FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 10, 2017, 10:39:56 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: Forum on December 10, 2017, 10:39:56 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 167
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Ftc Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/167.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: JeGaTisH on December 10, 2017, 07:59:22 PM
கண் முன்னே   வந்துபோகும்  பல பந்துகள்
எதை  எடுப்பேன் ...... ஒரே சலனம்

வாழ்க்கையும் ஒரு கண்கட்டி  விளையாட்டு ஆனால் 
கண்ணை கட்டாமல் விளையாடுகிறோம்

சிறுவயதில் நான் விளையாடிய விளையாட்டு
வளர்ந்தபின்  எனக்கு கொடுத்தது  பெருமையும்  பெயரும்

நீ  ஈட்டிய  தோல்வியை உலகம் இழிவாக பேசலாம்
நாளை நீ  பெறப்போகும்  வெற்றி உலகத்தையே மாற்றலாம்

உலகம் எனும் பந்து உன் கையில் இருக்க
 உருட்டுவதும்உருவாக்குவதும் உன் கையில் தான் உள்ளது

ஆயிரம் வெற்றிகள் உன்னை தேடி வரலாம்
ஆனால் ஒரு தோல்வி உன் வெற்றிக்கு வழிவகுக்கும்

வெற்றியோ தோல்வியோ வருவதை முடிவு செய்யும்
உன்  விடாமுயற்சியும் ஆர்வமும்

குதிரையின் ஓட்டத்தை குதிரை நிறுத்துவதில்லை 
காரணம் வெற்றிக்கோடு குதிரைக்கில்லை

வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தையம் நீ பிறந்த போதே தொடங்கிவிட்டது
மரணம் தான் உன் வெற்றிகோடு அதுவரை நீ ஓடு
வெற்றி உன்னை தேடி வரும்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: MysteRy on December 11, 2017, 03:23:41 PM
விளையாட்டுகள் நம்மை மகிழ்விக்கும்
நம் உடலை உறுதியாக்கும்
வெற்றியோ தோல்வியோ
மோதிப்பார்க்கும் உரம் கொடுக்கும்

விளையாட்டுகள் நம் வாழ்வில்
ஒரு அம்சமாகும்
விளையாட்டு இல்லாத வாழ்க்கை
உப்பில்லாத பண்டம் போலே

விளையாட்டுக்கள்
நம் உள்ளிருக்கும் சக்தியை
வெளிக்கொணரும்  ஒரு உந்து சக்தி
நம்மை உலகுக்கு காட்டிடும்
ஒரு வழிகாட்டி

எதையும் செய்யத் துணிந்திடும் மனம்
வெற்றிக் கோப்பைக்காக
வெற்றி ஒன்றே இலக்கு
அதை அடையும் வரை ஓய்வதில்லை
விளையாட்டு வீரனின் கால்கள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: thamilan on December 11, 2017, 04:36:57 PM
விளையாட்டுக்கள்
ஒவ்வொரு விளையாட்டும்
ஒவ்வொரு இனத்திற்கும் 
ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தாகும்

 
ஜல்லிக்கட்டும் கபடியும்
தமிழனின் தனித்துவம் சொல்லும்
வீர விளையாட்டுக்கள்
உயிரையும் பயணம் வைத்து
விளையாடிடும் வீர மறவர்களின் விளையாட்டு

விளையாட்டுக்களால் உலகே அறிந்த
வீரர்கள் பலர் உண்டு
விளையாட்டுக்களில்
அவர்கள் திறமையைப் பார்த்து
உலகமே வியர்ந்திருக்கிறது

இன்றோ விளையாட்டும்
அரசியலில் ஒரு அங்கமாகி விட்டது
பாதாளம் மட்டும் பாயும் பணம்
விளையாட்டிலும் புகுந்து விளையாடுகிறது

வெற்றிக்காக நாட்டின் பெருமைக்காக
விளையாடிய விளையாட்டுக்கள் இன்று
பணத்துக்காக விளையாடப்படுகின்றன
வெற்றி தோல்வியை
திறமை நிர்ணயித்தது போய்
பணமே நிர்ணயிக்கிறது

திறமை உள்ளவன்
தேர்வுகளில் தோற்றுப் போகிறான்
திறமை அற்றவனோ வெற்றி பெறுகிறான்
இடையே கைமாறும் பணமே
ஒருவனுடைய தேர்வுகளை நிர்ணயிக்கிறது

முதலில் நம் அரசியல் அமைப்புகள் மாற வேண்டும்
மருத்துவம் என்று எழுத தெரியாதவனுக்கு
சுகாதார அமைச்சர்
ஒரு  கிட்டிபுல்  கூட சின்ன வயசில்
விளையாடி இருக்காதவனுக்கு
விளையாட்டுத்துறை அமைச்சர்
தண்ணீரைக் கண்டால்
காத  தூரம் ஓடுபவனுக்கு
மீன்பிடித்துறை அமைச்சர்
எப்படி நாடு விளங்கும்

அவனது தகுதிக்கேற்றப
 பதவிகளை கொடுங்கள்
அந்த துறையை நேசிப்பவன்
கையில் அதைக் கொடுங்கள்
அப்போது தான் அந்ததந்த துறைகள்
சிறந்து விளங்கும்
     
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: joker on December 11, 2017, 05:13:13 PM
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.
அழகாய் கூடி விளையாட சொன்னவன்
"நம் மகாகவி சுப்ரமணிய பாரதியார்"

விளையாடிய பருவங்கள்
மனதில் அழியாத சின்னங்கள்

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய
நாட்கள்

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி
விதம் விதமாய் விளையாட்டுக்கள்
ஆடிய நாட்கள்

"மண் குழப்பி வீடு கட்டி" விளையாடி
அதில் நாம் நம் உறவினர்களுடன் வசிக்க
சொல்லி கொடுத்த விளையாட்டுக்கள்

வாழ்வில் பல ஏற்றம் இரக்கம் இருக்கும் என
சொல்லித்தந்த "பரமபதம்" விளையாட்டு

பெண்கள் விளையாட சீர்வரிசையிலும்
இடம் பிடித்த முன்னோர் கொடுத்த
"பல்லாங்குழி" விளையாட்டு

சைக்கிளில் கால் எட்டாத போதும்
"குரங்கு பெடல்" போட்டு ஒட்டிய நாட்கள்

வாழ்வில் தடைகள் வந்தால் தகர்த்தெறிய
கற்றுதந்த நம் "தாயம்" விளையாட்டு

மூச்சு பயிற்சியும் உடல் ஆரோக்கியதையும்
சொல்லி தந்த "சடுகுடு" விளையாட்டு


வீரத்தையும் விலங்கின் மேல் தான் கொண்ட
பாசத்தையும் உலகுக்கு எடுத்து சொன்ன
"ஜல்லிக்கட்டு" விளையாட்டு

எத்தனையெத்தனை விளையாட்டுக்கள்
முன்னோர் விட்டு சென்ற பொக்கிஷங்கள்

உடலும், மனதும் ஆரோக்கியமாய் இருக்க
விளையாடிய விளையாட்டுக்கள்
இன்றைய சந்ததியும் விளையாடுகிறது
தன் கைபேசியிலும், கணினியிலும்,


மாற்றுங்கள் வீதியில் விளையாட
கற்றுத்தாருங்கள் ஆரோக்கியமான
சந்ததிகள் உருவாக ...

****ஜோக்கர் ****
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: VipurThi on December 12, 2017, 03:18:36 PM
ஆடிப்பாடி ஓடி
விளையாடிய காலம்
அகமும் புறமும் ஆனந்தமாய்
கடந்த காலம்

கிட்டிப்புல் விளையாட்டின்
பாதியில் குச்சியால்
டயர் உருட்டிய காலம்

மிட்டாய் வாங்கி தந்த
நண்பனுக்காய் பந்து
பொறுக்கிய காலம்

முதலாம் பரிசு வாங்க
ஓட்ட பந்தயத்தில் உசைன் போல்ட்
கணக்காய் ஓடீய காலம்

கூடைப்பந்து விளையாடி
கூடையில் குரங்காய்
தொங்கிய காலம்

ஆட்டத்தில் சேர்க்காத அண்ணணின்
கால்பந்தை கைப்பந்தாக்கி எடுத்தோடிய காலம்

அன்றைய வாழ்வில் நாங்கள் அறிந்ததை
இன்றைய சிறுவர்கள் இழக்கிறார்
இணையமெனும் போதை
விளையாட்டுக்களில்
கட்டுண்டு தவிக்கிறார்


பள்ளி செல்லும் பாலகர்கள்
துள்ளி விளையாடுவதெல்லாம்
அள்ளிக் கொடுத்திடுமே ஆரோக்கியமதனால்
தள்ளி ஓடீடுமே நோய் நொடியெல்லாம்

                      **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 167
Post by: AnoTH on December 13, 2017, 09:06:31 PM
நம் வாழ்வில் எத்தனையோ
ஆட்டங்களைக்  கடந்து போகிறோம்
பயணித்தப் பாதைகளை சற்றுத் 
திரும்பிப் பார்க்கையில்
ஓடி ஆடிய மணல் புழுதியின் வாடைக்  காற்றில்
நாம் தொலைத்து நிற்கும் பல விளையாட்டுகளை
எண்ணிப் பார்க்கிறோம்.

சுட்டெரிக்கும் வெயிலிலும் சுறுசுறுப்பாய்
இயங்கிய தேகமும். சுவிட்சர்லாந்து பனி மழையில்
சுருங்கிப்போகக் கண்டேனோ ? 
என் உயர்வை மீறியும்  உயரம் பாய்ந்து
சாதித்த நாட்கள். மானுட சாதி வெறியால்
துயரத்தோடு சாகும் சமூகத்தில் என் வாழ்வுமோ?

படி படி என்று அன்னை சொன்ன
வார்த்தைகளை மீறி,
கபடி கபடி என்று மீசையை 
முறுக்கேற்றி வீரத்தை மெருகேற்றி,
உடலை ஆயுதமாய் கொண்டு
களம் கண்ட நாட்கள் போய்,
அப்துல் கலாம் சொன்ன கனவையும் 
தொலைத்து நிற்கிறோமோ?

பல்லாங்குழியில் பல புதுமைகளைக் 
கண்ட தமிழன், தன் அடையாளம்
தொலைத்து பலர் குழிகளில் வீழ்ந்த
வரலாறும்  இனி மீளுமோ ?

சுதந்திரப்  பறவைகள் வானில் பறந்திட
சுந்தரப்  பாலர் படைகளாய் நம் மண்ணில்
எம் கால் தடம் பதிந்திடா இடமுண்டோ மானிடா?

நம் இலக்கறிந்து மின்னல் வேகமாய்  ஓடிய காலம்
வாழ்வில்  இலக்கு ஏதுமின்றித்  திறமைகள்
வாடிடுதே ஒவ்வொரு நாளும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென 
நாம் ஆடிய விளையாட்டுகள் பல,
இன்று எமை ஆட்டிப் படைக்கும்
கல்வியில் சில மாற்றங்களைக் காண 
நாம் ஓன்றுபட  மறுத்த நாட்கள்,
அவள் மரணத்தால் எம் மனதை
நெருடும் முட்கள்

வாழ்வில் எத்தனை ஏற்ற இறக்கம் வந்திடினும்
முயற்சி எனும் ஒற்றைச்  சொல்லை கற்றுக்கொடுத்த
விளையாட்டுகளை தொலைத்திடில்
பல விலைகள் கொடுத்தாலும் நாம் இழக்கப்போகும்
வாழ்வியலை எவராலும்  மறுக்க இயலாது.