மழலை மொழியற்ற குழந்தை...
கிரீடம் அற்ற இளவரசி...
இறகுகள் அற்ற வெண்புறா...
கொஞ்சல் மொழி பேசும் வெண்ணிலா...
என்னை சகோதரனாக பார்ப்பவள் இவள்...
அன்னை என்று நினைத்தால் அன்னையாகிறாள்...
அன்பாக என்றும் அரவணைக்கிறாள்...
தோழியென நினைத்தால் தோழியாகிறாள்...
தோழமையால் என்னை மகிழ்விக்கிறாள்...
என் உடன்பிறவா சகோதரி உனக்கு...
என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்✨❤️.