Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 23/02/2014 (Feb 23rd)  (Read 733 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

மேஷம் :

சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
 
 
ரிஷபம் :

பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்
 
 
மிதுனம் :

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே
 
 
கடகம் :

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்
 
 
சிம்மம் :

எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
 
 
கன்னி :

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்
 
 
துலாம் :

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவுக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மின்னல் வேகத்தில் பல பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை
 
 
விருச்சிகம் :

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
தனுசு :

அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
மகரம் :

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
 
 
கும்பம் :

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்
 
 
மீனம் :

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்