Author Topic: 'ஓவர் செல்லம்' உங்களுக்கு ஆகாது!  (Read 2694 times)

Offline RemO

புதிதாக திருமணமான ஜோரில் என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பது தெரியாமல் எதையாவது உளறிக்கொட்டி முழிப்பது ஆண்களின் வழக்கம். சில விஷயங்கள் அது நன்மையை ஏற்படுத்தினாலும் பெரும்பலான விஷயங்களில் அதுவே ரிவர்ஸ்சில் திரும்பிவிடும். எனவே புதிதாக திருமணமானவர்கள் தங்கள் மனைவியிடம் என்ன பேசலாம் எப்படி பேசலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

காதலியின் நினைப்பு ஆபத்து


புதிதாக திருமண உடன் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டும் விதமாக, பழைய நினைவுகளை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டாம். பழைய காதல் நினைவுகளில் சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாறில் அதையெல்லாம் மனைவியிடம் அவிழ்த்து விடக்கூடாது. அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு ஆயிரக்கணக்கான கேள்வி கேட்டு குடைந்து விடுவார்கள் ஜாக்கிரதை.

ஆபத்தாகும் பொக்கிஷங்கள்

பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள். அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலி பண்ணிடுங்க. ஏனென்றால் உங்கள் மனைவி எப்போது சி.பி.ஐ அதிகாரியா மாறுவாங்கன்னு தெரியாது.

நண்பர்களை பற்றி மூச்

நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. முக்கியமாக உங்களுக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி” நண்பர்களைப் பற்றி பேச்சே கூடாது!!

கையேந்துவது ஆபத்து

கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத் தெரியலாம். ஆனால் மனைவி என்று வந்தபின்னர் செய்யும் எல்லா செலவுக்கும் சின்னப் பையன்போல் கணக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்ல வேண்டாம்!. புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பத்தில் எல்லாமே நல்லதாகத் தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்.

தைரியசாலியாக காட்டிக்கொள்ளுங்கள்

உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும். பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள். தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொன்னால் பாடி ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக் என்று நினைக்க ஆரம்பித்து விடுவர். எனவே எல்லவற்றையும் சொல்லத் தேவையில்லை. தொடக்கத்தில் இருந்தே இதைக் கடைப்பிடித்தால் நீங்கள்தான் ராஜா.

உங்களை சொந்தக்காலில் நிற்பவர், நீங்களே தைரியமாக முடிவெடுப்பவர் என்று உங்களின் மனைவி எண்ணுவார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா, அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை. சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்கக் கூடாது என்ன சரியா?

ஓவர் செல்லம் ஆகாது

வாழ்க்கையை தொடங்கும் போதே லகானை சரியாக பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு பின்னர் திடீரென்று முரண்டு பிடித்தால்தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் எழும். எனவே எதற்கு சரி சொல்லுவது என்பதே முதலியே முடிவு செய்து விடுவது நல்லது. அப்புறம் பாருங்கள் வாழ்க்கை உங்களுக்கு வசப்படும்.