Author Topic: தைப்பூச விரத முறை  (Read 647 times)

Offline kanmani

தைப்பூச விரத முறை
« on: January 25, 2013, 09:57:43 AM »
தைப்பூசம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இதேபோல், மாலையிலும் குளிந்து விட்டுச் சிவபூஜை  செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை  அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.