Author Topic: ~ பக்தி கதைகள் ~  (Read 7564 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பக்தி கதைகள் ~
« on: February 19, 2013, 07:27:09 PM »
கனவிலும் துன்பம் செய்யாதீர்!




கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி வசித்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை.  அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சங்கமன் அங்கு  வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபில புரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான்.

நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள். மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு  காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்து உயிர் விட்டனர். இனிமேலாவது, பிறருக்கு துன்பம் இழைக்க கனவிலும் நினைக்காதீர்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #1 on: February 19, 2013, 07:44:17 PM »
காக்கா கலரில் இருக்கியே!




தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் சம்பந்த சரணாலயர். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார்.  சரணலாயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர்,   அமைச்சரின் காதில், இந்த சாமியார், அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்று பரிகாசம் செய்தார்.  மன்னரின் வாய் அசைவைக் கொண்டே, அவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார் சரணாலயர்.  சபையில் அனைவரும் கேட்கும்விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை ஓங்குக!, என்றார்.

அவரது பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காக்க தானே பிறந்திருக்கிறீர்! என்ன...நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார்.  புலவரின் அறிவுத்திறத்தைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தினார். சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம் ஆதீனம் மகிழ்ந்தார்.  காக்கா கலரில் இருக்கியே என்று நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #2 on: February 19, 2013, 07:47:14 PM »
எல்லாம் அவனே செய்கிறான்!




சொர்க்கத்தின் வாசல் மூடப்பட்டிருந்தது. உள்ளே நுழைய முயன்ற ஒருவரை தேவதூதர், நில் அங்கே!, என்று தடுத்து நிறுத்தினார்.  நான் வைக்கும் பரீட்சையில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பேன்! என்றார். தலையசைத்த அவரிடம், இதன் உள்ளே செல்லும் அளவுக்கு நீங்கள் என்ன நல்லது செய்தீர்கள் ?, என்றார் தேவதூதர்.  தான் செய்த நற்செயல்களைப் பட்டியல் இடத் தொடங்கினார்.  வாரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபடுவேன், என்றார் அவர்.  அதற்கு தூதர் மூன்று மதிப்பெண் வழங்கினார்.  குழந்தைகள் கல்வியளிக்கும் நோக்குடன் பள்ளிக்கூடம் நடத்தினேன், என்றார்.  இப்போது ஐந்துமதிப்பெண் கிடைத்தது.

ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தேன், என்றார்.  அப்படியா!, என்று கேட்ட தூதர் அதற்கும் ஐந்து மதிப்பெண் வழங்கினார்.  இந்த நிலையில் மதிப்பெண் வாங்கினால் முப்பத்தைந்து மதிப்பெண் வாங்கி பாஸ் கூட செய்ய முடியாதே என்ற கவலை வந்துவிட்டது அவருக்கு.  சற்று யோசித்தவராய், தன் கைகளைக் குவித்து நின்று கொண்டார்.  நான் செய்த செயல் ஒவ்வொன்றும் கடவுளால் தான் நடந்தது. சாதாரண மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்? கடவுளின் கருணையே எனது நற்செயலுக்கும் தீய செயலுக்கும் காரணம். எல்லாம் அவரால் நடந்தது, என்று சொல்லி பட்டியல் இடுவதை நிறுத்திக் கொண்டார்.  அப்போது சொர்க்கத்தின் வாசல் தானாகவே திறந்து அவருக்கு வழிவிட்டது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #3 on: February 19, 2013, 08:00:47 PM »
அவனிடம் சரணடையுங்கள்!




ஒரு நெய் வியாபாரி கலப்பட நெய் விற்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். நீதிபதி அவருக்கு மூன்று விதமான தண்டனை விதித்தார். கலப்படம் செய்த நெய் முழுவதையும், வியாபாரியே குடிக்க வேண்டும், அல்லது 20 கசையடி பெற வேண்டும், இரண்டும் முடியாவிட்டால் பத்து லட்சம் அபராதம் கட்ட வேண்டும். பத்துலட்சத்தை விடுவதாவது! என நினைத்த வியாபாரி, நெய்யைக் குடித்து விடுவதென முடிவெடுத்தார். ஓரளவு குடித்ததுமே நாற்றம் குமட்டியது. அதற்கு மேல் முடியவில்லை. எனவே, கசையடி வாங்கிக் கொள்வதாக  அறிவித்தார்.

கசையடி சுள் சுள்ளென விழவே, ஐயோ! அம்மா! என அலறினார். பதினைந்து அடி  வாங்கியபிறகு, இறந்து விடுவோம் என பயந்து, அடியை நிறுத்தச் சொன்னார். பத்து லட்சத்தை அபராதம் கட்டிவிட்டு தப்பித்தால் போதுமென ஓடினார். இப்படித்தான் அநேகர் இருக்கின்றனர். துன்பத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே, அதைப் போக்குவதற்கு கடவுளிடம் கேட்பதில்லை. தங்களால் தாங்க முடியாதென்ற நிலை வந்ததும்,  கடவுளே! காப்பாற்று என கோயிலை நோக்கி ஓடுகிறார்கள் துன்பத்தின் துவக்க கட்டத்திலேயே கடவுளே! எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள், என அவனிடம் சரணடைந்து விட  வேண்டும். சரி தானே!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #4 on: February 19, 2013, 08:50:24 PM »
அவன் இருக்குமிடம் எங்கே?




ஒரு துறவியை இளைஞர் பட்டாளம் சந்தித்தது. சுவாமி! கடவுள்...கடவுள் என்கிறீர்களே! அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேலியாகக் கேட்டார்கள். துறவி அவர்களிடம்,  ஒரு சட்டியில் பால் கொண்டு வாங்களேன், என்றார். பால் வந்தது. அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, விரலை உள்ளே விட்டு துழாவினார். சட்டியை சுற்றியசைத்தார். தரையில் வைத்தார். திரும்பவும் உற்றுப்பார்த்தார். இப்படியே, இரண்டு மூன்று முறை அவர் பார்த்துக் கொண்டிருக்கவே, பொறுமையிழந்த இளைஞர் கள், சுவாமி! நாங்கள் கடவுள் எங்கே எனக் கேட்டால், நீங்கள் பால் சட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கத்தினர்.

அமைதி...அமைதி... என்ற துறவி, பாலில் வெண்ணெய் இருக்கிறதா என துழாவிப்பார்த்தேன், என்றார். இளைஞர்கள் கோபத்துடன்,அட அறிவிலியே! வெண்ணெய் எடுக்க வேண்டுமானால், முதலில் பாலைத் தயிராக்க வேண்டும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வந்து விட்டுப் போகிறது. இது கூட தெரியாத நீர் கடவுளைப் பற்றி பேச வந்து விட்டீரா? என்றனர். தம்பிகளே! கோபம் வேண்டாம்! பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பது உண்மை. ஆனால், அது கண்ணுக்குத் தெரிகிறதா! அதுபோல் தான் கடவுளும். இந்த பிரபஞ்சத்தில் கலந்து நம்மை இயக்குகிறார். கண்ணுக்குத் தெரியமாட்டார், என்றார். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #5 on: February 19, 2013, 09:04:38 PM »
காற்றினிலே வரும் கீதம்!




தமிழ்நாட்டில் ஒரு ஆண்டாள். வடநாட்டுக்கு ஒரு மீரா. சிற்சில வகையிலே அவள் ஆண்டாளையும் விஞ்சி விடுகிறாள். பக்திச் சுவை சொட்டும் அவரது பாக்கள் தேனும் நாணும் தீஞ்சுவை கானம்.

சிறுமி மீரா எப்போதும் ஒரு கிருஷ்ணன் பொம்மையை வைத்தே விளையாடுவாள். இரவு தூங்கும்போதும் அதுவே துணை. மன்னன் மகளல்லவா ! அரண்மனையில் அவ்வப்போது பௌராணிகர் வந்து பாகவதக் கதை பிரவசனம் செய்வார். கண்ணபிரானின் பெருமைகளை அவர் சொல்லச் சொல்ல மீராவுக்கு மெய்யுருகும். தான், பொம்மை என நினைத்த அந்தப் பெம்மான் இத்தனை தெய்வ லீலைகள் புரிந்தவனா என்று அதிசயிப்பாள். நினைவிலும் கனவிலும் கண்ணனே வந்தான். அலகிலா விளையாட்டுடைய அன்னவனுக்கே சரண் நான் என்று இடைக்குலம் காத்தவனிடமே அடைக்கலம் தேடியது, அவள் மனம். கண்ணன் என்னும் மன்னன் நினைவிலே படர்ந்து வளர்ந்த அந்தப் பைங்கொடி அரும்பு மலர்ந்து, மணம் வீசலாயிற்று. தந்தை, அவள் சுயம்வரத்திற்கு நாள் குறித்தார். மீராவோ மறுத்தாள். தந்தை குழம்பினார். மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன், தோழி... என்று சேடிப் பெண்களிடம் கிசுகிசுத்தாள்; நாணம் குமிழிட முகம் மறைத்தாள். அருவாய் இருந்து அருள் புரிவான் கண்ணன். மனிதர் போலா வந்துன்னை மணப்பான், அந்த நந்தலாலா? என்று பாங்கியர் பரிகசித்தனர். சேதியை பெரிய ராணியின் காதிலும் கொஞ்சம் ஓதி வைத்தனர். புத்திமதி புகன்றனர் பெற்றோர். மீராவோ, கன்னி மாடத்திலே கண்ணன் வழிபாட்டுக்கு வழி செய்யுங்கள்; கிருஷ்ண பக்தர்கள் எல்லோரும் அங்கே சங்கமிக்க வகை செய்யுங்கள் ! என்றாள். பாசக்காரத் தந்தை மகளின் கனிமொழிக்குக் கட்டுப்பட்டார். அவ்வாறே நடைபெற ஆவண செய்தார். அன்று முதல் கன்னி மாடம் பக்திக் கூடமாயிற்று.

ஆனால் ஊராரின் நாக்கு மீராவின் போக்கைத் தவறாகக் கருதி அவதூறாகப் பேசின. வீண் வதந்திகளால் வெகுண்டான் மன்னன். இத்தனைக்கும் காரணம் என் சொல் பேச்சுக் கேட்காத மகள்தானே ! என்று மனைவியுடன் சண்டையிட்டான். குடும்பச்சூழல் அபாயச் சுழலாக ஆகிவிட்டது. தன் பக்தையைத் தேற்ற அந்தக் கண்ணபிரானே ஒரு முதியவர் தோற்றத்தில் வந்து, உன் கிருஷ்ணபக்தியைப் பாராட்டுகிறேன். கோபியர்கள் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கண்ணன் மீது பக்தி செலுத்தவில்லையா? நீயும் மணவாழ்வை ஏற்று, மணாளன் மைந்தர்களுடன் சேர்ந்து பக்தி செலுத்தலாமே ! என்றார், வந்தது கண்ணன். சொன்னது மந்திரம் மறுப்பாளா மீரா? அவள் சம்மதத்தின் பேரில் மேவார் மன்னர் ராணாவுக்கு அவளை மணம் செய்து கொடுத்தனர். ராணாவும் சிறந்த பக்தர். ஜெயதேவரின் கீதகோவிந்தத்துக்கு உரை எழுதியவர். மீராவின் பக்தியுணர்வை மதித்து, அவள் வழிபாட்டுக்கென்றே தனிக்கோயில் அமைத்துக் கொடுத்தார். அங்கே மீரா அனுதினமும் பக்திப்பரவசத்துடன் பலப்பல பாடல்களைப் பாடி பரந்தாமனைத் துதித்தாள். அவள் பாடல்கள், கோயிலுக்கு வந்தோரை எல்லாம் பரவசப்படுத்தியது. செய்தி, சக்ரவர்த்தி அக்பருக்கு ஆஸ்தான பாடகர் தான்சேனும் அதை ஆமோதித்தார். ஒருநாள் இருவரும் மாறுவேடத்தில் மீரா பாடும் கோயிலுக்கு வந்தனர். மீராவின் பக்திப் பாடலில் உள்ளம் உருகிய அக்பர், அவளுக்கு ஒரு முத்து மாலை பரிசளித்துச் சென்றார். ராணா, மீரா எப்போதும் கோயில், குளம், பாட்டு, பஜனை என்றே இருப்பதைக் கண்டு வெறுத்துப் போனார். இனி கோயிலுக்குப் போக வேண்டாம். அரண்மனையிலேயே இரு ! என்று ஆணை பிறப்பித்தார். ஆனால், மீரா அரண்மனை வாசமே எனக்கு வேண்டாம். ஆண்டவன் சன்னதியே எனக்கு நிம்மதி என்று ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். மன்னனிடம், உங்கள் கோபமும், என் வைராக்கியமும் அவன் திருவுள்ளம். கண்ணன் என் தலைவன்; பக்தி என் தொழில். அரசி பட்டம் அனாவசிய முள்முடி என்று கூறிவிட்டாள்.

அன்று கண்ணன் பிறந்த நாள். கோயிலில் ஒரே கோலாகலம். எங்கும் தீப அலங்காரம். வலது கையிலே தம்பூராவும், இடது கையிலே கரதாளம் என்னும் சிப்ளாவுமாக மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள் மீரா. ராணா அங்கே வந்து மீராவின் அருட்கோலம் கண்டு, கண்களில் நீர் தளும்ப நின்றார். மீராவின் கரம் பற்றிய நாள் முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் அலைஅலையாய் அவர் மனதில் எழுந்து அடங்கின. எவ்வளவு நேரம் இப்படிக் கழிந்ததோ, தெரியாது. மீராவின் தேவகானம் ராணாவின் மனதை மெழுகிக் கோலமிட்டுவிட்டது. பாடல் நின்றது. மீரா! அரண்மனைக்குத் திரும்பலாமா? என்ற ராணாவின் குரல் கேட்டு, நிமிர்ந்து நோக்கினாள் மீரா. நீங்கள் இந்த உடலுக்கு நாதன். ஆனால் என் இதய நாதன் கண்ணன் என்றபடியே அவள் மயங்கிச் சாய்ந்தாள். கிரிதாரி! அழைக்கின்றாயா ! இதோ வந்துவிட்டேன் என்று அவள் வாய் முணுமுணுத்தது. அரை மயக்கத்தில் எழுந்தாள். கர்ப்பகிருகத்தினுள் நுழைந்தாள். இறைவன் விக்ரகத்தைத் தழுவிக் கொண்டாள். ஒரு மின்னல் பேரொளி அங்கே எழுந்து மறைந்தது. பலத்த காற்று ! கர்ப்பகிருகக் கதவுகள் தாமாகவே மூடிக்கொண்டன. மீண்டும் திறந்து பார்த்தபோது, அங்கே மீரா இல்லை. நிலைகுலைந்து வீழ்ந்தார், ராணா. கண்ணனோடு கலந்துவிட்ட மீரா இன்றும் அவன் திருவடித் தாமரையில் அமர்ந்து பாடுகிறாள்; பாடிக்கொண்டே இருக்கிறாள்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #6 on: February 19, 2013, 10:00:20 PM »
மலைகோயில் ரகசியம்!




நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் தான் மலை களிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங் களிலும் கோயில்கள் அமைத்தனர். ஒரு மலையைக் காட்டி, இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாம பயிற்சி, என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! வேறு வேலை இல்லையா! போங்க சாமி! என்று ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், அங்கே ஒரு சாமி இருக்கிறது. அதை வணங்கினால் கோடி பலன் கிடைக்கும், என்றால் ஏறிவிடுவார்கள். மேலும், கோயிலுக்குச் செல்வதால் மனதையும், உடலையும் சுத்தமாக்கிக் கொள்வார்கள். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹோமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தி யாக்குகிறது.

தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக் கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால்தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.  விடுமுறை எடுக்க வேண்டி வராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும். இது பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்க மனிதனுக்கு துணை செய்யும். இப்போது புரிகிறதா! மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம்.  கொசுறு செய்தி: மலைக் கோயில்களுக்கு போனால், வீட்டில் தயாரித்த பசுநெய்யில் விளக்கேற்றுங்கள். செல்வவளம் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #7 on: February 19, 2013, 10:18:42 PM »
கற்பனை செய்தாலே பலன்!




கடவுளைத் தரிசித்தால் மட்டும் தான்  என்றில்லை. சில நல்ல நிகழ்வுகளைக் கற்பனை செய்தாலே பலனுண்டு. ராமனின் பட்டாபிஷேக நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மனக்கண் முன் கற்பனை செய்தாலே போதும்! ராமகுடும்பத்தின் பூரண நல்லாசியுடன் செல்வவளம் பெற்று வாழும் பலன் கிடைக்கும். பதினான்கு வருட வனவாசம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். அவரைக் கண்ட மக்கள் அன்பினால் வெறி பிடித்தவர்கள் போல் ஆடிப்பாடினர். மலர் தூவி வரவேற்றனர். அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது, பரதன் ராமனின் பாதுகைகளை (காலணி) எடுத்து வந்தான். சுக்ரீவன், விபீஷணன் இருவரும் கவரி வீசினர். அனுமன் வெண்கொற்றக்குடை பிடித்தான். வில்லையும், அம்பையும் சத்ருக்கனன் தூக்கி வந்தான். சீதை தீர்த்தக் கமண்டலம் பிடித்திருந்தாள். வாலியின் மகன்  அங்கதன் உடைவாளும், கரடிகளின் தலைவரான ஜாம்பவான் தங்கக்கவசமும் வைத்திருந்தனர்.  அன்னையரான கோசலை, கைகேயி, சுமித்திரை  மூவரையும் வணங்கிய ராமர் அரியணையில் அமர்ந்தார். அவருக்கு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் வசிஷ்டர் அபிஷேகம் செய்தார். நட்சத்திரத்திற்கு நடுவே முழுநிலவு போல ராமர் காட்சியளித்தார். மக்கள் சந்தோஷக் களிப்பில் மகிழ்ந்தனர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #8 on: February 19, 2013, 10:54:07 PM »
ஜயத்ரதன்!




அழகான பெண் ஒருத்தி, ஆள் அரவம் இல்லாத காட்டில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தால் கேட்கவா வேண்டும்? அவனவன் மோதிப் பார்க்கமாட்டானா? அதுவும் செல்வம், ஆள், அம்பு, சேனை, வாகனம், பதவி என எல்லாம் இருப்பவன் கண்ணில் அந்த அழகான பெண் அகப்பட்டு விட்டால், என்னென்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலம். அவர்கள் அனைவரும் திரௌபதியுடன் காம்யக வனத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களுடன், மிகச் சிறந்த தவசீலரும் ரிஷியுமான த்ருணபிந்துவும் தௌம்யர் என்ற புரோகிதரும் இருந்தார்கள். ஒரு நாள்... பாண்டவர்கள் ஐவரும் காட்டுக்குள் வேட்டையாடப் போன சமயம், திரௌபதி தான் இருந்த குடிசை வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அருகிலேயே ஒரு பெரிய பர்ணசாலையில் (இலை தழைகளால் செய்யப்பட்டது) த்ருணபிந்து, தௌம்யர் முதலானோர் இருந்தார்கள். அந்த நேரத்தில், சிந்து தேசத்தின் அரசனான ஜயத்ரதன் என்பவன் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு சால்வ தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய படைகளும், அவனுக்குப் பக்கவாத்தியம் (ஜால்ரா) வாசிக்கும் மன்னர்களும் ஜயத்ரதனுடன் போனார்கள். ஜயத்ரதனுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்க வேண்டாம். அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன்தான். துரியோதனன் முதலான கௌரவர்களின் ஒரே தங்கையான துச்சலை என்பவளின் கணவன்தான் அந்த ஜயத்ரதன். அவன் காம்யக வனத்தின் வழியாகப் போனபோது, திரௌபதியைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான் ! ஜயத்ரதனுடைய ரதம் அங்கேயே நின்றுவிட்டது. உடன் வந்தவர்களும் பயணத்தை நிறுத்தினார்கள். ஜயத்ரதன் தன்னுடன் வந்த கோடி காச்யன் எனும் மன்னனை அழைத்து, நீ போய், அவள் யாரென்ற தகவலைத் தெரிந்து வா என்று ஏவினான். கோடி காச்யன் உடனே போய் திரௌபதியிடம் விசாரித்தான். அவளும், ஐயா ! என்னைப் போன்ற பெண்கள், உங்களைப் போன்ற அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசக் கூடாது. இருந்தாலும், இப்போது இங்கே வேறு யாரும் உதவிக்கு இல்லாததால், நானே உங்களுக்குப் பதில் சொல்கிறேன். நான் துருபத மன்னரின் புதல்வி. என் பெயர் க்ருஷ்ணை. திரௌபதி என்றும் சொல்வார்கள். மகா வீரர்களான பஞ்ச பாண்டவர்களின் மனைவி நான். துரியோதனனிடம் வஞ்சக சூதில் அனைத்தையும் இழந்து, இங்கே வன வாசத்துக்காக வந்திருக்கிறோம். பஞ்ச பாண்டவர்கள் வேட்டைக்குப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னாள்.

கோடி காச்யன் அப்படியே போய், ஜயத்ரதனிடம் இதைச் சொன்னான். ஏற்கெனவே திரௌபதியைப் பார்த்ததில் இருந்து தன் வசம் இழந்திருந்த ஜயத்ரதன், விடு ! நானே போய் அவளிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு திரௌபதியிடம் வந்தான். அங்கு போனதும் ஜயத்ரதன், மரியாதையாக ஒரு சில வார்த்தைகள் பேசி நலம் விசாரித்துப் பேச்சைத் தொடங்கினான். திரௌபதியும் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி ஜயத்ரதனை உபசரித்து, அவனுக்கு உட்கார ஆசனமும் கொடுத்தாள். அதன்பிறகு, காலை ஆகாரம் தருகிறேன், சாப்பிடுங்கள். சற்று நேரத்தில் தர்மபுத்திரரும் அவர் தம்பிகளும் வேட்டை முடித்து வந்துவிடுவார்கள். அவர்களும் உங்களை உபசரித்து, மேலும் வேண்டிய உணவு வகைகளைக் கொடுப்பார்கள் என்றாள். ஜயத்ரதன் சாப்பிடவா வந்திருக்கிறான்? வந்த நோக்கத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினான். சாப்பாடு என்ன சாப்பாடு ! நீ சொன்னதே, எனக்குச் சாப்பிட்டதைப் போல ஆகிவிட்டது. அத்துடன் இல்லாமல் இன்னும் வேறு எனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறாய். வா ! என்னுடன் வந்து ரதத்தில் ஏறு ! நாட்டை இழந்து, செல்வத்தை இழந்து, தரித்திரர்களாக இந்தக் காட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் பாண்டவர்களால் நீ என்ன சுகத்தைக் கண்டாய்? படித்த பெண்கள், செல்வம் இல்லாத கணவனை விலக்கிவிட வேண்டும். செல்வம் உள்ளவனைத் தேடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆகையால், நீ பாண்டவர்களை விட்டு விலகு. என்னைக் கணவனாக ஏற்றுக்கொள். சிந்து தேசத்துக்கும், சௌவீர தேசத்துக்கும் ராணியாக இருக்கலாம் என்றான். திரௌபதி சீறினாள்; சீ, மதி கெட்டவனே ! இப்படிப் பேச உனக்கு வெட்கமாக இல்லையா ? உன் மனைவியான துச்சலை, துரியோதனன் முதலானவர்களுக்கு மட்டும் தங்கையல்ல; பஞ்சபாண்டவர்களுக்கும் அவள் தங்கைதான். அந்த முறைப்படி பார்த்தால், நான் உன் சகோதரி தங்கை. என்னை விரும்பாதே ! பாவம் செய்யாதே ! பஞ்சபாண்டவர்களுக்குத் தெரிந்தால், உன்னை ஒழித்து விடுவார்கள் என எச்சரித்தாள்.

காமத்தால் கருத்தை இழந்தவனுக்குத் தர்மமாவது அதர்மமாவது ! திரௌபதியின் எச்சரிக்கைகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. ஜயத்ரதன், திரௌபதியைப் பிடித்து பலவந்தமாகத் தன் ரதத்தில் ஏற்றிவிட்டான். திரௌபதி அலறினாள். அதைக் கேட்ட தௌம்யர் ஓடிவந்து தடுத்தார். முடியுமா? ஜயத்ரதன் திரௌபதியுடன் ரதத்தை ஓட்டிக்கொண்டு போய்விட்டான். அவன் படைகள் பின்தொடர்ந்தன. பீமா ! அர்ஜுனா ! என்று அலறியபடியே தௌம்யரும் பின்தொடர்ந்தார். நடந்தது எதுவுமே தெரியாமல், காட்டில் நான்கு திசைகளிலும் பிரிந்து வேட்டையாடிக் கொண்டிருந்த பஞ்சபாண்டவர்கள் ஒன்று கூடினார்கள். அப்போது தர்மர், இந்தக் காட்டில் மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் கூச்சல், ஏதோ தீமை வருவதைப் போல அபசகுனங்களாகத் தெரிகின்றன. காம்யக வனம் நமக்கு ஆபத்தை உண்டாக்குவதைப் போலத் தோன்றுகின்றது. இனம்புரியாத பயத்தால் என் உள்ளம் நடுங்குகிறது. ஆகவே, வேட்டையாடியது போதும். உடனே, நாம் இருப்பிடம் திரும்ப வேண்டும் என்றார். அவசர அவசரமாக ஐவரும் திரும்பினார்கள். அவர்களின் பர்ணசாலைகள் அமைந்திருந்த எல்லையில், திரௌபதியின் வேலைக்காரச் சிறுமி தாத்ரேயிகை என்பவள் அழுது கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் பாண்டவர்கள் அவளிடம் ஓடினார்கள். அவள் சிந்து தேசத்து அரசனான ஜயத்ரதன், தேவியைத் (திரௌபதியை) தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான். இதோ ! இந்த வழியாகத்தான் போயிருக்கிறான். செடிகள் எல்லாம் ஓடிந்து போயிருக்கின்றன, பாருங்கள் ! அவை இன்னும் வாடக்கூட இல்லை. ஆகவே, ஜயத்ரதன் நீண்ட தூரம் போயிருக்க முடியாது. சீக்கிரம் போய் தேவியை மீட்டு வாருங்கள் ! என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன பாண்டவர்கள், அவள் காட்டிய வழியிலே வேகமாகப் போனார்கள். சற்று தூரத்திலேயே, ஜயத்ரதன் படைகள் போனதால் காற்றில் பறந்த புழுதியைக் கண்டு, வேகத்தை அதிகப்படுத்தினார்கள். தௌம்யர் அலறிய, பீமா ! அர்ஜுனா ! என்ற அலறல் கேட்டது. பாண்டவர்கள் அவரிடம், இனிமேல் நீங்கள் அவர்களைப் பின்தொடராதீர்கள். இங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஜயத்ரதனின் படைகளை நோக்கி ஓடினார்கள். சற்று நேரத்திலேயே ஜயத்ரதனின் படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.

அதைப் பார்த்த ஜயத்ரதன் நடுங்கிப் போய், உயிர் தப்பினால் போதும் என்று ரதத்திலிருந்து திரௌபதியைக் கீழே இறக்கிவிட்டு, ரதத்தைக் கிளப்பிக் கொண்டு ஓடிப் போனான். அப்போது பீமன் தர்மரிடம், அண்ணா ! திரௌபதியை அழைத்துக்கொண்டு நீங்கள் திரும்புங்கள் ! அந்தப் பாவி ஜயத்ரதனைக் கொன்றுவிட்டு, நாங்கள் பின்னால் வருகிறோம் என்றான். தர்மரோ அந்த நிலையிலும், பீமா ! ஜயத்ரதன் கெட்டவன்தான். ஆனால், நம் தங்கையின் கணவன் அவன். காந்தாரியின் மருமகன். ஜயத்ரதனைக் கொன்றால், அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். ஆகையால், அவனைக் கொல்ல வேண்டாம் என்றார். ஆனால். திரௌபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பான அந்த ஜயத்ரதனை, அவன் எவ்வளவு கெஞ்சினாலும் விடாதீர்கள் ! அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும் ! தர்மர் அமைதியாக திரௌபதியை அழைத்துக்கொண்டு, தௌம்யருடன் அங்கிருந்து திரும்பினார். நகுலனும் சகாதேவனும் பின்தொடர்ந்தார்கள். பீமனும் அர்ஜுனனும் ஜயத்ரதனைத் தேடி ஓடி, அவன் ரதத்தில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அர்ஜுனன் அம்புகளை ஏவி, குதிரைகளைக் கொன்று ஜயத்ரதனின் ரதத்தைச் செயலிழக்கச் செய்தான். ஜயத்ரதன், ரதத்திலிருந்து குதித்து ஓடினான். அவன் தலையிலிருந்த கிரீடம் கீழே விழுந்தது. உயிர் பயத்தில் ஓடிய ஜயத்ரதன், அங்கங்கே மரங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஒரு புதரில் போய் மறைந்துகொண்டான். ஆனால், ஜயத்ரதனை பீமன் பார்த்துவிட்டான். கோபம் தலைக்கு ஏறியது. ஜயத்ரதனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி மேலே எறிந்து, பூமியில் போட்டுத் தேய்த்தான். பீமனின் தாக்குதலைத் தாங்காமல், ஜயத்ரதன் கதறி எழுந்திருக்க முயற்சி செய்தான். அவனைத் தலையில் உதைத்து, கால்களால் மறுபடியும் உதைத்து, கைகளால் குத்தினான் பீமன். ஜயத்ரதன் மயங்கி விழுந்தான். அப்போதும் பீமனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனை அர்ஜுனன் தடுத்து, இவனைக் கொல்லக் கூடாது என்று தர்மர் சொன்னாரல்லவா? என்றான்.

அப்போது ஜயத்ரதனுக்கு மயக்கம் தெளிந்தது. ஆத்திரத்தை அடக்க முடியாத பீமன் ஓர் அர்த்தசந்திர (பிறைநிலவைப் போன்ற) பாணத்தை எடுத்து, ஜயத்ரதனின் தலையில் ஐந்து குடுமிகளை உண்டாக்கினான் (உச்சிக்குடுமி என்கிறோமே, அதைப் போல ஐந்து). அத்துடன், அறிவு கெட்டவனே ! இனிமேல் யார் கேட்டாலும், நான் பாண்டவர்களின் அடிமை என்று நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லச் சம்மதித்தால், உன்னை உயிரோடு விடுவேன். இல்லாவிட்டால், இப்போதே கொன்றுவிடுவேன் என்றான் பீமன். ஜயத்ரதன் மறுப்பானா என்ன? ஒப்புக்கொண்டான். அதன்பிறகு ஜயத்ரதனைக் கயிற்றால் நன்றாகக் கட்டி, தர்மர்முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். தர்மர் ஜயத்ரதனை மன்னித்து அறிவுரை சொல்லி அனுப்பினார். பாண்டவர்களைப் பொறுத்தவரை, ஜயத்ரதன் ஒரு சிறு துரும்புதான். ஆனால் அந்தத் துரும்பு, பாண்டவர்களின் கண்ணையே குத்தப்போகிறது என்பதை, தர்மர் உட்பட யாருமே அறியவில்லை. கடன், நெருப்பு, பகை முதலானவற்றை மீதம் வைக்கக் கூடாது. முழுவதுமாக முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை முடித்துவிடும் என்பதை பாண்டவர்கள் அறியவில்லை போலும். அதனால்தான், பெரும் பாதகம் விளையப்போவதை அறியாமல் பகைவனான ஜயத்ரதனை உயிருடன் விட்டுவிட்டார்கள். பாண்டவர்களால் விடுவிக்கப்பட்ட ஜயத்ரதன், தன் அரண்மனைக்குப் போகவில்லை. மாறாக, கங்கைக்கரைக்குப் போய்விட்டான். அங்கே சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தான். ஜயத்ரதனின் தவம், அவன் முன்னால் சிவபெருமானை நிறுத்தியது. ஆம் ! சிவபெருமான் நேரில் தோன்றினார். ஜயத்ரதன் செய்த பூஜையை ஏற்றுக்கொண்டார். வரம் தருவதாகவும் சொன்னார். ஜயத்ரதன், பாண்டவர்கள் ஐவரையும் நான் வெல்ல வேண்டும் என வரம் கேட்டான். சிவபெருமான் அதை மறுத்தார். ஜயத்ரதா ! சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை ஏற்கெனவே அர்ஜுனன் என்னிடமிருந்து பெற்றுவிட்டான். தெய்வ அஸ்திரங்களும் ஏராளமாக அவனிடம் உள்ளன. மேலும், கண்ணனையே துணையாகக் கொண்ட அர்ஜுனனை, தேவர்களாலும் வெல்ல முடியாது எனும்போது, நீ எம்மாத்திரம்? ஆகையால், அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரையும் அவர்கள் படைகளையும், ஒரே ஒரு நாள் மட்டும் நீ தடுப்பாய், வெல்வாய் என்று சொல்லி மறைந்தார். ஜயத்ரதன், தன் அரண்மனைக்குத் திரும்பினான். ஜயத்ரதன் பெற்ற வரம் வேலை செய்தது. அதனால், பாண்டவர்கள் கதறினார்கள். எப்படி? பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஜயத்ரதன், அடிபட்ட பாம்பைப் போல நெஞ்சில் சீற்றத்துடன் பாண்டவர்களைப் பழி தீர்க்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தான். அதற்கான வாய்ப்பு, அவனுக்கு பாரத யுத்தத்தின்போது கிடைத்தது. அதுவே, அவன் வாழ்நாளை முடிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

பீஷ்மருக்குப் பிறகு துரோணர், கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார். கௌரவர்களால் பாண்டவர்களின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. காய்ந்துபோன வைக்கோல் கட்டுகளின் மேல் தீப்பந்தங்களை வீசி எரிப்பதைப் போல, அர்ஜுனன் தன் அம்புகளை வீசி கௌரவ சேனையை எரித்துக் கொண்டிருந்தான். தீப்பற்றி எரியும்போது காற்று வீசி அதற்கு உதவுவதைப் போல, அர்ஜுனனின் பிள்ளையான அபிமன்யு துரியோதனனின் படைகளுக்குப் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருந்தான். உடனடியாகப் பாண்டவர்களைப் பிரித்து, அவர்களை பலவீனப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் கௌரவர்கள் இருந்தார்கள். அர்ஜுனனைப் பிரித்தால் போதும். மீதி உள்ள நான்கு பேரையும் நான் வென்று விடுவேன் என்று சொல்லி, சிவன் தந்த வரத்தையும் நினைவூட்டி கௌரவர்களுக்குத் தைரியம் ஊட்டினான் ஜயத்ரதன். துரியோதனன், அர்ஜுனனைப் பிரிக்க நானாயிற்று என்று சொல்லி, சம் சப்தகர்களை ஏவினான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது அல்லது அவர்களால் கொல்லப்படுவது என்ற சபதத்துடன் போரில் ஈடுபடுபவர்களையே சம் சப்தகர்கள் என்பார்கள். அவர்கள், அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனன், அவர்களுடன் போரிடப் போய்விட்டான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்கள், துரோணர் தலைமையிலான கௌரவர் படையை எதிர்கொள்ளவேண்டிய நிலை ! கடும்போர் மூண்டது. துரோணர் வகுத்திருந்த படை அமைப்பை, யாராலும் உடைத்து உள்ளே போக முடியாத நிலை. இந்நிலை சற்று நீடித்தால், பாண்டவர் படைக்குப் பேரழிவு ஏற்படும். என்ன செய்வது? பாண்டவர் படை கலங்கியது. அப்போது அபிமன்யு, நான் இந்தத் துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்து விடுவேன். ஆனால், அதிலிருந்து வெளியே வரும் வழி எனக்குத் தெரியாது என்றான். பீமன் உட்பட அனைவரும் தைரியம் சொன்னார்கள். நீ அந்தப் படையை உடைத்து உள்ளே நுழைந்து, கௌரவர் சேனைக்கு அழிவை உண்டாக்குவோம். வெளியே வருவதில் பிரச்னையே இல்லை என்றார்கள். இள ரத்தம் அல்லவா? அபிமன்யு துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான். தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் படைகளுடன் அபிமன்யுவைப் பின்தொடர்ந்து, உள்ளே நுழைய முயன்றார்கள்.

அந்த நேரத்தில், ஜயத்ரதன் குறுக்கிட்டு, பீமன் முதலான அனைவரையும் படைகளோடு தடுத்தான். ஜயத்ரதன் ஏற்கெனவே தான் சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரத்தை, அப்போது உபயோகப்படுத்திக் கொண்டான். பாண்டவர் படை ஜயத்ரதனால் தடுக்கப்பட்டு, அபிமன்யு பகைவர்களின் நடுவில் அகப்பட்டு, வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். தர்மர் முதலான அனைவரும் நடுங்கினார்கள். சம் சப்தகர்களை வென்று திரும்பிய அர்ஜுனன், அபிமன்யுவின் முடிவைக் கேட்டுத் துடித்தான். அபிமன்யுவின் முடிவுக்குக் காரணமான ஜயத்ரதன் தலையை, நாளை மாலை சூரியன் மறைவதற்குள் கொய்வேன். இல்லையென்றால், நெருப்பில் விழுந்து நான் இறப்பேன். இது சத்தியம் என்று சபதம் செய்தான். தகவல் அறிந்ததும் துரியோதனன், தன் தங்கை கணவனான ஜயத்ரதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தான். போர் தொடங்கியது. அர்ஜுனனை எந்த விதத்திலும் முன்னேறவிடாதபடி கௌரவர் படை கடுமையாகப் போரிட்டது. நேரமும் போய்க்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும். அதுவரை ஜயத்ரதனைக் காப்பாற்றிவிட்டால் போதும். அர்ஜுனன் தீயில் விழுந்து விடுவான் என்று நினைத்த கௌரவர் படை, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சூரியன் இருளத் தொடங்கினான். (மூல நூலான வியாஸ பாரதத்தில் இல்லாத, ஆனால் மக்கள் மத்தியில் பரவியிருக்கக்கூடிய ஒரு தகவல் இங்கே இடம் பெறுகிறது) அர்ஜுனனோ, என் சபதம் தவறிப் போய்விட்டது. ஆகவே, நான் இறப்பதுதான் முறை என்று தீயை மூட்டச் சொல்லி, அதில் இறங்கத் தயாராகி விட்டான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! வீரனான நீ, வில்லில் பாசுபதாஸ்திரத்தைத் தொடுத்து, அதைச் செலுத்தும் நிலையிலேயே அக்னியை வலம் வா ! என்றார். அதன்படியே அர்ஜுனனும் அக்னியை வலம் வந்துகொண்டிருந்தான். அவன் முடிவைப் பார்ப்பதற்காக ஜயத்ரதன் ஆசையுடன் வெளிப்பட்டுத் தலையை நீட்டினான்; அவன் தலையை அர்ஜுனன் வாங்கிவிட்டான். ஆனால் வியாஸ பாரதத்தில், இந்தத் தீயை மூட்டச் சொல்லி அர்ஜுனன் அதில் குதிக்கப்போன தகவல் எல்லாம் கிடையாது. அதில் வேறு விதமாக தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

போர்க்களத்தில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் எமலோகம் அனுப்பிவிட்டு, வேகவேகமாக அர்ஜுனன், ஜயத்ரதனை நெருங்கி எதிர்த்தான். ஜயத்ரதனும் சும்மா இருக்கவில்லை. கண்ணன் மீது மூன்று அம்புகள், அர்ஜுனன் மீது ஆறு அம்புகள் என அம்புகளை ஏவி அவர்களை அடித்தான். அர்ஜுனன், ஜயத்ரதனின் தேரோட்டியைக் கொன்று அவன் கொடியையும் அறுத்துக் கீழே தள்ளினான். ஜயத்ரதனைச் சுற்றி கௌரவ வீரர்கள் மேலும் பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டார்கள். அப்போது கண்ணன், அர்ஜுனா, நான் ஒன்று சொல்கிறேன் கேள் ! நான் ஒருவழி செய்து சூரியனை மறைக்கிறேன். உடனே ஜயத்ரதன் சூரியன் மறைந்துவிட்டதாக நினைப்பான். தான் உயிர் பிழைப்பதாலும், உன் சபதம் நிறைவேறாமல் போவதாலும் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அந்த சந்தோஷத்தில் அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுவான். அப்போது நீ அவனை அடி என்றார். அவ்வாறு கூறி முடித்ததும் சூரியனை மறைக்கும் முகமாக, கண்ணன் அங்கே சக்ராயுதத்தை ஏவி சூரியனை மறைத்து வெளிச்சத்தைக் கவர்ந்தார். பாண்டவர் சேனை துயரத்தில் ஆழ்ந்தது. கௌரவர் சேனையோ அர்ஜுனன் முடிவை எண்ணி, சூரியன் மறைவை ஆர்வத்துடன் பார்த்தது. ஜயத்ரதனும், தலையைத் தூக்கி கழுத்தை நீட்டிப் பார்த்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அதோ பார், ஜயத்ரதன் ! ஓர் அம்பினால் அவன் தலையை எடு ! என்றார். அடுத்த விநாடியில் அர்ஜுனன் ஓர் அம்பை ஏவி, ஜயத்ரதனின் தலையைக் கவர்ந்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அந்தத் தலையைக் கீழே விழாதபடி செய் ! ச்யமந்த பஞ்சகம் என்னுமிடத்தில், இந்த ஜயத்ரதனின் தந்தையான விருத்த க்ஷத்ரன் ஜபம் செய்துகொண்டிருக்கிறான். ஜயத்ரதன் தலையை, அந்த விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றார்.

அதைக் கேட்ட அர்ஜுனன், என்னவோ பந்தைத் தட்டுவதைப் போல அம்புகளாலேயே ஜயத்ரதனின் தலையைத் தள்ளிக்கொண்டுபோய், விருத்த க்ஷத்ரன் மடியில் போட்டான். ஜபம் முடிந்து எழுந்த விருத்த க்ஷத்ரன் மடியிலிருந்து ஜயத்ரதன் தலை கீழே விழுந்தது. விருத்த க்ஷத்ரன் தலை வெடித்து இறந்து போனான். கண்ணன் காரணம் சொன்னான்; இந்த ஜயத்ரதன் பிறந்தபோது, பூமியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருவன் இந்த ஜயத்ரதனின் தலையை அறுப்பான் என்று அசரீரி சொல்லியது. அதைக்கேட்ட ஜயத்ரதனின் தந்தை, நான் மனமடக்கித் தவம் செய்தது உண்மையாக இருந்தால், என் மகன் தலையை எவன் கீழே தள்ளுவானோ அவன் தலை நூறு துண்டுகளாக வெடிக்கட்டும் என்றான். அதன்படி ஜயத்ரதன் தலையை பூமியில் தள்ளியிருந்தால். உன் தலை சிதறிப் போயிருக்கும். அதைத் தடுக்கத்தான், ஜயத்ரதன் தலையை விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றேன். மடியில் விழுந்த மகன் தலையை, விருத்த க்ஷத்ரன் மண்ணில் தள்ளினான். அவன் வாக்குப்படியே தலை வெடித்து மாண்டான். அதேசமயம் கண்ணன், போர்க்களத்தில் இருளைப் போக்கி ஒளியைப் கொணர்ந்தார். சூரியனை மறைத்திருந்த சக்ராயுதத்தைத் திரும்பப் பெற்று, சூரியனை வெளிப்படச் செய்தார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #9 on: February 19, 2013, 11:10:17 PM »
த்ருஷ்டத்யும்னன்




மகாபாரதம் என்றால் நாம் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பஞ்சபாண்டவர்களைப் பற்றியும், அவர்களது குணாதிசயங்களும் ஓரளவு நமக்குத் தெரிந்திருக்கும். இந்த மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களில் த்ருஷ்டத்யும்னனும் ஒருவன்.

இந்த த்ருஷ்டத்யும்னனைப் பற்றி அறிய வேண்டுமென்றால், துரோணரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணம் புரியும். துரோணர் தன் சீடர்களிடம், மாணவ மணிகளே ! நீங்கள் அனைவரும் வில் வித்தை முதலான போர்க்கலைகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். குருநாதரான நான் இப்போது உங்களிடம் குருதட்சணை கேட்கப்போகிறேன். நான் கேட்கப்போவது பொன்னோ பொருளோ அல்ல. விசித்திரமான குருதட்சணை. ஆம் ! விசித்திரம்தான். சீடர்களான நீங்கள் போய் பாஞ்சால மன்னனான துருபதனைக் கட்டிவந்து, உங்கள் குருவான என் முன்னால் நிறுத்துங்கள். நான் கேட்கும் குருதட்சணை இதுதான் என்றார். அதை நிறைவேற்றுவதற்காக, முதலில் கௌரவர்கள் போய் துருபதனுடன் போரிட்டுத் தோற்றுப்போய்த் திரும்பினார்கள். அதன்பின், அர்ஜுனனும் பீமனும் துருபதனுடன் போரிடப் போனார்கள். துருபதனை வென்று, பிடித்துக் கட்டித் துரோணரின் முன்னால் நிறுத்தினார்கள். அப்போது, துருபதன் அவமானத்தால் தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அரசரான துருபதனுக்கு ஏன் இந்த நிலை? துரோணர் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இளம் வயதில், துரோணரும் இளவரசரான துருபதனும் ஒரே குருகுலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இணைபிரியாத நட்பு. அப்போதெல்லாம் துருபதன், துரோணா ! எதிர்காலத்தில் நான் அரசனாக ஆவேன். அப்போது, என் நண்பனான உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவேன். இது சத்தியம் என்று சொல்லுவார்.

அதன்படியே எதிர்காலத்தில் துருபதனும் அரசராக ஆனார். அப்போது துரோதணரின் நிலையோ, வறுமையின் பிடியில் சிக்கி வாடிப்போய் இருந்தது. கல்யாணமாகி குடும்பக்கணக்கில் ஒரு குழந்தை கூடிப்போயிருந்தது. அந்தக் குழந்தைக்குப் பாலுக்கு வழி இல்லை. மனம் வெதும்பிய துரோணர், சரி ! நம் நண்பன் துருபதன்தான் இப்போது அரசனாகி இருக்கிறானே ! அவனிடம் போய் ஒரு பசுமாடு கேட்கலாம். அவன் கொடுப்பான். அதை வைத்து நம் பிள்ளையின் பசியைத் தீர்க்கலாம் என்று எண்ணி துருபதனிடம் போனார். நடந்ததையெல்லாம் சொல்லி உதவி கேட்டார். ஆனால், துருபதன் துரோணரை அவமானப்படுத்தி விரட்டிவிட்டார். அன்று துருபதன் போட்ட அவமான விதைகள் துரோணர் உள்ளத்தில் முளைத்து வளர்ந்து, இதோ... இப்போது அர்ஜுனன் மூலம் துருபதனை அவமானப்படுத்திவிட்டன. அதனால்தான் துரோணர் முன்னால் தலைகுனிந்து நிற்கும்படியான நிலை துருபதனுக்கு ஏற்பட்டது. துரோணரின் தலையையே வாங்கும்படியான நிகழ்ச்சிக்கும் இது அஸ்திவாரம் போட்டது. ஆம் ! துருபதன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். என்னைக் கட்டிப் பிடித்து இழுத்து வரச்சொல்லி அவமானப்படுத்திய துரோணரைக் கொல்ல ஒரு பிள்ளை வேண்டும். துரோணன் பேச்சைக் கேட்டு, என்னைப் போர்க்களத்தில் வென்ற அர்ஜுனனை மணம் செய்துகொள்ள ஒரு மகள் வேண்டும் என்று தீர்மானித்த துருபதன் ஒரு யாகம் செய்தார். யாகத்தின் முடிவில், மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில், அஞ்ச வைக்கும் உருவத்துடன் கிரீடம், கவசம், கத்தி, வில், அம்பு ஆகியவற்றைக் தரித்தபடி வீரன் ஒருவன் கர்ஜனை செய்தபடி யாக அக்னியிலிருந்து எழுந்தான். அப்போது ஆகாயத்திலிருந்து, இவன் துரோணருக்குச் சீடனாகவும் யமனாகவும் பிறந்திருக்கிறான். இந்த ராஜபுத்ரன், பாஞ்சாலர்களின் பயத்தைப் போக்கிப் புகழை உண்டாக்குவான். இவன் துரோணரை வதம் செய்து, துருபத மன்னனின் துயரத்தை ஒழிப்பதற்காகப் பிறந்தவன் என ஓர் அசரீரி சொல்லியது.

யாக அக்னியிலிருந்து பிறந்த குமாரன்தான் த்ருஷ்டத்யுனன். த்ருஷ்டம் என்றால், வெல்ல முடியாதவன் என்பது பொருள். த்யும்னன் என்னும் தங்கமயமான கவச குண்டலங்களோடு பிறந்ததால், அக்குமாரனுக்கு த்ருஷ்டத்யும்னன் எனப் பெயரிட்டார்கள். இவன் தோன்றிய யாக அக்னியிலிருந்து, இவனுக்குப் பிறகு தோன்றியவளே பாஞ்சாலி. ஆகவே, த்ருஷ்டத்யும்னன் தோன்றியது. துரோணரை வதம் செய்வதற்காகவே! வீரனான த்ருஷ்டத்யும்னன், வேதத்திலும் வல்லவனாக ஆனான். இவ்வளவு தகவல்களும் துரோணருக்குத் தெரியும். இருந்தும் அவர் த்ருஷ்டத்யும்னனைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து, அவனுக்கு முறைப்படி வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். துரோணர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். என்னைக் கொல்வதற்காகவே த்ருஷ்டத்யும்னன் பிறந்திருக்கிறான் என்று விதி இருக்கும்போது, அதை என்னால் விலக்க முடியாது. அதற்காக, எனக்குத் தெரிந்திருக்கும் வித்தையை நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பது தர்மமாகாது என்று நினைத்தே துரோணர் த்ருஷ்டத்யும்னனுக்கு வில் வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். அவர் தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார். த்ருஷ்டத்யும்னனும் தன் கூர்த்த மதியால் அதிவிரைவிலேயே அனைத்தையும் கற்றுக்கொண்டான். அதன் பலனாக, புகழ்பெற்ற பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் படைகளுக்குத் தலைவனாக ஆனான் த்ருஷ்டத்யும்னன். கண்ணனும் தர்மரும் த்ருஷ்டத்யும்னனைத்தான் போரின்போது சேனாதிபதி ஆக்கினார்கள். போர்க்களத்தில் துரோணரால், பாண்டவ சேனைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது பாண்டவர்களைப் காப்பதற்காகக் கண்ணன், இந்தத் துரோணர் வில்லுடன் இருக்கும் வரையில், இவரை யாராலும் வெல்ல முடியாது. இவரும் வில்லைக் கீழே வைக்க மாட்டார். இந்த யுத்த களத்தில் பாண்டவர் பக்கம் இருக்கும் வீரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இந்தத் துரோணர் யுத்தம் செய்யக் கூடாது. இவருடைய பிள்ளையான அச்வத்தாமா, யுத்தத்தில் கொல்லப்பட்டான் என்று யாராவது இவரிடம் சொன்னால், இவர் யுத்தம் செய்யமாட்டார். உங்களில் யாராவது ஒருவர் துரோணரிடம் சென்று, அச்வத்தாமா போர்க்களத்தில் கொல்லப்பட்டான் என்று சொல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.

வேறு வழியற்ற நிலையில் தர்மரும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டார். உடனே பீமன் சென்று (யுத்த களத்தில் இருந்த) மாளவ தேச மன்னன் இந்திர வர்மாவின் யானையான அச்வத்தாமா என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றான். பிறகு பீமன் துரோணரை நெருங்கி, அச்வத்தாமா கொல்லப்பட்டான் எனக் கூறினான் (அச்வத்தாமா என்ற யானை கொல்லப்பட்டதை நினைத்தே பீமன் அவ்வாறு சொன்னான்). பீமன் வார்த்தைகளை துரோணர் நம்பவில்லை. அதனால் தர்மரிடம் அவர், அச்வத்தாமா, கொல்லப்பட்டானா இல்லையா? எனக் கேட்டார். அப்போது கண்ணன் சொற்படி தர்மர் நிலைமையைப் புரிந்துகொண்டார். உடனே அவர் துரோணரின் காதுகளில் விழும்படியாக, அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்ற வாக்கியத்தில், அச்வத்தாமா ஹத: (அச்வத்தாமா கொல்லப்பட்டான்) என்பதை உரத்த குரலில் சொன்னார். அதன்பின் உள்ள குஞ்சர: (யானை) என்ற வார்த்தையை மெல்லச் சொன்னார். அதாவது, துரோணரின் காதுகளில் அந்த வார்த்தை விழாதவாறு சொன்னார். அவ்வளவுதான் ! விளைந்தது விபரீதம். தர்மர் அவ்வாறு பொய் சொன்னதும், அதுவரையில் தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில் தரையைத் தீண்டாமலேயே இருந்த தர்மருடைய ரதம் தரையைத் தொட்டுவிட்டது. ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் கால்கள் பூமியைத் தொட்டன. (இந்த இடத்தில் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் ஒரு பொய்யான தகவல்: தர்மர், அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்று சொன்னார். அப்போது குஞ்சர: என்னும் வார்த்தை துரோணரின் காதுகளில் விழாதபடி, கண்ணன் தன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை எடுத்து பம்பம் என்று முழக்கிவிட்டார். இது நல்லாப்பிள்ளை பாரதம் சொல்லும் தகவல்.

பீமன் மாளவ மன்னனின் யானையைக் கொன்றதோ, பீமன், அச்வத்தாமா இறந்து விட்டான் என்று சொன்னதோ, தர்மர் பொய் சொன்னதும் அவர் தேர் தரையைத் தொட்டதோ - இங்கே நல்லாப்பிள்ளை பாரதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் என்ன செய்வது? பாமரர்கள் நடுவில் நல்லாப்பிள்ளை பாரதமும், படித்தவர்கள் மத்தியில் வில்லி பாரதமும்தான் பரவியிருக்கின்றன. வியாஸர், பாரதத்தில் சொன்ன அற்புதமான, உண்மையான தகவல்கள் தெரியாமலே போய்விட்டன.) தர்மர் மூலமாக அச்வத்தாமாவின் முடிவைப் பற்றிக் கேள்விப்பட்ட துரோணர், புத்திர சோகத்தால் உள்ளம் உடைந்தார்; அறிவு நிலைகுலைந்தது; தன் கைகளில் இருந்த வில்லைக் கீழே எறிந்தார். தன் மகனான அச்வத்தாமாவை நினைத்துக் கதறினார். ரதத்தின் நடுவில் உட்கார்ந்தபடி, உயிரை விடுவதற்காக யோக நிஷ்டையை அடைந்தார். இதுதான் நேரம் என்று, துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்திருந்த த்ருஷ்டத்யும்னன், கையில் இருந்த வில்லைக் கீழே வைத்துவிட்டு, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வேகவேகமாகத் துரோணரை நோக்கி ஓடினான். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ஆ ! ஆ ! கெட்டான் த்ருஷ்டத்யும்னன் என்று கத்தினார்கள். த்ருஷ்டத்யும்னன் அப்போது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் வெகுவேகமாக ஓடிப்போய் துரோணரை நெருங்கினான்; துரோணரின் தலைமுடியைப் பிடித்து, அவர் தலையைத் துண்டித்தான்; துண்டிக்கப்பட்ட துரோணரின் தலையை கௌரவர்களின் முன்னால் போட்டான். அனைவரும் த்ருஷ்டத்யும்னனின் செயலைக் கண்டு சிதறி ஓடினார்கள். த்ருஷ்டத்யும்னன் எதற்காகப் பிறந்தானோ, அந்தச் செயலை முடித்து விட்டான். த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணமும் காரியமும் முடிந்துவிட்டன. ஆனால், அவன் முடிய வேண்டுமல்லவா? அதற்காக அங்கே போர்க்களத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. என் தந்தையைக் கொன்ற த்ருஷ்டத்யும்னனைக் கொல்வேன் என்று சபதம் செய்தது. ஆம் ! அச்வத்தாமாதான் அது. அச்வத்தாமா சபதம் செய்துவிட்டானே தவிர, அந்தச் சபதம் பாரத யுத்தம் முடிந்த பிறகு, அதுவும் துரியோதனன் கீழே விழுந்த பிறகுதான் நிறைவேறியது. பாரத யுத்தத்தின் முடிவில் துரியோதனன் பீமனால் அடிக்கப்பட்டுத் தொடை முறிந்து, ரத்தம் வழியக் கீழே கிடந்தான். அப்போது அவனைப் பார்த்து அச்வத்தாமா, கிருபாசார்யார், கிருதவர்மா ஆகிய மூவரும் கலங்கிப் பலவாறாகப் புலம்பினார்கள்.

அப்போது துரியோதனன், அச்வத்தாமாவை சேனாதிபதி ஆக்கினான். உடனே அச்வத்தாமா, ஆயுதங்களை எல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக நிலையில் இருந்த என் தந்தையைக் கொன்ற பாவியான த்ருஷ்டத்யும்னனைக் கொல்லப்போகிறேன் என்று சொல்லி, பாண்டவர் பாசறையை நோக்கிப் போனான். அவன் சொற்படி கிருபாசார்யாரும், கிருதவர்மாவும்கூடப் போனார்கள். அவர்கள் போன நேரம்... கண்ணனும் பாண்டவர்களும் அங்கு இல்லை. தன்னைத் தாக்காதபடி சிவபெருமானை வேண்டி, அவர் அருளைப் பெற்று பாசறைக்குள் நுழைந்தான். கிருபாசார்யாரும் கிருதவர்மாவும் பாசறையின் வாயிலில் நின்றார்கள். பாசறைக்குள் நுழைந்த அச்வத்தாமா, அங்கு தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அவன் பார்வையில் த்ருஷ்டத்யும்னன் தூங்குவது தெரிந்தது. உடனே, அச்வத்தாமா த்ருஷ்டத்யும்னனை நெருங்கி உற்றுப் பார்த்தான். வெண்பட்டாலான பெரிய விரிப்பினால் மூடப்பட்டு, வாசனை மிகுந்த பூமாலைகளோடு கூடிய படுக்கையில் த்ருஷ்டத்யும்னன் தூங்கிக்கொண்டிருந்தான். வாசனை மிகுந்த புகை, மெல்லியதாகப் படுக்கையைச் சுற்றி வீசிக்கொண்டிருந்தது. தன் பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட த்ருஷ்டத்யும்னன், எந்தவிதமான பயமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நிலையில் த்ருஷ்டத்யும்னனைப் பார்த்த அச்வத்தாமா, அவனைத் தன் காலால் உதைத்தான். த்ருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு விழித்து, எதிரில் இருந்த அச்வத்தாமாவைப் பார்த்து எழுந்திருக்க முயற்சி செய்தான். அச்வத்தாமா விடவில்லை. இரண்டு கைகளாலும் த்ருஷ்டத்யும்னனின் தலைமயிரைப் பிடித்து, அவனை அப்படியே தரையில் தேய்த்தான். த்ருஷ்டத்யும்னனால் அப்போது ஏதும் செய்ய முடியவில்லை. அச்வத்தாமா, அடங்காத கோபத்தோடும் குரூரமான சிந்தையோடும் வில்லிலிருந்த நாண் கயிற்றை அவிழ்த்து, த்ருஷ்டத்யுனனின் கழுத்தில் கட்டி இறுக்கினான். த்ருஷ்டத்யும்னன் அலறினான். அவன் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறி மிதித்தான் அச்வத்தாமா.

த்ருஷ்டத்யும்னன் கை நகங்களால் அச்வத்தாமாவைக் கீறியபடியே, குரு புத்ரா! என்னைக் கொன்றுவிடு ! தாமதம் செய்யாதே ! உன்னால் கொல்லப்பட்டு, நான் புண்ணிய உலகங்களை அடைவேன் என்று நா குழறியபடியே வேண்டினான். அச்வத்தாமா கொதித்தான். குலத்தைக் கெடுத்த பாவி ! குருநாதர்களைக் கொல்லுகிறவர்களுக்குப் புண்ணிய உலகங்கள் கிடையாது. என் தந்தையைக் கொன்ற உன்னை இப்போதே கொல்வேன் என்று சொல்லி, த்ருஷ்டத்யும்னனை, மர்ம ஸ்தானங்களில் மதயானை உதைப்பதைப் போல் உதைத்துக் கொன்றான். த்ருஷ்டத்யும்னன் வாழ்நாள் முடிந்தது. யாக அக்னியிலிருந்து பிறந்தவன், பாஞ்சாலியின் சகோதரன், வீரன், வேதங்களில் வல்லவன், துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். துரோணரிடமே வில், வித்தை கற்றவன். பதினெட்டு நாட்கள் நடந்த பாரத யுத்தத்தில், பாண்டவர்களின் படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன். வீர புருஷரான துரோணரைக் கொன்றவன். சிரஞ்சீவியான அச்வத்தாமாவின் கரங்களால் முடிவைத் தழுவியவன் என்று பல பெருமைகளைக் கொண்டவன் த்ருஷ்டத்யும்னன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #10 on: February 19, 2013, 11:27:47 PM »
பரதன்!




துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக எண்ணினான் ராமன். காட்டுக்குப் போ என்று தந்தையின் உத்தரவை கைகேயி வாயிலாகக் கேட்டதும் சிறிதும் மனம் கலங்காமல் அங்ஙனமே ஆகுக என்றான் என்பது வால்மீகியின் வாக்கு. கம்பரோ, கைகேயியின் சொற்கேட்டு ராமன் மகிழ்ந்தான் என்கிறார். ஆனால், ராமன் காட்டுக்குப் போன துயரத்தை பரதன் தான் அனுபவித்தான். செய்தி கேட்டதும், அங்குசத்தாலும் தோமரத்தாலும் புண்பட்ட யானை எனத் தரையில் வீழ்ந்தான் என்கிறார் வால்மீகி. காட்டுக்குச் சென்ற ராமனைக் காணும் வரையில் பரதன் பட்ட துயரத்தை வால்மீகியும் கம்பரும் பலவிதமாக வர்ணித்திருக்கிறார்கள். அயோத்தியா காண்டத்தில் முனிவரெல்லோரும் ஒன்று கூடி ராமனுக்கு முடி சூட்டி, நான் காண தேவர்கள் அருள வேண்டும் என்று பிரதிக்ஞை செய்திருந்தான் பரதன். முடிசூடும் தறுவாயில் என் நெடுநாள் கனவு பலித்தது என்று ஆனந்தக் களிப்புற்றான்.

பக்தி நூல்களில் பக்தர்களுடைய தன்மை பற்றிப் பலவாறு விவரித்திருக்கிறார்கள். வைணவ நூல்களில், வைகுண்டத்தில் நித்திய சூரிகளாக இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரான தோற்றத்தையும் பெற்று ஆனந்திப்பார்கள் என்று உரைக்கப்பட்டுள்ளது. இதையே பக்தர்கள் வேண்டுவர். ஆனால் பரதனோ இவ்விதமான ஆனந்தத்தைக் கோரவில்லை. தனக்கு முன் பிறந்தோன் என்றும், தந்தை என்றும், சுற்றம் என்றும், தெய்வம் என்றும் ராமனைக் கருதி, அவன் படும் துயரமெல்லாம் தான் பட வேண்டும் என்று, வருத்தத்தைத் தேடி அழைத்துக் கொண்டான். ராமன் காட்டுக்குப் போன செய்தியைக் கேட்டதும், அடியேனும் புல் மீதோ தரை மீதோ படுத்துறங்குவேன். காய்கனியே உட்கொள்வேன். மரவுரி உடுப்பேன். சடைமுடி தரிப்பேன் என்று சபதம் செய்து, ராமன் திரும்பவும் அயோத்தியை அடையும் வரை தானும் நகரத்திற்குச் செல்லாமல் நந்தி கிராமத்திலேயே தங்கி வந்தான். ராமனுடன் கூடவே இல்லாவிடினும் அவன் பாதுகையைத் தலை மேல் வைத்து, பதினான்கு வருடங்கள் அதற்கு ஆராதனம் செய்து ராமனோடு ஒன்றியிருந்த அனுபவத்தைப் பெற்றான்.

பக்தி என்பது அன்பே உருவானது. அன்பே சிவம் என்பார் திருமூலர். பக்தி செலுத்துவதற்கு அபார ஞானம், அசாத்திய சாமர்த்தியம் தேவையில்லை. மனதால், வாயால், செயலால் பக்தி செலுத்தலாம். ராமனிடத்தில் பரதனுக்கு இருந்த அன்புக்கு எல்லையே இல்லை. கரை காணாக் காதலான் என்று குகனுக்குச் சொன்ன வாக்கு பரதனுக்கும் பொருந்தும். ராமபிரானுக்கும் பரதனிடத்தில் அளவிலா அன்பு. தன்னையும் பரதனையும் ஒன்றாகவே கருதினான் என்று கம்பர், ஆழிசூழ் உலகத்தை பரதனே ஆள, தாழிரும் சடைகள் தாங்கி, காட்டில் முனிவரோடு ஏழிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து திரும்பி வா என்று கைகேயி ராமனிடம் சொன்னபோது, ராமன் அவளுக்குக் கூறிய பதில்:

என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ பக்தருள் சிறந்து பரந்தாமனின் அருளைப் பெற்றவன் பரதனே !
« Last Edit: February 20, 2013, 08:59:21 AM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #11 on: February 20, 2013, 09:01:10 AM »
அவன் கேட்ட இடம்!




கலியுகம் துவங்கியதும், அதன் அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான்.  மகாராஜா! நான் புதிதாக பூலோகம்  வந்தவன். தங்க இடம் கொடுங்கள், என்று கேட்டான். உஹும்...உயர்ந்த மனநிலையுடன்  ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை, என்று மறுத்தான் பரீட்சித்து. அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை.  குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள், என்று கெஞ்சினான். சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகியவற்றில் நீ தங்கலாம், என அனுமதித்தார் பரீட்சித்து.

ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக்  குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன், என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது, என்றார். கலிக்கு ஏக சந்தோஷம்.நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான்  தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவேன், என்று கூறி விடைபெற்றான். கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம்  எல்லோருக்குமே தெரியும்!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #12 on: February 20, 2013, 09:04:37 AM »
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா!




ஒரு வீட்டிற்கு வியாபாரி ஒருவர் வந்தார். வீட்டுக்காரரிடம்,ஐயா! தங்கள் வீட்டில் சிலநாள் தங்கி, இவ்வூரில் வியாபாரப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. தங்குவதற்கும், உணவருந்தவும் பணம் தந்து விடுகிறேன், என்றார். வீட்டுக்காரரும் சம்மதித்தார். வியாபாரி இரவு வீட்டுக்கு வந்ததும், பெரும் பணத்தை எண்ணுவார். வீட்டுக்காரனுக்கு, அதை எப்படியாவது திருட வேண்டுமென்று எண்ணம் வந்தது. வியாபாரி தூங்கியதும், நைசாக அவரது தலையணையின் கீழே, துழாவிப் பார்த்தார். பணம் சிக்கவில்லை. ஆனால், மறுநாள் வியாபாரி பாக்கெட்டில் பணம் எடுத்து வைப்பதைப் பார்ப்பார். இந்த மனுஷன் எங்கே தான் ஒளித்து வைக்கிறான்! தெரியலியே! என்று தவித்தான்.

தூக்கம் அறவே போய்விட்டது. மறுநாள், அவர் திருதிருவென விழிப்பதைப் பார்த்த வியாபாரி, என்னய்யா பணத்தை தேடுகிறீர்களா? என்றார். அவர் படீரென அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நீங்கள் என்ன மந்திரவாதியா? பணத்தை எங்குதான் வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார். உன் படுக்கைக்கு கீழே பார், என்றார் வியாபாரி. அவரும் பார்க்க, அடியில் பணம் இருந்தது.  நீ என் பொருட்களை நோட்டமிட்டதை நான் பார்த்து விட்டேன். எனவே, உன் படுக்கையின் அடியிலேயே வைத்து விட்டேன். இது தான் நான் செய்த தந்திரம், என்றார். வீட்டுக்காரர் தலை குனிந்தார்.  அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படுவது அவமானத்தை தரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #13 on: February 20, 2013, 09:06:17 AM »
கோபம் கொள்ளலாமா!




பெற்றோருக்கு முருகன் என்ற மகன் இருந்தான். சிறு சிறு விஷயங்களுக்கு  கூட பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கோபப்படுவான். இதனால், நண்பர்கள் அவனை விட்டு விலகி விட்டனர். தன்னை யாருமே அண்டாததால், அவனது கோபம் மேலும் அதிகமானது. சில வேளைகளில் அந்தக் கோபத்தை மூர்க்கத்தனமாக பெற்றோர் மீது காட்டினான். பாத்திரங்களை உடைத்தெறிவான். பெற்றோருக்கு மனக்கஷ்டத்துடன், பொருள் இழப்பால் பணக்கஷ்டமும் ஏற்பட்டது. ஒருநாள், அவனது தந்தை  கைலாசம் மகனை அழைத்தார். முருகா! நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா! உன் கோபத்தால் எவ்வளவு பொருள் இழப்பு, அது மட்டுமா? உன்னை நாடி வருபவர்களும் குறைந்து விட்டார்கள். பள்ளிக்குச் சென்ற நீ, அங்கே பிள்ளைகளை அடித்ததால் நிர்வாகம் உன்னை நீக்கி விட்டது. படிப்பு பாழானது. ஆனாலும், திருந்த மறுக்கிறாய். உனக்கு கோபம் வருவதன் காரணம் தான் என்ன? என்றார்.

எல்லாரும் என்னைக் கோபப்படுத்துகிறார்கள், என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும். சூரியனும், சந்திரனும் என்னைக் கேட்டு தான் எழ வேண்டும், மறைய வேண்டும் என்ற கொள்கையுடைய வன் நான். என் சொல் எடுபடாததால், நான் கோபிக்கிறேன். நீங்களும், அம்மாவும் இனி நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். கோபப்படுவதை நிறுத்தி விடுகிறேன், என்றான். அந்தக் கஷ்டத்திலும் கைலாசம் உலர்ந்த சிரிப்பொன்றை உதிர்த்தார். உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஆனால், ஒரு நிபந்தனை . நீ கோபப்படும் சமயமெல்லாம், இந்தப் பெட்டியிலுள்ள ஆணியை எடுத்து அந்த மரத்தில் அடிக்க வேண்டும், என்றார். முருகனுக்கு அவர் ஏன் அவ்வாறு செய்யச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும், தலையாட்டி வைத்தான். அன்றுமுதல், அவன் கோபப்படும் சமயங்களில் ஆணிகளை எடுத்து அடித்தான். முதல்நாள் பத்து ஆணி அடிக்கப்பட்டது. மறுநாள், மரத்தின் அருகே சென்றான்.  சே...இந்தளவுக்கா கோபப்பட்டிருக்கிறோம், கஷ்டமாக இருக்கிறதே!என்று நினைத்தான்.
அதற்காக மறுநாள் கோபப்படாமல் இல்லை. ஆனால், எண்ணிக்கை ஏழாகக் குறைந்து விட்டது.

இப்படியே ஆறு, ஐந்து, மூன்று எனக் குறையவே, மறுநாள் சிந்திக்க  ஆரம்பித்து விட்டான். அப்படியானால், என்னால் கோபிக்காமலும் இருக்க முடியும்  என்பது இந்த ஆணிகளின் எண்ணிக்கையில் இருந்ததே நிரூபணம்  ஆகிறது, என எண்ணிய வேளையில், கைலாசம் அவனை அழைத்தார். முருகா! இனி நீ ஆணி அடிக்க வேண்டாம். அடித்த ஆணிகளைப் பிடுங்கு, என்றார். அவனும் அர்த்தம் புரியாமல்  அவற்றைப் பிடுங்கினான். ஆணியைப் பிடுங்கிய இடங்களில் துவாரமாயிருந்தது. சில இடங்களில் பால் கசிந்து, மரத்தை அசுத்தப்படுத்தியிருந்தது. பார்த்தாயா முருகா! நீ மரத்தில் அடித்த ஆணி எந்தளவுக்கு துளை ஏற்படுத்தி அசுத்தப்படுத்தி உள்ளதை! மரத்திலேயே இந்தளவுக்கு துவாரம் விழுந்தால், உன் சொல்லால் புண்பட்ட இதயங்கள் எத்தனை இருக்கும்! மரத்தில் பால் வழிந்தது போல், அவர்களும் கண்ணீர் வடித்திருப்பார்களே! அவர்களது தாமரை போன்ற முகம் கூம்பிப் போய் இருக்குமே! சிந்தித்துப் பார், என்றார். முருகனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. அன்று முதல் அவனுக்கு ஆணியும், சுத்தியலும் தேவைப்படவில்லை.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218390
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ பக்தி கதைகள் ~
« Reply #14 on: February 20, 2013, 09:07:55 AM »
ஆறானால் என்ன! நூறானால் என்ன!




மரத்திலோ, வீட்டுச்சுவரிலோ விளையாடுகிற மகனைப் பார்த்து கீழே விழுந்து விடாதே மகனே! கவனமாக இரு, என்று எச்சரிக்கை செய்கிற பாசத்திற்குரிய தாய்மார்களை உலகம் முழுக்கக் காணலாம்.  ஆனால், மகன் மரணத்தை தழுவ இருக்கிற வேளையில், போ..மரணக்கயிற்றை முத்தமிடு. இது என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடி வரத்தான் போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.  எதற்காக வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம். நீ இந்த தேசத்துக்காக உயிர்விட்டால்,  நிச்சயமாக மரணமடைய மாட்டாய். உன்னைப் பற்றி தினமும் ஒருவன் எழுதிக் கொண்டிருப்பான், ஒருவன் பேசிக்கொண்டிருப்பான், ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பான், என்று முழக்கமிட்ட வீரத்தாய் ஒருத்தியும் இந்த பூமியில் தான் வசித்தாள்.

சுதந்திரப் போராட்ட சிரோன்மணி பகத்சிங்கின் தாயே அவர். விடுதலைக்காக பாடுபட்ட தீரன், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, மார்ச் 23, 1931ல் மரணக்கயிற்றில் தொங்க வேண்டியிருந்த நிலையில், இருபது நாட்களுக்கு முன்பாக அவரது தாய் மகனைச் சந்தித்தார். தன் மரணத்துக்காக, தாயார் அழுது புலம்புவாரே! அவரை எப்படி சமாளிக்கப் போகிறோம்... வெள்ளையர் களைக் கண்டால் கர்ஜிக்கும் அந்த சிங்கம், தன் தாயின் முகத்தைப் பார்க்க தயங்கியது. இருப்பினும், சற்றே கண்களை உயர்த்தி  அவரைப் பார்த்தபோது தான், அவள் தீட்சண்யமாக தன்னைப் பார்ப்பதைக் கவனித்தார். அப்போது, அந்தத்தாய் உதிர்த்த வார்த்தைகளைத் தான் மேலே வாசித்தீர்கள். ஆறு வயதானாலும், நூறு வயதானாலும் என்றோ ஒருநாள் மரணம் வந்தே தீரும். இந்த உண்மையை மனதில் வைத்து, பாசமுள்ள தாயாக மட்டுமல்ல...வீரத்தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளருங்கள். அவர்கள்  உலக சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள்.