Author Topic: ஸ்டஃப்டு குலோப்ஜாமூன்  (Read 412 times)

Offline kanmani

ஸ்டஃப்டு குலோப்ஜாமூன்
« on: November 05, 2012, 12:39:45 PM »

    குலோப்ஜாமூன் மிக்ஸ் - 2 கப்
    கலர் எசன்ஸ் - ஒரு துளி
    சர்க்கரை - 4 கப்
    தண்ணீர் - 4 கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
    வறுத்த பிஸ்தா துண்டுகள் - கால் கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

 

 
   

ஸ்டஃப்டு குலோப்ஜாமூன் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
   

முதலில் தண்ணீரில் சர்க்கரை, பாதி ஏலப்பொடி சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
   

கொடுத்துள்ள மாவில் மூன்றில் ஒரு பங்கு எடுத்து கலர் எசன்ஸ் மற்றும் மீதி ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து வைக்கவும். மீதி உள்ள மாவை நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
   

பிசைந்த இரண்டு மாவையும் படத்தில் உள்ள அளவில் உருட்டி வைக்கவும்.
   

இப்போது கலர் மாவில் செய்த உருண்டைகளை வட்டமாக தட்டி அதனுள் சிறிது பிஸ்தா துண்டுகளை வைத்து மூடவும். இதுபோல் நான்கைந்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
   

பிறகு கலர் சேர்க்காத மாவில் செய்த உருண்டையை குழித்து அதனுள் பிஸ்தா வைத்த கலர் உருண்டையை வைக்கவும்.
   

இந்த உருண்டைகளை மூடி உங்களுக்கு விருப்பமான வடிவில் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
   

இதுபோல் ஐந்துருண்டைகள் செய்து சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாய் பொரிக்கவும்.
   

பொரித்து எடுத்து ஆறியபின் மீண்டும் பொரித்த உருண்டைகளை மறுபடியும் செந்நிறமாகும்வரை பொரிக்கவும்.
   

பிறகு பொரித்தெடுத்ததை பாகில் ஊறவைக்கவும்.
   

சுவையான பிஸ்தா ஸ்டஃப்டு குலோப்ஜாமூன் ரெடி.
   

இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. இளவரசி அவர்கள் செய்துக்காட்டியுள்ளார்.

 

இதில் பிஸ்தாவுக்கு பதில் வறுத்து பொடித்த முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் ஏதோ ஒன்றோ அல்லது அவற்றின் கலவையையோ ஸ்டஃப் செய்யலாம். இரண்டுமுறை குறைந்த தீயில் பொரிப்பதால் சீராக எல்லா பாகமும் நன்றாக பொரிவதுடன், சிறிது கிரிஸ்பியாகவும் தீயாத அதே சமயம் நல்ல செந்நிறத்தில் கிடைக்கும்.