Author Topic: கோதுமை ஹல்வா  (Read 472 times)

Offline kanmani

கோதுமை ஹல்வா
« on: November 05, 2012, 12:18:46 PM »

    சம்பா கோதுமை - ஒரு கப்
    சர்க்கரை - 2 1/2 கப்
    நெய் - 1 முதல் 1 1/4 கப் வரை
    பாதாம் - 15
    ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
    முந்திரி பருப்பு - 15
    எலுமிச்சை - ஒரு மூடி
    கேசரி கலர் பொடி - கால் தேக்கரண்டி

 

 
   

கோதுமையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.
   

மறுநாள் காலையில் மிக்ஸியில் கோதுமையுடன் ஒரு கப் நீர் சேர்த்து அரைத்து பாலை ஒரு சல்லடையில் வடிகட்டவும். மேலும் இரண்டு முறை அரை கப் நீர் சேர்த்து பால் எடுக்கவும். வடிக்கட்டிய பாலை 3 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
   

பாதாமை வெந்நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி சிறிதளவு பாலுடன் சேர்த்து நல்ல நைசாக அரைக்கவும். அரைத்த கோதுமைப் பாலின் மேல் தெளிந்த நீரை வடித்து விடவும். கீழே பால் கெட்டியாக இருக்கும். அத்துடன் 3 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும். அத்துடன் கேசரி பவுடரை சேர்த்து கலக்கவும்.
   

சர்க்கரையுடன் ஒரு கப் நீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை பாகாக்கவும்.
   

அதில் கோதுமைப்பாலை விட்டுக் கிளறவும். பாலில் அரைத்த பாதாமையும் சேர்க்கவும்.
   

கைவிடாமல் கிளறவும். ஹல்வா கெட்டியாகி, நன்கு பளபளப்பாக வரும்.
   

அடியில் ஒட்டும் போது நெய்யை உருக்கி சிறிது சிறிதாக சேர்க்கவும்.
   

நெய் பிரிந்து வந்து ஹல்வா கெட்டியான பின்பு, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
   

ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகளாக்கவும். அப்படியே கிண்ணத்தில் போட்டும் சாப்பிடலாம்
   

அட்மின் சொன்ன // இந்த ஒரிஜினல் அல்வாவை, கோதுமை அல்வான்னு சொல்ல வேண்டிய நிலைமை வந்துடுச்சு// ஒரிஜினல் கோதுமை ஹல்வா இதுவே! கொஞ்சம் சிரமப்பட்டு, திறமையாகச் செய்தால் மணமும், சுவையும் கிறங்க அடிக்கும்!

 

கோதுமைப்பாலுடன் 3 கப் நீர் சேர்த்துக் கிளறினால்தான் நன்கு வேகும். பாலை விட்டதும் கைவிடாமல் கிளற வேண்டும். எலுமிச்சை ரசம் பிழிவதால் ஹல்வா ஒட்டாமல் நல்ல ஷைனிங்காக இருக்கும். ஹல்வா செய்ய சற்று அதிக நேரம் பிடிக்கும். பொறுமையும், அதிக அக்கறையும் இருந்தால் எல்லாருக்கும் சுவையான ஹல்வா கொடுக்கலாம்!!!