Author Topic: கோழிக்கோடு அல்வா நீங்களும் செய்யலாம்!  (Read 468 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
மைதா - அரை கிலோ,
வெல்லம் - 1 கிலோ,
தேங்காய் எண்ணெய் - 1 கிலோ,
தேங்காய் - 3,
முந்திரி - 50 கிராம்.


எப்படிச் செய்வது?
மைதாவில் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும், நன்கு கரைத்து, பிசைந்து பால் எடுங்கள். கிடைத்த பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஒருநாள் வைத்திருங்கள். பின்னர், பாலின் மேலே இருக்கிற தெளிந்த தண்ணீரை ஊற்றிவிட்டு அடியில் தங்கியிருக்கும் கெட்டியான பாலை பிரித்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி இரண்டு தரத்தில் பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். வெல்லம் கரைந்து கொதித்ததும், இரண்டாம் தர தேங்காய்ப்பாலையும் மைதாப்பாலையும் ஊற்றுங்கள். ஒன்றிணைந்து வெந்துவரும் தருணத்தில் முதல்பாலை ஊற்றி, சிறிது, சிறிதாக தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு கிளறுங்கள். கரண்டியில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும், முந்திரியை தூவி இறக்குங்கள். சுவையான கோழிக்கோடு அல்வா ரெடி!