Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73775 times)

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #420 on: March 15, 2018, 04:55:42 PM »
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

பொழிப்பு: தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் இங்கேயே சொர்க்க உலகம் தான்.


[highlight-text]அடுத்து >[/highlight-text].............. ............... இல்லாயின் ........
................. ................ இல்.
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #421 on: March 16, 2018, 11:49:05 AM »
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

குறள் விளக்கம் :
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.


.................... ......................... என்பர் விருந்தோம்பி
வேள்வி ...................... ...............

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #422 on: March 16, 2018, 04:25:45 PM »
பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.


பொழிப்பு: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.


[highlight-text]அடுத்து >[/highlight-text]..............பொறியில் ................ .............. .
தாளை.......... .......... .
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #423 on: March 17, 2018, 12:24:06 PM »
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடியை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.


................. ................ ............ இந்நான்கும்
எஞ்சாமை ................... ...............


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #424 on: March 17, 2018, 02:46:04 PM »
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

பொழிப்பு : அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.



[highlight-text]அடுத்து >[/highlight-text]................. ..................ஓம்பல்............... .
.................... ................ உலகு.
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #425 on: March 18, 2018, 05:55:57 AM »
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

............... ................. ............. அவரன்ன
ஒப்பாரி ................. ........


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #426 on: March 18, 2018, 09:24:32 PM »
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

குறள் விளக்கம்
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

[highlight-text]அடுத்து >[/highlight-text]................ ............. அவரின்
................ .............. கீழ்.
[/size][/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #427 on: March 22, 2018, 07:38:39 AM »
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

பொருள் :
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

............... ............... ............... கனவினால்
காண்டலின் ................. .............


Offline யாழிசை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #428 on: April 03, 2018, 09:24:45 AM »
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

விளக்கம் 2:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.


அடுத்து >

________  _______  ________ குற்றமே
அற்றந் ________  _________

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #429 on: April 03, 2018, 09:35:17 AM »

[highlight-text]குற்றமே காக்க பொருளாகக்[/highlight-text] குற்றமே
அற்றந் [highlight-text]த்ரூஉம்[/highlight-text]


ுற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Copycat from
Sadan Sis
« Last Edit: April 03, 2018, 09:37:00 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #430 on: April 03, 2018, 10:14:04 AM »

............... .................... அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை .............. ................



Copycat from
Ithi sis
Palm Springs commercial photography

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #431 on: April 03, 2018, 10:27:26 AM »
 ;D ;D ;D ;Dpappa!!!


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

குறள் விளக்கம் :
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

.................... ..................... ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் .................. ...............

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #432 on: April 10, 2018, 06:25:50 AM »
 rithi kakka :)


புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
                   ஒப்புரவின் நல்ல பிற

குறள் விளக்கம்
                பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லவனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலத்திலும் இவ்வுலகத்தில் பெறுதல் இயலாது
[/center]

அடுத்து
            ..................   ............செய்யற்க தான்பிறிது
                    ...................  ................. வினை



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #433 on: April 10, 2018, 07:09:28 AM »
   Hi iceseeee...very gd morning

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

குறள் விளக்கம்:

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

அறத்திற்கே ................. ................... ..................
மறத்திற்கும் .................. .............

Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #434 on: April 12, 2018, 02:10:12 PM »
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொழிப்பு: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; மறத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.


[highlight-text]அடுத்து>................. .................. மக்கள்
............... ............. தவர்.[/highlight-text]
[/size][/color]