Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 266  (Read 525 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 266

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: May 15, 2021, 11:52:23 PM by Forum »

Offline எஸ்கே

 • Jr. Member
 • *
 • Posts: 68
 • Total likes: 145
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

காதல் என்பது எத்தனை அழகானது
ஆம்  காதல் ஆதாம் - ஏவாளில் கருவாகி
ரோமியோ - ஜூலியட்டில் உருவாகி
லைலா - மஜ்னு வில் தவழந்து
சலிம் - அனார்கலியில் பருவம் பெற்று
 ஷாஜகான் - மும்தாஜின் காதலில் காவியம் பெற்றது......

காதலித்த பின் தான்
காதலின் அனுபவம் உணர்ந்தேன்
அதிகாலை சூரியனின் அழகை ரசித்தேன்
காலை கருங்குயிலின் கானம் கேட்டேன்
சிட்டு குருவிகள் கொஞ்சிக்குலாவும்
ஓசையை கேட்டேன்......

பூக்கள் பூக்கும் அழகை ரசித்தேன்
கடிகார முட்களின் ஓசையை விரும்பினேன்
காத்திருப்பின் அவஸ்தை அனுபவித்தேன்
சுகமான வலியை பெற்றேன்
அவள் மூச்சு காற்றின் வெப்பம் உணர்ந்தேன்
அன்பின் பிணைப்பை உணர்ந்தேன்
அடடா எத்தனை பேரின்பம்
காதல் காதல் காதல் .........


கன்னியரின் கடைக்கண் பார்வை
பட்டால் மாமலையும் சிறு கடுகாம்
நான் மட்டும் எம்மாத்திரம் பெண்ணே.....
உலக காதல் காவியங்கள் எல்லாம்
காதலின் ஆழத்தை உணர்த்துகின்றன
நீ என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை
கொண்டு வந்தாய் பெண்ணே.....

என்னை நானே ரசிக்கவும் செய்தாய்
ஆதலால் பெண்ணே பிரிவை ஏற்படுத்தி விடாதே
காதல் பிரிவின் அவஸ்தை மிகவும் கொடியது.....
தாயின் வருகையை எதிர்பார்க்கும் மழலை போல
உன் வருகை எதிர்  பார்த்து ஏங்குகிறேன்.....
உன் காலடி தடத்தின் ஓசையை இசையமைத்தேன்
பெண்ணே என்னை ஏமாற்றி விடாதே.....
பிரிவின் வலி இருவருக்குமே மனதில் ஆறாத  வடு
ஆதலால் பெண்ணே காதல் செய்
காதல் செய்வோம் காதலை போற்றுவோம்....
                                                                                                         என்றும் காதலுடன்

                                                                                                                   எஸ்கே
« Last Edit: May 10, 2021, 03:38:55 PM by YesKay »
tiny image hosting
உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது -  மாவீரன் பகத் சிங்

Offline thamilan

எது நிஜம் எது பொய்
புரியவில்லை எனக்கு - முதலில்
நீ நிஜமா இல்லை பொய்யா
அதுவே புரியவில்லை எனக்கு
நீ ஒரு புரியாத மொழி
வாசிக்கவே முடியாத கவிதை

சில நேரம் நிஜமாக இருக்கிறாய்
சில நேரமோ நிழலாக இருக்கிறாய்
சில நேரம் ஒளி தரும்
நிலவென திகழ்கிறாய்
சில நேரமோ சுட்டெரிக்கும்
சூரியனாய் சுடுகிறாய்

நான் விலகிப்போனாலும்
காந்தம் போலே ஒட்டிக்கொள்கிறாய்
நான் ஓட்டவந்தால்
பட்டென்று விலகிக் கொள்கிறாய்
சில நேரம் உன் பார்வையோ
அன்புமழை பொழிகிறது
சில நேரம் உன் பார்வை
அமிலமழை பொழிகிறது

சில நேரம் என்னை குளிர்விக்கும்
மழை யாகிறாய்
சில நேரமோ என்னை சுட்டெரிக்கும்
வெயில் ஆகிறாய்
நீயே வானவில்லாகவும்
வர்ணம் காட்டுகிறாய்

உன்னிடம் வானமும் இருக்கிறது
வில்லும் இருக்கிறது
அம்புக்கு என்ன செய்வாய்
உன்னால் ஏவப்படும் அம்பு
நான் தானே

உன்னை புரிந்து கொண்டதாக நினைக்கும்
இன்னும் புரியாமல் தவிக்கும்
அப்பாவிக் காதலன் நான்
உன்னை புரிந்து கொள்ள
இந்த பிறவி போதுமா
இன்னும் பல பிறவி தேவையா
« Last Edit: May 09, 2021, 04:20:33 PM by thamilan »

Offline TiNuஅன்பே! உன்னோடு நான் இருக்கும்..
ஒவ்வொரு சுந்தர நொடிகளுமே..
உணர்வுகளுக்கு புலப்படாத...
கற்பனை காட்சிகளாவே..  இருப்பது ஏனோ..

கண்ணே.. நம் இரு மனமும் ஒரு மனமாக.. இணைந்த..
அருகருகே அன்புடனே நெருங்க விடாது...
தன்னந்தனியே தவித்து ஏங்கவிட்டு..
நம்மை பிரித்தாளும் காரணிதான் என்ன?

அன்பே....நாம் பிறந்து தவழ்ந்த.. 
தாய் மண்ணின் வேறுபாடா?...
நாம் கிழக்கு மேற்கு  ஆனாலுமே..
நம்முள் ஜீவிக்கும் உணர்வுகள் ஒன்று தானே..

தென்றலே... நம் பாசம் பகிர்ந்து கொள்ள..
துணைவரும் மொழிகளின் வேறுபாடா?
நம் பாஷைகள் வேறானாலும்.. நாம் இணைய..
அன்பெனும்..  ஓர் (காதல்)மொழி போதுமே...

அழகே.. நாம் இருவர் ஜனித்து.. வளர்ந்த..
பெருமை தரும் குலங்களின் வேறுபாடா?
நாம் உதித்த இடம் எதுவானாலும்.. நாம் வாழ.. 
சுவாசிக்கும் காற்று ஒன்று தானே...

உயிரே.. நம் வாழவில்.. நம்மை நெருங்கவிடாத.. 
இப்பிரபஞ்சத்தின்.. கலியுக காரணி கொரானாவோ...
எதற்கும் தொடக்கம் என்று ஒன்று இருந்தால்..
முடிவும் ஓர் நாள் வருமே..  நாமும் காத்திருக்கலாமே..
 
ஆருயிரே.. இப்பூமியின் மேற்பரப்பில் 
நம் பூதவுடல் இருக்கும் வரைதானே.. 
குலம்,மொழி,ஊர்,உலகம்,சுற்றம்.. எல்லாமே...
இச்சமூகத்தில்..  நம்மை பிரிக்கும் காரணிகள்...

அமுதே.. பூமிக்கு கீழ்.. நாம் செல்லும் நாள் அன்றோ .
நம்மை ஒன்றாக சேரவிடாது.. ஒன்றாக வாழவிடாது..
தடுக்கும்  இக்காரணிகள் யாவும்... எங்கே? செல்லும்...
நாமும் வாழ்ந்து காட்டலாம் எல்லாம் கடந்து... நின்று...

வா.. காதலே...  நாமும் வாழ்ந்து காட்டலாம்..எல்லாம் கடந்து..

« Last Edit: May 10, 2021, 04:32:58 PM by TiNu »

Offline இளஞ்செழியன்

பிரியமானவர்களிடம்
சண்டையிட்ட பின்னர்,
"இனி எப்போதும் பேசுவதில்லை"
என்று முகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்த பிறகு தான்,
அவர்களை தவிர்ப்பதில் உள்ள
நிஜமான திண்டாட்டம் பெருக்கெடுக்கும். அதுவரை தன்னை சமரசத்திற்கு
தயார் படுத்தாத மனம்,
உரையாடலுக்காய் ஏங்கிச் சாகும்.

அதற்குப் பின்னர் தான்...!
பேசுவதற்கான காரணங்கள் எவ்வழியிலாவது வந்து சேராதா என,
மனம் அங்கலாய்க்கிறது. தப்பித்தவறியாவது
நலம் விசாரித்துவிட மாட்டார்களா என,
மனம் தன்னை
வரிந்து கட்டிக் கொண்டு
கேள்விகளோடு நிற்கின்றது.
பிரிவதற்காக சொல்லப்பட்ட
அத்துனை காரணங்களையும்
பொய்ப்பித்து,
நியாயம் கற்பித்தாவது
"வந்து பேசிவிடு" என்பது போல
மனம் இளகி, உருகி தவிக்கிறது.

தன்னை குற்றப்படுத்திக் கொண்டு நின்றாலும் பரவாயில்லை!
நியாய தர்மங்கள் எல்லாவற்றையும்
ஒதுக்கி வைக்க,
மனம் உத்தேசிக்கிறது.
"நானும் தான்
வருந்திப் போய் கிடக்கிறேன்"
என்பதைக் கூட
வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
மீண்டும் இயல்புக்குத் திரும்ப
மனம் ஆவலுருகிறது.

எங்கோ, எப்போதோ,
யாரெல்லாமோ என,
ஏகப்பட்ட முகங்கள்
நம்மோடு பேசிக் கொண்டிருந்தாலும்,
மனம் ஏனோ
அந்தப் பிரியப்பட்ட முகத்திடம்
மட்டும் தான்,
தன்னை சரணாகதிக்கு
பழக்கி இருக்கிறது.

தனக்கு அதுவரை வாய்த்திருந்த
வேறெந்தக் குரலினாலும்
தான் முழுமை பெறவில்லை
என்பதனை,
அப்போது தான்
உணரத் துவங்குகிறது.

இருப்பின் பிடி தளர்ந்து,
தன்னை விட்டும் பிரியமானவர்கள்
தவறிச் செல்கின்ற
இடத்தை எல்லாம்
கச்சிதமாய் மனம் புரிந்து கொண்டு,
அதனை சரி செய்து கொள்ள
அன்பு எப்போதும்
தவறுவதேயில்லை.


Offline MoGiNi

நடு நிஷியின்
கரங்களுள்
உருகி வழியும்
ஒற்றை நிலவு .......
தொலைவு தொலைத்த
ஓளிக் கற்றைகள்
நினைவு புணர்ந்து
வழிகிறது விழிகளில் ...

சிறு தென்றல்
மெல் இசை
சுடா நிலவு
யாரோ இருவரின்
உரையாடல்
உடல் தழுவும்
முதல் துளி நீர்....
இவையெல்லாம்
நீயாகி நகர்கிறாய்..

நிச்சயம்ற்று கனக்கிறது
நெஞ்சம்..
கடந்துவிட்ட உன்னிடம்
காதல் விண்ணப்பம்
சாத்தியமற்றதாகவே
இருக்கிறது..

நகரும் மேகத்துள்
ஒழிந்து ஒடும் நிலவாக
உன்னை காண்கிறது
நெஞ்சம்..
நிலவு தேடும்
சிறுபிள்ளையென
உள்ளம்..

பிதற்றல்தான்..
அது
உனைச்சேர
சாத்தியமற்றது..

விண்ணப்பம்
திரும்பிவிடாதே
தொலைத்தது
தொலைந்ததாகவே
இருக்கட்டும்..

மாறிவிடாதேயென
உன்னிடமும்
மாறிவிடக்கூடாதென
என்னிடமும்
கேட்கும் யாசகம் இது..

கனவுகளோடுமட்டும்
உறவாடு
அதிலும்
தோள்சாய ஒரு
கணம்மட்டும்...

இந்த இரவின் நகர்வினை
இன்னும் நிரப்புகிராய்..
« Last Edit: May 11, 2021, 04:44:57 PM by MoGiNi »

Offline AgNi

 • Jr. Member
 • *
 • Posts: 95
 • Total likes: 406
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !

அவன் .....

ஏதோதோ அர்த்தமற்று  பேசுகின்றாய்..
ஏளனம் பேசி விலகுகின்றாய்...
இதயத்தை புரிந்தும்  புரியாதவளாய் 
இடையில் புகுந்து உளறுகின்றாய்  ..   
உன்னிடம் நெருங்கும் போதெல்லாம்  ...
உன்னை நீயே ஏன் தாழ்த்தி கொள்கின்றாய்
காரணம் இன்றி சண்டையிட்டு
காதலை மறந்து பேசுகிறாய்
வார்த்தையின் வீச்சில் வந்த
வாழ்க்கையை வீசி போகின்றாய் ...
நேசத்தின் பாதையை மாற்றி
பாசத்தை புறக்கணிக்கின்றாய் ...
போலி கோபத்தில் தோற்றுவித்து 
தோழனிடம் தோற்று போய்
பொய் கோபம் காட்டி நிற்கின்றாய்...

அவள்...

உன்னிடம் காட்டிய அன்பை விடுத்து
உதறி  போக முயல்கிறாய் ...
விரும்பும் உள்ளம் தெரிந்து  இருந்தும்
விலகி போய் நிற்கின்றாய் ...
நெருங்கி வர நினைக்கும் போதெல்லாம்
நெருப்பாய் வார்த்தை பொழிகின்றாய்
அன்பை கயிறு கட்ட அருகே வரும்போது
அதை அறுக்க பேச்சுரிவாளை வீசுகின்றாய்...
தன்மானத்தை விட்டு கொடுக்காமல்
தன்மையில் தட்டு தடுமாறுகின்றேன்
உண்மைநேசம்  உறங்கும் நேரம்
பொய்வார்த்தைகளால் துவேஷிக்கிறாய்...
வீசும் கேள்வி  கணைகளால் விழி பிதுங்கி
நிராயுதப்பாணியாய்  நிராசையுடன்   
நிர்கதியாய் விக்கித்து நிற்கின்றேன்  ...

அவை ....

நாங்கள் நிழல்கள் அல்ல ...
உங்கள் நிஜங்களின் பிம்பங்கள் ...
உள்ளேயே உங்கள் இதயத்தை கேளுங்கள்
வெளியே தெரியும்  பூசல்கள் போலிகள் ...
வார்த்தையாடும் நேரமும் ...
வாஞ்சை ஒலிப்பதை காணுங்கள்  ...
ஆர்ப்பற்றிக்கும் சண்டையை   தள்ளி வைத்து ..
அகத்தை உற்று  கேளுங்கள் ...
அன்பின் ஊற்றில் உங்கள்
அகங்காரங்கள் எரிவதை காணுங்கள் ...
நேசங்கள் ஒரு போதும் மாயமாவதில்லை ...
நேரங்கள் ஒதுக்கி பேசினால்
தீராத பிரச்னையும்   இல்லை   ....
நிழல்களும் நிஜங்கள் ஆகும் ஓர் நாள் ..!


Offline Mr Perfect

 • Newbie
 • *
 • Posts: 19
 • Total likes: 69
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum


காதலே! அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம்
உன்னைக் கண்டப்பின் உணர்ந்தேன்!
 
உன் மூச்சுக்காற்றில்
என் உயிரும் இளைப்பாறுதடி!

உன் கண்களின் ஒளியே என் வாழ்க்கை
பாதையில் வெளிச்சமடி!

உன் கரங்களை பிடிக்கும் சூட்டினிலே
என் தேகம் குளிர்காயுமடி!

உறங்க நினைக்கும் என் இமைகளை
மூட விடாமல் செய்கிறது உன் நினைவுகள்!

இடைவெளி நீண்டாலும் என் காதில்
கேட்கிறது உன் மௌன கீதங்கள்!

என் கவலைகளை  போக்கும் மருந்தாக
இருப்பது உன் ஞாபகங்கள்!

உன் புண்ணகை கண்டு இந்த
உலகமே அழகாகத் தோன்றுதே !

மேகங்களின் கருமைகூட  உன்
கூந்தலின் நிறம் கண்டு வியக்குதே!

மழையை கூட நேசிக்கிறேன் உனக்காக
நான் விடும் கண்ணீரை நினைவூட்டுவதால்!

என் இதயத்தை கருவரையாக்கி உன்னை
சுமக்கிறேன் என் காதலியாய் எனைச்சேர!

இரவும் பகலும் ஒன்றாய் தோன்றுகிறது
நீ என் அருகில் இல்லையெனில்!

உன் மௌனம் தருகின்ற வலியை உணர முடிந்த எனக்கு
அதை உன்னிடம் உணர்த்த முடியவில்லை!

என் வலிகளை ஏன் நீ அறியவில்லை
என் இதயத்தை திருடிய பிறகும்!

நம் தேகங்கள் பிரிந்தாலும் நினைவுகளால்
இணைந்தே இருப்போம் இருப்போம் காதலியே!

உன்னை நினைத்து வாழும்
இந்த தனிமையும் எனக்கு சுகமே!« Last Edit: May 11, 2021, 07:02:43 PM by Mr Perfect »

Offline SweeTie

அவன்
காவியத்தின் தலைவி  என்
ஓவியத்தின் நாயகி அவள்
இதய வீணையின்   சுருதி   
என்னை இயக்கும் மாயசக்தி

சண்டையும்  செய்வாள் 
சமரசமும்   புரிவாள்    ..
கொஞ்சி  கொஞ்சி  பேசி  என்னை   
கெஞ்சவும்  வைப்பாள் 
என் பிரியசகி

அவள்
கதையின் நவரச  நாயகன் 
என் உலக மகா நடிகன் 
பாசத்தை   மறைத்து   வேஷம் போடும்
பகல் கொள்ளைத்  திருடன் 

முத்தமழை   பொழிவான்
சொட்ட சொட்ட   ரசிப்பான்
விட்டு விட்டு  விலகிப் போனால்
காந்தம்போல் ஒட்டி  ஒட்டி  வருவான் 

அவன் நிழல்
என் நிழலாய் அவளும்
அவள் நிழலாய்  நானும்
ஆண்டுகள்   பல கடந்து   
அன்பெனும்  வெள்ளத்தில் 
மூழ்குவதும் ......

பிரிவதுபோல்  இணைவதும்
இணைவது போல் பிரிதலும்
காதலில்  வரும்  ஊடலேயன்றி 
 ஒருபோதும்  நிஜமில்லையே

அவள் நிழல்
நிஜம்கள் பிரிந்தாலும் 
நிழல்கள்  பிரிவதில்லை
இதழ்கள் பிரிந்தாலும் 
இதயங்கள்  பிரிவதில்லை 

பிரியங்களால்  வந்த  நெருக்கம்
நெருக்கங்களால் வந்த பிரிவு
கொடுமை   இந்த காதல் 
கிட்ட போனால்  எட்டி நிற்கிறது
எட்டி நின்றாள் கட்டி அணைக்கிறது
மீளாத்துயர்   இந்த காதல்.....
 


 
« Last Edit: May 12, 2021, 01:30:01 AM by SweeTie »