Author Topic: சர்தார்ஜி ஜோக்ஸ்  (Read 2122 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சர்தார்ஜி ஜோக்ஸ்
« on: November 09, 2011, 08:16:06 PM »
நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!
...

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!
...

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

...

சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று
...
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
...
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
...

நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.."
...

ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

...

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை.. நான் பாண்டாசிங்."

அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை..நான் பாண்டாசிங்."

அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."

காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் "அரே பச்சா... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே"

...

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.

சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.

கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். "ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்."


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #1 on: November 09, 2011, 08:35:31 PM »
nala sirikka vatchuta shur
 
last one super
:D

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #2 on: November 10, 2011, 03:24:45 AM »
haha namma imp ya irukumo sttarji
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #3 on: November 11, 2011, 07:30:23 AM »
ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...
ஜிம்மி ; லொள்.. லொள்..
த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. ; ஜாக்கி....
ஜாக்கி ; லொள்..லொள்..
த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியேசெய்கிறது]
த.க.நி. ; மாதவ்..
மாதவ் சிங் ; லொள்..லொள்..
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்புரியாது..!
********

சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?”

“பஞ்சாப்பில்...”

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”

“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”
****

ஒரு நேர்முகத் தேர்வில்...

அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்..
***

பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.



3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #4 on: November 11, 2011, 01:35:30 PM »
//  ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும்  //

nee entha jimmiya solura
ungalukula ethavathu sandai ya en ipadi solura avala

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #5 on: November 13, 2011, 05:44:59 AM »
 >:( rempooooooooo

Quote
“நீங்க எங்க பிறந்தீங்க..?”

“பஞ்சாப்பில்...”

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”

“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”

sema comedy :D
                    

Offline RemO

Re: சர்தார்ஜி ஜோக்ஸ்
« Reply #6 on: November 16, 2011, 11:19:31 PM »
apple :D athu chuma ;)