Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 01/01/2015 (Jan 01st)  (Read 1207 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மேஷம்

மதியம் 1.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 

ரிஷபம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமாகும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மதியம் 1.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 

மிதுனம்

வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். எல்லோரும் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை செய்துக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 

கடகம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 

சிம்மம்

இன்றையதினம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மையும் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 

கன்னி

மதியம் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தங்கும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 

துலாம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். புதியவரின் அறிமுகம் கிடைக்கும். தாய்வழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். மதியம் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 

விருச்சிகம்

உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கறாராகவும், கண்டிப்பாகவும் பேசுவதை தவிர்த்து கனிவாகப் பேசுவீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 

தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 

மகரம்

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். புது வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே
 
 

கும்பம்

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்
 
 

மீனம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா