FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on November 28, 2015, 11:06:12 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: MysteRy on November 28, 2015, 11:06:12 PM
நிழல் படம் எண் : 081
இந்த களத்தின்இந்த  நிழல் படம் SONY (a) RAMஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/081.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: AruN PraSaD on November 30, 2015, 10:02:23 AM
ஒரு வேலை சோறு
தேடி அலைவான் பாரு
ஒரு பருக்கைக் கிடைத்தாலும்
தன் தம்பிக்கு குடுப்பான் பாரு
தட்டை ஏந்தும் கையில்
தம்பியை ஏந்துகிறான்
சோற்றுப் பெட்டியை சுமக்கவேண்டியவன்
சேற்று மட்டையில் வாழ்கிறான்


~ Arun prasad
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: StasH on December 01, 2015, 09:29:19 PM
அந்தி மாலை இளம் இருட்டு
மைதானத்தில்
கால்பந்து விளையாட்டு !

எல்லை கோட்டை தாண்டி
ஆடுகளத்தில் பாதம் பட
குறைந்த பட்ச தகுதி
அரும்பு மீசை ...

மெழுகுவத்தி முகம்
இவனுக்கு ; ஆதலால்
கோட்டை தாண்டும் பந்தை
மீட்டு வரும் பணி ...

-----------------------------------------

கண்களில் மல்லிகை
இதழ்களில் ரோஜா
புதரினுள்
புதிரான பூச்செடி !

கருவில் உதைத்த குழந்தையை
புதரில் எறிந்து
பழி தீர்த்துக்கொண்டாள்
இவள் தாய்

தாய்ப்பாலுக்கு வாய்ப்பில்லை
புட்டிப்பாலுக்கும் வழியில்லை...

இருந்தும்,

பொக்கை வாய் அசைவில்
நல்லோவியம் வரைந்து,
காற்றில் நீச்சலடித்து,
புதிய ராகத்தில் பாடினாள்
இவனை பார்த்து...

பந்தை எடுக்க வந்த
சிந்தை மறந்து போனான்
இவன்;

மண்டியிட்டு
சட்டை தொட்டிலிட்டு
தாவி எடுத்து ; தோளில் ஏந்தி
வேக நடை போட்டான்

தங்கச்சி பாப்பாவை
தந்தை தாயிடம் காட்ட ...

அங்கே,
கால்பந்து மட்டும் கிடந்தது
அனாதையாக !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: ReeNa on December 02, 2015, 01:44:31 AM
உன் தாய் இல்லை நான் ஆனாலும்
ஆரிரரோ தாலாட்டு பாடினேன்.
உன் தந்தை இல்லை நான் ஆனாலும்
உன்னை தூக்கி சுமந்தே வந்தேன்.

அறியாத வயதில் தாய்பாசம் தேடினேன்
அது கிடைக்காது என அறிந்து 
கலங்கி உள்ளம் துயருற்றேன்.
என் துயர் நீயும் அடையா வண்ணம்
என் பாசத்தை உன் மேல் பொழிந்து
நானும் உனக்கு இன்னொரு தாயானேன்.

உலகில் வறுமை ஏற்படுத்தும் ரணங்கள் ,
பெற்றோரில்லா பிள்ளைகள் படும் அவதிகள்   
இவை ஒவ்வோன்றையும் எதிர் கொள்கிறேன்,
என் தோள்கொடுத்து தங்கிக்கொள்கிறேன்
என்றும் அவை உன்னை தீண்டக்கூடாது
என்ற  உரமிக்க உறுதியோடு!

இம்மண்ணில் நீயே என் முதல் சொந்தம் இன்று
என் செல்ல தங்கை நீயே போதும் என்றும்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: SweeTie on December 03, 2015, 06:13:31 AM
நாம் கேட்டுப்பிறந்ததில்லை
இறைவன் கொடுத்த வரம்
ஒரே வயிற்றில் கருவாகி
ஒரே தாய்க்கு பிள்ளைகளாய்
பாசம் என்ற வேலிக்குள்
நேசம் வைத்து
அன்பெனும் பூமாலையில்
ஒரே நூலில் தொடுத்து
உருவேடுத்தோம் உடன்பிறப்பாய்

தங்கை உனைச் சுமப்பேன்
தோழிலும்  மார்பிலும்
தாயாக உன்னை அணைப்பேன்
தந்தையாய் அறம் உரைப்பேன்
நீ என் சேயாக  காலமெல்லாம்
கண்  கலங்காமல்  பார்த்திடுவேன்
மணவாளன் கைப் பிடித்து  நீ
மறுவீடு போகும்வரை ......

தங்கையுனைப்பொக்கிஷமாய்
தாங்கிடுவேன் காலமெல்லாம்
வேங்கை நான் உன் அண்ணன்
வீரமுடன் காத்திடுவேன்
எகிறி வரும் கழுகுகளை
விரட்டி ஒழித்திடுவேன்
சீறி வரும் அரவம்
தீண்டாமல் காத்திடுவேன்
சிற்றெறும்பு  கடித்து நீ
சிணுங்கி அழும்போது
அண்ணன் நான் பரிதவித்து
பாதி உயிர் போய்விடுவேன்

என் கண்ணுக்குள் விழி நீ
உடலுக்குள் உயிர்  நீ
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்
நீயே என் தங்கையாய்
வந்துவிடு  என்  தங்கமே !!!
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: PaRushNi on December 03, 2015, 01:16:38 PM
நிழல் படத்தின் வெளிச்சம் !

வீல்.. வீல்.. என்ற சத்தம் கேட்டு
விரைந்து ஓடினேன் ஓசை வந்த திசையை நோக்கி
பால் சோறு பிசைந்த கரத்தையும்,
சிவப்பு நிறமாய் மாறியிருந்த அன்னத்தையும் கண்டேன்.

பாதி உணவே போதும் என நினைத்து,
பக்கம் இருந்த தன்னை  மறந்து
அத்தனை சீக்கிரத்தில் ஆழ்தூக்கம் என்னவோ? என்றவாறு
தாயின் முந்தியை இழுத்தவண்ணம் இருந்த
மழலையின் அழுகையே அது !

அப்பூவினை சமாதனம் செய்யத் தெரியாது
அள்ளி எடுத்துக்கொண்டது இன்னொரு பிஞ்சுக்கரம்
போருக்கு அர்த்தம் தெரியாத மலரும், மொட்டும்
ஓய்ந்த புயலுக்கு நடுவில் நின்ற காட்சி என் கண்முன்னே

கையிலிருந்த புகைப்படக் கருவியை நேரே எடுத்து
ஒளியிழந்த அவ்வைரங்களை கண்ணோக்கி படம் பிடித்தேன்
அப்பெட்டியிலிருந்து புறப்பட்ட வெளிச்சம்
இந்த நிழலுலகின் பிரதிபலிப்பாய் இருக்கட்டும்..
உலகத்திற்கு தெரியட்டும் என்று.

  கிறுக்கலுடன்
  -பருஷ்ணி  :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
Post by: Dong லீ on December 04, 2015, 11:48:43 PM
".மண்ணில் விதைக்கப்பட்ட
மனிதர்கள் -அதில் ...
முளைத்து முன்னூறு இலைகள் விட்டும்
தம் மண்ணாங்கட்டி மூளையில்
மனிதம் இன்னும் முளைத்திராத
களிமண் மூட்டைகளாய் பலர்

இரும்பு பெட்டகத்தில்
நோட்டு கட்டுகளுடன்
இதயத்தையும் சுருட்டி
பூட்டி விட்ட மனிதர்கள்

பணத்தாசையை மனதில் பதித்து
மனித நேயத்தை மண்ணில் புதைத்து
உலகை உலுக்கும் பேராபத்தாய்
 வாழும் மனித மிருகங்கள்

முளைத்து மூணு இலைகூட விடாத
இந்த சிறுவனுக்குள் இருக்கும்
மனிதம்
உங்கள் இதய கண்களை
திறக்கவில்லையா
திருந்துங்கள் மக்களே"

என்றெல்லாம் வசைபாடி  நான்
கவிதை எழுத போவதில்லை
இந்த ஓவியம் என் வரிகளில்
எப்படி உயிராகிறது
என காண்போம்


(http://i.imgur.com/Hx8qFjZ.jpg)

Re:ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 081
on: December04,2015,11:52:12 PM


Dong லீ
posts-1,00,000

"மனிதநேயமும் உதவும் பண்பும்
கலந்த சொர்க்கம்
என் தமிழகம்
இங்கு ஒவ்வொருவரும் 
இந்த சிறுவனை போல்
மற்றவரை அரவணைத்து
அன்பால் உலகை வெல்பவர்கள்

உலகில் எங்கு யாருக்கு
என்ன துயரங்கள் வந்தாலும்
அரவணைக்க
என் தமிழ்நாடே கிளம்பும்டா "

.