Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 02/01/2014 (Jan 2nd)  (Read 864 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 02/01/2014 (Jan 2nd)


மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவு பெருகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


ரிஷபம்: மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் 2,3 முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்: சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலை 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். உங்கள் பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவர். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்று வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.



துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீங்கள் மற்றவருக்கு கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமை கூடும். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.



தனுசு: மாலை 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். திட்டுமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். மாலை 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள்.


மீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.