Author Topic: உடம்புக்கு,வைட்டமின் டி மிகவும்முக்கியம்என்று சொல்வதற்கு காரணம் என்ன  (Read 1106 times)

Offline kanmani

உடம்புக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியம் என்று சொல்வதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?

வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று; அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும், அனைத்து இனத்தினரிடையேயும் பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நாம் இங்கே வைட்டமின் டி-யின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கவுள்ளோம்.

கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு, நோய்களை எதிர்த்துப் போராடும் திறனில், வைட்டமின் டி சத்து முதலில் கூறப்பட்டதைக் காட்டிலும், மிகக் கணிசமான பங்கை வகிப்பதாகக் கூறுகிறது. வைட்டமின் டி குறைபாடு பல்வேறு கடுமையான நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு மிக எளிதாக ஆட்படுத்திவிடும். பதிவு செய்யப்பட்ட உணவியலரும், ஆரோக்கியத்தைப் பற்றி தன் ப்ளாக்கில் எழுதி வருபவருமான ஆகன்ஷா ஜலானி, வைட்டமின் டி-யின் முக்கியத்துவத்தைப் பற்றி அழகாக விளக்கியுள்ளார்.

வைட்டமின் டி என்றால் என்ன?

வைட்டமின் டி என்பது கொழுப்புச் சத்தில் கரையக்கூடிய வைட்டமின் வகையைச் சார்ந்தது. இந்த கலப்பானது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படத்தக்கூடியதாகும். மனிதர்களைப் பொறுத்தவரை, இந்த வைட்டமின் வகையில் வைட்டமின் டி3 மற்றும் வைட்டமின் டி2 ஆகியவை மிக முக்கியக்கூறுகளாகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின் டி-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன் காரணமாக, வைட்டமின் டி ‘சூரிய ஒளி வைட்டமின்' என்றும் குறிப்பிடப்படுகிறது.

நோய் தடுப்பு

வைட்டமின் டி உடலில் அபரிமிதமாக இருந்தால், அது புற்றுநோய், கணைய நோய், எலும்புருக்கி நோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய், காசநோய், குளிர்காய்ச்சல், உடல் பருமன், முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களை தடுக்கக்கூடியதாகும்.

குளிர்காய்ச்சலுக்கு எதிரானது

வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, ஜலதோஷம், குளிர் காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புக் கவசத்தை வழங்கக்கூடியதாகும்.

இதர பயன்கள்

வைட்டமின் டி-யை சரியான அளவில் உட்கொண்டு வந்தால், கீழே தவறி விழுவது, எலும்பு முறிவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முதலாம் வகை சர்க்கரை நோய் போன்றவற்றால் ஏற்படும் காயங்களினால் உண்டாகக்கூடிய அபாயங்களை குறைக்கும். மேலும் உடலில் உண்டாகும் புண்களை விரைவில் ஆற்றக்கூடிய சக்தியும் கொண்டது வைட்டமின் டி.

அறிகுறிகள்

மன அழுத்தம், முதுகு வலி, உடல் பருமன், எலும்புருக்கி நோய், மல்ட்டிபிள் ஸெலரோசிஸ், ஈறு நோய், மாதவிடாய்க்கு முந்தைய பிணி, மூச்சிரைப்பு நோய், மார்புச் சளி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் தாம்.

பால் பொருட்கள் மற்றும் தானிய வகைகள்

வைட்டமின் டி-யின் பெரும்பாலான மூலாதாரங்கள் கால்நடைகளின் இறைச்சிகள் தாம். எனவே இவற்றிற்கு உணவுப் பாதுகாப்பு வளையம் மிகவும் அவசியமாகும். பால் மற்றும் பால் பொருட்கள், காலை உணவுக்கான தானிய வகைகள் போன்றவை பொதுவாக உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.

மீன் வகைகள்

கொழுப்பு நிறைந்த மீன் வகைகளான சூரை, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் வஞ்சரம் போன்றவை வைட்டமின் டி-யின் சிறந்த மூலாதாரங்களாகும். அதிலும் 100 கிராம் மீன் உட்கொண்டால், தினப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதாக பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் டி அளவில் சுமார் 80% வரை கிடைத்துவிடும்.

முட்டை, ஈரல் மற்றும் சீஸ்

முட்டையின் மஞ்சள் கரு, மாட்டு ஈரல் மற்றும் சுவிஸ் சீஸ் போன்றவற்றிலும் வைட்டமின் டி மிதமான அளவுகளில் காணப்படுகிறது.