Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 01/10/2013 (1st Oct)  (Read 1988 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 01/10/2013


மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி ஒத்துழைப்பார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.


ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.


மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.


கடகம்: மதியம் மணி 1.45வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கீட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். மாலை யிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.


சிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் மணி 1.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.



கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

துலாம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


தனுசு: மதியம் மணி 1.45 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தையும் 2, 3 முறை முயன்று முடிக்க வேண்டி வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


மகரம்: கணவன்,மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் பயனடைவீர். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


கும்பம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அரசால் அனுகூலம்உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத் தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத் தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர் கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள. உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.