Author Topic: நெஞ்சிலே ஓர் கனல்  (Read 4709 times)

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
நெஞ்சிலே ஓர் கனல்
« on: November 01, 2020, 12:38:57 PM »

                                         கனல் :1

அந்த பரபரப்பான சாலையில் அந்த உயர்ந்த கட்டிடம் பிரமாண்டமாய் அமர்ந்து இருந்தது .நான்கு மாடிகளில் பலதரபட்ட அலுவலகங்கள் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டு இருக்க அதன் வாசலில் ஒரு BMW கார் சரக் என வந்து நின்றது .அதில் இருந்து கோட் சூட் உடன் இறங்கினான் விக்ரம்.சதுர முகத்தில் அறிவும் அழகும் ஒரு சூரியனை போல   பிரகாசிக்க,உயரமாய் கம்பீரமாய்   கையில் brief  case  உடன்  ஒரு வேக நடையில் லிப்ட் அருகே சென்று பட்டன் அமர்த்தினான்.
            அது ஏற்கனவே பத்து நபர்களை கொண்டு நிரம்பி வழிய ..லிஃப்ட் ஆபரேட்டர் சங்கடத்துடன் உள்ளெ உள்ளவர்களையும் வெளியே நின்றிருந்த விக்ரமையும் மாற்றி மாற்றி பார்த்தான் .ஆண்களும் பெண்களுமாய் இருந்த கூட்டத்தில் யாரும் நகர்வதாய் இல்லை என்று தெரிந்து தோள்களை குலுக்கியவாறு "இட்ஸ் ஓகே " என்று மாடிப்படிகளை நோக்கி சென்றான் .
               லிப்ட் ஆபரேட்டர் "சார் நீங்க இருங்க" என்றவன் முன்னே நின்று இருந்த எலாம் பெண்ணிடம் ,"மேடம் ! சார் இங்க பெரிய கம்பெனி MD ..நீங்க கொஞ்சம் வெளியே" என்று  இழுத்தான். அவள் தன்  அழகிய  கண்களை விரித்து விக்ரமை கொஞ்சம் உற்று பார்த்து ..ஒரு கம்பனிக்கு தான  MD .? இந்த Building கு   owner இல்லையே .? என்று கோபத்துடன் கேட்டாள்.அவமானமாக இருந்தது விக்ரம் கு ..ஒரு சிறு பெண் தன்னை இகழ்ந்து பேசி விட்டாலே என்று . போதாக்குறைக்கு அங்கு  இருந்தவர்கள் அவள் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினர்..
           விக்ரம் ஒரு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு ...மூச்சு விட்டு ..மறுபடியும்   தோள்களை குலுக்கி கொண்டு ..,"No problem  " என்று பட பட வென படிக்கட்டுகளை தாவி ஏறி சென்றான் .
           லிஃப்ட்டில் அனைவரும் பாராட்டுவது போல பார்க்க லிஃப்ட் man அவளை ஏற இறங்க பார்த்தான்.."நீங்க புதுசா  இங்க "என்று கேட்டான் ..அவள் ஆமாம் என்றாள்.  "எங்க வந்தீங்க" என்று கேட்டான் ஒரு மாதிரி குரலில் .அவள் கேள்விக்குறியுடன்  .".இங்க விக்ரம் enterprisesku interview  கு வந்தேன்" என்றாள்.
            அவன் ஏளனத்துடன் சிரித்து...நான்காம் மாடி வந்த லிஃப்ட் ஐ திறந்து வழி காட்டினான் ..அந்த ஆபிஸ்த்தான்..போங்க இன்னிக்கு வேலை கிடைச்சுடும் " என்றான் .  அவள் குழப்பத்துடன் அந்த அலுவலகம் உள்ளே சென்றாள்.அங்கு நிறைய பேர் இன்டெர்வியூக்கு வந்து இருந்தனர்
                    அங்கே அலுவலக ரெசிப்டினிஸ்ட்   அவளை அழைத்தாள்..யு came  for இன்டெர்வியூ ? என்று வினவ "எஸ் மாம் " என்று தலை ஆட்டினாள் .யுவர் name ப்ளீஸ் என்று பைலை பார்த்துக்கொண்டே கேட்க, இவள் "அம்  மிஸ்.மாலினி " என்க குறித்து கொண்டு "இன்னும் MD வரவில்லை ..யு ப்ளீஸ்வெயிட் தேர்" என்று அங்கு அமர்ந்து இருந்தவர்களிடம் காட்டினாள் . 
                மாலினி மெதுவாக சென்று ஒரு இருக்கையில் அமர போக அனைவரும் பரபர என எழுந்து "goodmorning  சார்" என்று கலவையாக கூறினர். அனைவரும் வாயிலை நோக்க அலுவலக கதவை திறந்து கொண்டு புயல் போல மூச்சு இறைக்க உள்ளே நுழைந்த விக்ரமை கண்டவள் விதிர் விதிர்த்து போனாள் மாலினி .       
                                                                 (கனல் தொடர்ந்து எரியும் )
« Last Edit: November 01, 2020, 12:45:43 PM by AgNi »

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #1 on: November 01, 2020, 01:54:02 PM »
Nice start to the story. nalla thariyamana ponnu antha malini . waiting for ur next part.

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #2 on: November 01, 2020, 05:52:13 PM »
கதையின் தொடக்கமே மோதலில் தொடங்குகிறது. என்னை பொறுத்தமட்டில் மாலினி லிப்டில் பேசியது சரிதான். ஒரு அலுவலகத்தின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் சரி அல்லது நாட்டின் உயர் பொறுப்பில் இருந்தாலும் சரி முதலில் வந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை. தன்னுடய அதிகாரத்தை கொண்டு தான் நினைத்ததை சாதித்து கொள்வது என்பது குறுக்கு வழியாகவே கருதுகிறேன். விக்ரம் நிச்சயம் அதிகாரத்தை பயன் படுத்துபவராக எனக்கு தெரியவில்லை. அடுத்த பகுதியில் அது தெரிந்து விடும். தொடர்ந்து இக்கதையில் பயணிக்க வாழ்த்துக்கள் அக்கினி.
« Last Edit: November 02, 2020, 12:26:48 PM by Darth Vader »

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #3 on: November 01, 2020, 09:45:07 PM »
அருமையான தொடக்கம் அக்னி சிஸ். பொதுவாவே காதல் எல்லம் மோதலில் தொடங்கும்னு சொல்லுவாங்களே, ஒருவேளை இங்கேயும் அப்படி நடக்க வாய்ப்பிருக்குமோ. Anyways all the best for your story sis. Expecting the next episode soon. Also, கதையுடைய தலைப்பு ரொம்பவே அழகு அதுவே கதையை படிக்க தூண்டுது சிஸ்

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #4 on: November 02, 2020, 07:10:12 AM »
super starting agni sis.

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #5 on: November 02, 2020, 09:03:06 PM »


Ninja dear and star beby ! Thank you for your encouragements chellams . :-* :-*

Darth Vadar ! unga aarudam sarithan pola irukirathu ! Adutha Chapter la vidai vanthu iruku ! padinga ..Thanks for your comments ! :D

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #6 on: November 02, 2020, 09:04:53 PM »


கனல் -2

மாலினி ஒரே ஒரு கணம்தான் அதிர்ந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும் .
ஏன் எனில் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் அதிபன் வெறும் லிஃப்ட்டில் இடம் கொடுக்காமைக்காக ஒரு நல்ல ஊழியரை  இழப்பானா என்ன ? என்று அவள் தன்னம்பிக்கை முன் நின்றது .அப்படியே அவன் வேண்டாம் என்றாலும் இத்தனை சிறுபுத்தி கொண்டவனிடம் அவள் வேலை பார்க்காமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றியது . எனவே தைரியமாகவே அவனை எதிர் கொள்ள தயார் ஆனாள்.
                   அவள் பெயரை அழைக்க பட்டதும் விக்ரமனின் அறைக்குள் அவளின் பைலை ஐ நெஞ்சோடு அணைத்தபடி   நுழைந்தாள் மாலினி .அவளின் சிறு தயக்கத்தையும் நெஞ்சின் படபடப்பையும் மறைக்க தான் அவ்வாறு சென்றாளோ?
             "goodmorning  சார்     " என்று  சற்று மென்குரலில் கூறினாள்.விக்ரம்  அவளை ஒரு பார்வை பார்த்தவாறு " எஸ்   மிஸ் .மாலினி யுவர் பைல்" என்று கை நீட்ட , அவன் பார்வையின் பொருள் அறியாது  தயக்கத்துடன் அவள் கொடுத்தாள்.
         " ஓஹ்! MBA  freshar ? " என்று வினவ , மாலினி ," நோ சார் .ஏற்கனவே ஒரு  கம்பெனில 6   months வேலை பார்த்து இருக்கேன் " என்று பெருமையாக சொன்னாள். ஆனால் அவன் ஒரு இகழ்ச்சி பார்வை பார்த்து ,"அப்பறம் ஏன் மேடம்  அங்க விட்டு இங்க வந்தீங்க ? " என்று கேட்க ..அவள் முறைத்தாள் .
" அதை பற்றி உங்களுக்கு என்ன ? என்று  வாய்க்குள் முணுமுணுத்தவள் , எதோ சொல்ல வாய் திறந்தாள் . ஆனால் ..அதற்குள் விக்ரம் ,"ஹலோ ..இங்க புதுசா வேளைக்கு சேர வேண்டும் என்றால் , உங்க  ஒர்க் ஹிஸ்டரி நாங்க தெரிந்து கொள்ளதான் வேணும் மிஸ்.மாலினி " என்றான் காட்டமாக .
             அவன் கூற்று அறிந்து விழிகள் விரிய ," சார் , அப்போ எனக்கு வேலை கிடைச்சாச்சா ? என்று மகிழ்வுடன் கேட்டாள். விக்ரம் , புருவம் நெரித்து வித்தியாசமாக அவளை பார்த்தான் . 
" உங்களை நான் ஏன்வேலைக்கு  எடுத்து கொள்ள வேண்டும் ? ஏன் எடுத்து கொள்ள தேவை இல்லை என்று நீங்கள் சொன்னால், யோசிக்கலாம் மிஸ்.மாலினி " என்றான் பந்தாவாக .
             மாலினி நிமிர்ந்து நின்று நிதானமாக அவனை கூர்ந்து பார்த்து கொண்டே  சொன்னாள்.
" சார் ! என்னுடைய சேவை உண்மையிலும் உங்களுக்கு தேவையாய் இருக்கலாம் .  ஒரு நல்ல ஊழியரை  வேளைக்கு அமர்த்திய பெருமை உங்களை சேரும் ! அண்ட்  ஒரு சிறு ஏமாற்றத்துக்காக வேலை தர முடியாது என்று கூறும் அளவுக்கு இந்த நிறுவனம் தாழ்ந்து போகாது என்றும் நெனைக்கிறேன் "
              விக்ரம் உதடுகளில் இப்போது புன்னகை அமர்ந்து இருந்தது . " வாவ் ! பிரில்லியண்ட் ரிப்ளை தான்" என்றவன் ' ஓகே மிஸ் . மாலினி ...நீங்கள் கூறியது உண்மைதான் ..இந்த நிறுவனமும் தாழ்ந்து போகாது . இந்த விக்ரமனும் கூட .." என்று சேர்த்து சொன்னான் .அவளிடம் பைலை நீட்டியவாறு ,"..வெளியே   appointment வாங்கி கொண்டு , சீக்கிரம் வேலைக்கு சேருங்கள் " என்றான் மெலிதான புன்னகையுடன் .
             மாலினி எதிர் பார்த்ததுதான் என்றாலும் இன்பமாய் அதிர்ந்தாள் .அவன் வேலைக்கு சேரு என்றதாலா இல்லை அவன் அவளை பார்த்து புன்னகை வீசியதாலா என்று புரியாமல் .
                                                                                            (கனல் எரியும் )   
                                                                   
« Last Edit: November 02, 2020, 09:07:48 PM by AgNi »

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #7 on: November 03, 2020, 01:21:10 AM »
Nice chapter . starting la mothlil aramichi irunthalum and ponnoda pechu thiramai and thairiyam nala job kedachiruchi Next anda rendu perukum naduvula loves ah

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #8 on: November 03, 2020, 10:55:14 AM »
நான் எதிர் பார்த்ததை போன்றே விக்ரம் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இது அவரின் நல்ல இயல்பை தெளிவு படுத்துகிறது. தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் அக்கினி.

Offline SweeTie

Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #9 on: November 04, 2020, 06:00:33 AM »
 Malini ponra penkalthan  nam naatuku thevai   Agni.   Kandipa Vikram ku loves vanthudum.   vaalthukal

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #10 on: November 04, 2020, 02:01:59 PM »


Nandri Drago ! DV ! and Sweetie sis !


Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #11 on: November 04, 2020, 02:07:36 PM »


கனல் :3                                     

                 மாலினி ஒரு சிறு நெருடலுடன் பைலை வாங்கி கொண்டு கதவு புறம் திரும்ப ," ஸ்வர்ண மாலினி  .. ஒரு வழியா என்கிட்ட வந்திட்டயா ? " என்றக்குரல் அவள் காதுக்குள் ஒலித்தது . திடுக்கிட்டு திரும்பி விக்ரமை பார்க்க அவனோ எதோ பைலை பார்த்துக்கொண்டு இருந்தான் .
        அவள்.." சார்  கூப்பிட்டங்களா?" என்று கேட்க, அவன்   தோள்களை குலுக்கி "இல்லையே மிஸ் .மாலினி " என்று  தலை ஆட்டினான் . அவன் குரல் போலத்தானே இருந்தது என்று குழம்பியவாறு வெளியே வந்தாள் மாலினி .     
       அந்த கட்டட காம்பௌண்ட்  அருகே நின்று இருந்த தன் deo  வண்டியை ஸ்டார்ட் செய்து செலுத்தினாள்.   ஒரு சிக்னல்  வந்ததும் வண்டியை ஆப் செய்துவிட்டு வேடிக்கை பார்க்க , ஒரு பிச்சைக்காரன் அவள் அருகே வந்து டப்பாவை குலுக்கி காசு கேட்டான் .அவள்  அவன் நகர்ந்தாள் போதும் என்று ஹேண்ட் பேக்கில் இருந்து 5 ரூபாய்  நாணயம் எடுத்து அவன் பாத்திரத்தில் போட்டாள் . பிச்சைக்காரனோ போகாமல் ," தாயீ ! அதே வள்ளல் குணமிருக்கு இன்னும் அப்படியே ...மகராசி  ..நல்ல இரு ! என்று வாழ்த்தி விட்டு போனான் .
        "அதே வள்ளல் அ ...அவனை இப்போதுதானே பார்க்கிறாள் ..! என்ன சொல்கிறான் இவன் " என்று நினைத்தவாறு சிஃனலில் இருந்து வண்டியை எடுத்து சிட்டாய் பறந்து வீடு வந்து சேர்ந்தாள்.
             அந்த அவெனியூ முழுக்க மரங்கள் நிரம்பி குளுமையை பரப்பி இருக்க , அந்த சிறு ரோ ஹவுஸ் தெருவில் நுழைந்து ஒரு கீழ் வீட்டின் கேட் ஐ நிறைந்து வண்டியை பார்க் செய்து விட்டு முதல் மாடியில் இருக்கும் அவள் வீட்டுக்குள், அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டு  சென்றாள். அம்மா அவளை   எதிர் கொண்டு , " என்னமா வேலை கிடைச்சுதா?" என்று சிறு கவலையுடன்  கேட்டாள்.நடுத்தர வயதிலும் அழகும் மங்களகரமும் சேர நின்ற அகிலா வை கட்டி கொண்டு , " இந்த இளவரசிக்கு வேலை தராதவர்களும் உண்டோ ? மஹாராணி ? " என்று கம்பீரமாய் இடுப்பில் கை வைத்து கேட்க , " அகிலா தலையில் தட்டியவாறு ," அட என் மகளே ..இளவரசிக்கு எதுக்குடி வேலை? " என்றாள்.
          தலையை தடவியவாறு , " ஆமாம் லே " என்று சிரித்தாள்." வேலை கிடைச்ருருசுமா ...ஆனா ...ஒரு குழப்பம் " என்று கன்னத்தில் கை வைத்து   யோசனை போல அபிநய்யித்தாள்.
        " ஏன் அந்த கம்பெனில சலரி  கொடுப்பங்களா னு தான அக்கா  ?   " என்று கேட்டவாறு அறையில் இருந்து வெளியே வந்தாள் தாரிணி . மாலினி  அவள் காதை திருகி  , " ஹே வாலு காலேஜ் போகலையா ? " என்று கேட்க தாரிணி முறைத்தாள் ." உன்ன எல்லாம் எவன் வேலைக்கு சேர்த்திட்டனோ ?  அம்மா அந்த கம்பெனி உறுபடும்னு நெனைக்கிரே ? " என்று  அகிலாவிடம் திரும்பி பாவம் போல கேட்டாள் .மாலினி மேலும் அவளை அடிக்க கை ஒங்க , " ஹலோ மேடம் ...கொரனல எங்களுக்கு லீவு ..பட் உங்களுக்கு கிடையாது ..இதுகூட நியாபகம் இல்லா..? நீ எல்லாம் ஒரு ..." என்று இழுத்தாள்.
               மாலினி சட் என்று முகம்மாறி ஆமா என்று முணுமுணுத்து பேசாமல் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அகிலாவும் தாரிணியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ..இன்னேரம் கலவரம் படுத்தி இருப்பாள் ..என்ன அமைதியாக உள்ளே போய் விட்டாள் என்று.       
                      ஹேண்ட் பாக்  ஐ டேபிளில் வைத்து விட்டு யோசனையில் மூழ்கி விட்டாள் . அந்த குரல் கேட்டதே அது நிஜம் தானா? அல்லது பிரம்மையா? சிஃனலில் அந்த பிச்சைக்காரன் ஏதோ பல வருடம்  பார்த்து பழகி விட்டவன் போல சொன்னானே ..? ஏன் ?என்று நெற்றியை தேய்த்து விட்டு கொண்டாள் மாலினி . அப்போது "ஸ்வர்ணமாலினி ..." என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது .சுற்றும் முற்றும் பார்த்தாள் பயத்துடன்  யார் அழைத்து என்று.
              அவள் காது அருகே  ரகசியம் போல " ஏன் பயப்படுகிறாய்..ஸ்வர்ணா?" என்று மீண்டும் ஒலிக்க," அம்மாஆஆ " என்று சத்தம் போட்டாள் பதட்டத்துடன் அந்த ஸ்வர்ணமாலினி .
                                               (கனல்  எரியும் )


Offline இணையத்தமிழன்

Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #12 on: November 04, 2020, 06:22:42 PM »
 ;D arumaiya iruku agni story  ::) :-[ tharaniku konjam neriya dialog kodunga agni na tharani army aramichidalam  ;)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 188
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #13 on: November 07, 2020, 05:45:54 PM »
Nice Start Agni Sister... Vaalththukkal

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #14 on: November 09, 2020, 09:09:54 PM »


Thanku  BB ! Koduthutaa pochu !  :P .Thanku (F) .

Mikka Nandri Tejasvi ma ! :-*