Author Topic: இசை தென்றல் - 257  (Read 627 times)

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 445
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 257
« Reply #15 on: December 01, 2023, 09:41:41 AM »
வணக்கம் RJ , DJ & FTC மக்களே ,

புதுசா நம்ம IT தொகுத்தது வழங்கிய நம்ம நண்பர் மண்டகசாயத்துக்கு ஒரு பெரிய கைத்தட்டலோட என் கட்டுரையை ஆரம்பிக்கிறேன். எப்படியும் இந்த வாரம் place கிடைக்காது அடுத்த வாரத்திற்கு copy paste பண்ண வசதியா இருக்கும்னு இதை பதிவு செய்றேன் .

இந்த வாரம் என் விருப்ப பாடலா  தெரிவு செய்த பாடல் பாலசந்தர் இறுதியா direct செய்த வித்யாசகரோட underrated master piece பாடல்.2006 ல வெளிவந்த இந்த பாடலை எவ்ளோ பேர் கேட்ருப்பிங்கனு தெரியல.. இந்த அழகான பாடலை தெரியாத  நம்ம FTC நண்பர்களுக்கு share பண்ணனும்னு தோணிச்சு .


திரைப்படம் - பொய்
பாடல் : ளா , ளா ளா இனியவளே
பாடகர் : SPB


சிலபாடல்கள் ரசிக்க வைக்கிறது மாத்திரமில்லாம ஏதாவது ஒரு விஷயத்தை கற்பிக்கும் எனக்கு அப்படி ஒரு பாடல் இது. ளகரம் சரியாய் உச்சரிக்க வராத கதாநாயகனை கதாநாயகி  ரொம்ப மோசமா கிண்டல் பண்ண , ஒரே night ல எப்படி எப்படி அவர் ளகரம் பழகி பாடுறார்ன்றதுதான் நம்ம பாடலோட காட்சியே.. இலங்கைல படமாக்கப்பட்ட திரைப்படம் இது. இந்த பாடல்ல எனக்கு பிடித்த வரிகள்னு பிரத்தியேகமா ஒரு வரியை என்னால சொல்லவே முடியாது. மொத்த பாடல் வரிகளும் வெறும் ளகரம் சார்ந்த சொற்கள் மட்டும் பயன்படுத்தி அவ்ளோ அறிவுபூர்வமா எழுதிருப்பார் நம்ம பா. விஜய்

இந்த பாடலை வாழைப்பழம் முதல்ல ஒழுங்கா சொல்லு அப்புறம் வாய் கிழிய பேசுனு  எப்பவுமே என்னை கிண்டல் பண்ணி பண்ணியே பேச வச்ச என்னோட  friend கு dedicate பண்றேன்
[/size]