Edit: January 06, 2012, 04:26:37 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இந்திய வரலாறு
« Reply #1 on: January 06, 2012, 04:25:33 AM »
இந்திய வரலாறு


1) கற்காலம்     before 3300 BCE
 
2) மெஹெர்கர் பண்பாடு    7000–3300 BCE

3) சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம்   3300–1700 BCE
 
4) பிந்திய ஹரப்பா பண்பாடு        1700–1300 BCE


*********************************************************************************************

கற்காலம்




கற்கால அம்புமுனை


கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.
 
இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.



உலகிலேயே மிகப் பழையதாகக் கருதப்படும் ஜப்பானிய ஜோமோன் மட்பாண்டம்.

கற்காலம் என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும்.
 
கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய வரலாற்றுக்கு முந்திய காலங்கள் (Pre-historic Times) என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.
[/b]

தொல்லியலில் கற்காலம்

இக் காலப் பகுதியின் எல்லைகள் தெளிவற்றவையும், சர்ச்சைக்கு உரியவையும், பிரதேசங்களைப் பொறுத்து மாறக்கூடியவையும் ஆகும். முழு மனித குலத்தையும் கணக்கில் எடுத்துக் கற்காலம் என்பது பற்றிப் பேச முடியும். சில குழுக்கள் உலோகக் காலத்துக்கு எப்போதுமே வளர்ச்சி அடைந்ததில்லை. தொழில்நுட்ப அடிப்படையில் வளர்ச்சி பெற்ற சமுதாயங்களோடு தொடர்பு ஏற்படும்வரை அவை கற்காலத்திலேயே இருந்து வந்தன. இருந்தாலும் இக்காலம் பொதுவாக மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் ஹோமினிட்டுகள் கருவிகளைச் செய்தபோது தொடங்கியதாக நம்பப்படுகிறது.
 
கல்லாலான தொல்பொருட்களே பல சமயங்களில் ஒரே எச்சங்களாக இன்றுவரை காணப்படுவதால் அக்காலங்களுக்கான தொல்லியல் ஆய்வில் கற்பகுப்பாய்வு முக்கியமானதும் சிறப்பானதுமாக அமைகின்றது. இது, கற்கருவிகளை அளப்பதன்மூலம் அவற்றின் வகை, தொழிற்பாடு, தொடர்பான தொழில்நுட்பம் என்பவற்றை முடிவு செய்வதை உள்ளடக்குகிறது.


சொல்லின் தற்காலப் பயன்பாடு




கற்காலத்தைச் சேர்ந்த தூண்டில்

இச் சொல் தொடர்பான முக்கியமான ஒரு பிரச்சினை, வரலாற்றுக்கு முந்திய கால மனித முன்னேற்றமும், காலப் பகுதியும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளைச் செய்யப் பயன்பட்ட பொருட்களைக் கொண்டே அளக்கப்படுகின்றன என்பதாகும். சமூக அமைப்பின் வகை, பயன்படுத்திய உணவு மூலங்கள், கடுமையான தட்பவெப்பச் சூழலுக்குத் தம்மை இசைவாக்கிக் கொண்டமை போன்றவை கருத்தில் எடுக்கப்படவில்லை. இது 19 ஆம் நூற்றாண்டில், மூன்று கால முறை உருவாக்கப்பட்ட போது இருந்த அறிவுநிலையின் விளைவு ஆகும். அக்காலத்தில் தொல்பொருட்களைக் கண்டுபிடிப்பதே தொல்லியல் அகழ்வாய்வுகளின் முக்கியமான நோக்கமாக இருந்தது. தற்காலத் தொல்லியல் நுட்பங்கள் பரந்த அளவிலான தகவல்களைப் பெறுவதை முதன்மைப் படுத்துகின்றன. இதனால், வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பான நமது அறிவு விரிவடைந்துள்ளதுடன், காலங்களுக்கு இடையேயான பிரிவுகள் நல்லமுறையில் உருவாகின்றன. இதனால், கற்காலம் போன்ற சொற்கள் பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. மனித சமுதாயத்தில் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மாற்றங்கள் சிக்கலானவை என்பதையும்; அவை வேளாண்மையைக் கைக்கொண்டது, குடியேற்றங்களை அமைத்து நிலைத்து வாழப் பழகியமை, சமயம் போன்ற பல காரணிகளோடு தொடர்புபட்டவை என்பதையும் இப்போது நாம் அறிவோம். கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே.
 
இச் சொல் குறித்த இன்னொரு பிரச்சினை இது ஐரோப்பாவின் தொல்லியல் நாகரிகங்களை விளக்க எழுந்தது என்பதாகும். அமெரிக்கா, ஓசானியா போன்ற சில பகுதிகள் தொடர்பில், இச் சொற்களைப் பயன்படுத்துவது வசதிக் குறைவானது. இப் பகுதிகளில், வேளாண் மக்களும், வேடுவர் உணவு சேகரிப்போர் போன்றோரும் ஐரோப்பியரின் தொடர்பு ஏற்பட்ட காலம் வரை கருவிகள் செய்வதற்குக் கற்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலோக வேலை, இப்பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் குறைவான ஒன்று. இதனால் இப் பகுதிகளின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வதற்கு வேறு வகையான பிரிவுகள் பயனுள்ளவை.
 
கற்காலத்தைத் தொடர்ந்து வருவது வழக்கமாக வெண்கலக்காலம் ஆகும். இக் காலத்தில் கருவிகள் செய்வதற்கு வெண்கலம் என்னும் உலோகம் பயன்பட்டது. வட ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான சமுதாயங்கள் கற்காலத்துக்கு வெளியே வரத்தொடங்கிய காலம் கிமு 6000 தொடக்கம் கிமு 2500 வரையான காலப்பகுதியாகும். கீழ்சகாராப் பகுதி ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கற்காலத்தைத் தொடர்ந்து நேரடியாகவே இரும்புக்காலம் உருவாகிவிட்டது. மையக் கிழக்குப் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் சிலவற்றிலும் கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதியில் கற்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொதுவாக நம்பப்படுகின்றது. ஐரோப்பாவிலும், ஆசியாவின் எஞ்சிய பகுதிகளிலும் கற்காலம் முடிவுக்கு வந்தது ஏறத்தாழ கிமு 4000 ஆண்டுக் காலப் பகுதியிலாகும். தென்னமெரிக்காவைச் சேர்ந்த முன்-இன்காப் பண்பாடுகள் கிமு 2000 ஆண்டுகள் வரை கற்காலத்திலேயே இருந்தன. இதன் பின்னரே செப்பு, பொன் போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. ஆஸ்திரேலியாவில் கற்காலம் 17 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.



கற்காலப் பிரிவுகள்

கற்காலம் மூன்று பகுதிகளாக வகுக்கப்படுகின்றது. இவை:

1.பழைய கற்காலம்
 2.இடைக் கற்காலம்
 3.புதிய கற்காலம்

 
என்பனவாகும். புதிய தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றபோது புதிய காலப்பகுதிகளும், துணைக் காலப்பகுதிகளும் சேர்க்கப்பட்டன. வெவ்வேறு இடங்களில் நிலைமைகளை விளக்குவதற்காகப் புதிய முறைகளும் உருவாக்கப்பட்டன. கூடிய நவீனமான காலப்பகுப்பு ஒன்று பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை பின்வருமாறு அமைகின்றது.

பிளீஸ்டோசீன் காலம் (Pleistocene epoch) பழைய கற்காலம்
 
ஹாலோசீன் காலம் (Holocene epoch) இடைக் கற்காலம்

புதிய கற்காலம்
 செப்புக்காலம்
 வெண்கலக்காலம்
 இரும்புக்காலம்
 
வரலாற்றுக்காலம்



பழைய கற்காலம்


பழைய கற்காலம் கற்கருவிகளின் உருவாக்கத்தோடு தொடர்புள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இது மனிதர் இப்புவியில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்குகிறது (ஏறத்தாழ மனித வரலாற்றின் 99%). இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக் காலம் தொடங்குகிறது. இது ஹோமோ ஹபிலிசுகள் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிமு 10,000 ஆண்டளவில் வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது வரை நீடித்தது. பழையகற்காலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கியது. இக் காலத்தில் மனிதனுடைய கூர்ப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்திய பல பெரிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கற்காலத்தின் தொடக்கத்துடன் பழையகற்காலம் முடிவுற்றது.
 
குலக்குழுக்கள் எனப்படும் சிறு குழுக்களாக இயங்கிய பழையகற்கால மனிதர் தமது உணவை தாவரங்களைச் சேகரிப்பதன் மூலமும், விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும் பெற்றனர். பழையகற்காலத்தில், மரம், எலும்பு முதலியவற்றாலான கருவிகளும் பயன்பட்டுவந்த போதிலும் அக்காலத்தின் சிறப்பியல்பாக உள்ளது கற்கருவிகளே. இவற்றுடன், தோல், தாவர இழைகள், போன்றனவும் பயன்பட்டன ஆயினும் அவை விரைவில் அழிந்துவிடக்கூடியன ஆதலால் அவை போதிய அளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று கிடைக்கவில்லை. மனித இனம், ஹோமோ ஹபிலிஸ் போன்ற ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த பழைய இனங்களில் இருந்து படிப்படியாகக் கூர்ப்பு அடைந்து நடத்தைகளிலும், உடலமைப்பிலும் தற்கால மனிதனாக மாறியது பழையகற்காலத்திலேயே. பழையகற்காலத்தில் இறுதிப் பகுதியில், சிறப்பாக இடைப் பழையகற்காலத்திலும், மேல் பழையகற்காலத்திலும் மனிதர்கள் தொடக்ககால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.



கீழ் பழையகற்காலம்
 
ஆப்பிரிக்காவில், பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக, நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான ஹோமோ ஹபிலிசுகள் உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை. இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும், காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடவில்லை. சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த ஹோமோ இரெக்டசு என்னும் மனித இனம் தோன்றியது. ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன், சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர். அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர். சீனாவிலுள்ள சூக்கோடியன் (Zhoukoudian) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது.



மேல் பழையகற்காலம்
 
35,000 தொடக்கம் 10,000 ஆண்டுக் காலத்துக்கு முன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட இஅனித இனங்களில், குரோ-மக்னன்களதும், நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன. சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின.
 
கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர். இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். 13,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும், வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது.



இடைக் கற்காலம்




அயர்லாந்தில் உள்ள கல்திட்டை

இறுதியான உறைபனிக் கால முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதி, கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை போன்றவற்றை உடையதாக இருந்தது. இந்த நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கில் நுண்கற்கருவிகளின் வளர்ச்சி ஏற்பட்டது. இவை முன்னைய பழங்கற்காலக் கற்கருவிகளிலிருந்தே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவுக்கு, இக் கருவிகளும், அதோடுகூடிய வாழ்க்கை முறைகளும் அண்மைக் கிழக்குப் பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டன. இங்கே, நுண்கற்கருவிகள், கூடிய செயற்திறன் உள்ள வகையில் வேட்டையாட வழிவகுத்ததுடன், சிக்கலான குடியிருப்புக்கள் தோன்றுவதையும் ஊக்கப்படுத்தின


புதிய கற்காலம்
 
புதிய கற்காலத்தில், வேளாண்மை, மட்பாண்டங்களின் வளர்ச்சி, கட்டல் ஹூயுக் (Çatal Hüyük ), ஜெரிக்கோ போன்ற பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. முதலாவது புதிய கற்காலப் பண்பாடுகள் கி.மு 7000 ஐ அண்டித் தோற்றம் பெற்றன. தொடர்ந்து மத்தியதரைக் கடல் பகுதி, சிந்துச் சமவெளி, சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளிலும் புதிய கற்காலப் பண்பாடு பரவியது.
 
கூடிய அளவில் பயிர்களை அறுவடை செய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன் முதலாக பெரும் அளவிலாக கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. இது, இத்தகைய வேலைகளில் பெருமளவில் ஆட்களை ஈடுபடுத்துவதற்கான வளங்கள் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. எந்த அளவுக்கு இந் நிகழ்வுகள், உயர்குடியினரும், சமூகப் படிநிலை அமைப்பும் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன என்பது இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பொலினீசிய சமுதாயங்களைப் போலச் சில சிக்கலான படிமுறை அமைப்புக்கொண்ட சமுதாயங்கள் பிந்திய புதியகற்காலத்தில் உருவாகியிருந்தாலும், பெரும்பாலான புதியகற்காலச் சமுதாயங்கள் எளிமையானவை ஆகவும் சமத்துவச் சமுதாயங்களாகவுமே இருந்தன. எனினும், இவை தமக்கு முந்திய பழையகற்காலச் சமுதாயங்களைவிடக் கூடிய படிமுறை அமைப்புக் கொண்டவையாகவே இருந்தன. நிலையாக வாழத்தொடங்கிய சமுதாயங்கள் தமக்குத் தேவையான பொருட்களைப் பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் புதியகற்காலத்தில் வணிக நடவடிக்கைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஸ்காட்லாந்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆர்க்னித் தீவில் உள்ள ஸ்காரா பிரே, புதியகற்கால ஊருக்கு ஐரோப்பாவில் உள்ள எடுத்துக்காட்டு ஆகும். இச் சமுதாயத்தினர் கல்லாலான படுக்கைகளையும், பொருட்கள் வைக்கும் தட்டுக்களையும், உள்ளகக் கழிவறைகளையும் கூட அமைத்திருந்தனர்



வெண்கலக் காலம்




இந்து சமவெளி நாகரிகத்தின் "தலைமை குருக்கொள் "
வெண்கலக் காலம் (Bronze Age) மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.


இரும்புக் காலம்


இரும்புக் காலம் (Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சில சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.




Dun Carloway broch, லெவிஸ், ஸ்கொட்லாந்து

வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.



ஒரு இரும்புக்கால வேயப்பட்ட கூரை. ஹம்ப்ஷயர், ஐக்கிய இராச்சியம்.
************************************************************************
மெஹெர்கர்

மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
 
பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
 
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.


லோத்தல்



இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India) கருத்துப்படியான பண்டைக்கால லோத்தலின் தோற்றம்.

லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடங்கி 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.



அரப்பா


அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.


மொகெஞ்சதாரோ

மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
 
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.

மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதி
இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
 

இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.





மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதி


மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.



சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம்

சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் கி.மு 2,500 அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படவில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.


எழுத்துக்களைப் புரிந்துகொள்வதிலுள்ள சிரமங்கள்
 
இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள விடயங்களுள் பின்வருவனவும் அடங்கும்.

 *இவ் வரிவடிவங்களைப் பயன்படுத்திய மொழியைப்பற்றி எதுவும் தெரியாது.
 
*கிடைத்த முத்திரைகளில் எழுதப்பட்டிருப்பவை பெரும்பாலும் 5 அல்லது 6
குறியீடுகளைக் கொண்டவையாகவே உள்ளன. நீளமான விவரணங்கள் எதுவும் இல்லை.
 
*அறியப்பட்ட வேறு வரிவடிவங்களைக் கொண்ட இருமொழிக் குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை.



சிந்துவெளி வரிவடிவத்தின் தன்மை
 
கிடைக்ககூடிய சான்றுகளின்படி இவ்வரிவடிவத்தின் சில தன்மைகள் குறித்துச் சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

 ..இது வலமிருந்து இடமாக எழுதப்பட்டது.
 
..இது logo-syllabic வகையைச் சார்ந்தது.




சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி
 
இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது என்பது ஒரு கொள்கை. இல்லை இது திராவிட மொழிக்கான(தமிழ்) எழுத்து வடிவமேயென்பது இரண்டாவது கொள்கை.
 
ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும்.
 
சமஸ்கிருதக் கொள்கையின் ஆதரவாளர்கள், சமஸ்கிருதம் இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்ததென்று காட்டமுற்படுகிறார்கள். ஆனால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சான்றுகளின்படி சிந்துவெளி வரிவடிவங்களில் தமிழ் பிராமி வரிவடிவங்களை நோக்கிய வளர்ச்சி காணப்படுவதாகவும் இவர்கள் கூறுகிறார்கள். இக் கடைசிக் கூற்றுச் சரியாயின், தமிழ் பிராமி எழுத்துக்களே முதல்நிலைத் திராவிட மொழியொன்றுக்காகத் தோன்றியிருக்கக் கூடும் என்று சந்தேகிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சான்று. இன்றைய அளவில் அது நிருபணம் செய்யப்பட்டும் விட்டது.


ஆய்வுகளின் நிலை
 
காலத்துக்குக் காலம் தாங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் எனினும், இவையெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை



சிந்துவெளி வரிவடிவ ஆய்வாளர்கள்

 
ஆஸ்கோ பர்போலா
 ஐராவதம் மகாதேவன்
 அஹ்மத் ஹசன் தானி



பிந்திய ஹரப்பா பண்பாடு


தகவல்கள் கிடைக்க பெறவில்லை
« Last Edit: January 07, 2012, 04:02:36 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இந்திய வரலாறு
« Reply #2 on: January 07, 2012, 03:34:55 AM »
இரும்புக் காலம்    1200–180 BCE


வேதகாலம் -
• 1500–500 BCE
 

மகா ஜனபதங்கள்
 
• 700–300 BCE
 

மகத நாடு
 
• 684–424 BCE
 

நந்தர்
 
• 424-321 BCE
 

சேரர்
 
• 300 BCE–1200 CE
 

சோழர்
 
• 300 BCE–1279 CE
 

பாண்டியர்
 
• 300 BCE–1345 CE
 

மௌரியப் பேரரசு
 
• 321–184 BCE
 


பல்லவர்
 
• 250 BCE–800 CE
 


சுங்கப் பேரரசு
 
• 185-73 BCE
 

கண்வப் பேரரசு
 
• 75-26 BCE
 

கரவேலப் பேரரசு
 
• 209–170 BCE
 

Kuninda Kingdom
 
• 200s BCE–300s CE
 

Indo-Scythian Kingdom
 
• 200 BC–400 CE
 

சாதவாகனப் பேரரசு
 
• 230 BCE–220 CE
 

இந்தோ கிரேக்கர்கள்
 
• 180 BCE–10 CE



வேதகாலம் - 1500- 500 BCE




வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம். இக் காலப்பகுதியோடு தொடர்புடைய பண்பாடு சில சமயங்களில் வேத நாகரிகம் எனக் குறிக்கப்படுவதும் உண்டு. இந் நாகரிகம், வடக்கு இந்தியாவையும், வடமேற்கு இந்தியாவையும் மையப்படுத்திச் செழித்து இருந்தது. இதன் முதற் கட்டத்தில் பழங்கால இந்தியாவில் பல்வேறு அரசுகள் தோன்றின. கிமு 600 ஆம்ஆண்டளவில் தொடங்கி மகஜனபாத என சமசுக்கிருதத்தில் குறிப்பிடப்படும் சிறிய நாடுகள் உருவாகின. தொடர்ந்து கிமு 320 ஆம் ஆண்டில் மௌரியப் பேரரசு உருவானது.


வரலாறு

வேதகால இந்தியாவின் வரலாறு பெரும்பாலும் அக்காலத்து நூல்களை அடிப்படையாகக் கொண்டே மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. மொழியியல் அடிப்படையில் வேதகால நூல்கள் ஆறு காலவரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
 
1. ரிக் வேத காலம்: ரிக் வேதமே தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய நூலாகும். அத்துடன், இதன் உள்ளடக்கமும், மொழியும் பொது இந்திய, ஈரானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. இது பிற வேத நூல்களில் காணப்படவில்லை. ரிக் வேதம் பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக உருவாகியதாகத் தெரிகிறது. இதன் பிற்காலத்துப் பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகள் கிமு 1000 ஆவது ஆண்டளவில் முற்றுப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 
2. மந்திர மொழிக் காலம்:
 
3. சங்கிதைக் காலம்:
 
4. பிராமணக் காலம்:
 
5. சூத்திரங்களின் காலம்:
 
6. இதிகாசக் காலமும், பாணினிய சமசுக்கிருதக் காலமும்:

***********************************************************************************************************

மகா ஜனபதங்கள் -  700–300 BCE



கவுதம புத்தர் பிகாரில் உள்ள போத்கயா என்ற இடத்தில் பல்கு நதிக்கரையில், ஞானம் பெறுவதற்கு முன்னர் அவர் தீவிரமாக துறவறம் மேற்கொண்டார்
.

வேதா காலத்தின் இறுதி காலக் கட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின, என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 500 ஆம் ஆண்டில்,பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் காசி, கோசலா,அங்கா,மகதா,வச்சி (வ்ரிச்சி), மல்லா, செடி, வட்சா(வம்சா), குறு,பாஞ்சாலா, மச்சா(மத்ஸ்யா), சுரசேனா, அசக்கா,அவந்தி,கந்தாரா,காம்போஜா ஆகிய நகரங்கள் இந்திய கங்கை சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து வெண்கலம் மற்றும் மகாராஷ்டிரம் வரை பரவி இருந்தன.இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது.ஆரம்பக்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குளங்கள் துணை கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன.இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில் மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மொழியில் பேசினார்.கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலாதிலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்


மகாவீரரின் பிறப்பு பற்றியும் ஒரு இலையைப் பற்றிய விவரம் (24 வது சமண மத தீர்த்தங்கரா), கல்ப சூத்ராவிலிருந்து, கி.பி.1375-1400.

இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குருக்கொள் குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர்.தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்பக்கலாம்பத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கட்ட்க்தை கொண்டிருந்த உபநிசதங்கள், புத்த மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், சித்தார்த்த கவுத்தமர் போதி நிலயை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தா என்று அழைக்கப்பட்டார்.அதே சமையத்தில் (சமண சமயத்தின் படி 24 வது தீர்த்தங்கரரான)மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதையே மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[25] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் வரையப்பட்டுள்ளது.[26] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி ஊத்தி, அவற்றை பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன.இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருனைகாடுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன.
 
சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்தா மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா,திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் பரப்பினர்.





பதினாறு மிக வலிமையான ராச்சியங்களையும் குடியரசுகளையும் மகாஜன்பதங்கள் கொண்டிருந்தது.இந்திய கங்கை சமவேளிகலிருந்து பண்டைய இந்தியா முழுவதும் இந்த ஆட்சி நிலவி இருந்தது.

*****************************************************************************************************

மகத நாடு  - 684–424 BCE



கிமு 5 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டின் அண்ணளவான பரப்பு.

மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 சிறப்பான நாடுகளுள் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜககா (இன்றைய ராஜ்கிர்) என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீகாரின் பெரும்பகுதி, வங்காளம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.
 
இந்தியாவின் பெரிய சமயங்கள் இரண்டு மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.


**************************************************************************************************


மகத நாடு  -  684–424 BCE




நந்தப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அதன் ஆட்சிப் பகுதிகளைக் காட்டும் படம். தன நந்தன் காலம். கிமு 323.

நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 5 ஆம், 6 ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர். சிசுங்க மரபைச் சேர்ந்த மன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு மகனே நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. மகாபத்ம நந்தா என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது.
 

நந்த அரசமரபின் முதல் மன்னனான மகாபத்ம நந்தன் சத்திரியர்களை அழித்தவன் என வர்ணிக்கப்படுகின்றான். இவன், இக்ஷ்வாகு மரபினர், பாஞ்சாலர், காசிகள், ஹைகயர், கலிங்கர், அஸ்மாகர், குரு மரபினர், மைதிலியர், சூரசேனர், விதிகோத்திரர் போன்றோரை வெற்றி கொண்டான். இவன் தனது நாட்டை தக்காணத்துக்குத் தெற்குப் பகுதி வரை விரிவாக்கினான். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான். கிரேக்க, இலத்தீன் நூல்களில் இவர் க்சந்ராமேஸ் (Xandrames) அல்லது அக்ராமேஸ் (Aggrammes) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றான். இவனது கொடுமைகள் காரணமாக மக்கள் இவனை வெறுத்ததாகவும், அதனால் தான் இம் மன்னனை வெற்றிகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் சந்திரகுப்த மௌரியன் கூறியதாக புளூட்ராக் என்னும் நூல் கூறுகிறது.
 

சிசுங்க மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர். இந்தியாவின் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் இவர்களே என்றும் சொல்லப்படுவது உண்டு. மகத நாட்டின் ஆட்சியைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அதனை மேலும் விரிவாக்கினர். இதற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை, 2000 தேர்கள், 3000 போர் யானைகள் என்பவை


நந்த மன்னர்

மகாபத்ம நந்தன்
 பண்டுகா
 பங்குபதி
 புட்டபால
 ராஷ்ட்டிரபால
 கோவிசனாக
 தக்சித்காக்க
 கைவர்த்த
 தன நந்தன்

********************************************************************************************************************
« Last Edit: January 07, 2012, 04:53:01 AM by Global Angel »