Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12856 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 46
« Reply #45 on: July 02, 2021, 11:32:48 PM »


சட்டைல என்ன? பூனை சார்.. அதிலென்ன அவ்வளவு பெருமை??

அமெரிக்காவின் சி.ஐ.ஏ, கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஒரு பூனையை சீக்ரட் ஏஜண்ட்டாக தயார் செய்தது. கரெக்ட்டு..பூனை தான். பூனையை எல்லோரும் செல்லப்பிராணியாகவே பார்க்கும் மனோபாவம் இருப்பதால், அதன் மேல் யாருக்கும் அவ்வளவு எளிதில் சந்தேகம் வராது என்று நினைத்த சி.ஐ.ஏ, 1960ஆம் ஆண்டு இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஒரு பெண் பூனையின் காதில் சிறிய மைக்கையும், அதன் உடலில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரையும் பொருத்தி அதை ஒரு சீக்ரெட் ஏஜண்ட்டாகத் தயார் செய்தது சி.ஐ.ஏ.. பூனையின் உருவ அளவைக் கணக்கில் கொண்டு, சிறிய உரையாடல்களை மட்டுமே பதிவுசெய்யக்கூடிய திறன் கொண்ட சின்ன பேட்டரியும் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டது.



இவை அனைத்தையும் விட, பூனைக்கு பயிற்சி கொடுப்பதுதான் சி.ஐ.ஏவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. தன் மீது பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளை, பூனை மறந்தும்(!) வீணாக்கிவிடக்கூடாது, கருவிகள் வெளியில் தெரியக்கூடாது, குறித்த நேரத்தில் சொல்லும் வேலையைச் செய்ய வேண்டும்; இதெல்லாம் தான் சி.ஐ.ஏ கொடுத்த பயிற்சிகள். ஐந்து வருட பயிற்சிக்குப் பின், பூனை எப்படி வேலை செய்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்பிய சி.ஐ.ஏ அதிகாரிகள், சாலையில் மறுபக்கம் இருந்த ஒரு பார்க் பென்ச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவர்களை நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டு பூனையை கீழே விட்டனர். வேகமாக சாலையைக் கடந்த 20 மில்லியன் டாலர் ஏஜண்ட், டாக்ஸி ஒன்றில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனது. அதோடு சி.ஐ.ஏவின் “பூனை சீக்ரெட் ஏஜண்ட்” முயற்சியும் முடிந்துபோனது.
« Last Edit: July 02, 2021, 11:41:16 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 47
« Reply #46 on: July 03, 2021, 11:50:23 AM »


ஹைட்ரஜன் சயனைடு பாதாம் பருப்பு?


பாதாம் பருப்பில் இனிப்பு, கசப்பு என்று இரண்டு வகைகள் உள்ளன. இதில் இனிப்பு வகை பாதாம்தான் நாம் உபயோகிக்கக்கூடியது. கசப்பான பாதாம் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த வகை பாதாமில் glycoside amygdalin என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நம் உடலினுள் சென்றவுடன் இவ்வேதிப்பொருள் ஹைட்ரஜன் சயனைடாக மாறி, நம்மைத் தின்றுவிடுகிறது. இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் ஹிட்லரின் நாசி கேம்ப்களில் தண்டனைகளை நிறைவேற்றப் பயன்பட்ட விஷவாயுவில் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டது.


நம் உடம்பில் ஒரு கிலோவில் விஷத்தை ஏற்ற, 1.2 மில்லிகிராம் ஹைட்ரஜன் சயனைடு போதுமானது. அப்படிப்பார்த்தால், ஓரிரு கைப்பிடிகள் நச்சுத்தன்மையுடைய பாதாம் போதும், நமக்கு மொத்தமாக டாட்டா சொல்ல.  ஆகவே மக்களே, யாராவது, இது பாதாம் மரம் என்று சொன்னால், அதன் பாதாமை அவசரப்பட்டு சாப்பிட்டுவிடாதீர்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 48
« Reply #47 on: July 04, 2021, 05:35:04 PM »


கண்ணு கெட்டுப்போய்டும் கண்ணா?


பயங்கர சுவாரஸியமான புத்தகம் ஏதாவதொன்றை கீழே வைக்க மனமில்லாமல் படித்துக்கொண்டிருக்கும் நாளில், அம்மா முதல் அந்த வழியாகக் கடந்து செல்லும் வாண்டூஸ் வரை “குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிக்காதே.. கண்ணு கெட்டுப்போய்டும்” என்று அட்வைஸ் மழை பொழிந்திருப்பார்கள். “என்னைக்காவது பாடபுத்தகத்தை இப்படிப் படிச்சிருப்பியா” என்று போகிறபோக்கில் சந்தில் சிந்துபாடும் வேலைகளும் நடந்தேறும். உண்மை என்னவென்றால், குறைவான வெளிச்சத்தில் புத்தகம் படிப்பதால் நம் கண் பார்வையில் எந்தப் பிரச்னையும் வராது. வரும் என்று இதுவரை எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளைச் சீக்கிரம் தூங்கவைக்க, பெற்றோர்கள் கண்டுபிடித்த ட்ரிக்காக இருக்கலாம் இந்தக் “கண் கெட்டுவிடும்” கதை.

குறைவான வெளிச்சத்தில் படிப்பதால், கண்கள் சோர்வடைந்துவிடும் என்பது மட்டுமே உண்மை. அதற்குக் காரணமும் நாமறிந்ததே. அதிக வெளிச்சத்தில் படிப்பதை விட, குறைந்த வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கவனம் புத்தகத்திலிருக்கும் வார்த்தைகள் மீது அதிகம். கண்களும் ஓவர் டைம் வேலை செய்தாகவேண்டிய கட்டாயம். இதனால் கண்களுக்கு வரும் சோர்வு, இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கி எழுந்தால் தானாகவே சரியாகிவிடும்.

இடைவிடாமல் தொடர்ந்து பொட்டி தட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும், உற்றுப்பார்த்தே வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கும் நாளடைவில் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஈபுக்ஸ் படிக்கவேண்டும் என்றால், இருட்டில் கம்ப்யூட்டரிலோ, டேப்லெட்டிலோ படிப்பதை விட, வெளிச்சத்தில் படிப்பது சாலச்சிறந்தது.  அல்லது ஈ-இங்க் ரீடர்களிலோ படிப்பது பிரச்னை இல்லாதது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 49
« Reply #48 on: July 05, 2021, 01:11:31 PM »



தினமும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி?


Vaseline என்றழைக்கப்படும் பெட்ரோலியம் ஜெல்லியை யாராவது தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுவோமா? பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த Robert Augustus Chesebrough, தான் இறக்கும்வரை(இறந்தது 96வது வயதில்) அதைத்தான் செய்திருக்கிறார். எண்ணெய் உற்பத்தி அதிகரித்த 19 நூற்றாண்டின் இறுதியில்,  எண்ணெய் கிணறுகளில் உபயோகப்படுத்தப்பட்ட துளையிடும் கருவிகளின் மேல் வழவழப்பான பொருள் ஒன்று ஒட்டிக்கொள்வதாகவும், கருவியின் செயல்பாட்டை அது பாதிப்பதாகவும், அவற்றை  இயக்கியவர்கள் புகார் கூறினர்.


எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்தவர்களோ, வழவழப்பான அந்த ஜெல்லியைத் தடவினால் காயங்கள் விரைவில் குணமடைவதாகக் கூறினர். இதன் பிறகே ராபர்ட், பெட்ரோலியம் ஜெல்லியைத் தனியாகப் பிரித்தெடுக்கும் ஆய்வுகளில் இறங்கி, வெற்றிபெற்று, ஜெல்லியை “Vaseline” என்ற பெயரில் விற்கத் துவங்கினார். ஒரு காலத்தில் நம்மூர் Franch Oil எப்படி “அனைத்தையும்” குணப்படுத்தும் தன்மை இருப்பதாகச் சொல்லி விளம்பரப்படுத்தப்பட்டதோ, அதே மாதிரி பெட்ரோலியம் ஜெல்லியையும் ”Miracle Cure” என்று சொல்லி ராபர்ட் விளம்பரப்படுத்தினார். தன் உடல் முழுவதும் ஜெல்லியைப் பூசிக்கொண்ட அவர், அது இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாகக் கூறினார். ஜெல்லி காயங்களைக் குணப்படுத்த உதவுவதை நிரூபிக்க, தன் கைகளில் காயங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு  ஜெல்லியை மருந்தாகத் தடவினார். இந்த வரிசையில் தான் அவர் தினமும் ஒரு ஸ்பூன் ஜெல்லியை உட்கொண்ட நிகழ்வும் வருகிறது. தயவு செய்து இதை நீங்களும் இதை முயற்சி செய்ய வேண்டாம்....



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 50
« Reply #49 on: July 06, 2021, 03:21:04 PM »


சார்லி சாப்ளினும் ஆறடி கான்க்ரீட்டும்?


சார்லி சாப்ளின் இறந்த மூன்று மாதங்களில் அவரின் உடலை திருடர்கள் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, கல்லறையிலிருந்து சாப்ளினின் உடல் காணாமல் போய்விட்டது. அவருடைய குடும்பத்தினரிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கத்தில் இரண்டு திருடர்கள் இந்த வேலையைச் செய்தனர். 11 வாரங்களுக்குப் பிறகு, திருடர்களைப் பிடித்து உடல் மீட்கப்பட்டது. இதே மாதிரி மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரின் உடல் 6 அடி கான்க்ரீட் குழியில் இரண்டாம் முறை புதைக்கப்பட்டது.


ஒருமுறை மாறுவேடப்போட்டியில் தன்னைப்போலவே வேடமிட்டு மூன்றாவது பரிசை(த்தான்) வென்றிருக்கிறார் சாப்ளின். ஹிட்லர் பிறப்பதற்கு சரியாக 4 நாட்கள் முன் பிறந்த சாப்ளினின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 16ஆம் தேதி 1889 ஆண்டு. கடைசிவரை அமெரிக்கக்குடியுரிமை வாங்காமல் மறுத்து, நாட்டிலிருந்து வெளியேறி சுவிசர்லாந்தில் வாழ்ந்தார்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 51
« Reply #50 on: July 07, 2021, 03:21:34 PM »


மார்ஸ் & முர்ரே சாக்லெட்ஸ்?



எம்&எம் சாக்லெட்டில் இருக்கும் இரண்டு Mகளுக்கும் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? MARS சாக்லெட் கம்பெனியின் Forrest Mars Sr. மற்றும் HERSHEY’S சாக்லெட் கம்பெனியின் Bruce Murrie இருவரும்தான். எம்&எம் சாக்லெட் ஐடியா, மார்ஸ் சாக்லெட் நிறுவனத்தின் Forrest Mars Sr. அவர்களுடையது. 1941ஆம் ஆண்டு, உள்ளே மிருதுவான சாக்லெட்டுடன் வெளிப்பக்கம் கொஞ்சம் கடினமாக இருப்பதுபோல் சிறுவர்களுக்கான சாக்லெட் ஒன்றை உருவாக்குவது என்று முடிவுசெய்தவுடன் Forrest Mars செய்த வேலை, Hershey நிறுவனத்தின் Bruce Murrie அவர்களைச் சந்தித்து, தங்கள் நிறுவனத்திற்கு சாக்லெட் தரமுடியுமா என்று கேட்டது.


இரண்டாம் உலகப்போரினால் சாக்லெட்டுக்கு பஞ்சம் வரலாம் என்று Forrest Mars Sr. எதிர்பார்த்ததாலேயே மற்றொரு சாக்லெட் நிறுவனத்திடம் சாக்லெட் இறக்குமதி செய்யச்சொல்லிக் கேட்டார். இதற்காக அவர், எம்&எம் பங்குகளின் 20 சதவீதத்தை Bruce Murrieவுக்குக் கொடுத்துவிடவேண்டியது. அவர் எதிர்பார்த்ததுபோலவே சாக்லெட்டுக்குத் தட்டுப்பாடு வந்தது. வருடங்கள் சென்றபின், சாக்லெட் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கத் தொடங்கியபோது, Hershey’s வைத்திருந்த 20 சதவீத பங்குகளை மார்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டாலும், பெயர் மட்டும் மாறாமல் இன்றுவரை தொடர்கிறது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 52
« Reply #51 on: July 08, 2021, 05:12:47 PM »


சூது கவ்வும்?


1971ஆம் ஆண்டு 94 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் துவங்கப்பட்ட FedEx(Federal Express) கம்பெனி 3 வருடங்களுக்குப் பிறகு, திவாலாகும் நிலமைக்கு வந்துவிட்டது. வெறும் ஐந்தாயிரம் டாலர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, தங்களின் விமானங்களுக்கு எரிபொருள் வாங்கக்கூட காசில்லாமல் இருந்த நேரத்தில், அதன் நிறுவனர் Fred Smith ஒரு காரியம் செய்தார். இருந்த ஐந்தாயிரம் டாலர் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரயிறுதியில் லாஸ் வெகாஸ் நகருக்குச் சென்று சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்து Black Jack விளையாடினார். திங்கள்கிழமை காலை, கம்பெனி அக்கவுண்ட்டில் சேர்ந்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா? 32,000 டாலர்கள். FedEx நிறுவனம் மூடப்படாமல் தடுத்தது இந்தப்பணம்.


இப்படி பொறுப்பில்லாமல் கம்பெனி காசை வைத்து சூதாடலாமா என்று மற்றவர்கள் கேள்வியெழுப்பியபோது, ஸ்மித், “அந்த 5000 டாலர்கள் இருந்திருந்தால் மட்டும் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தியிருக்கமுடியுமா? பணம் கொடுக்கவில்லை என்றால், எப்படியும் நமக்கு எரிபொருள் கிடைக்காது. எதுவுமே செய்யாமல் தோற்பதை விட, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாமே என்றுதான் சூதாடினேன்” என்று பதில் சொன்னார். இது நடந்த கொஞ்ச நாட்களுக்குப் பிறகு புதிய முதலீட்டாளர்களிடமிருந்து 11 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டிய FedEx, 1976ஆம் ஆண்டு தன் முதல் லாபக்கணக்கை 3.6 மில்லியன் டாலர்களுடன் தொடங்கியது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 53
« Reply #52 on: July 09, 2021, 08:45:14 AM »



விவாகரத்து டீலிங்?



அறிவியல் மேதை ஐன்ஸ்டின் தன் (முதல்)மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? இதெல்லாம் அவர்களுக்குச் ஜகஜம் தானே, இதிலென்ன சுவாரஸ்யமான செய்தி இருந்துவிடப்போகிறது என்கின்றீர்களா? விவாகரத்தை விட, அதைப் பெறுவதற்கு தன் மனைவியிடம் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் இதை ஸ்பெஷல் செய்தியாக மாற்றியது.


அதென்ன ஒப்பந்தம்? தான் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்கும், தன் கண்டுபிடிப்புகளுக்கும் என்றாவது ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கும் என்றும், அப்படிக் கிடைக்கும்போது அதில் வரும் பணத்தில் ஒரு பகுதியை விவாகரத்துக்கான தொகையாக அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஐன்ஸ்டின் மனைவிடம் சொல்லியிருக்கிறார். ஐன்ஸ்டினின் எழுத்துகளின் மீதும், அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த அவர் மனைவி, ஒரு வார யோசனைக்குப் பின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக்கூறி, விவாகரத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். 1905ஆம் ஆண்டு ஐன்ஸ்டின் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்காக 1921ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஒப்பந்தத்தின் படி, நோபல் பரிசால் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தன் முன்னாள் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்தார் ஐன்ஸ்டின். மீதியை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் முதலீடு செய்து, அதில் பெரும்பகுதியை “Great Depression” நாட்களில் இழந்தார்



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -54
« Reply #53 on: July 10, 2021, 04:06:31 PM »


ஆஸ்திரேலியா?



ஆஸ்திரேலியாவின் ஆரம்பகாலப் பெயர் என்ன தெரியுமா? Terra Australis Incognita. இந்த லத்தீன் மொழிப்பெயருக்கு, ”தென் பகுதியிலிருந்த தெரியாத நிலப்பரப்பு( The Unknown land in the south)” என்று அர்த்தம். பழங்காலத்தில் ரோமானிய மக்கள், தென் பகுதியில் ஒரு கண்டம்/நாடு/நிலப்பரப்பு இருப்பதாக நம்பினார்கள். ஆனால், போதுமான பயண வசதிகள் இல்லாத காரணத்தால், உண்மையாகவே அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று அவர்களால் உறுதிசெய்ய முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பியர்கள்  Terra Australis இருப்பதைக் கண்டுபிடித்தனர். Terra Australis என்ற பெயரைச் சுருக்கி ஆஸ்திரேலியா என்று பல வருடங்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், 1824ஆம் வருடம் தான், “ஆஸ்திரேலியா” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.
« Last Edit: July 10, 2021, 04:08:48 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 55
« Reply #54 on: July 11, 2021, 03:51:18 PM »


பாம்புகளின் தீவு?


பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு தீவுக்குப் பெயர் Ilha da Queimada Grande. ஆங்கிலத்தில் Snake Island. இந்தத் தீவில் மனிதர்கள் வாழ தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம் வேறொன்றும் இல்லை. இங்கிருக்கும் பாம்புகள் தான். உலகிலேயே கொடிய விஷமுடைய பாம்புகளில் ஒன்றான Golden Lancehead Pit-viper, இந்தத் தீவில் எக்கச்சக்கமாக உள்ளன. எக்கச்சக்கம் என்றால், ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு(இந்நேரம் 2 அல்லது 3) என்ற கணக்கில்.


இந்தவகைப் பாம்புகளில் இருக்கும் விஷத்தில் ஐந்தில் ஒரு பங்கு(மட்டுமே) விஷமுடைய fer-de-lance வகைப் பாம்புகள் தான் தென் அமெரிக்காவில் பாம்புகளால் நிகழும் 80% மரணங்களுக்குக் காரணமானவை என்றால்,  Golden Lancehead Pit-viper பாம்புகளின் விஷம் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த Golden Lancehead Pit-viper பாம்புகளைத் தவிர, இத்தீவில் வேறெந்தவகைப் பாம்புகளும் இல்லை.

பிரேசில் அரசு, இங்கு வாழை மரங்களைப் பயிரிடவும், மக்களைக் குடியமர்த்தவும் செய்துவந்த முயற்சிகள் அனைத்தும் இப்பாம்புகளால் தடைபட்டு நிற்கின்றன. இதையும் தாண்டி, இந்தத் தீவை நீங்கள் பார்வையிட விரும்பினால், பிரேசிலின் கடற்படையினர் உங்களை தீவுக்கு 100 மீட்டர் தொலைவில் இறக்கிவிடுவார்கள். அங்கிருந்து படகிலோ, நீந்தியோ ஒரு விசிட் சென்றுவரலாம். ரெடியா மக்களே? 😉 :)




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 56
« Reply #55 on: July 12, 2021, 09:05:44 AM »


நில்! கவனி! செல்!

முதன் முதலில் இங்கிலாந்து ரயில்வே கம்பெனிகள் தான் சிக்னலுக்காக வண்ண விளக்குகளை உபயோகப்படுத்தத் துவங்கினர். 1830 ஆம் ஆண்டு முதல்  புகைவண்டிகளை இயக்குபவர்களுக்கு எப்போது ரயிலை நிறுத்த/இயக்க வேண்டும் என்று சொல்வதற்காக இந்த முறை ரயில்வே நிர்வாகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை, அபாயத்தைக் குறிப்பதால் சிவப்பு நிறம் “நில்” என்று சொல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் “செல்” என்று சொல்ல பச்சை நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறமே உபயோகிக்கப்பட்டது. லண்டனில் 1914ஆம் ஆண்டு, சிவப்பு நிறத்திற்காக விளக்கின் மீது வைக்கப்பட்டிருந்த மூடி கழண்டு கீழே விழுந்துவிட, வெள்ளை நிற விளக்குதான் ஒளிர்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்ட புகைவண்டி ஓட்டுனர் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று மற்றொரு ரயிலின் மீது நேருக்குநேர் மோதிவிட்டார். அந்த விபத்திற்குப் பிறகுதான், “செல்” என்பதற்கு பச்சை நிறம் கொடுக்கப்பட்டது. அதோடு சேர்ந்து புதிதாக “கவனி” என்று அறிவிக்க மஞ்சள் நிற விளக்குகளும் வைக்கப்பட்டன. மஞ்சள் நிறம் தேர்ந்தெடுக்கப்படக்காரணம், மற்ற இரு வண்ணங்களிலிருந்தும் அதிக வித்தியாசமாக இருப்பதால் தான்.

1860களில் லண்டன் மாநகரில் குதிரையில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், சாலைகளைக் கடக்கும் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகினர்.  எப்படி விபத்துகளைத் தடுக்கலாம் என்று அரசாங்கம் யோசித்துக்கொண்டிருந்தபோது , John Peake Knight என்ற ரயில்வே எஞ்சினியர்(மற்றும் மேனேஜர்) ரயில்வேயில் பயன்படுத்தும் அதே வண்ண விளக்குகள் முறையை ஏன் சாலைகளிலும் உபயோகிக்கக்கூடாது என்று ஐடியா கொடுத்தார். அவரின் ஐடியா ஏற்றுக்கொள்ளப்பட்டு 1868ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள், முதல் ட்ராஃபிக் சிக்னல் லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் நிறுவப்பட்டது
.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 57
« Reply #56 on: July 13, 2021, 06:55:12 PM »


77 வருட சீக்ரெட்?


ஒலிம்பிக் போட்டிகளின்போது பறக்கவிடப்படுவதற்காக முதன்முதலில் ஒலிம்பிக் சின்னத்துடன் தயாரிக்கப்பட்ட கொடி 1920ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டில் போட்டிகள் நடத்தப்பட்டபோது காணாமல் போய்விட்டது. இது நடந்து 77 ஆண்டுகளுக்குப் பிறகு 1997ஆம் வருடம் Hal Haig Prieste என்ற ஒலிம்பிக் வீரரை, அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் சந்தித்து பேட்டியெடுத்தார். பேட்டியின் நடுவில் பத்திரிக்கையாளர் கொடி காணாமல் போனதைப் பற்றி பேச, 1920ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் பெற்ற அந்த ஒலிம்பிக் வீரர் பதட்டப்படாமல், “அந்தக்கொடி என் பெட்டியில்தான் இருக்கிறது” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதை அவருக்குக் காட்டவும் செய்தார்.


தன் சக போட்டியாளர் Duke Kahanamoku “உன்னால் யாருக்கும் தெரியாமல் அந்தக்கொடியை எடுக்க முடியுமா” என்று சவால் விட்டதே தான் கொடியை எடுத்ததற்கான காரணம் என்று சொன்ன Hal Haig, இனி நீண்ட நாட்களுக்கு உயிர்வாழ முடியாது என்று நினைத்ததாலேயே உண்மையை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். உண்மையை வெளிப்படுத்தியபோது அவருக்கு வயது 101. இந்த நிகழ்ச்சி நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டு அந்த ஸ்பெஷல் கொடியை ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்தார் அவர். சுவிஸர்லாந்தில் இருக்கும் ஒலிம்பிக் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படும் அந்தக்கொடியை பத்திரமாக சேதமடையாமல் திருப்பித்தந்ததற்காக Hal Haigக்கு நன்றி(!) தெரிவித்தது ஒலிம்பிக் கமிட்டி.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 58
« Reply #57 on: July 14, 2021, 05:00:02 PM »


காணாமல் போன கேப்டன்?


1872ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டீஷ் கடற்படையைச் சேர்ந்தவர்கள் “Mary Celeste(a.k.a The Amazon) என்ற கப்பலை கடலில் கண்டுபிடித்தனர். கப்பலில் நீண்ட நேரத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் போகவே, கப்பலுக்குள் சென்று பார்க்க முடிவு செய்தனர். ஏற்றப்பட்ட சரக்குகள் அனைத்தும் அப்படியே இருக்க, கப்பலில் இருந்த மனிதர்களும் உயிர் காக்கும் படகும் சில டாக்குமெண்ட்ஸும், திசை காட்டும் கருவியும் மட்டும் மிஸ்ஸிங். கப்பலில் பணி செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்று ஆளாளுக்கு ஒரு புரளியைக் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தனர்.  ஏற்கனவே இந்தக்கப்பலில் தலைமை தாங்கிய கேப்டன்கள் சிலரின் மர்ம மரணம், பெர்முடா முக்கோணம், கடல் கொள்ளையர்கள் என கணக்கில்லாமல் சென்றுகொண்டிருந்த கட்டுக்கதைகளுக்கு நடுவில் அறிவியல் சார்ந்து ஒரு விளக்கம் தரப்பட்டது.


நிஜத்துக்குக் கொஞ்சம் அருகில் இருந்த இந்த அறிவியல் விளக்கம் உண்மையாகவும் இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்படுகிறது. அதென்ன அறிவியல் விளக்கம் என்கின்றீர்களா? கப்பலில் 1701 பேரல்களில் ஆல்கஹால் இருந்தது. அவற்றில் 9 பேரல்கள் Red Oak என்ற மரத்தால் ஆனவை. மற்ற பேரல்கள் White Oak மரத்தால் ஆனவை. இந்த ரெட் ஓக் மரத்தால் ஆன பேரல்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆல்கஹால், மரத்தின் தன்மையால் ஆவியாகி காணாமல் போய்விட்டது. ஆரம்பத்திலேயே, அதிகம் தீப்பிடிக்கும் தன்மைகொண்ட ஆல்கஹால் பேரல்களை அவசியம் எடுத்துச் செல்லவேண்டுமா என்று சந்தேகத்துடனே வந்த கேப்டன், 9 பேரல்களில் இருந்த ஆல்கஹால் ஆவியானவுடன், கப்பல் தீப்பிடித்துவிடுமோ என்று பயந்து கப்பலை விட்டுவிட்டு மற்ற பணியாளர்களுடன் தப்பித்திருக்கலாம் என்ற விளக்கம் தான் அது. கேப்டனின் பெயர் Benjamin Briggs. இந்த அறிவியல் விளக்கத்தில் இருந்த ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை கப்பலிலேயே செலவழித்த, இதற்கு முன் 5 கப்பல்களுக்கு கேப்டனாகப் பணியாற்றிய பெஞ்சமினும் அவருடன் சேர்ந்து தப்பித்தவர்களும் அதற்கு பின் கண்டுபிடிக்கப்படவே இல்லை. கப்பல் என்ன ஆயிற்று? பிரிட்டீஷ் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கப்பலும் அதிலிருந்த சரக்குகளும் வெற்றிகரமாக விற்கப்பட்டு பணமாக்கப்பட்டன.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 59
« Reply #58 on: July 15, 2021, 02:36:52 PM »



ரெயின்போ தெரியும்.. அதென்ன மூன்போ?


சூரியஒளி வான்வெளியில் நீர்த்துளிகளைக் கடந்துவரும்போது மட்டும் வானவில் ஏற்படுவதில்லை.. நிலவொளியிலிருந்தும் வானவில் தோன்றும். நிலவின் ஒளி வான்வெளியில் நீர்த்துளிகளைக் கடந்து வரும்போது ஏற்படும் வானவில்லின் பெயர் “Moonbow”. காலைவேளையிலும், மாலையிலும் தான் வானவில் அதிகம் தோன்றும். காரணம், சூரியஒளிக்கற்றை 42 டிகிரி கோணத்தில் நீர்த்துளிகளைக் கடக்கும்போது மட்டுமே வண்ணங்களைக் காணமுடியும். அதனால்தான் உச்சிவெயில் வேளையில் வானவில் அதிகம் வருவதில்லை.

நம் ஒவ்வொருவர் கண்களுக்கும் வானவில்லில் வெவ்வேறு வண்ணங்கள் தெரியும். ஒவ்வொருவரும் பார்க்கும் வானில் இடங்களும், கோணமும், நேரமும் வித்தியாசமாக இருப்பதே நம் கண்களுக்கு வெவ்வேறு வண்ணங்கள் தெரியக்காரணம். ஒருவர் பார்க்கும் அதே இடத்தில், அதே நேரத்தில், அதே கோணத்தில், வான்வெளியில் அவர் பார்த்த அதே நீர்த்துளிகளையும் ஒளிக்கற்றைகளையும் மற்றொருவர் பார்த்தால் மட்டுமே முதலாமவர் பார்த்த வானவில் வண்ணங்கள் இடண்டாமவர் கண்களுக்குத் தெரியும். ஒரே நேரத்தில் இருவர் ஒரே இடத்தில் நின்று ஒரே கோணத்தில் பார்ப்பது சாத்தியமில்லைதானே? அதனால் தான் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வானவில் வண்ணங்களைத் தரிசிக்கின்றோம்.  இனிமேல் பக்கத்தில் நிற்பவர்களுக்குத் தெரியும் வண்ணம் உங்களுக்குத் தெரியவில்லை என்று வருத்தப்படாதீர்கள்…நீங்கள் பார்க்கும் வண்ணங்கள் அவருக்குத் தெரியாது.

Polarized Sun Glasses அணிந்து பார்த்தால் வானவில் தெரியாது என்று ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1566
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 60
« Reply #59 on: July 16, 2021, 11:08:31 AM »

 
அதே கண்கள்?


1989ஆம் ஆண்டு “usenet” என்ற ஆரம்பகால இண்டர்நெட்டில் “Those eyes” என்ற பெயரில் ஒரு போஸ்ட் வெளியானது. ஹாலிவுட்டில் இருந்த நடிகைகளில் அழகான கண்களை உடையவர்களின் படங்களை வெளியிட்டது அந்த வெப்பேஜ். மக்களின் கமெண்ட்டுகளுடன் அந்த த்ரெட் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து “The List” என்று பெயர் பெற்றது.

அதே சமயத்தில் “தி லிஸ்ட்” மாதிரியே உருவாக்கப்பட்ட மற்றொரு ப்ராஜெக்ட், மக்களிடம் சினிமாக்களுக்கு ரேட்டிங் கொடுக்கச்சொல்லி கேட்டது. நாளடைவில் இதுவும் வளர்ந்து எக்கச்சக்கமான படங்களுக்கு மக்களிடமிருந்து ரேட்டிங் வாங்கி வைத்திருந்தது.

1990ஆம் ஆண்டு Col Needham என்பவர் இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரே வெப்பேஜாக உருவாக்க முடிவு செய்தார். அப்படி இரண்டு லிஸ்ட்டையும் சேர்த்து உருவாக்கப்பட்டு 1993ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதே புகழ்பெற்ற IMDB வெப்சைட்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்