FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 30, 2021, 11:58:23 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: Forum on October 30, 2021, 11:58:23 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 281

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/281.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: எஸ்கே on October 31, 2021, 12:32:21 AM

நட்பு என்னும் உறவால் நாம் இணைந்தோம்
நட்பு என்னும் உறவால் பிணைக்கப்பட்டோம்


தோள் கொடுப்பான் தோழன் என்பதை மெய்பித்தவன் நீ...
இணைந்த கைகளாய்  எனது கரங்களுக்கு வலிமை சேர்த்தவன் நீ...
நட்பு என்னும் சொல்லுக்கு அர்த்தம் தந்தவனும் நீ..

நமது நட்பு முக நக நட்பதல்ல
நெஞ்சத்தில் அக நக நட்பது..
எனது எல்லாச் செயலிலும்
உனது வாக்கும் போக்கும்
கலந்திருக்கும்....
பாலில் இருந்து நீரைப் பிரிக்குமாம்
அன்னப்பறவை...
உன்னிலிருந்து என்னைப் பிரிக்கும்
எந்தப் பறவை...?

எனது மகிழ்வின் தருணங்களில்
மட்டுமல்ல சோகத்தின் பொழுதுகளிலும்
என்னோடு இருப்பவனே...
என் வாழ்வோடு கலந்தவனே...

நட்பின் வலிமையை உன்னால்
உணர்ந்தேன்...
பள்ளத்தில் விழுந்தாலும் தூக்கிவிட
உன் கரங்கள் உண்டு என்ற நம்பிக்கை முனையால் பாதாளத்திலும்
விழச் சம்மதம் தோழனே....

உனது நட்பால் நான் அக மகிழ்ந்தேன்
என்னுடன் கை கோர்த்து வா நண்பனே சிகரம் பல தொடுவோம் வா...
உயரம் பல காணுவோம் வா ....
சாதனைகள் பல புரிவோம் வா...
சோதனைகள் பல களைவோம் வா...

மண்ணின் மொத்த மகிழ்வையும் உண்டு,
வெற்றிகள் பல கண்டு,
புதுமைகள் பல செய்து
வீறு நடை போடுவோம் வா
தரணியிலே இந்த பரணியிலே...


நட்பே துணை நட்பே துணை நட்பே துணை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: Dear COMRADE on October 31, 2021, 02:08:30 AM
உதட்டோரம் புன்முறுவல்
உள்நெஞ்சில் விசப் பரவல்
தக்க தருணம் பார்த்து நிக்கும்
தந்திர நரிக்கூட்டங்கள்
சற்றே தளர்ந்தாலும்
சரித்து விடும் சகுனிகள்...

பாசப் போர்வைக்குள்
வேசமிடும் சொந்தங்கள்...
பந்தாடத் துடிக்கும்
பச்சோந்தி மனங்கள் என
வஞ்சத்தை விதைத்து நிற்கும்
நெஞ்சங்கள் எனை தாக்க...
சிறகுடைந்த பறவையானேன்
துடுப்புடைந்த படகும் ஆனேன்...
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுருண்டு துடிக்கும் மண்புழு ஆனேன்...

துடித்தாலும், வீட்டு மூலைக்குள்
துவண்டு கிடப்பேன் என நினைத்தீரோ...
வீறு கொண்டு எழுவேன் - அங்கு
வெற்றிக் கொடி நடுவேன் என்று
வேங்கையாய் நான் பாயும் போது...

சிகரம் தொடும் நேரம்
தூக்கி விட கரம் ஒன்று
துணையாக வந்ததே...
வலுவிழந்த நிலையில் - நம்பி
அக்கரம் பற்றினேன்
ஏணி என்று நினைத்து - அது
எமன் வீசும் நம்பிக்கை துரோகத்தின்
பாசக்கயிறு என்று அறியாமலே...
பற்றிய கை பாதியில் போனதே
பாதாளம் மீண்டும் எனக்கு
பரிசுப் பொருளாய் ஆனதே...
மறவாதே,
உடுக்கை இழந்தவன் கைபோல- ஆங்கே
இடுக்கண் களையும் நட்போடு
ஓடும் மீன் ஓட உறுமீன் வர
உரிய சமயம் தேடும் கொக்கும் உண்டு...

மண்ணில் இட்டு புதைத்தாலும்
விண்ணைத் தொடும்
விருட்சமாய் முளைப்பேன் நான்...
ஆகாசம் தொட நினைக்கும்
அக்கினிப் பறவை நான்...
தொடரும் இந்த போராட்ட பாதை
தொடும் இமயம் இன்னும் சற்றே தூரம்.

மறுபடியும்,
இன்னோர் கரம் எனை நோக்க...

துரோகத்தின் மறு பிணைப்போ???
நம்பிக்கை நட்பின் புது இணைப்போ...
இரு கை தொடும் அந்த அரை ஜான் தூரம்
என் விதியின் தீர்க்கதரிசனம்.....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: AK Prakash on October 31, 2021, 09:47:19 AM
கை விட்டு விடாதே என் கனவே!!!

இவ்வுலகில் பெற்ற தாயும் இல்லை
உயிர் கொடுத்த தந்தையும் இல்லை
என் குருதியை பகிர்ந்து கொண்ட உடன்பிறப்புகளும் இல்லை
இவை அனைத்தும் கலந்த உறவாய் கிடைத்தவள் நீயடி.

நாம் பிறந்த கருவறைகள் வெவ்வேறானாலும் நாம் வாழும் அறைகள் என்னவோ ஒன்று தான்.

என்னுள் நீயும் உன்னுள் நானும் கலந்ததால் என்னவோ உனக்கு வலிக்கையில் என் கண்கள் கலங்குகிறது
உன் புன்னகையில் என் கண்ணம் சிவகின்றது.

உன்னை நினைத்து நினைத்து என் மனம் உருக, உடல் மெலிய உன் மனமோ அதை ஏற்க மறுக்கிறது.

என் கண்களை மூடி விடாதே என் கனவே
உண்ணோடு பேசாவிட்டாலும் உன்னை பார்த்து கொண்டே வாழ்வேன் இவ்வுலகில்..

என்னை தவிக்க விட்டு சென்று விட்டாதே என் மனமே அந்த காலணுக்கு கூட மனம் இருக்கிறது என்னை அவனோடு கூட்டிச் செல்ல.

என் கைகளை பிடித்துக்கொண்டு போ உறவே உண்ணோடு வருகிறேன் காலம் முழுவதும் அல்ல நம் காதல் முடியும் வரை.

என் மன அலைகளோ அடங்க மறுக்கின்றது, கடல் அலைகளோ ஓய மறுக்கின்றது உந்தன் காலடியை தீண்டும் வரை.

எரிமலை போல் கொந்தளிக்கின்ற என் மனதை உறைபனியாய் மாற்றிட  கூட்டிக்கொண்டு போ என் உயிரே என் கரங்களை பிடித்து....

வரண்ட பாலைவனமாய் இருந்த என் மனதில் கானல் நீராக வந்நவளே,
காதலிக்க கற்றுக் கொடுத்து விட்டு என் கைகளை உதரி செல்வது ஏணோ .

புதைகுழியில் மூழ்கின்ற என் மனதை உன் கரங்கள் கொண்டு காப்பாற்றடி என்னவளே
வாழலாம் நம் கடைசி மூச்சுள்ள வரை.

என் வாழ்வின் அர்த்தங்களை காண விரும்புகிறேன் உந்தன் கைகளை பிடிக்கும் அந்த நொடிபொழுதே....



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: DineshVira on October 31, 2021, 11:33:57 AM
விதையின் கை கோர்க்க இருக்கும் மரம்!

 
ஆதியிலிருந்து அடுத்த நாள் வரை! நான்மட்டுமில்லை... வா செல்வோம்! என்றவனை.
உச்சி வழியில் நீயிருக்க, ஊன்றுக் கோல் எனவே நான்னுனை நினைக்க! வழிக்காட்டியாய் வந்தவனே.
அன்பினால் உயர வைக்க! "நீ", ஆழத்தில் இருந்த "நான்"! நம்பிக்கையோடு, இன்னும் கொஞ்சம் மேலே வா, என்பவனே!
இன்று நிழல் தாரா கோபுரமே! என் கோவிலில், தேவனும் தானே!
உயிர் ரேகையை உன் பாா்வையிலிக்கும்! "ஆயிரம்" புத்தகங்களின், "அறிகுறிகள்" பிறர் பெற தா தா!
உழைத்து உழைத்தே! உன், முதலாளிக்கு "நிகராகி", அவரிடமும் போற்றுதல் மரியாதை சேர்த்த "கனியே"! விழுந்து மண்ணில், "மீண்டு-ம்" மீண்டு! நம் கரம் தீண்டவே வா, வா!

நீ! கேட்டுநான் மறுப்பதற்கு எதுவுமில்லை, என் வசம்! இக் கணமே உயிரைக்கேள்! அதுவும் உனக்கே உபயம்! தாத்தா!
பத்துபிள்ளை, நகம் போல் பெற்ற நீ! "செல்வம்" நீராய் நழுவி போக, உன் தாய்! கடலாகி தந்த முத்துக்கள்! இன்று பூ மாலையானதை! காண தாத்தா.
துப்பாக்கி! கை வீசி, வெற்றியுடன் கைகோத்து! பல போராடி, நம்பிள்ளையான என்தாயை, உன் வீட்டுக்கு அரசியாய்! "ராணி" என்றே பெயர் சூட்டிய "பட்டாளத்தானே"! நீயே.
வானத்தில் நானிருந்தாலும், "இதோ சந்திப்போம்"! என்றே,  தூரத்தில் உன் "குரல்" கேட்குதே! அகமே.
விரைவிலென்று தினமும் போகுதே! விரல்கள் நனைக்க நொடிகள் ஆல் அணைப் போடுவதும்  ஏனோ?
உன் எதிரொலியால் நானிருக்க! காலமெனும் "கருமுட்டை" நம்மைப் பிரிக்க, தொப்புள் கொடி
 வேர்களாக நீளுதே, உறவே!
உன் போல், வாள்ளாய் உன்கையிலிருக்க! வரமொன்றுத்தாதா!

ஆம் ஆண்! என்பதனை மறந்தே சொல்கிறேன், உன்னை! "உண்மை" ஆகவே, விரும்பினேன்!
நம் உறவு மறித்த! "அந்த" நேரத்தில், என் கண்ணீரும் மரத்து! தூக்கில் தொங்கியது! கோடை மேகமே.
எனக்கும், "இதயம்" செதுக்க! நீ, உன் காதலிக்கு! எழுதியதுப் போல் ஓர் கடிதம் போடு! போதும்!
உன் வரலாறு "தண்டவாளமாய்" தந்ததற்கு! நன்றி!

நண்டுகள் சக்கரமாய் எனைச்சூழ்ந்திருக்கவே! வாழ்க்கை வாகனத்தில் நம்பிக்கையும்! ஓடி விட்டதே, காளையாய் "அஃதை" இன்றும் நான்! இழுத்திருக்க, என்!  அச்சாணியும் உடைந்ததே!
தன்னைத்தான் தானே பிரிந்த, மரத்தின் விதை! போல் உன் அன்பு பேரன்! பயணத்திலிருக்கிறேன் வந்ததும், ஆங்கில வணக்கத்துடன்! கைகுலுக்கி, சந்திப்போம்!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: PreaM on October 31, 2021, 12:26:36 PM
எழுந்து வாடா  தயங்காதே
தால்வியை கண்டு வருந்தாதே
முயற்ச்சி செய்வதை நிறுத்தாதே
தடைகளை தாண்டும் தைரியமே
தன்னம்பிக்கை என்பதை மறவாதே...

வெற்றி என்பது எளிதல்ல- உனக்கு
தோல்வி ஒன்றும் புதிதல்ல
வென்றவர் எல்லாம் முன்பு தோற்றவரே
உனக்கும் வெற்றியுண்டு மறவாதே
என்றும் தன்னம்பிக்கையோடு முன்னேறு...

உதவிக்கரம் நீட்டிடுவான் நண்பன்
உன்னை உயரம் கொண்டு சேர்த்திடுவான்
ஒருவர் துணை ஒருவர் கொண்டு
இருவரும் ஒன்றாக இனைந்து
தன்னம்பிக்கையோடு செயல்படு நண்பா...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம் ஒற்றுமையே வெற்றியின் வெளிப்பாடு
தன்னம்பிக்கையோடு போராடு
தடைகளை தாண்டி முன்னேறு
அந்த சிகரமும் தாண்டி சென்றிடலாம்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: TiNu on October 31, 2021, 03:45:15 PM


தோழனே.. தன்னந்தனியே பூமி தொடும் நம் கால்களுக்கு...
இவ்வுலகில் தனியே பயணிப்பது.. சாத்தியமே இல்லை....

பிறந்து சில நிமிடங்களில்... என்  பிஞ்சு முகம் பார்த்து...
வாவென புன்னகையுடன்.. அள்ளி அரவணைத்து ஒரு கை...

பசித்திருந்த நிமிடங்களில்.. என் உள் உணர்வுகளை அறிந்து .. 
கனிவான பார்வைகள் சிந்தி.. உணவளித்து பசியாற்றியது ஒரு கை,,

 நடைபழகிய நிமிடங்களில்... என் கால் தடுக்கி வீழ்கையில்..
கோபமாக பூமியை அடித்து..  எனக்கு நடைபழக்கியது ஒரு கை..
 
பேசிபழகிய  நிமிடங்களில். என் கண்ணில் பட்ட உருவின் பெயர் அறியாது.. தவிக்கையில்..
அன்போடு..அதன் பெயர் சொல்லி.. அப்பொருளை சுட்டி காட்டியது ஒரு கை ...

கல்விகற்கும் நிமிடங்களில்.. என் கரும்பலகையில் எழுத தடுமாறுகையில் 
பாசத்ததோடு என் விரலிடுக்கில்..  நிற்க மறுத்த எழுதுகோலை.. .நிற்க செய்தது ஒரு கை..

தவறுசெய்த நிமிடங்களில்.. என் தவறின் விளைவுகளை புரியாமல் நிற்கையில்..
கடும் சினத்தோடு.. என் தவறுகளை சுட்டி காட்டியது ஒரு கை..

நிர்கதியான நிமிடங்களில்.. என் வாழ்வின் விடை தெரியா திகைக்கையில்..
நேசமிகு வழிகாட்டியாய்..  ஆறுதலாய் என் தோள்தட்டியது ஒரு கை..

பல கைகளால் பலப்பட்ட.. என் கரங்கள்...  இன்று உனக்காக..  ..
பற்றிக்கொள்.. நண்பனே..  பற்றிக்கொள்.. என் அன்புத்தோழனே..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: Mr Perfect on October 31, 2021, 07:29:15 PM

அன்பே உன் கைகள் கோர்த்து உன்னோடு போக 💘

என் முதலும் நீ என் முடிவும் நீ 💘

என்னை தாக்கிய புயலும் நீ 💘

என்னை தழுவிய தென்றலும் நீ 💘

என்னை சூழ்ந்த சோகமும் நீ 💘

அந்த சோகம் தரும் சுகமும் நீ 💘

என் மொத்த தேகமும் நீ 💘

என் தேகம் தாங்கும் உயிரும் நீ 💘

நான் மோகம் கொண்ட மேகமும் நீ 💘

அந்த மேகம் தரும் மழையும் நீ 💘

ஜாடை பேசும் ஓடை நீ 💘

ஓடை தரும் குளிர்ச்சியும் நீ 💘

என் காதல் நீ 💘

அந்த காதல் தந்த கவிதையும் நீ 💘

என் இதயம் நீ 💘

அதிலுள்ள துடிப்பும் நீ 💘

இணையோடு துணை நின்று 💘

ஈடில்லா இன்பத்தோடு உரிமையாய் உறவாடி 💘

எந்நேரமும் உன்னைக்கானும் ஏக்கமில்லா வாழ்வோடும் 💘

ஐயமின்றி ஒற்றுமையாய் 💘

ஓராயிராம் ஆண்டு  உன்னோடு வாழ என்றென்றும் நீ வேண்டும் 💘
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: Sun FloweR on October 31, 2021, 09:04:08 PM
துரோகமிழைத்த உறவுகள்
முகமூடி அணிந்த பந்தங்கள்
மாறுவேடம் பூண்ட சொந்தங்கள்
அனைத்து உறவுகளிடமும் சிக்கி
படுகுழியில் வீழ்ந்து கிடக்கின்றேன்....

தோல்விகள் தந்த சுவடும்
துயரங்கள் தந்த வடுக்களும்
எஞ்சியிருக்க மிச்சமிருக்கும் உயிரை
சுமந்து கொண்டு வெற்று
வாழ்க்கை வாழ்கின்றேன்......

யாருமற்ற ஒற்றை ஆளாய்,
விழிகள் சோர்ந்து மனமும் தளர்ந்து
பரந்த உலகில் வறண்ட மணலாய்
உதிர்ந்து கிடக்கின்றேன்.....

எழுந்து விட வேண்டுமென்று
மனச்சிறுத்தை எழுச்சி கொள்ள
பற்றுதல் வேண்டி பரிதவிக்கிறேன்
பாவி உயிர் பிழைத்திருக்கிறேன்....

நம்பிக்கையின் வெளிச்சமொன்று
வானமெங்கும் உதயமாக
கொஞ்சம் கொஞ்சமாக கண்முன்
தெரிகிறது எனக்கான விடியலும்,
வலுவான கையொன்றும்....

நிச்சயம் அது மனிதனின் கையன்று...
என் நிலை உணர்ந்து
என் கதறல் அறிந்து
மீட்டெடுக்க வந்த இறைவனின்
கரமன்றி வேறென்னவாக இருக்க முடியும்?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 281
Post by: Anbudan Natpu on November 01, 2021, 07:41:15 PM
நண்பா நான் கண்ட கனவை நிஜம் ஆக்க உன் இரு கரம் கொடுதுத்து உயிரோட்டம் தந்தவன் நீ அன்றோ என்னை யார் என்று காட்டிய பகலவனும் நீ அன்றோ   நான் சோர்வடையும் பொழுது எல்லாம் தோழர் கொடுத்தாய் நான் வரைபடம் தீட்டினே முதல் முறையாக அதை கண்டு பாரட்டியதும் நீயே என் உயிர் தோழனே உனக்கு நினைவு இருக்கிறாதா என் நண்பா நாம் இருவரும் சேர்ந்து ஒர் மாலை வேலையில் வானவில்லினை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அரியா வயதில் யூகம் ஒன்று வகுத்தோம் இன்று நினைத்தாலும் நகைச்சுவை , பிழையான கவிதை ஒன்றை எழுதி இருந்தேன் அதையும் பிழையில்லாம் வாசித்த என் முதல் இரசிகனும் நீ அன்றோ , நான் கண்ட முதல் பாச உலகமும் நீ அன்றோ என் தோழனே, நான் தோற்றபொழுது  எல்லாம்  என்னை உன் அன்பு நட்பை தன்ன
நம்பிகை ஊட்டி எனைதலைநிமிரா செய்தவனும்நீயே உன் நினைவுகள் 
என்றும் என்னை சுற்றியே இருந்தது,எந்தவித ஆரவாரமும் இல்லை ஆர்பாட்டம் இன்றி தன்னலம் கருதாமல் என் நலத்தை உன் நலமாக நேசம் கொண்டவனும் நீயே.
            என் கண்களும் உன்னை நினைக்கும் பொழுது ஆனந்த கண்ணீரில் நனைகின்றது
    ஆழ்கடல் முத்துசிப்பி என்ன உயர்ந்ததாக உன் நட்பை விட !!
      ஆத்மார்தமாய் நேசம் கொண்டவன் நீ அடா    உனக்கு நிகர் நீயே
      அன்று ஒரு நாள் என்னையும் அறியாமல் தன்னிலை மறந்து கிடந்த (மயக்கம்) தூக்கி தோளில் சுமந்து சென்று மருத்துவம் செய்யாவிடில் நான் வின்னுலகம் சென்று 16ஆண்டுகள் ஆகியிருக்கும் நண்பா என் உயிர் காத்தோழனே என் அன்னை கருவிலே சுமந்த உயிரை எனக்கு அளித்த பின் உதவி மறவேன் ..... ஆனால் ‌‌இன்றோ நீ  வின்னுலகம் சென்று விட்டாய் என்னை நீ விட்டு சென்றாலும் உன் கடமைகள் அனைத்தும் நான் செய்து கொண்டு இருக்கிறேன் நம் தங்கைகள் இருவருக்கும் நல்ல மணவாழ்க்கை அமைத்துவிட்டேன் உன் அன்னைக்கும் இப்பாவி 🔥🔥🔥 மூட்டி விட்டேன் உன் இடத்தில் இருந்து என்னை ‌‌மண்ணிபாயா என்  தோழா ;  இதை சொல்ல என் கண்கள் கடலாய் பொங்கி வழிந்தது என் தோழா என்னை விட்டு நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு விட்டாய் உன்னை அடைய காலனிடம் மனூகொடுத்து விட்டேன் ...நீ உறங்கும் இடத்தில் என் சிதையும் புதைக்க சாசனம் எழுதிவிட்டேன் ஃ😭😭😭😭😭😭😭😭