Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 310  (Read 2159 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 310

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline TiNu

 • FTC Team
 • Hero Member
 • ***
 • Posts: 666
 • Total likes: 1852
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
வானிலிருந்து இறங்கிய ஐராவதமாக..
ஜொலிக்கும் வெண்பனி மலைகள்...

அணிவகுக்கும் மரகத களிறுகளாய்..
நிமிர் நடை போடும்.. பசும்மலைகள்..

வண்ணத்தில் நானே  அழகு .. என..
மார்தட்டி கொள்ளும்.. நீலவானம்...
 
கண்கவர் வண்ணம் என்ன? வண்ணம்?..
உலக உயிர்கள் அனைத்துக்கும்..

கண்களுக்கு விருந்தளிக்கும் கனிவையும்...
ஜீவராசிகள் மனம் மகிழ..  இதம் கொடுக்கும்...

குளுமையை அள்ளி கொடுப்பவள்.  நானே..
என அமைதியாய் கொக்கரிக்கும் நதி..

பூமி தாயோ.. மெதுவாக தன்னை தானே சுற்ற...
புதிதாய் பிறந்த மென்காற்று.. நீருடன் கலந்து...

இதமான குளிருடன்...  நீரும் மண்ணும் கலந்து
மணம் வீச ஜனனம் எடுத்தேனே என்றது.. தென்றல்..

குளிர் காற்றில் ஓசை இராது.. நிசபதமே மிஞ்சும்..
ஆனால் என் மீது நீ(தென்றல்) உரச உண்டாகும் சங்கீதம்...

இது சொல்வது யார் என திரும்பினால்..
தென்னை கீற்றுக்குகள் சொல்லி சிரித்தது...

இன்னும் சற்றே திரும்பி பார்க்கையில்...
தாய் மகள் போல் இரு வண்ண கிரீடம் ஜொலித்தது..

மொத்த காட்சிக்கும் மகுடம் வைத்தார் போல..
மின்னிசிரித்தது.. இரட்டை வானவில்...

ஆண்டவன் கைவண்ணத்தில் குறை காணமுடியாது..
என்றுமே இயற்கை இயற்கைதான்..

ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு கொள்ள 
என் மனமோ... கொள்ளை போனது..

என் மனதில் அடக்க முடியாத சந்தோசம் எழ..
வாய்விட்டு சொல்ல.. என் துணை தேடினேன்..

என் அருகில் யாரும் இல்லை என நினைவுக்கு வர.. அமைதியானேன்...
சாய்ந்து விழுந்த மர கிளையின் மீது... ஒற்றை பறவையாய்..
« Last Edit: April 11, 2023, 07:18:17 PM by TiNu »

Offline Unique Heart

 • Full Member
 • *
 • Posts: 179
 • Total likes: 360
 • Karma: +0/-0
 • Gender: Male
 • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
இவ்வுலகில் ஈடு இணையற்ற அழகு என்று இருப்பின். அது இயற்கையின் அழகே...

 நட்சத்திரத்தினால் நெய்யப்பட்ட நீல நிற கம்பளத்தில், மிளிரும் அழகுடன், நாணத்துடன் அமர்ந்திருக்கும் மின்னும் அழகு சிலை ஒன்று .

அவளே! வழித்துணையாய் தொடரும் வழிபோக்கனின் ஸ்நேகிதி அவள் "நிலா".

பூமி தாயின் மடிதனில்  மக்களாய் பிறந்து மானுடம் காக்க ஜீவகம் கொண்டது ஒன்று
அதுவே "மரம்" எனும் மாணிக்கமானது அது..

கருமேகம் சூழ, பெரும் மழை தூவ, கதிரவனை கண்டு வளைந்து ஆடும்,வண்ண மயில் எதுவோ?
காண்போரின் காதலான  "வானவில்"ஆனது அது.

தத்தி தாவும் தாரகை எவளோ, தண்ணீர் தடத்தின் தமையந்தி அவள்  "நீரோடை"..

வர்ணனை செய்ய வார்த்தைகள் போதவில்லை, "இயற்கை" அதன் அழகு தனை வர்ணிக்க...

இன்னிசையும் இசைந்தாடும், கருங்குயிலின் குரல் கேட்டு.

வான் மழையும் வர்ணனை செய்யும், வளந்து நிற்கும் மலைகள் அதன் வளைவு நெளிவை கண்டு.

காண்போர் அனைவரும் காதல் கொள்வர், கார்முகிலின் அழகை கண்டு...

நீல  வானும் நேசம் கொள்ளும், நீல கடலின் நடனம் கண்டு.

பூங்காற்றும் புன்னகைக்கும், பூத்து குலுங்கும் பூக்களை கண்டு.

இத்தனை அழகையும் இணைத்தது, இயற்கை எனும் ஒன்று.

இயற்க்கை அனைத்தும் அன்பு கொள்ளும்,
"AARONN" எந்தன் உள்ளம் கண்டு.. 😉...

இன்றி அமையா இயற்கையை, எம்மோடு இணைத்த இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே சொந்தம்.....

(குறிப்பு : புதிய உறவுகளின் பதிவுகள் இருப்பின். எனது பதிவை விட்டு அவர்களது
பதிவை வாசிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.)
« Last Edit: April 11, 2023, 02:03:21 PM by Unique Heart »

Offline HiNi

 • Jr. Member
 • *
 • Posts: 56
 • Total likes: 185
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
வெயிலின் தாகத்திற்கு குளிர்ச்சி அளிக்கும் ஓர் அழகான உலகத்திற்கு செல்வோம் வாருங்கள் என்னுடன்!!!🤗

நீள வானம் உயரத்திற்கு வெண்மை போத்திருக்கும் மலைகள்
அதிலிருந்து சலசல வென கொட்டும் அருவிகள்
சில்லென்ற காற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் மரங்கள்
செடிக்களில் ஒளிந்து எட்டி பார்க்கும் பூக்கள்
ஆங்காங்கே பச்சை உடுத்திய நிலங்கள்

நம் வருகையை எண்ணி காத்திருக்கும் தென்னை மரத்தின் நிழல்கள்
புத்துணர்ச்சி ஊட்ட அருந்துவதற்கு ஊஞ்சலாடும் இளநீர்கள்

அனைத்திற்கும் அழகு மேல் அழகு சேர்க்கும் இரட்டை வானவில்கள்
மென்மேலும் குளிமை அளிப்பதற்கு
மழையை  வரவேற்க காத்திருக்கிறதோ இரட்டையர்கள்!!!

ஆஹா!! செவிக்கு விருந்தளிக்கும் இன்னிசை சத்தமே
நம்மை அழைக்க ஓசை எழப்புகிறதோ அந்த குயில்!!!

இரசிக்க அழகாய் இருப்பின்
இத்தகைய உலகில் வாழ்வதற்கு
கடவுள் படைத்த இயற்கை வளத்தை
நேசிப்போம்!!! பாதுகாப்போம்!!!


Offline அனோத்

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 246
 • Total likes: 729
 • Karma: +0/-0
 • Gender: Male
 • இனியதோர் விதி செய்வோம் !

ஓடும் நதிநீர் தேடி வந்த பட்சி நான்
பாடும் மரக்கீற்றினிசை கேட்டு
மெதுவாய் எனைச் சாடும் இன் தென்றல்
காற்றை உணர்ந்தேன் ..........

மென் இலைகள் அசைந்தாடி
மீட்டிடும் இன்ப இராகமதை இரசித்து.....
பெண் அழகையும் மிஞ்சியதாய்
பொன் மாலைப்  பொழுதினில் லயித்தேன்

பரந்த தேசமதில் பறந்து வரும் பட்சியாய்
பரவிக்  கிடந்த புல்வெளிகள் மீது
என் மேனிகொண்டு தடவி வந்தேன்........

மலை மீது ஊற்றெடுக்கும் உயர் நீரலைகள்
நதிநீராகி மண்ணை அலங்கரிக்கும்
நீரின் கம்பளப்  பாதையதில்
என் முகம் கண்டு அகம் குளிர்ந்திருந்தேன்........

என்னை மிஞ்சிலும் உயர்ந்து நின்ற
தென்னை மரத்தடி நிழலில் ....
இழைப்பாறி சலிக்காத காதல்
கொண்டேன்......

பூக்கள் மீது மகரந்த சேர்க்கை செய்யும்
வண்டின் காண இசை ...
தாலாட்டாய் ஒலிக்க
தாய் மடியாம்  பூமியில்
லயித்து விட்டேன் ............

கண் விழித்தெழுந்த போது.......
நான் கண்ட காட்சியாவும்
கனவுதானா? என்றெண்ணி
காலம் கடந்து மீண்டும்  பறந்து சென்றேன் ....

மனிதர்களே ! ....... நாம் இரசித்த இயற்கை
இன்று கட்டிடமாய் உயர்ந்தாலும்  ஐந்தறிவு பட்சிகளின் இருப்பிடமும்
கனவாகவே கடக்கிறது ...........

கனவுலகில் அடிக்கடி தோன்றும் மாயை
உலகம் ஓர் நாள் நாம் கண்ட எழில் பூக்கும்
நிஜக்  காட்சிகள்தான் என்பதை யாரும் மறக்க வேண்டாம்
« Last Edit: May 03, 2023, 04:10:22 PM by அனோத் »

Offline Ishaa

 • Hero Member
 • *
 • Posts: 547
 • Total likes: 842
 • Karma: +0/-0
 • Faber est suae quisque fortunae
வானவில் போல பல வண்ணத்தில்
நம் வாழ்க்கையில் நிறைய நபர் வருவார்கள்
சிலர் மறக்க முடியா அழகான நினைவுகள் தந்து இருப்பார்கள்
சிலர் மறக்க நினைக்கும் நினைவுகள் தந்து இருப்பார்கள்
அழகான நினைவுகளோ மறக்க நினைக்கும் நினைவுகளோ
அதில் இருந்து வாழ்க்கைக்கு பாடத்தை அவசியம் கற்று கொள்வோம்


வாழ்க்கையில் ஆயிரம் தடைகளை தாண்டி முன்னோக்கி செல்கின்றோம்
வாழ்க்கை பயணம் ஓர் நேர்கொண்ட பாதை அல்ல
இயற்கையின் அதிசயம் போல்
ஓர் மாலை உச்சிக்கு செல்லும் பாதை போல் தான் நம் வாழ்க்கை
போகும் வழியில் பாதியில் சக்தி இல்லாமல் போகும்
அதை தாண்டியும் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறோம்
ஒரு நாள் மலை உச்சியை அடைவோம் என்று
ஒரு நாள் வாழ்க்கையின் இலக்கை அடைவோம் என்று
நம்பிக்கையில் நிற்காமல் நகர்கின்றோம்
ஆற்றில் ஓடும் நீர் போல்


அதை போல் இயற்கை
நாம் நம்மை தொலைத்து போய் நின்றாலும்
கையில் நம்மை ஏந்திக்கொள்ளும்
இயற்கையின் அழகை ரசிக்கும் நேரத்தில் நாம் புதிய சக்தியை பெறலாம்

குயிலின் இசையாய் இருக்கட்டும்
அணிலின் குறும்பாய் இருக்கட்டும்
கடலின் அலையாய் இருக்கட்டும்
பூக்களின் வாசமாய் இருக்கட்டும்
அனைத்தையும் உணர்வுபூர்வமாய் ரசித்து பாருங்கள்
நீங்கள் தொலைத்த சக்தியை மீண்டும் பெறுவீர்கள்

ஒரு மரம் போல்
இலையுதிர் காலத்தில் இலைகளை தொலைய்தாலும்
மறுபடியும் இலைகள் துளிர்க்கும்
அதை போல் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான சக்தியும்..
சில நேரங்களில் சக்தி இல்லாமல் போனாலும்
மறுபடியும் எழுந்து வாழ்க்கை பயணத்தை தொடர்வோம்...

Offline VenMaThI

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 196
 • Total likes: 857
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum


இயற்கை
இறைவன் அளித்த வரம்
மனிதனால் அழிக்க முடியாத வாரம்
அறியாமையால் இயற்கையை அழித்தாலும்
பழிவாங்கும் படலம் தொடங்கினால்
பின் மனிதனின் அழிவிற்கு அளவில்லை....

இந்த இயற்கையில் மட்டுமே சில வினோதங்கள் நிகழும்

விழுவதும் அழகாகும் அருவியாய் இருப்பின்....

அழிவதும் அழகாகும் அலையாய் இருப்பின்....

அழுவதும் அழகாகும் மழையாய் இருப்பின்...


மனிதனே
வாழ்வியல் பாடங்கள் பல உண்டு
அதை கற்றுக்கொள் இந்த இயற்கையிடம்...

யாரையும் சார்ந்து வாழாமல்
யாருக்கும் அடிபணியாமல்
சுயமாய் வாழ கற்றுக்கொள்
இந்த காற்றை போல

வாழ்க்கையில் கீழே விழுந்தாலும்
சுருண்டு தேங்கி நிற்காமல்
மீண்டும் ஓட கற்றுக்கொள்
இந்த அருவியை போல

ஜாதி மதத்தால் வேறுபட்டாலும்
ஒற்றுமையாய் இருப்பின் உலகமே உன்னை அண்ணாந்து பார்க்கும் என்ன கற்றுக்கொள்
வண்ணங்களில் வேற்றுமை இருப்பினும் ஒற்றுமையால் அழகாகும்
இந்த வானவில்லை போல

மனதில் ஆயிரம் மாற்றம் வந்தாலும்
மனிதம் மாறாமல் இருக்க கற்றுக்கொள்
மழை வெயில் என்று காலங்களால் மாறினாலும்
மாறாமல் இருக்கும் இயற்கையை போல

பறவைகளும் விலங்குகளும்
கவலையின்றி உலகில் உலவுவது
இயற்கையோடு ஒன்றி இருப்பதால் தானே
கவலையை மறக்க நினைக்கும் மனமே
முதலில் இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்...

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கைக்கு அழகே
தொலைவில் இருந்து பார்க்கையில்
கரடு முரடான மலையும் அழகு தானே

உண்ணும் உணவும் பருகும் நீரும்
சுவாசிக்கும் காற்று கூட நமதல்ல
இவயணைத்தும் இயற்கை நமக்கு அளித்த வரம்
வருந்தி நிற்கும் மழலையை
அரவணைக்கும் தாயை போல்
நம்மை அரவணைத்து காக்கும் இயற்கையை
அழியாமல் அழிக்காமல் பொக்கிஷமாய் காப்போம்

« Last Edit: May 06, 2023, 03:12:45 AM by VenMaThI »