Author Topic: கோதுமை ரவை கேசரி  (Read 486 times)

Offline kanmani

கோதுமை ரவை கேசரி
« on: November 05, 2012, 12:34:57 PM »

    கோதுமை ரவை - ‍ ஒரு கப்
    சர்க்கரை - ‍ ஒரு கப் (அ) சுவைக்கேற்ப
    நெய் - ‍ 2 மேசைக்கரண்டி
    முந்திரி - ‍ 8 -10
    காய்ந்த‌‌ திராட்சை - ‍ 10-15
    ஏலக்காய் - ‍ 2
    கேசரி க‌ல‌ர் - ‍ 2 பின்ச்
    தண்ணீர் - ‍ 3 கப்

 

 
   

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
   

வெறும் கடாயில், கோதுமை ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். தீ மெல்லியதாக இருத்தல் அவசியம். வ‌றுத்த‌ ர‌வையை ஒரு தட்டில் கொட்டி ஆற‌ விட‌வும்.
   

அடுத்து, ஒரு குழிவான‌ க‌டாயில் ஒரு தேக்கரண்டி நெய்யை போட்டு சூடாக்கி அதில் முந்திரி, காய்ந்த‌‌ திராட்சையை ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌ போட்டு பொன்னிறமாக வ‌றுக்க‌வும். இதை த‌னியே ஒரு த‌ட்டில் எடுத்து வைக்க‌வும்.
   

பிற‌கு அதே பாத்திர‌த்தில், 3 க‌ப் த‌ண்ணீர் ஊற்றி கொதிக்க‌ விட‌வும். இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கேசரி க‌ல‌ர் சேர்க்கவும்.
   

சர்க்கரை கரைந்து, மேலும் ஒரு கொதி வரும் நிலையில், வறுத்து வைத்த கோதுமை ரவையை, சிறிது சிறிதாக கொட்டி, கட்டி விழாமல் கலக்கவும். 2,3 தேக்கரண்டி நெய்யை அவ்வப்போது விட்டு, கிளறிக்கொண்டே இருக்கவும்.
   

தண்ணீர் எல்லாம் வற்றி, கோதுமை ரவை வெந்தபதம் வந்ததும், ஏற்கனவே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
   

மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
   

சுவையான‌ கோதுமை ர‌வை கேச‌ரி த‌யார்.

 

சர்க்கரை அளவை அவரவர் விருப்பம் போல குறைத்து, கூட்டிக் கொள்ளலாம். கேச‌ரி முடிக்கும் போது கொஞ்சம் தண்ணீர் விட்டதுப்போல தெரிந்தாலும், சிறிது நேரம் ஆறியதும், கெட்டிப்பட்டு விடும்.