Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 743 times)

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 61
« Reply #60 on: July 17, 2021, 05:45:44 PM »டின்களில் போதை?


குடிமக்களை குஷிப்படுத்த 1935ஆம் ஆண்டு Gottfried Krueger Brewing Company என்ற அமெரிக்கன் பீர் கம்பெனி முதன்முதலில் டின்களில் பீரை வெளியிட்டது. 1909ஆம் ஆண்டு முதல் டின்களின் பீரை அடைத்து விற்க முயற்சிகள் நடந்துகொண்டே இருந்தன. கார்பனேட்டட் பீரின் அதிக அழுத்தம் காரணமாக, டின்கள் அடிக்கடி வெடித்து டின்பீர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருந்தன. Gottfried Krueger பீர் கம்பெனி இந்த பிரச்னைக்கு keg-lining என்ற டெக்னிக் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தது. 19ஆம் நூற்றாண்டு முதல் பீர் தயாரிக்கும் தொழிலில் இருந்த இந்தக்கம்பெனி கிட்டத்தட்ட 24 வருட முயற்சிக்குப் பின் 1933ஆம் வருடம் டின் பீயர் தயாரிப்பதில் வெற்றிபெற்றது.


எதிர்பார்த்தது மாதிரியே, அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே மாஸ் வெற்றிபெற்றது டின் பியர் கான்செப்ட். இரண்டாம் உலகப்போரின்போது டின்களில் பியர் விற்கப்படுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது. டின் தயாரிக்கத் தேவைப்பட்ட பொருட்கள் உலகப்போருக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கவும் உபயோகப்படுத்தப்பட்டதே காரணம்


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 62
« Reply #61 on: July 18, 2021, 12:27:51 PM »


காற்றுக்கு விலை என்ன?


Pringles என்ற உருளைக்கிழங்கு வருவல் டப்பாவை கடைகளில் பார்த்திருப்போம். அந்த சிப்ஸையும் அதன் டப்பாவையும் வடிவமைத்த  Fredric J Baur இறந்த பிறகு, அவரின் அஸ்தியின் ஒரு பகுதி Pringles  டப்பா ஒன்றில் அடைக்கப்பட்டு அவர் உடலின் மற்ற பகுதிகளுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. 90வது வயதில் இறந்த Fredric, கடைசி ஆசையாக தன் வாரிசுகளிடம் கேட்டதாலேயே இப்படிச் செய்யப்பட்டது.


Pringles சிப்ஸில் 42 சதவீதம் மட்டுமே உருளைக்கிழங்கு இருப்பதாகச் சொல்லி அமெரிக்க அரசு Pringlesஐ உருளைக்கிழங்கு வருவல் என்று அழைக்கக்கூடாதென ஆர்டர் போட்டிருக்கிறது.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 63
« Reply #62 on: July 19, 2021, 02:40:43 PM »


தங்கச்சிலை?


1955ஆம் ஆண்டு Phra Phuttha Maha Suwan Patimakon என்ற 13ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. ப்ளாஸ்டரால்(plaster) செய்யப்பட்டிருந்த அந்தச் சிலையை நகர்த்தியபோது எடை அதிகமாக இருந்ததால் தவறி கீழே விழுந்து உடைந்துபோனது. உடைந்துபோனது மேற்பக்கமிருந்த ப்ளாஸ்டர் மட்டும்தான். உள்ளே ஒளித்துவைக்கப்பட்டிருந்தது முழுவதும் தங்கத்தால் ஆன புத்தர் சிலை. தற்போதைய நிலவரப்படி சிலை செய்யப்பட்டிருந்த தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 1/4 பில்லியன்(மில்லியன் அல்ல) டாலர்கள்.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 64
« Reply #63 on: July 20, 2021, 01:14:28 PM »


சாக்லெட் மருந்து?


சாக்லெட்டில் இருக்கும் Theobromine என்ற வேதிப்பொருளும் காஃபியில் இருக்கும் Caffeineனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இதில் சாக்லெட்டில் இருக்கும் Theobromine, நரம்பு மண்டலத்தையும், இரத்தஓட்டத்தையும் தூண்டக்கூடியது. இதனால்தான் சாக்லெட் சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தத்தில் கொஞ்சம் மாறுதல் இருக்கும். நாய், குதிரை போன்ற விலங்குகளுக்கு மனிதர்களைப்போல் Theobromine வேதிப்பொருளை ஏற்றுக்கொள்ளும் உடலமைப்பு கிடையாது. சாக்லெட் சாப்பிடும் நாய்கள் இறந்துவிடும் அபாயம் அதிகம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சாக்லெட் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில், சாக்லெட்டுகள் வயிற்றுவலிக்கான மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டன. சாக்லெட் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமடைவதாக மக்களும் நம்பினார்கள்.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 65
« Reply #64 on: July 21, 2021, 02:26:00 PM »


அதிர்ஷ்டத்தின் பெயர் Violet?Violet Jessop என்ற பெண்மணி டைட்டானிக், ப்ரிட்டானிக் மற்றும் ஒலிம்பிக் ஆகிய மூன்று கப்பல்களிலும் பயணம் செய்து உயிர் பிழைத்திருக்கிறார். மூன்று கப்பல்களும் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானபோது மூன்றிலிருந்தும் தப்பித்து வந்திருக்கிறார் இவர். 1887ஆம் ஆண்டு பிறந்த Violet, சிறுவயதிலிருந்தபோது அவரைப் புற்றுநோய் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து மீண்டு வந்தவர் தன் தாயைப் பின்பற்றி தன் 21வது வயதில் கப்பல் பணிப்பெண்ணாக பணியாற்றத் துவங்கினார். ஆரம்பத்தில் இவரின் வயதும், அழகும், இளமையான தோற்றமும் இவருக்கு எதிரியாக இருக்குமோ என்று கப்பலில் பணியாற்றிய மற்ற மக்கள் பயந்தார்கள். மேக்கப் எதுவும் இல்லாமல், தனக்குப் பொருத்தமில்லாத ஆடைகளுடன் பணியாற்றி கப்பலில் பயணம் செய்தவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டார் Violet. மூன்று கப்பல் விபத்துகளிலிருந்து தப்பித்த பிறகும் மீண்டும் கப்பல்களிலேயே பணிப்பெண்ணாக வேலை செய்தார்.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 66
« Reply #65 on: July 22, 2021, 09:39:11 PM »


ஐஸ்க்ரீம் கோன்?

கோன் ஐஸ் வாங்கி, அதிலிருக்கும் ஐஸ்க்ரீமை அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு அந்த வேஃபர் கோனை மட்டும் சாப்பிடும் பழக்கம் யாருக்கெல்லாம் இருக்கிறது? முதல் ஆளாக என் பெயரை பதிவு செய்து கொள்கிறேன். அந்த கோன் எப்படி ஃபேமசானது தெரியுமா? Italo Marchion என்பவரால் 1896ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஐஸ்க்ரீம் கோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான உரிமையை 1903ஆம் ஆண்டு அவர் பெற்றார். ஆனாலும் ஐஸ்க்ரீம் கோன் ஃபேமசானதென்னவோ வேறொரு இடத்தில்.

1904ஆம் வருடம் அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்த பொருட்காட்சியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்று எக்கச்சக்கமாக ஐஸ்க்ரீம்களை விற்றுத் தீர்த்தது. ஒரு கட்டத்தில் ஐஸ் க்ரீமை வைத்துக் கொடுக்க தட்டுகள் தீர்ந்து போன நிலையில் பக்கத்துக்கடையில் இருந்த Hamwi  என்பவர் உதவிக்கு வந்தார். அவர் வேஃபர் போன்ற தக்கையான பிஸ்கட்டுகளைச் செய்து விற்றுக்கொண்டிருந்தார். ஐஸ் க்ரீம் கடை அளவிற்கு அவர் கடையில் கூட்டமில்லை. ஐஸ் க்ரீம் கடைக்காரரின் பிரச்னையைப் புரிந்துகொண்ட அம்மனிதர், தன் பிஸ்கட்டுகளை கோன் வடிவில் செய்து அதில் ஐஸ் க்ரீம்களை வைத்துக் கொடுக்கச் சொன்னார். அந்த ஐடியா சூப்பராக வேலை செய்ய, அன்றிலிருந்து பிரபலமானதுதான் ஐஸ்க்ரீம் கோன்.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 67
« Reply #66 on: July 23, 2021, 07:31:27 PM »


நான்-வெஜ் மீல்ஸ்?


சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் தாவரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு தாவரம் தான் drosera genus. இந்த வகைத் தாவரங்கள் Sundews என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதிகள் பார்ப்பதற்கு நீர்த்துளிகளால் சூழப்பட்டு இருப்பதைப் போல காணப்படுவதாலேயே Sundews என்ற சிறப்புப்பெயர்.


பார்ப்பதற்கு நீர்த்துளிகள் போலிருந்தாலும், நிஜத்தில் இவை கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மை உடைய என்சைம்கள். அருகில் வரும் சிறு உயிரினங்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பதற்கு மட்டும் உதவுவதில்லை இந்த என்சைம்கள். அப்பூச்சிகள் தாவரத்தின் உணவான பிறகு அவற்றை செரிக்க வைக்கவும் உதவுகின்றன. சதுப்பு நிலக்காடுகளிலும் கடற்கரை ஓரங்களிலும் அதிகம் காணப்படும் இத்தாவரக்குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 68
« Reply #67 on: July 24, 2021, 06:38:09 PM »


நினைவுச்சின்னம்?


1989ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி காங்கோவிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று, விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 46வது நிமிடத்தில் வெடித்துச் சிதறி சகாரா பாலைவனத்தில் விழுந்தது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தான் விபத்திற்குக் காரணம் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்த 18 வருடங்களுக்குப் பிறகு, 2007ஆம் வருடம் அதில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தார்கள்.


தொலைதூரத்திலிருந்து சிறு பாறைகளைக் கொண்டுவந்து 200 மீட்டர் விட்டத்தில் ஒரு வட்டம் அமைத்து, அதில் விபத்துக்குள்ளான விமானம் போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். விபத்தில் உயிரிழந்த 170 பேரின் நினைவாக 170 கண்ணாடிகளையும், சேதமடைந்தது போக மீதமிருந்த விமானத்தின் சிறு பகுதிகளையும் நினைவுச் சின்னத்தில் சேர்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் சேதமடைந்த விமான இறக்கை ஒன்றில் இறந்தவர்களின் பெயர்களைப் பதித்து அந்த வட்டத்திற்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

கூகிள் மேப்பில் 16°51’53″N, 11°57’13″E என்ற இடத்தைத் தேடினால், அந்த நினைவுச் சின்னத்தைக் காணலாம்


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 69
« Reply #68 on: July 25, 2021, 03:54:56 PM »


ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா?அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்திலிருக்கும் ஒரு குட்டியூண்டு டவுன் Buford. 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த டவுனில் மளிகை கடை முதல் பெட்ரோல் பங்க் வரை தினசரி தேவைகளுக்கான அனைத்தும் கிடைக்கின்றன. வயோமிங் மாகாணத்தில் முதன்முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, அதில் வேலை செய்த மக்களால் உருவாக்கப்பட்டது இந்த நகரம். அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 2000 மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலை முடிந்ததும் மக்கள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுவிட, கொஞ்ச காலம் காலியாக இருந்த ஊரில் 1980ஆம் ஆண்டு Don Sammons என்பவர் தன் குடும்பத்துடன் வந்து குடியேறினார். 1992ஆம் ஆண்டு வரை அவர்கள் குடும்பம் மட்டுமே அந்த ஊரில் இருந்தது. 1992ஆம் ஆண்டு மனைவி இறந்த பின், மொத்த நகரத்தையும் விலைகொடுத்து வாங்கி அங்கேயே வசிக்கத் தொடங்கினார் Don Sammons. அந்த குட்டியூண்டு நகரத்திலிருந்த மளிகை கடை, பெட்ரோல் பங்க், “தண்ணீர்” கடை என அனைத்துக்கும் ஓனர் அவர் தான். மட்டுமில்லாமல் அந்த நகரத்தின் மேயர் கூட அவரே. இப்படி ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவர் 2007 ஆம் ஆண்டு தன் நகரத்தை விட்டுவிட்டு மகனுடன் வசிக்கச் சென்றுவிட்டார்.


மகனுடன் செல்வதற்கு முன் அவர் செய்ததென்ன தெரியுமா? தன் ஊரை விற்கப்போவதாக EBAY வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரம் வெளியான மறுநிமிடத்திலிருந்து ஏலங்கள் குவிய, 11வது நிமிடத்தில், ஒன்பது லட்சம் டாலர்களுக்கு ஏலத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து வியட்நாம்வாசி ஒருவரிடம் ஊரை விற்றுவிட்டு ஊரை விட்டுச் சென்றுவிட்டார்.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 70
« Reply #69 on: July 26, 2021, 08:37:50 PM »
முதுமை டு இளமை?


பெரும்பாலான ஜெல்லிஃபிஷ்(தமிழில் இழுது மீன்) வகை மீன்கள்  ஒரு சில மணி நேரங்களிலிருந்து சில மாதங்கள் வரை மட்டுமே உயிர் வாழக்கூடியவை. இவற்றில் ஒரு சில வகை மீன்களுக்கு சாவென்பதே கிடையாது; குறிப்பாக turritopsis nutricula என்ற ஜெல்லிஃபிஷ். இந்த வகை மீன்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் மீண்டும் சிறிய மீன்களாக மாறிவிடுகின்றன.


இவற்றின் உடம்பிலிருக்கும் செல்கள் ஒவ்வொரு முறை முதிர்ச்சியடையும் போதும் இறந்துவிடாமல் வேறொரு செல்லாக மாறுவதாலேயே முதுமையிலிருந்து இளமைக்குத் திரும்பும் இந்த வித்தியாசமான நிகழ்வு நடக்கிறது. வேறு எந்த மீன்களுக்கும் உணவாகாமல் இருந்தால், இவற்றுக்கு இறப்பு என்பதே இல்லை.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

 • Full Member
 • *
 • Posts: 128
 • Total likes: 352
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 71
« Reply #70 on: July 27, 2021, 06:26:11 PM »


உணவுத் திருவிழா?


சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காகவும், தங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தாய்லாந்து ஆண்டுதோறும் ஒரு உணவுத் திருவிழாவை நடத்துகிறது. எக்கச்சக்கமான பழங்களும் காய்கறிகளும் இடம்பெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பு என்னவென்றால், இது மனிதர்களுக்காக நடத்தப்படுவதல்ல. குரங்குகளுக்காக நடத்தப்படும் திருவிழா. பேங்காக் நகரிலிருக்கும் கோயிலின் முன் பழங்களும், காய்கறிகளும், கேக் வகைகளும் சாக்லெட்டுகளும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு, அங்கு வசிக்கும் 3000+ குரங்குகளுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.


இந்த விழா நடக்கும் நாளில் மக்களும் குரங்குகளைப் போல் முகமூடிகளை அணிந்தும், வேஷமிட்டும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். 1989ஆம் ஆண்டு பேங்காக் நகரில் வசித்த வியாபாரி ஒருவரால் துவங்கப்பட்டது இந்த வித்தியாசமான உணவுத் திருவிழா. நடந்துமுடிந்த விழாவில் 4000 கிலோ பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்