Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 28/10/2013 (28th Oct)  (Read 1246 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் -  28/10/2013


மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர் கள் உதவுவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள். 


மிதுனம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு, புதிய யோசனைகள் பிறக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.   


கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்கு வீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவு கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.


சிம்மம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்
பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.


துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நிம்மதியான நாள்.


தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங் கள். உங்களின் தனித் தன்மையையே பின்பற்றுவது நல்லது. திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். போராட்டமான நாள்.


மகரம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்-.


மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.