Author Topic: ஆன்லைன் நட்பி (கள்)  (Read 78 times)

Offline இளஞ்செழியன்

ஆன்லைன் நட்பி (கள்)
« on: May 01, 2021, 03:32:21 PM »

அவளொரு ஆன்லைன் நட்பி
எப்போதாவது வெறுப்பாக உணரும்
போது, போரடிக்கும் போது பேசிப் பொழுதை கழித்திருக்கிறேன்...

அவளின் கடந்து போன காதல் கதை,
நட்பு வட்டாரங்களெல்லாம் எனக்கு ஓரளவு அத்துப்படி....

சௌந்தர்யமான சிலருக்கு தானொரு
அழகி என்றே தெரியாத மனநிலை இருக்கும்
இவளுக்கும் அதேவியாதி....
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கும் என்பதாக
சில தடவை பேசியிருக்கிறாள்.
எனக்குப் பிடிக்குமே என்பதாக நான் சொன்னால்
ஏதேனும் தப்பாக நினைக்கக் கூடுமோ என்று விட்டு விடுவேன்.....

ஆனால், குறுஞ்செய்திகளில் விளையாடுவதுண்டு...
எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் பிடிக்கும் என்று புரிய வைத்தும் வேண்டாமென்று நகர்தலான பேச்சாக இருக்கும் எங்களுடையது...

ஒரு நேரத்தில் அவள் புடவை புகைப்படங்கள்,
சில காதணி புகைப்படமென்று நான் சேமித்து வைத்திருந்தேன்.
இப்போதும் ஆன்லைனில் தேடினால்
அவள் முந்தானை புகைப்படம் வரைக்கும் சிக்கும். ....

பிரத்தியேகமாக நமக்குப் பிடித்ததென்று
சொல்லி விட முடியாத எந்த புகைப்படத்தையும்
எனது அலைபேசி விரும்புவதில்லை.
ஆனால், அவள் சிரிப்பது. நக்கலடிப்பதென்று
 எனக்கு பிடித்தவை நிறைய இருக்கிறது....

மரணிப்பதற்குள் சொல்லி விட நினைத்த
ஆயிரம் விருப்பங்களில் இவளொருத்தி.
வாழ்க்கை சர்வமும் கலந்து கொண்டாட்டமாய் போக
மனதைக் காதலிக்கப் பழக்குங்கள் என்பேன்.....

அவளென் திருமணத்திற்கு வந்து
நண்பனுக்கு கல்யாணமென்று என்னுடன் புகைப்படமெடுத்து
பதிவிடுவதற்கு முன் சொல்லி விட வேண்டும்.
அவளைக் காதலித்த நாட்களைப் பற்றி..!!