Author Topic: வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?  (Read 727 times)

Offline Anu

சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போமா!!!

வெங்காயத்தின் மற்ற நன்மைகள்

மெட்டல் பொருட்கள்

சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.

ஆகவே இனிமேல் வெங்காயத்தை தூக்கிப் போடாமல், அவற்றை மேற்கூறியவாறெல்லாம் பயன்படுத்தி வாருங்கள். மேலும் உங்களுக்கு வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.