பனி வீசும் அதிகாலையில்
உன்னுடன்தான் விழிகின்றேன் !
உன்னுடனே பல் துலக்கி ..
உனக்கு பிடித்த உடை அணிகிறேன் !
உனக்கு விருப்பானவற்றை..
உன்னுடனே சமைக்கிறேன் !
உனக்கு ஆசையாய் பரிமாறி
உன்னுடனே உண்ணுகிறேன் !
உன்னுடனே வண்டியில் ஏறி
அலுவகத்திற்கு பயணிக்கிறேன் !
உன்னுடன் பேசிக்கொண்டே
உன்னுடன் பணி புரிகின்றேன்
உன்னுடனே உலா வருகின்றேன் !
உன்னுடனே திரும்புகிறேன் !
உன்னுடனே நேரம் கழிக்கிறேன் !
உன்னுடனே உறங்குகின்றேன் !
எல்லாமே உன்னுடந்தான் !
எல்லாமே நினைவுகளில்தான் !