FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on July 04, 2021, 03:20:36 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: Forum on July 04, 2021, 03:20:36 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 272

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/272.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: எஸ்கே on July 04, 2021, 05:25:04 PM

வாழ்க்கையில்  எதிர் வரும்
அவமானங்களை தாங்கி கொள்வதா அல்லது
அவமானத்தை எதிர்கொள்வதா?💕
என்றாவது ஒருநாள் இதை ஏற்றுக்
கொண்டு தானே ஆக வேண்டும்!💕

வாழ்க்கையில் சுக துக்கங்களை கடந்து
தானே செல்ல வேண்டும்.💕
ஆனால் அவ்வளவு எளிதாக கடக்க இயலாத
இன்ப துன்பங்களும் கடந்து போகின்றன!!💕


எப்போதும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தால்
என் செய்வேன்.💕
ஏமாற்றத்தின் மைய புள்ளி முதுகில்
 குத்துவதாக இருந்தால் என் செய்வேன்!!!💕

நேருக்கு நேர்  வரும் அவமானங்களும் ,
விமர்சனங்களும் எதிர் கொள்வது அவசியம்.💕


ஆனால் கணிக்க முடியாத பின்னால்
இருந்து வரும்  விளைவுகளை எப்படி எதிர் கொள்வேன்!!!!💕

ஆனால் எதிர் கொண்டு வெற்றி பெறுவதுதான்
 வாழ்க்கையின் அடிப்படை தத்துவமே.💕
அப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தால்
அதுவே வெற்றிக்கான முதல்படி!!!!!💕


எதிர்பாராத விளைவுகளே மனிதனை
 முன்பை விட மேம்படுத்துகிறது.💕
அதுவே அவனை புதிதாக சிந்திக்க
தூண்டும் தூண்டு கோலாகிறது!!!!!!💕

ஏமாற்றத்தின் வலி மிகவும் கொடியது
 ஆனால் நம்பியவர்களின்.💕
ஏமாற்றமோ அதை விட கொடியது ஏதும் இல்லை!!!!!!!💕


வலிகள் தாங்கும் இதயம் கூட எப்போதும்
 சாதிக்கவும் துணை நிற்கும்.💕
வேதனைகளை சாதனைகளாக மாற்ற
புதிய பாதை அமைப்போம் வா !!!!!!!!!💕

அனைத்தையும் எதிர் கொண்டு
 வீரு நடை போடு நண்பா.💕
புதிய எதிர்காலம் உனக்காக காத்து
 கிடக்கிறது வெற்றி நடை போட !!!!!!!!!💕

                                                                             -   தோழன் YesKay 🌹 💕
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: இணையத்தமிழன் on July 04, 2021, 07:20:54 PM
பச்சோந்தி மனிதர்கள்
பகலிலே சிரித்து பேசி
பக்குவமாய் நேரம்பார்த்து
பாதாளத்தில் தள்ளிடவே
பலநாளாய்  காத்திருப்பர்

பச் என்று உரைத்து
பாவமாய் பரிந்துபேசி
பகட்டாய் தான்  நடிப்பார்கள்
பாசம் என்றெண்ணி
பகற்கனவு காணாதே

வாசமில்லா மலரிடத்தே
பாசம்தேடி  ஓடாதே
பாசமற்ற உலகினிலே
பற்றினை தான் நாடாதே

தேவைக்கு கால்பிடித்திட   
முடிந்தபின்  முதுகில் குத்திட
முழுமூச்சாய் முயன்றவனோ
மூச்சிரைத்து போயிருப்பான்
வீழ்வேன் என நினைத்தாயோ

தனித்தே நின்றாலும்
தலைநிமிர்ந்தே  நிற்பேனே
தலைகனம் என்று நீ நினைப்பாய்
அது தன்மானம் என்றுஅறியாமல்
இழப்பது சுயமரியாதையெனில்
இருந்தும் என்ன பயன்
                         - இணையத்தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: suthar on July 04, 2021, 08:55:09 PM
குடி...  மனிதா  குடி..
குடிக்கும் குணம் வந்து
குடித்தபின் உன்
குடும்பம் வாழ்வதெப்படி..?

குடி... சிந்தித்து அளவாய் குடி
குடித்தபின்னே நீ நிதானமிழந்து
குப்புற வீழ்வது அப்படி..?

குடியானவனே  குடி...
குடித்தபின்னே உன் செயலால்
குல பெருமை தொலைவது அப்படி...?

குடி...  நன்றாய் குடி
குடியரசின் அச்சானி சுழல
குடியரசே கடை திறந்து
குடிக்க வைப்பது அப்படி...?

குடி... தினமும் குடி உன்
குடி கெடுக்க
குடியரசே கடை திறந்து
குடிக்க வைப்பதற்கேனும் குடி..

குடி.. எதற்கும் அஞ்சாமல் குடி
குடிக்க அரசே வலியுறுத்துவதால்
குன்றிடாமல் வருவாய் பெருகிட
குடல் அழுகும் வரை குடி...

குடியானவனே அதிகமாய் குடி
குடித்த பின்னே உன்
குடல் அழுகி
குருதி உறைந்து மருத்துவம் செய்தே
குடும்பம் சீரழிவதைவிட
குடித்தே விரைவில் செத்தொழி...  இல்லையேல்

குடிப்பதற்கு முன் யோசி
குடிப்பதால் உன்
குடி மட்டுமல்லாது பிறர்
குடியும் சேர்ந்தே கெடும்,
குடித்தபின் குடலை புன்னாக்கும்,
குடி ஒருவனை குற்றவாளியாக்கும்,
குடிபோதை தவறு செய்ய தூண்டும்,
குடி ஒருவனை நோயாளியாக்கி
குடும்பத்தை சீரழிக்கும்,
குழப்பம் பல ஏற்படுத்தும்,
குழந்தை தொழிலாளரை உருவாக்கும்,
குடியானவனே சிந்தி
குடியை விட்டொழி.....

குடி குடியை கெடுக்கும்...!
குடி அரசின் வருவாய் பெருக்கும்..!!


உங்கள் புதுமைக்கவி
சுந்தரசுதர்சன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: Mr Perfect on July 04, 2021, 09:23:16 PM


இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவனை விட நிழல் போல்
அருகிலிருந்து துரோகியிடம்
தோற்றவனே அதிகம்.💘

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால்
உழைப்பை விட துரோகம் தான்
அதிகமாக இருக்கும்.💘

வேண்டுமானால் எதிரியாய்
கூட மாறி விடுங்கள்..
ஆனால் துரோகியாய்
ஒரு நாளும் மாறி விடாதீர்கள்.💘

இதயத்தைக் கொடுத்தாலும்
துரோகி முதுகில் தான் குத்துவான்.💘
புன்னகையால் உடைத்தெறியுங்கள்
கூனிக்குறுகட்டும் துரோகங்கள்.💘

துரோகம் இருப்பவர்களிடம் கோபம்
இருக்காது..! கோபம் இருப்பவர்களிடம்
துரோகம் இருக்காது இதை
ஆழ்ந்து யோசித்தால் பல
உண்மைகள் புரியும்.💘

பிறருக்கு நம்பிக்கை துரோகம்
செய்வது கொலை செய்வதற்கு நிகரானது..!💘
தற்பெருமை பேசுவது தற்கொலை
செய்வதற்கு நிகரானது.💘

நடுத்தெருவில் நிற்க வைத்தாலும்
யாருக்கும் துரோகம் செய்யாத
மனது சிலருக்கு இருக்கிறது.💘

துரோகம் கத்தியை போன்றது
மற்றவரை குத்தும் போது
சுகமாகத்தான் இருக்கும்..
தன்னைக் குத்தும் போது தான்
கொடூரமாக இருக்கும்.💘

குற்றத்தை மன்னித்து விடலாம்
ஆனால் துரோகத்தை
மன்னிக்க முடியாது.💘

மனம் மரணித்து போக
நோயும் மரணமும் தேவையில்லை
ஏமாற்றமும் சில நம்பிக்கை
துரோகமும் போதும்.💘

போலியான வாக்குறுதிகள்
நம்பிக்கை துரோகத்தின்
மறு வடிவம்.💘

ஒரு அன்பும் ஒரு துரோகமும் போதும்
வாழ்க்கையை உணர்த்தி விட.
நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகிகளை கடந்து
வர வேண்டும் என்பது புரிந்து விடும்.💘

முன் பின் தெரியாதவர்கள் கூட
முதுகில் குத்துவதில்லை.. முகமறிந்த
உறவுகள் தான் அதிகம் குத்துகிறார்கள்..
துரோகம் எனும் கத்தியினால்💘

நம்பிக்கை வைத்தவன்
துரோகம் செய்து விட்டானே
என்று புலம்பாதே..💘
நீ வைத்த
நம்பிக்கை தான் உனக்கு
துரோகியை அடையாளம் காட்டியது.💘

நம்பி வந்தோரை நம்ப வைத்து
துரோகம் செய்தால்.. கல்லும்
கரைந்து போகும் கடவுள்
இல்லை என்று.💕

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: AgNi on July 05, 2021, 11:22:28 AM



மதுவை நாடும் மானிடனே!
மறந்தும் மானம் இழக்காதே
மதியை  அதனில் மயங்கி
சூது தீண்டும் பாவம் சேர்க்காதே!

தேர்வில் தோல்வி அடைந்தவனே..
போதையில் பாதை மாறாதே!
தொழிலில் தோற்று போனவனே..
வோட்காவில் மனம் கரைக்காதே!

காதல் தோல்வி அடைந்தவனே!
விஸ்கியிடம் தஞ்சம் அடையாதே!
கடன் சுழலில் மாட்டி கொண்டவனே..
ஜின் னில் புதைந்து கொள்ளாதே!

ரம்மியில் தோற்று போனவனே!
ரம் மிடம் அடகு வைக்காதே!
வாழ்க்கையில் இன்று தோற்றவனே
போதையில் நாளையை இழக்காதே!

பார் போற்றும் ஆண்டவனுக்கும்
ஊர் மெச்ச வாழ்ந்தவனுக்கும்
பீரங்கி மன்னர்களுக்கும் இங்கு
ஊரடங்கி கல்லறை வாசம் தான் !

துன்பங்கள்  என்றும் நிரந்தரமல்ல!
துரோகங்களும் ஏமாற்றங்களுமே
துயரங்களுமே சாஸ்வதமில்லை
துணிவை துணைகொள்!
போதையை அல்ல...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: DuskY on July 05, 2021, 05:50:36 PM
மனிதன் வாழ்விலே

வலி என்பது மகிழ்ச்சியான தருணம்..
கருவிலிருந்து பிறக்கின்றபோது....
வலி என்பது அனுபவங்கள் ..
முதல் நடை பழகிடும் போது...

வலி என்பது விசித்திரமானது..
தாய் தந்தை கண்டிப்பினில்...
வலி என்பது அவமானமாகிறது..
ஆசானின் முதல் தண்டிப்பில்...

வலி என்பது பயிற்ச்சியாகிறது..
ஒவ்வொரு தோல்வியிலும்...
வலி என்பது முயற்ச்சிக்கு வித்தாகிறது..
வெற்றியை நோக்கி பயணிக்கிறபோது...

வலி என்பது வேதனையானது..
விரும்பியவர் காயங்கள் கொடுத்திடும்போது...
வலி என்பது பக்குவப்படுத்துகிறது..
வாழ்க்கையைக் கடந்த பிறகு...

வலி என்றும் நிரந்தரமானது..
ஆயிரம் துன்பங்கள் சந்தித்த பிறகு...
வலி என்றும் நினைவுகளே..
இன்பங்கள் அனைத்தும் கசப்பானபோது...
 
இறுதியில் அனைத்தும் மற்றவர்க்கு
முன்மாதிரியாக மாறுகிறது..
அனுபவமற்றவர்களுக்கு...
நாம் இழந்த வாழ்க்கையைக் கண்டு..
     
                                                      -அரசி
   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: MoGiNi on July 06, 2021, 11:21:47 PM
வாழ்க்கையின்
சில வரம்புகளை
தாண்டி
பயணிக்க வல்ல
வல்லூறுகளை ஒத்தது உறவுகள்  ..
அது தன்  தடங்களை
இறுக்கப் பதித்து செல்லும் ..
அதன் நக கணுக்களில்
உறைந்திருக்கும்
குருதியின் அணுக்கள்
அது பறித்த
சில உயிரின்
எச்சங்கள் ..

காடு மேடு தாண்டி
கைகோர்த்து பயணமான
நட்பு ..
கடைசி வரை நான் என்று
கைப்பிடித்த மணவாழ்க்கை
நீ இல்லாமல்
நான் ஏதென்று
கைகோர்த்து நடந்த
இரத்த பந்தம் ..

எல்லாம்
முடிந்து கிடக்கிறது
எழுந்துவிட முடியாத
காலப் பாதாளங்களில்
விழுந்து கிடந்தும்
ஏங்கி தவிக்கிறது மனது
ஒரு கைக்காக ..
சிலுவைகளை அறைந்தவர்க்கு
வலிகள் தெரிவதில்லை
அதை சுமப்பவனே
சுமையான பிறகு ..

காற்றை விட
வேகமானது இது
கடலை விட ஆழமானது இது
தீயை விட வெம்மையானது
 பாலை நிலத்தைவிட
வறட்சியானது இது
அதுதான் துரோகத்தின் காங்குகள் ..

எதையாவது மறக்க
எனக்குள்ளே தொலைக்க
ஒரு கோப்பைக்குள் குடிபுகுந்தேன்
அதுவும்
அடேய் குடிகார என
குத்தி குத்தி கிழிக்கிறது ..

எந்த வழியுமில்லை
துரோகத்தின் சமாதியில்
நம்பிக்கை எனும் வேர்கள்
முளைக்காத வரை ..

கழுகுகள்
இன்னும் காத்துக் கிடக்கின்றன
குருதிவடியும்
அதன் நீளக்  கால் நகம் கொண்டு
உன்  முதுகில் கோலமிட ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 272
Post by: SweeTie on July 07, 2021, 01:19:33 AM

மின்  விளக்கில்  மயங்கி
வீழ்ந்து  மடியும்   விட்டில்கள் போல்
மதுவில்  மயங்கி   
மாண்டு  போகும் மனிதன் அவன

மகரந்தத்தை  முகரும் வண்டுபோல்
மதுவை  முகர்ந்து  நாளடைவில்
மது இன்றி  நானில்லை   என்றாகி
மரணத்தை  தழுவுகிறான்

 குடி குடியை கெடுக்கும்  என்பது
விளம்பரத்துக்கு  மட்டும்தான்
சாலையெங்கும்    திருவிழா போல்
டாஸ்க்மார்க்  கடைகள்   
நம்  நாட்டுக்கே  விளம்பரம்

காதலில்  தோல்வியில்  அவன் 
குடிகாரன்   ஆகிவிட்டான்   
பங்குச் சந்தையில்  பலகோடி லாபம்
சந்தோசம்   தாங்காமல்  குடிக்கிறான்

திருமண வீட்டிலும்  குடிக்கிறான்
மரண வீட்டிலும்    குடிக்கிறான் 
யாரோ  விளையாடும்  கிரிக்கெட்
வெல்பவர்  யாரோ  தோற்பவர் யாரோ
இரண்டுக்குமாய் இவன் குடிக்கிறான்

குடிப்பதற்கு  காரணம்  தேடுகிறான்
குடிக்கு  அடிமையானவன் 
முதலில் மதுவை   துரத்தி ஓடுபவன்   
பின்னர் மதுவின்  துரத்தலுக்கு ஆளாகுமிவன்
நாட்டின்   பெரும் குடிமகன்