FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on June 27, 2021, 12:14:13 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: Forum on June 27, 2021, 12:14:13 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 271

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  தோழி 'அக்னி' அவர்களால்         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/271.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: எஸ்கே on June 27, 2021, 12:46:05 PM
       
தனிமையின் அவஸ்தை தான் எனக்கு மட்டும் தான் என்று இருந்தேன் ஆனால்
அவளுக்கும் உண்டு என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன்...! 💞

காத்திருப்பின்  வலியை நான் மட்டுமா உணர்ந்தேன் அவளும் தான்...💞
ஆனால் அதன் வலி மிகவும் சுகமானது..
அதை விவரிக்க இயலாது அனுபவித்தால் தான் தெரியும் ...!!💞

எனக்காக ஒருத்தி இருக்கிறாள், என்று தெரிந்ததும் இந்த மனம் ஏனோ
பட்டாம் பூச்சியாய் லேசாக பறக்கிறது..💞
என் வருகைக்காக காத்து இருப்பாள் என்றதும் என் மனம் குழந்தை போல்
துள்ளி குதிக்கிறது...!!!💞

ஆனால் அவளுக்கோ நான் எப்போது வருவேன் என்று அவள் மனம் ஏங்குகிறது.💞
அந்த ஏக்கம் ஏனோ அவள் மனம் புண்படும் படி ஆவதற்கு.
முன்  அவளிடம் நான் செல்ல வேண்டும்...!!!!💕

பல நாள் நான் காத்து இருந்தேன் அவளுக்காக அப்போது எல்லாம்
என் மனம்  உடைந்து போனது இல்லை ...💞
ஆனால் எனக்காக அவள் ஒரு நாள் காத்து இருந்தாலே என் மனம்.
ஏனோ படாய் படுத்துகிறது அவளிடம் செல்ல ...!!!!!💞

ஆண்களின் மனம் ஏனோ தனக்கு பிடித்தவளின்  மனம் நோகாமல்
இருக்க வேண்டும் என ஏங்குகிறது...💞
ஆனால் அவளின் மனமோ என்ன நிலமை என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்...!!!!!!💞

அவள்  தனிமையின் பிரிவை போக்க நான் வருகை புரிந்தே ஆக வேண்டும் .💞
என் வருகைக்காக காத்திருக்கிறாள்  என் மனம் கவர்ந்த என் ஆசை காதலி...!!!!!!💞
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: இளஞ்செழியன் on June 27, 2021, 01:02:36 PM
நான் போனதைக் குறித்தான சலனங்கள்
ஏதுமின்றியும் இருந்திருக்கிறாய் நீ

நான் போனது கவலையாகி வாட்டிட
என் வருகைகள் காத்தும் இருந்திருக்கிறாய்

நான் போனது குறித்து கோபம்
கொண்டும் இருந்திருக்கிறாய்

தூரமாய் போய்விட்டேனோ?
என தொலைவுகள் ஆய்ந்தும் தொலைந்திருக்கிறாய்

‘நிம்மதியாகவே போ, பத்திரம் ‘
என ஆறுதல்கள் சொல்லியும் வழி அனுப்பியிருக்கிறாய்

எப்படி போகலாம் நீ என உரிமைகளோடு
சண்டைகளும் இட்டிருக்கிறாய்

எதுவானாலும் போய்விடதே என்னோட இரு என உறுதிமொழிகளும் வாங்கியிருக்கிறாய்

ஒருவேளை போனாலும் திரும்ப வா
என கோரிக்கைகளும் வைத்திருக்கிறாய்

‘உனக்கான இடம் உன்னை மட்டுமே காத்திருக்கும்’
என உருகவும் செய்திருக்கிறாய்

போனதின் எதிர்வினையாக தனித்து விடப்பட்டதாக
உணர்ந்து உடைந்தும் இருக்கிறாய்...

வாழ்வு தனித்தாட வேண்டிய சமர் என்பதாக
உடைந்த துண்டுகளை ஒன்று கூட்டி அழுத்தமும் காட்டியிருக்கிறாய்

இருக்கிறேனா இல்லையா என
அடிக்கடி பரிசோதித்து உறுதிபடுத்தியும் கொள்கிறாய்

‘நமக்கானது  நம்மை விட்டுப் போகாது’
என பொருள்படும் கவிதையை மனதுக்குள்
முணுமுணுத்துக் கொள்கிறாய்

போவதும் இருப்பதும் உன் பாடு
என்பதாய் விட்டும் விடுகிறாய்

போய்விடுவதைக் குறித்த பதைப்பதைப்பு மட்டும்
அவ்வப்போதாய் தொற்றிக் கொள்கிறது உன்னை

இப்போதெல்லாம் ‘போகாதே இரு’ என சொல்லிடும் மனத்திடம் இருப்பதில்லை உன்னிடம்

இருக்க சொல்வதில் என்ன இருந்துவிடப் போகிறது?..

உனக்கானது எனில்
உன்னை விட்டுத் தான் போய்விடாதே

ஆனாலும் தனித்து விடப்பட்ட பாதைகள் தூரமானவை...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: Mr Perfect on June 27, 2021, 01:39:49 PM


காதலியே இரண்டு வருடங்களாக இரு கைகள் கோர்க்கவில்லை இருந்தும் இன்பமாய் வாழ்கிறோம்...!!💘

 காரணம் நீ அலைபேசி வாழ்க்கை அன்புக்கு ஆதரமாய்....!!💘

 அன்றாட இன்ப துன்பங்கள் ஆசையாய் பரிமாற அலைபேசிக்கு ஆனது அலுப்பு...!!!💘

 இன்றுவரை இரங்காத  இன்னல்கள் இதயத்தில் இருக்கும்....!!!💘

 இவளுக்காக உறங்காத தனிமை போராட்டம்....!!!💘

 ஏறப்போகும் மூன்றுமுடிச்சு அது எனக்கும் உனக்கும்...!!!💘

 நெருங்கி விட்டேன் உன் கரம் காண....!!!💘

 வெற்றி நிச்சயம் இதுவே என் சத்தியம்....!!!💘

 பதட்டம் வேண்டாம் பைங்கிளியே உனக்கு இனி நான் பாதுகாவலன் உன் கூண்டாக....!!💘
     
கவலை வேண்டாம் காதலியே காத்து கொண்டிரு கரம் கோர்க்க கணவன் என்னுடன்....!!!💘

ஆண்டவனும் இறங்கிவிட்டான் அயராத அழு குரலை எண்ணி...!!💘

பிறப்பு வேறாக இருந்தாலும் இறப்பு என்னோடு அமையட்டும்...!!!💘

பார்த்த கஷ்டங்கள் பறந்தோட இனி பயணிப்போம் புதிய பாதையை புன்னகையுடன்...!!💘


நீ கிடைக்க நானும் நான் கிடைக்க நீயும்...!!💘

செய்யும் பயணம் நிச்சயம் கரை சேரும்
 சேரும் வரை சொர்க்கமே.... 💘

பைங்கிளியே உனக்காக என்றும் கார்த்து கொண்டிருப்பேன் உன் நினைவோடு நீ என்னிடம் வந்து சேர்ந்தடைய💘


                                - இப்படிக்கு உன் அன்பு காதலன் 🌹
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: இணையத்தமிழன் on June 27, 2021, 02:54:56 PM
அவளும்  அங்கே  தனிமையில்  வாட
நானும் இங்கு  தவிப்பினில் நாட
கண்களில் கண்ணீர் ஓட

என்  எதிராய் நீ இருந்தும்
ஏக்கத்தோடு காத்திருக்கேன்
காதலோடு கதைத்திடவே
கண்ணிமைக்காமல் பார்த்திடவே
கைகள்பற்றி நடந்திடவே

மனமும் ஏனோ  ஏங்கிடவே
மதியும் மனதை தடுத்திடவே 

உன்நினைவை நான் சுமந்திட
என் நினைவை  நீ சுமந்திட
நினைவில்மட்டும் நித்தம் பேச 
நிஜத்தில் ஏனோ
நீங்கி சென்றாய்

விழிகளில் நீ வீற்றிருக்க
விழிமூடி நான்  சிரிக்க
விடியாத இரவினிலே
விழிமூடி சிரிக்கிறேன்
வியக்கவைக்கும் உன்னழகை
விழிமூடி ரசிக்கிறேன்

மனக்கண்ணில் கண்டவனோ
மயங்கித்தான் போகின்றேன்
மனம் முழுக்க கனத்திடவே
மரணவலியும் ஏன் பெண்ணே
மாமனிடம் வந்துவிடு
மணந்திடவே  காத்திருக்கேன்

துணையாக நானிருப்பேன்
துச்சமாக நினைக்காதே

துணித்தே  சந்திப்போம்
துணிவோடு வா பெண்ணே
                           -இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: TiNu on June 27, 2021, 03:28:05 PM

ஆளில்லா புகைவண்டி நிலையத்தில்..
இதழோரம் சிந்தும் புன்னகையோடும்..
விழியோரம் ததும்பும்  கண்ணீரோடும்...

கைகுலுக்கி வழியனுப்ப யாருமின்றி..
இரயில் வரும் திசை நோக்கியே..
வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்..

நீர் நிறைந்த.. வெள்ளி ஓடத்தில் நீந்தும்..
என் இரு கன்னங்கரு விழிகளுமே.
தான் காணும் எழில் கொஞ்சும் காட்சிகளை..
அணு அணுவாய் இரசித்து படம் எடுக்க...

என் மனமோ.. ஸ்வர்ணமாய் மின்னும்..
ஆதவனின்  காலை கீற்று ஒளி கூட..
உணர முடியாது.. மரத்து போயிருந்தன...

தனி தனியே... ஓர் காதை தூரம் கடந்தாலுமே..
எங்களையும் இணைக்கும் ஓர் இணை உண்டென
எனை சீண்டி.. எல்லி நகைத்தது தண்டவாளமுமே.

என்னுள் ஏதோ ஓர் உள்ளுணர்வு எழுந்திட.
கைகளிரண்டையும் கோர்த்து... கண்களை மூடி.. 
என்னை நானே உணர தொடங்கினேன்...

உரசி செல்லும் மென்காற்றும் ஓர் துணை..
தீண்ட துடிக்கும் இளவெயிலும் ஓர் துணை..
சுமக்கும் இம் நடைமேடையும்.. ஓர் துணை..

உனக்கு நானே துணை.. எனக்கு நீயே துணை... 
நமக்கு நாமே துணை ..  என் சிந்தையும்..
என்னுடன்  சுந்தரமாய் உரையாடியது..

திடீரென என் அமைதியும் உடைந்து சிதற.....
ஏதோரொரு கூக்குரல்... கண்களை திறந்தேன்...
புகைவண்டியும் சிரித்தது... நானும் உன் துணையே...

என் மனதில் அளவிட முடியாத பாரத்தோடும்.. 
இவ்வழகிய காட்சிகளை பிரிய மனமின்றி... 
எழுத்தேன்... நடந்தேன்... புகைவண்டி நோக்கியே...

இறுதியாக ஓர் முறை திரும்பி பார்த்தேன்..
கண்களின் ஓரத்தில்.. வழிந்த இரு துளிகள்..
நடைமேடையில் விழ.. தொடங்கியது என் பயணம்..

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: AgNi on June 27, 2021, 03:46:39 PM


காத்திருப்புகள் ஒரு தொடர்கவிதை..
பார்த்திரா வாழ்வின் பயணகதை.. 

மனிதர்களற்ற ..
தன்னந்தனி தீவு தனை
தேடி ஓர் தனிமை  பயணம்!

ஓங்கியர்ந்த‌ அடர்மர
பெருங்காடு‌ ஒன்றில்
ஒற்றைரயில்  பாதைகள்...
போகுமிடம் தெரியாது..
வந்தவழியும் அறியாது..
ஓர் ரயில்  நிலையத்தில்
முடிவுறா காத்து இருப்புகள் ஒரு
முடிவுறா பயணத்துக்காக  ....

தலைசுமைகாரியாய் அலைந்த
மேகப்பெண்கள் பொழிந்து தீர்த்து
பின் வேகமாய் கலைய..
நாலாபுறமும் அலையடிக்கும்
சுழல்கடலின் கரைகளில்
தள்ளாடும் ஒடங்கள்..
எங்கேகோ செல்லும்‌
எண்ண அலைகளில்
சிக்குண்டு தடுமாறும் படகு...

இலக்குஇல்லா திசை நோக்கி
கால்வலிக்க ஒரு
காட்டுவழிபயணம்...

வலசை பறவைகள்கூட மார்க்கம் அறியும் ..
காட்டு விலங்குகளும் கதைகேட்டு விலகும்..
புதையல் தோண்டும் சிறுமுயல்   
வசிப்பிடம் போதுமெனக்கு..
மறந்தும் கூட வேறு இணை தேடாத
பட்சிகளின் ராஜ்யத்திலும்
காதல் கதைகள் உண்டு..

விடியல் தேடும் புலராத பொழுதுகளில்..
சலசலக்கும் நதியருகே...
நாணி வளைந்தவிளைந்த புற்கள்..
மலர துடிக்கும் பூக்கள்
வண்டுகளிடம் உத்தரவு கேட்பத்தில்லை..

எதற்கு என்றே அறியா தடங்களில்..
எவரெவரோ சக பிரயாணியாய்..
வருவோரும் போவோருமாய்
கலகலக்கும் சிலசமயம் காடு..

சட்டென மறையும் காட்சிகளாய்
பட்டென பறக்கும் பறவைகள்..
யாருமற்ற பாலைமணலில்
நீரூற்று கிடைக்குமோ?

சூன்ய வெளி பயணத்தில்
சூரிய வெளிச்ச புள்ளிகள்..
முகவரியை தொலைத்துவிட்டு
அகவரி தேடல்..
முற்றும் போட‌நினைத்தாலும்
சற்றும் விடாத கருப்பாய்
சுற்றங்கள்..

பூமியில்  இன்னும் சிலகாலம்
வாழ மின்னும் சில காரணங்களாய்
இந்த மின்மினிப்பூச்சி வாழ்க்கை?!

காத்திருப்புகள் ஒரு தொடர்கவிதை..
பார்த்திரா வாழ்வின் பயணகதை தான்......

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: MoGiNi on June 27, 2021, 08:38:55 PM
தொடரிகளின்
வழித்தடங்களுக்குள்
வாழ்வு பயணிப்பதாக
இருக்கிறது...

தொலைவு கடந்தும் பயணிக்கிறது
உன்மீதான
என் விருப்பங்களும்
வேதனைகளும் ..

தொலைவுகளை குறுக்கிய
காதலுக்கு தெரியவில்லை
விளைவுகளை
அறுவடை செய்ய ..

காற்றுவழிச் சுமக்கும்
இரைச்சல்கள் எல்லாம்
எனக்கு உன் வரவை
கட்டியம் கூறுவதாயுள்ளது..
எனினும்
கானகத்து ஒட்டகமாய்
உன் நினைவுநீரை
அருந்திக் கடக்கின்றேன்
பொழுதுகளை..

எங்கே நீ


விதையாகி போன
ஆசைகளின் துளிர்ப்பில்
அலர்ந்த மலரில்
அதன் சோகங்கள்
நீர்த்துளிகளென
மினுமினுத்து காய்கிறது ..

இந்த வழித்தடத்தின் வழியெங்கும்
எழுதப்படாத ஒரு
தொடர்கதையின் தொடர் புள்ளிகள்
முற்றுத் தேடி அலைகிறது ..

முடிவுறாத பயணமதில்
கனியாத காதல் ஒன்று
நீர் சுமந்து அலைகிறது மேகமென
ஒரு திடீர் தென்றல் அணைப்பில்
அது தன் நீர் சொரிந்து
கலைந்து மறையலாம்
காற்றாகி .... வா .
அதுவரை
காத்திருத்தலின்
பயணங்கள் முடிவதில்லை ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: Spider Man on June 29, 2021, 03:19:01 AM
விட்டு சென்றது நீ அல்ல
உன்னை விட்டு விட்டது நான் தான்

உன்னை அடைய நான் அலைந்தது நான் அறிவேன்
என் தனிமையை நீ அறிவாயா?

எப்போதும் காத்திருப்பாயே இப்போது எங்கே சென்றாய்,

அட! நீ தானே என்று இருந்தேன் நீ இல்லாத இந்த நிமிடம்
எல்லாமே நீ என்றுணார்ந்தேன்,

என் அழுகாய் என் சிரிப்பு என் கண்ணீர் என அனைத்தும் அறிந்தவள் நீ,
அழும் போது உன் மடி தந்து அன்னை என தேற்றியவள் நீ,

எட்டி மிதித்தாலும் எட்டி போகாதவள் நீ,
எட்டடியில் என்னை கண்டதும் குழந்தையாய்  துள்ளி குதித்தவள் நீ,

அனாதையாய் வந்தவனுக்கு உறவேன பல கொடுத்தாய்
இன்று மட்டும் ஏன் தனிமையைய் பரிசளித்தாய்?

இந்நிலை இன்றே கடைசியாய் போகட்டும்
இனி ஒருபோதும் உன்னை நீங்க நிலை வரட்டும்,

வலிகள் ஆயிரம் இருந்தாலும் உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்

சீக்கிரம் வந்து விடு இரயிலே என் தனிமைக்கு துணையாய்...!❤️ 
Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 271
Post by: Cholan on June 30, 2021, 01:17:18 AM

காத்திருந்து கண்கள் சோர்ந்ததடி 
சிறு தூரமும் நீண்ட தூரமானதடி

வேண்டிக்கொண்டேன் கடவுளை
போனவள் திரும்பவரவேண்டுமென

நீயும் வந்தது போல் உணர்ந்து
ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேனடி

வந்தது வெறும் வண்டியே என்று எண்ணி
ஏமாற்றம் கொண்டேனடி

இன்னும் என் மனம் சொல்லும் பொய்யை
நம்பினேனடி பெண்ணே

நீ தந்த நினைவுகளுடன் தனிமையில் காத்திருந்தேனடி
பாதை தான் துரு தூசி பிடித்து போனது

என் உயிர் பிரிந்தாலும் உனக்காக என் ஆன்மா காத்துக்கொண்டு இருக்கும் நீ என்னிடம் வரும் வரையடி

போனவள் இன்னும் வரவில்லை
என உணர்த்தபோது என் நெஞ்சே வெடித்ததுபோலானேன்

எத்தனை வருடங்கள் ஆனாலும்
என் மனம் அந்த நிமிடர்த்திக்காக துடிக்குதடி

நடந்தேன் அலைந்தேன் உன்னை தேடி பெண்ணே
உன் பாதை தெரியவில்லை எங்கு நீ சென்றாயோ

உன்னை தேடி கண்டு பிடிக்கும் முன் என்னுடைய
 வாழ்க்கை முடிந்துவிடுமோ தெரியவில்லையே

என் ஜீவன் நீ வரமாட்டாயா என்று ஏங்குகிறதே   
எத்தனை வருடம் காத்திருப்பேனோ   

உனக்காக என் உயிர் என்றும் காத்திருக்கும் 
தனிமையில் உன் நினைவுகளுடன்