தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 339

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 339

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விழியாள்:

         ஒளிஞ்சி தாங்க வாழுறேன்
        பசியில என் புள்ள துடிச்சத கண்டு
        பத்து ரூபா திருடின பாவத்துக்காக
         இன்னும் பயந்துதாங்க வாழுறேன்
        அந்த மீசைக்கார போலீஸின்
      கூலிங் கிளாஸ்ல என் பிம்பம் படகூடாதுன் னு தானுங்க

         ஒளிஞ்சிதாங்க வாழுறேன்
        என் மருமகள் எங்க என்னும் குரல கேட்டதும்
      பெண்ணாய் பொறந்த பாவத்துக்காக
     இன்னும் மறஞ்சிதாங்க வாழுறேன்
     அந்த மனமற்றவன் மணம்
   என் மேல படக்கூடாதுன்னு தானுங்க

     ஒளிஞ்சி தாங்க வாழுறேன்
     ஆசையோடு அவள் நெற்றியில்
     குங்குமம் இட்ட அதிர்ஷ்டத்துக்காக
       இன்னும் பயந்து தாங்க வாழுறேன்
     ஆணவக்கொலைக்கு அடுத்த
      எடுத்துக்காட்டாய் நானும்
     ஆயிட கூடாதுன்னு தானுங்க

     ஒளிஞ்சிதாங்க வாழுறேன்
     குடிச்சி குடிச்சி  வீட்டை அழிச்சி
     அவரு நிம்மதியா போயி சேந்துட்டருங்க
      இன்னும் பயந்துதாங்க வாழுறேன்
      போன வாரம் கந்துக்காரன்
      பிடுங்கி போன ஆயிரமும்  அய்யோ நான்
      பேப்பர் போட்டு சேர்த்தது தானுங்க

      ஒளிந்து கொண்டு இருப்பவர்கள் ஏராள முங்க
       சுதந்திரமாய் அவர்களை சுற்ற வைக்க
       நம் மனதிற்கு ஏது தாராளமுங்க
       வாழ்கையும் இங்க கண்ணாமூச்சி தானுங்க
     வயது வந்தோர் ஆடும் ஆட்டம் தானுங்க
      பிரபஞ்சமே   எல்லை தானுங்க
      சிலர் மட்டும் களிப்படைவாங்க
      மற்றவர் இங்கே களைப்படைவாங்க.

       

TiNu:

அன்று ஓர் நாள்,
நான் யார், நான் எப்படி இங்கே, என யோசிக்க தொடங்கினேன்...
இன்று இப்பொழுது, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றினை மறந்து..
சிறுக சிறுக.. என் நினைவுகளை பின்னே தள்ளினேன்..

அந்த ஓர் நாள்,
நான் இவ்வுலகை முதல் முதலாய் பார்த்த நாள்...
விழி மூடி, சுவாசம் அடக்கி பலநாள் காத்திருப்பு கலைந்து...
மெல்ல மெல்ல.. புவி காற்று என்மீது பட புல்லரித்தேன்..

அது ஓர் நாள்,
யார் யாரோ என்னை உற்று உற்று  பார்க்க..
யார் யாரோ என்னை தொட்டு தொட்டு  வியக்க ..
நானோ எதுவும் அறியாதவளாய்.. மிரண்டேன்..

அதே நாளில்,
விழிகளை லேசாக சுழற்றி சுழற்றி பார்த்தேன்...
இது என்ன இடம்.. நான் ஏன் இங்கே வந்தேன்...
என்னை சுற்றி ஏன்.. இப்படி ஒரு கூட்டம் வியந்தேன்..

அந்த நேரம்,
கூட்டங்கள் அதிகமாக அதிகமாக.. பயம் கவ்வியது..
நான் இருந்ததோ.. ஒரு குட்டி அறை போலிருந்தது..
என் நெஞ்சிலும் விழிகளிலும் பயம் தொற்றி கொண்டது..

அதே பொழுது,
அதிகமானோர் வர.. வர.. என் சிறு அறையும் இருளானது ..
நானும் என் சிரசை.. உள்ளே இழுத்து கொண்டேன்..
அதிக பீதியில் ஓஓ... என கரைய தொடங்கினேன்...

அப்பொழுது,
பதட்டம் ஒரு பக்கம்.. பயம் ஒரு பக்கம்,.. பசி ஒரு பக்கம்..
என் சிறிய இதழ்களும் பலகோணங்களில் நெளிந்தது...
அப்படியே ஒரு ஓரமாக ஒளிந்து கண் மூடி கொண்டேன்..

அச்சமயம்,
ஒரு நறுமணம், என் நாசிகள் துளைக்க கண் திறந்தேன்..
இரு கைகள் என் அருகில்....  ஒரு கரம் என தலை கோரா..
மற்றும் ஒரு கரம் என் தோள்களை தட்டி தடவி கொடுத்தது...

அதே நாளில்,
எனை வாரியெத்தாள்.. அவளோடு என்னை அணைத்து.கொண்டாள்
நானும் அவள் கரங்களை. என் பிஞ்சு விரல்களால்  பிடித்தேன்..
கரைகளும் அழுக்கும் படிந்த என் முகத்தை.. முகர்ந்து முத்தமிட்டாள்...

அந்நேரம்,
"இவ்வளவு அழகான குழந்தை.. எந்த பாதகி.. குப்பையில் வீசினாளோ .."
ஊர் என்ன சொன்னாலும்... யாரை யார் வசைபாடினாலும்..
என் பிறப்பும் என் தொட்டிலும்..  இந்த குப்பை தொட்டியே..
 
அதே நொடியில்,
கடவுள் அனுப்பிய தேவதையின் தோள் மீது சாய்ந்து..
அமைதியாக அந்த பசும் நிற தொட்டியை பார்த்தேன்... அதுவும்..
போய்வா மகளே.. போய்வா.. என  அமைதியாக சிரித்தது...

vaseegaran:
உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது ஆனால் அதைவிட பசி  எனக்கு அதிகமா இருக்கிறது

அன்றைக்கு மேலே இருந்து குண்டு விழுந்துகொண்டே இருந்தது

அம்மா அப்பவே சொன்னாள் வெளியே போகவேண்டாம் என்று அப்பா கேட்கவேயில்லை

சாப்பாடு வாங்க போன அப்பா இன்றுவரை  காணவேயில்லை

போனமாதம் எங்கள் பள்ளிக்கூடம் மேல் ஒரு குண்டு போட்டார்கள் ஒரே புகை

அம்மா அழுதுகொண்டே என்னை கூட்டிப்போனால் அன்றைக்கு என் 2 தோழி காணாமல் போய்விட்டார்கள்

எங்கள் தெருவில் பேசிக்கொண்டு இருந்தார்கள் நமக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை, குண்டு போடுவார்கள்

பத்திரமாக இருக்கவேண்டும் என்று வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டுமாம்

இன்று இங்கே தான் சொன்னார்கள் ஹெலிகோப்டேரில் இருந்து சாப்பாடு  போடுவதாக

ஆனால் கூட்டமாக இருக்கிறது யார் வீட்லயும் சாப்பாடு இல்லை போல

நல்லவேளை எங்கள் வீட்டில் அம்மா இருக்கிறாள் என் பக்கத்துவீட்டில் நண்பனின் அம்மா இல்லை

எங்கள் ஊரில் சாப்பாடு வாங்க போனாலே  காணாமல் போய்விடுகிறார்கள், அவனின் அம்மாவும் காணோம்

அவனுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போகணும்

நீங்கள் எப்பிடியும் என்னை கொன்றுவிடுவீர்கள் இந்த உணவை மட்டும் என் தம்பிக்கு தந்துவிட்டு வருகிறேன்

அதன்பின்பு என் மேல் குண்டு போடுங்கள்  நான் ஓடமாட்டேன் அவனால் நடக்க முடியாது

நான் ஒளிந்துகொண்டு இருக்கிறேன் நீங்கள் என்னை பார்க்கவில்லைதானே ,

பார்த்தாலும் பார்க்காத மாதிரி கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்களே, மாட்டீர்களா |?

எனக்கு ஒன்றே ஒன்று உங்களிடம் கேட்கவேண்டும்

உங்கள் வீட்டிலும் எங்களை போல் சிறுவர்கள் இருப்பார்கள் தானே!!!

VenMaThI:


பயம்

தனிமை கண்டு பயந்தேன்
தாலாட்டுப்பாடி தூங்க வைத்தீர்...
இருட்டை கண்டு பயந்தேன்
இருக்கமாய் அணைத்து கொண்டீர்...

படிப்பை கண்டு பயந்தேன்
படிப்படியாய் அதன் அருமையை உணர்த்தினீர்...
மிருகங்களை கண்டு பயந்தேன்
மிருளாதே என்று அதட்டினீர்...

பருவமடைந்த காலத்திலோ.. கன்னியரை
மயக்கும் கட்டிளம் காளைகளை கண்டு பயந்தேன்..
பக்குவமாய் எடுத்துரைத்து..அவர்களும்
நம் நட்புதான் என விளக்கினீர்...

யார் வந்தாலும் யார் போனாலும்
நான் இருப்பேன் உனக்காய்
என்றும் தனித்து இயங்க விடேன்
என்று நம்பிக்கை மொழி உரைத்தீர்...

உம்மீது இருந்த நம்பிக்கையில்
உலகை எதிர்கொள்ள துணிந்தேன்..
வீரமங்கையாய் உலா வர நினைக்கையில்
வெறுமை ஆகி போனதென்ன நின் இடம்...


நீர் கொடுத்த தைரியங்களை
ஆயுதமாய் ஏந்தி போராடி களைத்தேன்
இனி வரும் காலம் தனை..
உம் கை கோர்த்து கடந்திட காத்திருக்கிறேன்

என் கண்ணெதிரே தோன்றி
என் கவலையெல்லாம் நீக்கி
என் பயம் தனை போக்க
என்று வருவீரோ ... அப்பா

❤️❤️❤️❤️❤️❤️




Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version