Author Topic: ஜவ்வரிசி பாயசம்  (Read 1004 times)

Offline kanmani

ஜவ்வரிசி பாயசம்
« on: November 05, 2012, 12:28:09 PM »

    ஜவ்வரிசி - கால் கப்
    பால் - 1 கப் - 1 1/2 கப்
    நீர் - ஒரு கப்
    முந்திரி, திராட்சை - தேவைக்கு
    பாதாம், பிஸ்தா (விரும்பினால்)
    நெய் - ஒரு தேக்கரண்டி
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய் தூள்

 

 
   

ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும்.
   

பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும்.
   

பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
   

அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
   

சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.
   

இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து எடுக்கவும்.
   

பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா தூவி கொடுக்கவும்.

 

விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம். குழந்தைகள், பார்ட்டி போன்றவைக்கு பாதாம், பிஸ்தா, ரோஸ் மில்க் ஷேக் தயாரிக்கும் ட்ராப்ஸ் சில துளிகள் கடைசியாக சேர்த்து கலந்தால் அந்த சுவையும், கலரும் கிடைக்கும். பார்க்க வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். இதே போல் ஜவ்வரிசி, சேமியா கலந்தும் செய்யலாம். ஜவ்வரிசியை ஊற வைக்காமல் நெய்யில் வறுத்தும் செய்யலாம். பசும்பாலோடு கண்டன்ஸ்டு மில்க் சிறிது சேர்த்தும் செய்யலாம். பசும்பாலுக்கு பதிலாக அடுப்பில் இருந்து எடுத்த பின் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். ஒவ்வொன்றும் சுவையில் வித்தியாசப்படும்.